Tuesday, September 15, 2026

ஜெமினி ஸ்கேன்ஸ் இமேஜிங் மற்றும் நோயறியும் பரிசோதனைகளுக்கான NABL அங்கீகாரத்தைப் பெற்று புதிய மைல்கல் சாதனை: சென்னையில் NABL அங்கீகாரம் பெற்ற ஒரே PET-CT / MRI / CT மையம் ஜெமினி ஸ்கேன்ஸ் என்ற புகழைப் பெற்றிருக்கிறது

ஜெமினி ஸ்கேன்ஸ் இமேஜிங் மற்றும் நோயறியும் பரிசோதனைகளுக்கான  NABL அங்கீகாரத்தைப் பெற்று  புதிய மைல்கல் சாதனை: சென்னையில் NABL அங்கீகாரம் பெற்ற ஒரே PET-CT / MRI / CT மையம் ஜெமினி ஸ்கேன்ஸ் என்ற புகழைப் பெற்றிருக்கிறது!


• அமைந்தகரை, வடபழனி, அடையாறு, முகப்பேர் மற்றும் அம்பத்தூர் ஆகிய இடங்களில் செயல்பட்டு வரும் ஜெமினி ஸ்கேன்ஸ் மையங்களில் அல்ட்ராசவுண்ட் (Ultrasound), டாப்ளர் (Doppler), எக்கோ (ECHO), எக்ஸ்-ரே (X-ray) மற்றும் டிஜிட்டல் மேமோகிராபி (Digital Mammography) உள்ளிட்ட பிற இமேஜிங் சேவைகளுக்கும் இந்த உயரிய அங்கீகாரம் கிடைத்துள்ளது. 

சென்னை, செப்டம்பர் 15, 2026: சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு 19 ஆண்டுகளுக்கும் மேலாகச் செயல்பட்டு வரும் முன்னணி மருத்துவப் பரிசோதனை மையமான ஜெமினி ஸ்கேன்ஸ் (Gemini Scans), தனது இமேஜிங் மற்றும் நோயறியும் பரிசோதனையான பேத்தாலஜி சேவைகளுக்கான மதிப்புமிக்க NABL அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது. இந்த அங்கீகாரமானது MRI, CT, PET-CT, அல்ட்ராசவுண்ட், டாப்ளர், எக்கோ (ECHO), எக்ஸ்-ரே, டிஜிட்டல் மேமோகிராபி மற்றும் ரத்தப் பரிசோதனைகள் உள்ளிட்ட விரிவான சேவைகளை உள்ளடக்கியிருப்பது குறிப்பிடத்தக்கது. உயர்நிலை ஆய்வான PET-CT-க்கும் இந்த அங்கீகாரம் கிடைத்துள்ளதால், தற்போது சென்னையில் NABL அங்கீகாரம் பெற்ற ஒரே PET-CT மையமாக ஜெமினி ஸ்கேன்ஸ் திகழ்கிறது என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஜெமினி ஸ்கேன்ஸின் அமைந்தகரை, வடபழனி, அடையாறு, முகப்பேர் மற்றும் அம்பத்தூர் ஆகிய மையங்கள் இந்த NABL அங்கீகாரத்தைப் பெற்றுள்ளன.

உயரிய தரத்திலான, துல்லியமான பரிசோதனைகளை மருத்துவர்கள் பரிந்துரைக்கும் நிலையில், NABL அங்கீகாரம் அதிக முக்கியத்துவம் பெற்று வருகிறது. இத்தகைய சூழலில், ஜெமினி ஸ்கேன்ஸ் இந்த அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. NABL அங்கீகாரம் பெற்றுள்ள அரசு மற்றும் தனியார் துறை மருத்துவமனைகளும் கூட, PET-CT மற்றும் MRI போன்ற உயர்தரப் பரிசோதனைகளுக்காக நோயாளிகளைப் பரிந்துரைக்கும்போது, NABL அங்கீகாரம் பெற்ற பரிசோதனை மையங்களையே அதிகம் விரும்புகின்றன. நோயாளிகளைப் பொறுத்தவரை, இமேஜிங் சேவைகளில் கடைப்பிடிக்கப்படும் தரமான நடைமுறைகளுக்கு இந்த அங்கீகாரம் ஒரு கூடுதல் உத்தரவாதத்தை வழங்குகிறது.

