மலபார் கோல்டு அண்ட் டைமண்ட்ஸ், 2026- தீபாவளி பண்டிகை கொண்டாட்டகால சிறப்பு சலுகைகளை அறிமுகப்படுத்துகிறது இந்த பண்டிகைக் காலத்தின் போது, வாடிக்கையாளர்கள் சேதாரம் மற்றும் டைமண்ட் மதிப்பில் 30% வரை தள்ளுபடி சலுகையை பெறுவதோடு முன்பதிவு செய்யும் பலன்களையும் பெற்று பயனடையலாம்.
சென்னை | 28 அக்டோபர் 2026: உலகின் நான்காவது மிகப்பெரிய பொறுப்பு மிக்க ஆபரணங்கள் மற்றும் நகை விற்பனையாளருமான' மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் நிறுவனம், வாடிக்கையாளர்கள் இந்த தீபாவளித் திருநாளை அதன் உணர்வு குன்றாமல் மிகுந்த உற்சாகத்துடன் அனுபவித்து கொண்டாடி மகிழும் வண்ணம், கண்ணைக்கவரும் நேர்த்தியான கோல்டு, டைமண்ட், அன்கட், போல்கி மற்றும் ஜெம்ஸ்டோன் ரக ஆபரணங்களுக்கு தனிப்பட்ட தீபாவளி பண்டிகை கால சலுகைகளை வழங்குவதோடு அத்துடன் சேர்த்து கவர்ச்சிகரமான பண்டிகைக் கால சிறப்பு பலங்களையும் வழங்குகிறது. குறிப்பாக பண்டிகை கொண்டாட்ட காலம் மற்றும் திருமணப் பரிசளிப்புக் காலத்தை அடிப்படையாகக் கொண்டு எதிர் வரும் 2026 நவம்பர் 15 ஆம் தேதி வரை அனைத்து மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் ஷோரூம்களிலும் வழங்கப்படும் இந்தச் சலுகைகள், இந்த கொண்டாட்டகாலத்தில் நகை வாங்கும் அனுபவத்தை மேலும் பயனுள்ளதாகவும், நினைவை விட்டு அகலாத ஒரு உணர்வு பூர்வமான அனுபவமாகவும் மாற்றும்.
வாடிக்கையாளர்கள் தங்கம், அன்கட் மற்றும் ஜெம்ஸ்டோன் கற்கள் பதித்த நகைகளின் சேதாரத்தில் 30% வரையிலும், வைரத்தின் மதிப்பில் 30% வரையிலும் தள்ளுபடி பெறலாம். பண்டிகைக் காலச் சலுகைகளின் ஒரு பகுதியாக, வாடிக்கையாளர்கள் வாங்கும் மதிப்பில் வெறும் 10% முன்பணமாகச் செலுத்தி, தங்களது நகைகளை முன்கூட்டியே முன்பதிவு செய்யலாம். வாங்கும் நேரத்தில், வாடிக்கையாளர்கள் முன்பதிவு செய்யப்பட்ட தங்க விலை அல்லது நடைமுறையில் உள்ள விலை, இவற்றில் எது குறைவோ அதைச் செலுத்தலாம். இது, தங்கத்தின் விலை குறைந்தால் வாடிக்கையாளர்கள் குறைந்த விலையிலிருந்து பயனடையவும், விலை உயர்வுகளுக்கு எதிரான பாதுகாப்பைப் பெறவும், உதவுகிறது. அனைத்து சலுகைகளும் பொருந்தக்கூடிய விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டவை.
மலபார் கோல்டு & டைமண்ட்ஸ், பண்டிகைக் காலம் அத்துடன் இணைந்து வரும் அனைத்து பல்வேறு கொண்டாட்ட நிகழ்ச்சிகளுக்கும் பொருந்தும் வகையில் ஒரு விரிவான ஆபரண வடிவமைப்பு ரகங்களின் கலெக்சன், தரம் மற்றும் நம்பகத்தன்மைக்கான அர்ப்பணிப்பு போன்றவற்றுக்கு புகழ்பெற்று விளங்கும் இந்த பிராண்ட், பண்டிகை கால கொண்டாட்ட நிகழ்வுகள், திருமணங்கள் மற்றும் பரிசு வழங்கல்களுக்கான சிறந்த ஆபரணங்களை வாங்க விரும்பும் வாடிக்கையாளர்களின் தேவைகளை நிறைவு செய்கிறது.
