11% வளர்ச்சியுடன் ரூ. 414 கோடியை ஒருங்கிணைந்த வருவாயாக பெற்றிருக்கும் இந்தியாமார்ட் இன்டர்மெஷ் லிமிடெட்
2027 நிதியாண்டின் முதல் காலாண்டு நிதி முடிவுகள் வெளியீடு
• செயல்பாடுகள் மூலமான ஒருங்கிணைந்த வருவாய் ரூ. 414 கோடி, இது கடந்த ஆண்டின் இதே காலஅளவில் பதிவானதைவிட (YoY) 11% வளர்ச்சியாகும்.
• தனித்து நிற்கும் EBITDA ரூ. 149 கோடியாக பதிவாகியிருக்கிறது; இது 40% EBITDA வரம்பைக் குறிக்கிறது.
• செயல்பாடுகள் மூலம் திரட்டப்பட்ட ஒருங்கிணைந்த ரொக்கம் ரூ. 163 கோடியாகும்.
• வாடிக்கையாளர்களிடமிருந்து பெறப்பட்ட வசூல் தொகை இக்காலாண்டில் ரூ. 463 கோடியாக இருக்கிறது. முந்தைய ஆண்டைவிட 8% வளர்ச்சியை இது பிரதிபலிக்கிறது.
சென்ன, ஜூலை 21, 2026: இந்தியாமார்ட் இன்டெர்மெஸ் லிமிடெட் (“இந்தியாமார்ட்” அல்லது “நிறுவனம்” என அழைக்கப்படுவது), 2026 ஜூன் 30-ல் முடிவடைந்த முதல் காலாண்டிற்கான அதன் நிதிசார் முடிவுகளை இன்று அறிவித்திருக்கிறது.
ஒருங்கிணைக்கப்பட்ட நிதிசார் முடிவுகளின் முதன்மை அம்சங்கள் (Q1 FY2027):
கடந்த ஆண்டின் இதே காலாண்டின்போது ரூ. 372 கோடியாக இருந்த இயக்கச் செயல்பாடுகளின் ஒருங்கிணைக்கப்பட்ட வருவாய், இந்த ஆண்டின் முதல் காலாண்டில் ரூ. 414 கோடியாக பதிவாகி, 11% வளர்ச்சியை எட்டியிருக்கிறது. இத்தொகையானது, இந்தியாமார்ட்டின் தனித்து நிற்கும் வருவாயான ரூ. 376 கோடி (9% YoY வளர்ச்சி) மற்றும் பிஸி இன்ஃபோடெக்-ன் வருவாயான ரூ. 36 கோடியை உள்ளடக்கியதாகும்.
இக்காலாண்டின்போது வாடிக்கையாளர்களிடமிருந்து பெறப்பட்ட கட்டண வசூல் தொகை முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில், 8% வளர்ச்சியுடன் ரூ. 463 கோடியாக அதிகரித்திருக்கிறது. இந்தியாமார்ட்-ன் தனித்து நிற்கும் கலெக்ஷனான ரூ. 402 கோடி (8% YoY வளர்ச்சி) மற்றும் பிஸி இன்ஃபோடெக்-ன் கலெக்ஷனான ரூ. 59 கோடி இதில் பிரதானமாக உள்ளடங்கும்.
2026 ஜூன் 30 அன்று நீள்பயன் வருவாய் ரூ. 2,014 கோடியாக அதிகரித்து. YoY அடிப்படையில் 16% வளர்ச்சியை பதிவு செய்திருக்கிறது. இந்தியாமார்ட்டின் ரூ. 1,858 கோடி மற்றும் பிஸி இன்ஃபோடெக்-ன் ரூ. 146 கோடி நீள்பயன் வருவாய் இதில் பிரதானமாக உள்ளடங்கும்.
இக்காலாண்டிற்கான நிகர இலாபம் ரூ. 172 கோடியாகவும். இயக்கச் செயல்பாடுகளிலிருந்து கிடைத்த பணப்பாய்வு இக்காலாண்டில் ரூ. 163 கோடியாகவும் இருந்தது. 2026 ஜூன் 30 அன்று ரொக்கம் மற்றும் முதலீடுகளின் மொத்த கையிருப்பு ரூ. 3,553 கோடியாக இருக்கிறது.
தனித்து நிற்கும் நிதிசார் முடிவுகளின் முதன்மை அம்சங்கள் (Q1 FY2027):
இயக்கச் செயல்பாடுகளிலிருந்து கிடைத்த தனித்து நிற்கும் வருவாய் முந்தைய ஆண்டின் ரூ. 346 கோடியுடன் ஒப்பிடுகையில் 9% வளர்ச்சியுடன் ரூ. 376 கோடியாக உயர்ந்திருக்கிறது. பணம் செலுத்தும் சப்ளையர்களிடமிருந்து கிடைக்கும் தொகையில் முன்னேற்றமே இந்த வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக இருந்திருக்கிறது.
வாடிக்கையாளர்களிடமிருந்து கிடைக்கும் கலெக்ஷன்கள் ரூ. 402 கோடியாக உயர்ந்து, 8% YoY வளர்ச்சியை பதிவு செய்திருக்கிறது. 2026 ஜூன் 30 அன்று, நீள்பயன் வருவாய் ரூ.1858 கோடியாக 14% YoY வளர்ச்சியை வெளிப்படுத்தியிருக்கிறது.
