Thursday, June 19, 2025

டாடா மோட்டார்ஸ் Re.Wi.Re எனும் நவீன ஸ்கிராப்பிங் வசதிகளை லக்னோ மற்றும் ராய்ப்பூரில் தொடங்குகிறது

டாடா மோட்டார்ஸ் Re.Wi.Re எனும் நவீன ஸ்கிராப்பிங் வசதிகளை லக்னோ மற்றும் ராய்ப்பூரில் தொடங்குகிறது

CHENNAI, 18 ஜூன், 2025: இந்தியாவின் நிலையான மொபிலிட்டி மற்றும் ஒரு வட்ட பொருளாதாரத்தை நோக்கிய மாற்றத்தை இயக்கும் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தும் இந்தியாவின் முன்னணி ஆட்டோமொபைல் உற்பத்தியாளரான டாடா மோட்டார்ஸ், இன்று இரண்டு ரீசைக்கிள் வித் ரெஸ்பெக்ட் – ரெஜிஸ்டேர்டு வெஹிக்கிள் ஸ்கிராப்பிங் ஃபெஸிலிட்டீஸ் (RVSFs) - Re.Wi.Re என்ற இரண்டு நவீன முன்முயற்சியை லக்னோ (உத்தரப் பிரதேசம்) மற்றும் ராய்பூர் (சட்டீஸ்கர்) ஆகிய நகரங்களில் தொடங்குவதாக அறிவித்தது. இந்திய அரசின் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஸ்ரீ நிதின் கட்கரி அவர்களால் தொடங்கிவைக்கப்பட்ட (காணொளி மூலம்), இந்த கட்டமைப்பு வசதிகள் வாழ்நாள் முடிந்த வாகனங்களை பாதுகாப்பாகவும் பொறுப்பாகவும் பிரித்தெடுப்பதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளன. அவை இரு மற்றும் மூன்று சக்கர வாகனங்கள் உட்பட அனைத்து பிராண்டுகளின் பயணிகள் மற்றும் வணிக வாகனங்களை கையாளத் தேவையான கருவிகளைக் கொண்டு பொருத்தப்பட்டுள்ளன.

இந்நிகழ்ச்சியில் பேசிய மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் ஸ்ரீ நிதின் கட்கரி, "லக்னோ மற்றும் ராய்ப்பூரில் இரண்டு ரெஜிஸ்டேர்டு வெஹிக்கிள் ஸ்கிராப்பிங் ஃபெஸிலிட்டி-களைத் தொடங்குவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். இந்த நவீன மையங்கள் தேசிய வாகன ஸ்கிராப்பேஜ் கொள்கையின் கீழ் ஒரு முற்போக்கான நடவடிக்கையைக் குறிக்கின்றன. இக்கொள்கையானது, திட்டமிட்ட ஊக்கத்தொகை மூலம், தூய்மையான, அதிக எரிபொருள் சிக்கனம் கொண்ட வாகனங்களுக்கு மாறுவதற்கு குடிமக்களுக்கு தன்மேம்பாடு அளிக்கிறது. அறிவியல்சார் மறுசுழற்சிக்கு மதிப்புமிக்க பொருட்களை மீட்டெடுக்க இயலச் செய்யும் அதே நேரத்தில், தகுதியற்ற வாகனங்களை பாதுகாப்பாக அகற்றுவதில் இந்த வசதிகள் முக்கிய பங்கு வகிக்கும். நிலைத்தன்மைக்கான உறுதியான அர்ப்பணிப்புக்காகவும், உலகளாவிய தரநிலைகளுடன் ஒத்துப்போகும் தேச அளவிலான ஒரு RVSF உள்கட்டமைப்பை நிறுவியதற்காகவும் டாடா மோட்டார்ஸை நான் மிகவும் பாராட்டுகிறேன். நாடு முழுவதும் வாகன ஸ்கிராப்பேஜை அணுகக்கூடியதாகவும், திறன் வாய்ந்ததாகவும், பயனுள்ளதாகவும் மாற்றும் ஒரு வலுவான சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்குவதற்கு இது போன்ற முற்போக்கான முன்முயற்சிகள் முக்கியம் "என்று அவர் கூறினார்.

ராய்ப்பூர் RVSF-ஆனது, டாடா மோட்டார்ஸின் கூட்டாளியான ராய்ப்பூர் கிரீன் எனர்ஜி பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தால் இயக்கப்படும்; மற்றும் ஆண்டுக்கு 25,000 வாகனங்கள் வரை பாதுகாப்பாக பிரித்து அகற்றக்கூடிய திறன் கொண்ட அதே வேளையில், லக்னோ கட்டமைப்பு வசதியானது ஆண்டுக்கு 15,000 வாகனங்கள் வரை ஸ்கிராப் செய்ய முடியும்; மேலும், இது மோட்டோ ஸ்கிராப்லேண்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தால் இயக்கப்படுகிறது.

