Tuesday, July 28, 2026

விபிஜே-யின் பிரத்தியேக நகைக் கண்காட்சி இந்த ஆடியில் திருச்சிக்கு வருகிறது

விபிஜே-யின் பிரத்தியேக நகைக் கண்காட்சி இந்த ஆடியில் திருச்சிக்கு வருகிறது

~ தங்கம், வைரம், சாலிடையர் மற்றும் நவரத்தின நகைகளின் மிகப் பெரிய தொகுப்பை ஒரே இடத்தில் காணும் அரிய வாய்ப்பு ~

திருச்சி, ஜூலை 28, 2026: இந்தியாவின் பாரம்பரியமான மற்றும் மக்களின் அதிக நம்பிக்கை பெற்ற நகை நிறுவனமான விபிஜே, VBJ, (வும்மிடி பங்காரு ஜுவல்லர்ஸ்), திருச்சி மக்களுக்காக பிரத்யேக இரு நாள் நகைக் கண்காட்சியை நடத்துகிறது. இந்தக் கண்காட்சி ஜூலை 29 மற்றும் 30, 2026 ஆகிய தேதிகளில், ரம்யாஸ் ஹோட்டல், ஸ்வர்ணம் ஹால், வில்லியம்ஸ் சாலை, கண்டோன்மென்ட், திருச்சியில் நடைபெறவுள்ளது.

ஆடி மாதத்தை முன்னிட்டு நடைபெறும் இந்தக் கண்காட்சியில் தங்கம், வைரம், சாலிடையர், நவரத்தினம் மற்றும் திருமண நகைகள் மீது செய்கூலி (Making Charges) மற்றும் மதிப்புக் கூட்டல் (VA) கட்டணத்தில் 20% வரை சிறப்பு தள்ளுபடி வழங்கப்படுகிறது.

மணப்பெண் நகைகள், நெக்லஸ்கள், வளையல்கள், கம்மல்கள், மோதிரங்கள், சங்கிலிகள், நவரத்தின நகைகள் மற்றும் அன்றாட பயன்பாட்டிற்கான நவீன வடிவமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு நகைத் தொகுப்புகள் இக்கண்காட்சியில் இடம்பெறுகின்றன. வாடிக்கையாளர்களின் மாறிவரும் ரசனைக்கு ஏற்ப தேர்ந்தெடுக்கப்பட்ட இந்தத் தொகுப்புகள், விபிஜே-யின் தரம், நேர்த்தியான கைவினைத் திறன் மற்றும் பாரம்பரியத்தை பிரதிபலிக்கின்றன.

இதுகுறித்து விபிஜே-யின் நிர்வாக பங்குதாரர் திரு. அமரேந்திரன் வும்மிடி கூறுகையில், "திருச்சி எங்களுக்கு எப்போதும் முக்கியமான சந்தையாக இருந்து வருகிறது. விரைவில் புதிய ஷோரூமை திறக்கவுள்ள நிலையில், எங்கள் மீது வாடிக்கையாளர்கள் வைத்துள்ள நம்பிக்கைக்கு நன்றியறிதலாக இந்தக் கண்காட்சியை நடத்துகிறோம். அனைவரும் எங்கள் பிரத்யேக நகைத் தொகுப்புகளை பார்வையிட்டு, சலுகைகளை பயன்படுத்திக் கொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறோம்," என்றார்.

இதனைத் தொடர்ந்து விபிஜே-யின் மற்றொரு நிர்வாக பங்குதாரர் திரு. ஜிதேந்திர வும்மிடி கூறுகையில், "பல்வேரு நகைகளின் சிறப்பு தொகுப்புகளை ஒரே இடத்தில் காணும் வாய்ப்பாக இந்தக் கண்காட்சி அமையும். பாரம்பரிய மணப்பெண் நகைகள் முதல் அன்றாடம் அணியக்கூடிய வடிவமைப்புகள் வரை அனைவரின் விருப்பத்திற்கும் ஏற்ற நகைகள் இடம்பெற்றுள்ளன.," என்றார்.

தமிழகத்தில் தனது செயல்பாட்டை மேலும் விரிவுபடுத்தும் வகையில், திருச்சி கரூர் பைபாஸ் சாலையில் விபிஜே தனது புதிய ஷோரூமை விரைவில் திறக்கவுள்ளது. இந்தக் கண்காட்சி இரு நாட்களிலும் காலை 11.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை நடைபெறும்.


About VBJ, Vummidi Bangaru Jewellers 

VBJ, Vummidi Bangaru Jewellers is one of South India’s most trusted fine jewellery brands, offering exceptional value, diverse choices, and unmatched quality across diamond, gold, and silver jewellery. Established in 1900, VBJ has earned the trust of over five generations and continues to be a name synonymous with heritage and craftsmanship. With two flagship stores in Chennai (Anna Salai and Anna Nagar) and a global presence through its Dallas showroom opened in October 2023, VBJ blends legacy with modernity to serve a wide range of jewellery connoisseurs. VBJ’s digital presence through www.vummidi.com allows patrons to explore elaborate collections online, while its dedicated silverware vertical www.vbjsilver.com, showcases masterful creations crafted from pure silver. The brand also boasts an in-house Creative Center and state-of-the-art manufacturing facility, enabling the design and production of timeless, original pieces that reflect both artistic finesse and generational expertise.