இக்காலாண்டிற்கான EBITDA, 40% இலாப வரம்பை பிரதிபலித்து ரூ. 149 கோடியாக பதிவாகியிருக்கிறது. இக்காலாண்டிற்கான நிகர இலாபம் ரூ. 176 கோடியாக உயர்ந்திருக்கிறது.
இயக்க ரீதியிலான முதன்மை அம்சங்கள் (Q1 FY2027):
Q1FY27-ல் 26 மில்லியன் தனித்துவமான பிசினஸ் விசாரணைகளை இந்தியாமார்ட் பதிவு செய்திருக்கிறது. சப்ளையர் ஸ்டோர்ஃபிரண்ட்களின் எண்ணிக்கை YoY அடிப்படையில் 5% அதிகரித்து, 8.8 மில்லியனாக வளர்ச்சி கண்டிருக்கின்றது. பணம் செலுத்தும் சப்ளையர்களின் எண்ணிக்கை இக்காலாண்டின் இறுதியில் 218K என பதிவாகியிருக்கிறது.
இக்காலாண்டில் நிறுவனத்தின் சிறப்பான செயல்திறன் குறித்து கருத்து தெரிவித்த நிறுவனரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான தினேஷ் அகர்வால், "எமது தளத்தில் வாங்குபவர்களுக்கும் விற்பவர்களுக்கும் மிகவும் நம்பகமான, பாதுகாப்பான சூழலை உருவாக்குவதன் மூலம், நிலையான வளர்ச்சி மற்றும் ஒட்டுமொத்த சந்தை அனுபவத்தை மேம்படுத்துவதில் நாங்கள் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறோம். தளத்தின் நம்பகத்தன்மைக்கு முன்னுரிமை அளிப்பதன் வாயிலாக, எங்கள் சந்தை முழுவதும் ஆழமான மற்றும் மிகவும் அர்த்தமுள்ள ஈடுபாட்டை நாங்கள் வளர்த்து வருகிறோம். தரப்படுத்தப்பட்ட பட்டியல் மற்றும் நுண்ணறிவு சார்ந்த பொருத்தம் முதல் மேம்பட்ட உரையாடல் கருவிகள் வரை, செயற்கை நுண்ணறிவின் (AI) பயன்பாடானது பயனர் தொடர்புகளை எளிமையாக்குவதோடு செயல்திறனையும் மேம்படுத்தியிருக்கிறது. ஒரு வலுவான வணிக மாதிரி மற்றும் சிறப்பான ரொக்கப்பண உருவாக்கத்துடன், எங்கள் பங்குதாரர்கள் அனைவருக்கும் நீண்டகால மதிப்பை உருவாக்கும் எங்கள் செயல்திறனில் நாங்கள் உறுதியான நம்பிக்கையுடன் உள்ளோம்," என்று கூறினார்.
(வேறு விதமாக குறிப்பிட்டாலொழிய, இலக்கங்கள் கோடிகளில்)
தனித்து நிற்பது ஒருங்கிணைக்கப்பட்டது
Q1FY27 Y-o-Y Q-o-Q Q1FY27 Y-o-Y Q-o-Q
மொத்த வருவாய் 464 8% 39% 521 12% 41%
இயக்கச் செயல்பாடுகளிலிருந்து வருவாய் 376 9% 2% 414 11% 2%
EBITDA 149 11% 11% 146 10% 10%
EBITDA இலாப வரம்பு (%) 40% 35%
இக்கால அளவிற்கான நிகர இலாபம் 176 6% 153% 172 12% 243%
நிகர இலாப வரம்பு (%) 38% 33%
வாடிக்கையாளர்களிடமிருந்து வசூல் 402 8% (26%) 463 8% (22%)
இயக்கச் செயல்பாடுகளிலிருந்து திரட்டப்பட்ட பணப்பாய்வு
153
6%
(47%)
163
2%
(44%)
நீள்பயன் வருவாய்
1,858 14% 1% 2,014 16% 2%
ரொக்கம் & முதலீடுகள் 3,316 29% 8% 3,553 29% 8%
பணம் செலுத்தும் சப்ளையர்கள் (In ‘000)
218
0%
(1%)
-
-
-
இந்தியாமார்ட் குறித்து:
பிசினஸ் தயாரிப்புகள் மற்றும் சேவைகளுக்கான இந்தியாவின் மிகப்பெரிய ஆன்லைன் B2B சந்தை அமைவிடமாக இந்தியாமார்ட் திகழ்கிறது. பிசினஸ் ஏதுவாக்கல் தீர்வுகளின் வழியாக இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் மற்றும் வெவ்வேறு பிராடக்ட் வகையினங்களிலுள்ள விற்பனையாளர்கள் மற்றும் பொருள்/சேவை வாங்குனர்களை இணைப்பதன் வழியாக பிசினஸ் செயல்பாட்டை மேற்கொள்வதை இந்தியாமார்ட் மிக எளிதானதாக மாற்றுகிறது. பிராடக்ட்களின் விரிவான தொகுப்பை வழங்குவதன் மூலம் பொருள்/சேவை வாங்குனர்களுக்கு எளிதான அணுகுவசதியையும், சௌகரியத்தையும் இந்தியாமார்ட் வழங்குகிறது. அதே நேரத்தில் விற்பனையாளர்களுக்கு லீடு (விசாரணை) உருவாக்கம், லீடு மேலாண்மை மற்றும் பிசினஸ் ஏதுவாக்கல் தீர்வுகளை விற்பனையாளர்களுக்கு இது வழங்குகிறது.