இந்த பண்டிகைக்காலச் சிறப்பு சலுகைகள் குறித்து தனது கருத்தை தெரிவித்த திரு. M.P. அஹம்மத், சேர்மன், மலபார் குரூப் கூறினார். “தீபாவளி திருநாள் என்பது ஒன்றிணைந்திருத்தல் மற்றும் புதிய தொடக்கங்களுக்கான ஒரு மகிழ்ச்சிகரமான கொண்டாட்ட காலமாகும், மற்றும் இந்த கொண்டாட்ட காலத்தில் நகைகளுக்கு ஒரு சிறப்பான இடத்தை வகிக்கின்றன. எங்களின் 2026 தீபாவளி கொண்டாட்ட கால சலுகைகள் மூலம், பல்வேறு நகை வகைப்பிரிவுகள் முழுவதிலும் கவர்ச்சிகரமான பலன்களை எங்கள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கி, இந்தப் பண்டிகைக் காலத்தை அவர்களுக்கு மேலும் அர்த்தமுள்ளதாகச் செய்து மனநிறைவடையச் செய்வதை எங்கள் நோக்கமாகக் கொண்டுள்ளோம். விலை நிர்ணயம் செய்வதில் வெளிப்படைத்தன்மை மற்றும் வாடிக்கையாளர் திருப்தியை உறுதி செய்வதில் எங்களுக்குள்ள அர்ப்பணிப்பு ஆகியவையே எங்கள் அனைத்து செயல்பாடுகளிலும் மையமாக அமைந்துள்ளது மற்றும் வாடிக்கையாளர்கள் தொடர்ந்து எங்கள் மீது வைத்திருக்கும் அசைக்க முடியாத நம்பிக்கையே மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் உடனான ஒவ்வொரு கொண்டாட்டத்தையும் உண்மையிலேயே மிகச் சிறப்பு மிக்கதாக மாற்றுவதற்கான மன எழுச்சியை எங்களுக்கு அளிக்கிறது.”
பண்டிகைக்காலச் சிறப்புச் சலுகைகளுக்கும் அப்பால், நியாயமான விலை மற்றும் தரத்தை உறுதி செய்வதை , மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் தொடர்ந்து வலுயுறுத்தி வருகிறது. ஒரே சீரான, வெளிப்படைத்தன்மையோடுடனான மதிப்பை வாடிக்கையாளர்களுக்கு உறுதி செய்யும் வகையில் இந்தியா முழுவதிலுமுள்ள அதன் அனைத்துக் விற்பனை நிலையங்களிலும் கோல்டு ஒரே விலையில் விற்பனை செய்யப்பட்டுவருகிறது. அதன் நகைகள் பொறுப்புடன் கொள்முதல் செய்யப்பட்டு, HUID ஹால் மார்க் முத்திரையிடப்பட்டு, தரம் சரிபார்க்கப்படும் நடைமுறைகள், பொருட்களை தன்னம்பிக்கையோடு வாங்க வாடிக்கையாளர்களுக்கு உதவுகிறது.
இந்தத் தீபாவளி கொண்டாட்ட காலத்தின் போது, பல்வேறு ஆபரணங்களின் கலெக்சன்களை காணவும், பண்டிகைக்காலச் சலுகைகளைப் பயன்படுத்திக் கொள்ளவும், தங்களுக்கு அல்லது தங்கள் அன்புக்குரியவர்களுக்கு கச்சிதமாகப் பொருந்தக் கூடிய நகைகளை கண்டறியவும் வாடிக்கையாளர்கள் தங்களுக்கு அருகாமையிலுள்ள மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் ஷோரூமிற்கு வருகை தரலாம். வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் அனைத்துச் சலுகைகளும், பலன்களும் பொருந்தத்தக்க விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டவை.
மலபார் கோல்டு அண்ட் டைமண்ட்ஸ் நிறுவனத்தை பற்றி:
மலபார் கோல்டு அண்ட் டைமண்ட்ஸ் 1993-ஆம் ஆண்டு நிறுவப்பட்ட, இந்தியாவின் முன்னணி வணிகக் குழுமமான 'மலபார் குரூப்'-ன் முதன்மை நிறுவனமாகும். 9.46 பில்லியன் அமெரிக்க டாலர் வருடாந்திர விற்றுமுதல் கொண்ட இந்நிறுவனம், உலகின் நான்காவது மிகப்பெரிய நகை சில்லறை விற்பனையாளராகத் திகழ்கிறது. இது 14 நாடுகளில் 450-க்கும் மேற்பட்ட விற்பனையகங்களைக் கொண்ட வலுவான சில்லறை விற்பனை வலையமைப்பைக் கொண்டுள்ளது. மேலும், இந்தியா, மத்திய கிழக்கு நாடுகள், தூர கிழக்கு நாடுகள், அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளில் இந்நிறுவனத்தின் அலுவலகங்கள், வடிவமைப்பு மையங்கள், மொத்த விற்பனைப் பிரிவுகள் மற்றும் உற்பத்தி நிலையங்கள் அமைந்துள்ளன. 3,000-க்கும் மேற்பட்ட பங்குதாரர்களுக்குச் சொந்தமான இந்தக் குழுமத்தில், 26-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 30,000-க்கும் அதிகமான பணியாளர்கள் நிறுவனத்தின் தொடர்ச்சியான வளர்ச்சிக்காகப் பணியாற்றி வருகின்றனர்.
