Monday, July 27, 2026

2027 நிதியாண்டின் முதல் காலாண்டில் பேங்க் ஆஃப் இந்தியாவின் நிகர லாபம் ₹3,068 கோடியாக உயர்வு ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் 36.23% அதிகரிப்பு

2027 நிதியாண்டின் முதல் காலாண்டில் பேங்க் ஆஃப் இந்தியாவின் நிகர லாபம் ₹3,068 கோடியாக உயர்வு ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் 36.23% அதிகரிப்பு

சென்னை, 27 ஜூலை 2026: இந்தியாவின் பிரபல பொதுத்துறை வங்கியான பேங்க் ஆஃப் இந்தியா ஜூன் 30, 2026 உடன் முடிவடைந்த காலாண்டிற்கான தனது நிதிநிலை முடிவுகளை அறிவித்துள்ளது. 2027 நிதியாண்டின் முதல் காலாண்டில் (Q1 FY27) வங்கியின் நிகர லாபம் முந்தைய ஆண்டின் இதே காலாண்டுடன் ஒப்பிடுகையில் (YoY) 36.23% அதிகரித்து ₹3,068 கோடியாக உயர்ந்துள்ளது. சொத்துக்கள் மீதான வருவாய் (RoA) மற்றும் பங்கு/ ஈக்விட்டி மீதான வருவாய் (RoE) முறையே 1.01% மற்றும் 16.12% ஆக முன்னேற்றம் கண்டுள்ளன.

2027 நிதியாண்டின் முதல் காலாண்டில் வங்கியின் செயல்பாட்டு லாபம் 25.99% வளர்ச்சியடைந்து ₹5,051 கோடியாக உயர்ந்துள்ளது.

வங்கியின் உலகளாவிய மொத்த வணிகம் ஜூன் 2025-ல் இருந்த ₹15,06,142 கோடியிலிருந்து 16.57% (YoY) வளர்ச்சியடைந்து ஜூன் 2026-ல் ₹17,55,699 கோடியாகப் பதிவாகியுள்ளது. உலகளாவிய வைப்புத்தொகைகள் (டெபாசிட்கள்) ஜூன் 2025-ல் இருந்த ₹8,33,698 கோடியிலிருந்து 14.90% (YoY) உயர்ந்து ஜூன் 2026-ல் ₹9,57,924 கோடியாக அதிகரித்துள்ளது. உலகளவில் வழங்கப்பட்ட கடன்கள் ஜூன் 2025-இல் இருந்த ₹6,72,444 கோடியிலிருந்து 18.64% (YoY) அதிகரித்து ஜூன் 2026-ல் ₹7,97,775 கோடியாக உயர்ந்துள்ளது. ஜூன் 2026 நிலவரப்படி, வெளிநாடுகளிலிருந்து கிடைக்கப்பெற்ற வைப்புத்தொகைகள் ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் 7.73% அதிகரித்து ₹1,32,961 கோடியாகவும், வெளிநாடுகளுக்கான கடன்கள் 15.67% உயர்ந்து ₹1,23,942 கோடியாகவும் உள்ளன

உள்நாட்டு வைப்புத்தொகைகள் ஜூன் 2025-ல் இருந்த ₹7,10,277 கோடியிலிருந்து 16.15% (YoY) அதிகரித்து ஜூன் 2026-ல் ₹8,24,963 கோடியாக உயர்ந்துள்ளது. உள்நாட்டு CASA ஜூன் 2025-ல் ₹2,81,846 கோடியிலிருந்து ஜூன் 2026-ல் ₹3,02,085 கோடியாக உயர்ந்துள்ளதுடன், CASA விகிதம் 36.68% ஆக உள்ளது. உள்நாட்டில் வழங்கப்பட்ட கடன்கள் ஜூன் 2025-ல் இருந்த ₹5,65,297 கோடியிலிருந்து 19.20% (YoY) அதிகரித்து ஜூன் 2026-ல் ₹6,73,833 கோடியாக உயர்ந்துள்ளது.

RAM (சில்லறை வணிகம், விவசாயம், MSME) கடன்கள் ஜூன் 2025-ல் இருந்த ₹3,28,048 கோடியிலிருந்து 19.75% (YoY) உயர்ந்து ஜூன் 2026-இல் ₹3,92,833 கோடியாக பதிவாகியுள்ளது. இது ஜூன் 2026-ல் பதிவாகியுள்ள உள்நாட்டு மொத்த கடன்களில் 58.30% ஆகும். சில்லறைக் கடன்கள் ஜூன் 2025-ல் இருந்த ₹1,37,782 கோடியிலிருந்து 20.60% (YoY) அதிகரித்து ஜூன் 2026-ல் ₹1,66,170 கோடியாக உயர்ந்துள்ளது. குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்துறைக்கான (MSME) கடன்கள் ஜூன் 2025-ல் இருந்த ₹92,908 கோடியிலிருந்து 19.34% (YoY) உயர்ந்து ஜூன் 2026-ல் ₹1,10,881 கோடியாக அதிகரித்துள்ளது. விவசாயக் கடன்கள் ஜூன் 2025-ல் இருந்த ₹97,358 கோடியிலிருந்து 18.92% (YoY) அதிகரித்து ஜூன் 2026-இல் ₹1,15,782 கோடியாக உயர்ந்துள்ளது.

வங்கியின் மொத்த வாராக்கடன் விகிதம் (GNPA ratio) ஜூன் 2025-ல் இருந்த 2.92%-லிருந்து 111 அடிப்படைப் புள்ளிகள் (bps) மேம்பட்டு ஜூன் 2026-ல் 1.81% ஆக குறைந்திருக்கிறது. நிகர வாராக்கடன் விகிதம் (Net NPA ratio) ஜூன் 2025-ல் 0.75%-லிருந்து 24 அடிப்படைப் புள்ளிகள் மேம்பட்டு ஜூன் 2026-இல் 0.51% ஆகக் குறைந்துள்ளது.

வங்கியின் காலாண்டுக்கான நழுவல் விகிதம் ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் 9 அடிப்படைப் புள்ளிகள் மேம்பட்டு 0.24% ஆக உள்ளது.

வங்கியின் கடனுக்கான செலவு 2026 நிதியாண்டின் முதல் காலாண்டில் இருந்த 0.17-லிருந்து 2027 நிதியாண்டின் முதல் காலாண்டில் 0.15 ஆக மேம்பட்டுள்ளது.

30.06.2026 நிலவரப்படி மூலதனப் போதுமான விகிதம் (CRAR) 18.69% ஆக உள்ளது.

வங்கியின் மொத்த டிஜிட்டல் பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை ஜூன் 2025-இல் இருந்த 1.70 பில்லியனிலிருந்து 22% (YoY) அதிகரித்து ஜூன் 2026-இல் 2.08 பில்லியனாக உயர்ந்துள்ளது.