Friday, May 15, 2026

கோயம்புத்தூர் வீடுகள் கண்காட்சி திருவிழாவில் நவீன்’ஸ் வழங்கும் பிரீமியம் குடியிருப்புத் திட்டங்கள்

கோயம்புத்தூர் வீடுகள் கண்காட்சி திருவிழாவில் நவீன்’ஸ் வழங்கும் பிரீமியம் குடியிருப்புத் திட்டங்கள்!

கோயம்புத்தூர், மே 15, 2026: சென்னையின் மிகவும் நம்பகமான ரியல் எஸ்டேட் நிறுவனங்களில் ஒன்றான நவீன்’ஸ் (Navin’s), கோயம்புத்தூர் கொடிசியா வர்த்தக வளாகத்தில் மே 15, 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் நடைபெறும் மாபெரும் 'பிராப்பர்டி ஃபெஸ்டிவல்' (வீடுகள் கண்காட்சி) நிகழ்வில் பங்கேற்கிறது. அரங்கு எண் PF 14-இல், நவீன்’ஸ் நிறுவனம் தனது பிரீமியம் குடியிருப்புத் திட்டங்களைக் கோயம்புத்தூர் மக்களுக்காகக் காட்சிப்படுத்துகிறது. சென்னை மற்றும் பெங்களூருவில் உள்ள தங்களின் பிரத்யேகத் திட்டங்களை, முதலீடு செய்ய ஆர்வமுள்ளவர்களுக்கு அறிமுகப்படுத்துவதே இதன் முக்கிய நோக்கமாகும்.


கோயம்புத்தூர் போன்ற நகரங்களில் வசிப்பவர்கள், தற்போதைய தேவைகளைத் தாண்டி, பிள்ளைகளின் கல்வி, வேலைவாய்ப்பு அல்லது எதிர்காலத்திற்கான இரண்டாவது வீடு ஆகிய நோக்கங்களுக்காகப் பெருநகரங்களில் முதலீடு செய்ய அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்தச் சூழலில், கோவையில் நடைபெறும் இக்கண்காட்சி மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. சிறப்பான உட்கட்டமைப்பு வளர்ச்சி, மேம்பட்ட போக்குவரத்து வசதிகள், பெருகிவரும் ஐடி மற்றும் வர்த்தக நிறுவனங்கள் ஆகியவற்றின் காரணமாக, சென்னை மற்றும் பெங்களூரு நகரங்கள் தென்னிந்திய ரியல் எஸ்டேட் சந்தையில் முதலீட்டாளர்களின் முதல் தேர்வாக உருவெடுத்துள்ளன.


இந்தப் பிராப்பர்டி ஃபெஸ்டிவலில், வாடிக்கையாளர்களின் பல்வேறு தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில், உடனடியாகக் குடியேறத் தயாராக உள்ள வீடுகள், பிரீமியம் மற்றும் சொகுசு வசதிகள் கொண்ட ஆடம்பரக் குடியிருப்பு திட்டங்களை நவீன்’ஸ் நிறுவனம் காட்சிப்படுத்த உள்ளது.


கண்காட்சியில் இடம்பெறும் நவீன்’ஸ்-ன்  முக்கிய திட்டங்கள்:


நவீன்’ஸ் ஓம் க்ருஹா - காலேஜ் ரோடு, சென்னை

நவீன்’ஸ் ஆன்தியா போயட்ரி - ஜே.பி. நகர், பெங்களூரு

நவீன்’ஸ் ஸ்டார்வுட் டவர்ஸ் 3.0 மேப்பிள் – மேடவாக்கம், சென்னை

நவீன்’ஸ் ஸ்டார்வுட் டவர்ஸ் சிடார் – மேடவாக்கம், சென்னை

நவீன்’ஸ் பேவியூ ப்ரைவ் - பெசன்ட் நகர், சென்னை

நவீன்’ஸ் விஜயஸ்ரீ - அண்ணா நகர், சென்னை

நவீன்’ஸ் மயூரா கார்டன்ஸ் – வளசரவாக்கம், சென்னை

 


இந்தக் கண்காட்சி குறித்து நவீன்’ஸ் நிறுவனத்தின் விற்பனைப் பிரிவு பொது மேலாளர் டாக்டர். ஜி. சீனிவாசன் கூறியதாவது: “கோயம்புத்தூரைச் சேர்ந்த முதலீட்டாளர்கள் எப்போதுமே நீண்ட காலப் பலன் என்ற நோக்கத்துடன்தான் ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்கிறார்கள். இன்று, சிறப்பான உட்கட்டமைப்பு  வளர்ச்சி, வேலைவாய்ப்புகள் மற்றும் தரமான வீடுகளுக்கான தொடர்ச்சியான தேவை ஆகியவற்றின் காரணமாக சென்னை மற்றும் பெங்களூரு நகரங்கள் சிறந்த முதலீட்டு வாய்ப்புகளை வழங்குகின்றன. நவீன்’ஸ் நிறுவனத்துடன் இணைந்து முதலீடு செய்வதற்கு இதுவே மிகவும் சரியான நேரமாகும். இன்றைய வாடிக்கையாளர்கள், வெறும் சொத்தை வாங்குவதோடு நில்லாமல், நிறுவனத்தின் நம்பகத்தன்மை, குறித்த நேரத்தில் வீட்டை ஒப்படைத்தல், தரமான கட்டுமானம் மற்றும் நீண்ட கால மதிப்பு உயர்வு ஆகியவற்றை எதிர்பார்க்கிறார்கள். இந்த அம்சங்களில் நவீன்’ஸ் நிறுவனம் பல ஆண்டுகளாக வாடிக்கையாளர்களின் நன்மதிப்பையும் நம்பிக்கையையும் தொடர்ந்து பெற்று வருகிறது. நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட குடியிருப்புகள், பிரீமியம் வாழ்க்கை அனுபவம் மற்றும் முழுமையான வாடிக்கையாளர் சேவை ஆகியவற்றின் மூலம் ஒவ்வொரு முதலீட்டையும் பாதுகாப்பானதாகவும், சிரமமற்றதாகவும், எதிர்காலத் தேவைக்கு ஏற்றதாகவும் மாற்றுவதே எங்கள் நோக்கம்.”


கோயம்புத்தூரில் நடைபெறும் இந்தக் கண்காட்சிக்கு வருகை தரும் நபர்களுக்கு, வாடிக்கையாளர்களின் சிறந்த நம்பிக்கையை பெற்றிருக்கும் நவீன்’ஸ் நிறுவனத்தின் விற்பனைக் குழுவுடன் நேரடியாகக் கலந்துரையாட சிறந்த வாய்ப்பு கிடைக்கும். இதன் மூலம் தென்னிந்தியாவில் வளர்ந்து வரும் ரியல் எஸ்டேட் துறை பற்றியும், சென்னை மற்றும் பெங்களூரு நகரங்களில் உருவாகி வரும் புதிய முதலீட்டு வாய்ப்புகள் குறித்தும் அவர்கள் விரிவாகத் தெரிந்து கொண்டு தங்கள் முதலீடுக்கான சிறந்த முடிவுகளை எடுக்கலாம்.