Re.Wi.Re – ரீசைக்கிள் வித் ரெஸ்பெக்ட் என்ற முன்முயற்சி பற்றி பேசிய டாடா மோட்டார்ஸ் நிர்வாக இயக்குனர் கிரிஷ் வாக், "டாடா மோட்டார்ஸ் -இல் நிலைத்தன்மை என்பது வெறுமனே ஒரு உறுதிப்பாடு அல்ல–இது மொபிலிட்டியின் எதிர்காலத்தை வடிவமைக்கும் ஒரு அடித்தள தூணாகும். நாங்கள் சுழற்சி பொருளாதாரத்தின் கொள்கைகளால் வழிநடத்தப்பட்டு, பொறுப்பான மற்றும் சூழலுக்குகந்த நடைமுறைகளைப் பின்தொடர்வதில் உறுதியாக இருக்கிறோம். நாடு முழுவதும் உள்ள Re.Wi.Re கட்டமைப்பு வசதிகளின் பரந்த நெட்வொர்க்குடன், டாடா மோட்டார்ஸ் இப்போது ஆண்டுதோறும் 1.75 லட்சத்திற்கும் அதிகமான வாகனங்களை பொறுப்புடன் பிரித்து அகற்றுவதற்குத் தேவையான வசதிகளைக் கொண்டுள்ளது. இந்த தொலைநோக்குப் பார்வையை நிதர்சனமாக மாற்றுவதில் அங்கங்களாக உள்ள எங்கள் கூட்டாளிகள், மாநில அரசுகள் மற்றும் உள்ளூர் அதிகாரிகள் ஆகியோரின் அசைக்க முடியாத ஆதரவையும் ஒத்துழைப்பையும் நாங்கள் மிகவும் மதிக்கிறோம். இந்தியாவில் நிலைத்தன்மையான போக்குவரத்து மற்றும் வாகன மறுசுழற்சியை முன்னெடுத்துச் செல்வதில், மாண்புமிகு மத்திய அமைச்சர் ஸ்ரீ நிதின் கட்கரியின் தொடர்ச்சியான தலைமை மற்றும் ஊக்குவிப்புக்கு நான் குறிப்பாக நன்றி தெரிவிக்க விரும்புகிறேன் "என்று கூறினார்.


இந்த விரிவாக்கத்தின் மூலம், டாடா மோட்டார்ஸ் இப்போது ஜெய்ப்பூர், புவனேஸ்வர், சூரத், சண்டிகர், டெல்லி NCR, புனே, குவஹாத்தி, ராய்ப்பூர், லக்னோ மற்றும் கொல்கத்தா ஆகிய இடங்களிலுள்ள கட்டமைப்பு வசதிகள் உட்பட 10 வாகன ஸ்கிராப்பிங் மையங்களை இயக்குகிறது. ஒவ்வொரு Re.Wi.Re கட்டமைப்பு வசதியும் முழுமையாக டிஜிட்டல் மயமாக்கப்பட்டு, அதன் அனைத்து செயல்பாடுகளும் தடையற்ற மற்றும் காகிதமற்றவையாக உள்ளன. வணிக வாகனங்கள், இரு சக்கர வாகனங்கள் மற்றும் மூன்று சக்கர வாகனங்களுக்கான செல் டைப் அகற்றுதல் இயந்திரம் மற்றும் பயணிகள் வாகனங்களுக்கான லைன் டைப் அகற்றுதல் இயந்திரம் ஆகியவை பொருத்தப்பட்டிருக்கும்; மேலும், அவற்றில் டயர்கள், பேட்டரிகள், எரிபொருள், எண்ணெய்கள், திரவங்கள் மற்றும் வாயுக்கள் உள்ளிட்ட பல்வேறு கூறுகளை பாதுகாப்பாக அகற்றுவதற்காக பிரத்யேக நிலையங்கள் உள்ளன. ஒவ்வொரு வாகனமும் பயணிகள் மற்றும் வணிக வாகனங்களின் பொறுப்பான ஸ்கிராப்பிங் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக, சிறப்பாக வடிவமைக்கப்பட்ட ஒரு நுணுக்கமான ஆவணப்படுத்தல் மற்றும் பிரித்து அகற்றுதல் செயல்முறைக்கு உட்படுவதன் மூலம் நாட்டின் வாகன ஸ்கிராப்பேஜ் கொள்கையின்படி அனைத்து பாகங்களையும் பாதுகாப்பாக பிரித்து அகற்றுவதை உறுதி செய்கிறது. இந்த Re.Wi.Re. கட்டமைப்பு வசதியானது, வாகனத் தொழில்துறையினுள்ளே நிலைத்தன்மையான நடைமுறைகளை வளர்த்தெடுப்பதை நோக்கிய ஒரு அற்புதமான பாய்ச்சலாகத் திகழ்கிறது.