ஜெமினி ஸ்கேன்ஸ் இயக்குநர் டாக்டர் காட்வின் ஜீவா (Dr.Godwin Jeeva, Director, Gemini Scans) NABL அங்கீகாரம் குறித்து கூறுகையில்,  "ஜெமினி ஸ்கேன்ஸில் நாங்கள் தொடர்ந்து கடைப்பிடித்து வரும் தரமான நடைமுறைகள் மற்றும் நெறிமுறைகளுக்குக் கிடைத்த ஒரு முக்கியமான சான்றே இந்த NABL அங்கீகாரம். நோயாளிகள் தங்களது பரிசோதனை அறிக்கைகளின் துல்லியம், நிலைத்தன்மை மற்றும் நம்பகத்தன்மை மீது கூடுதல் நம்பிக்கை வைக்க இது வழிவகுத்திருக்கிறது. PET-CT உள்ளிட்ட பிற அதிநவீன இமேஜிங் முறைகளும் இந்த அங்கீகாரப் பட்டியலில் தற்போது இணைந்துள்ளதால், துல்லியமான பரிசோதனை சேவைகளை எதிர்பார்க்கும் நோயாளிகளுக்கும், பரிந்துரைக்கும் மருத்துவர்களுக்கும் சிறப்பான முறையில் சேவையாற்ற எங்களுக்கு உத்வேகமளிக்கும் வகையில் இந்த அங்கீகாரம் அமைந்திருக்கிறது" என்றார்.

மருத்துவப் பரிசோதனை மையம் முறையான தரநிலைகளைக் கடைப்பிடிப்பதையும், அதன் நடைமுறைகளும் உபகரணங்களும் சுயாதீன மதிப்பீட்டிற்கு உட்படுத்தப்படுவதையும் உறுதி செய்யும் ஒரு சான்றாகும். ஒரு நோயாளியைப் பொறுத்தவரை, தேசிய சோதனை மற்றும் அளவீட்டு ஆய்வகங்களுக்கான அங்கீகார வாரியத்தின் (National Accreditation Board for Testing and Calibration Laboratories - NABL)  என்பது ஆய்வகங்கள் மற்றும் மருத்துவப் பரிசோதனை மையங்களை அவற்றின் நிர்ணயிக்கப்பட்ட தரம் மற்றும் தொழில்நுட்பத் தேவைகளின் அடிப்படையில் மதிப்பீடு செய்கிறது. எனவே, NABL அங்கீகாரம் பெற்ற மையத்தைத் தேர்ந்தெடுப்பது, உபகரணங்கள் முறையாகக் கண்காணிக்கப்படுவதையும், பரிசோதனை நடைமுறைகள் முறையாக ஆவணப்படுத்தப்படுவதையும், மருத்துவ அறிக்கைகள் கடுமையான தரப் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவதையும் உறுதிசெய்கிறது. இதன் மூலம், பரிசோதனை முடிவுகளின் துல்லியம் மற்றும் நம்பகத்தன்மை மீது நோயாளிகளுக்கும் பரிந்துரைக்கும் மருத்துவர்களுக்கும் கூடுதல் நம்பிக்கையை அளிக்கிறது.

மேலும், இமேஜிங் உபகரண உற்பத்தியாளர்கள் வழங்கும் செயற்கை நுண்ணறிவு (AI) சார்ந்த நவீனத் தொழில்நுட்ப வசதிகளுக்கும் இந்த அங்கீகாரம் பொருந்தும். இதில் கால்சியம் ஸ்கோரிங் (Calcium scoring), தானியங்கி ரத்தக்குழாய் கண்காணிப்பு (Automated vessel tracking) மற்றும் கதிர்வீச்சு அளவு குறைத்தல் (Radiation dose reduction) ஆகியவை அடங்கும்; இது அதிநவீன இமேஜிங் சேவைகளுக்கான தரக்கட்டுப்பாட்டுக் கட்டமைப்பை மேலும் வலுப்படுத்துகிறது.

சென்னை முழுவதும் உள்ள தனது பரிசோதனை மையங்களுக்கு NABL அங்கீகாரத்தைத் தொடர்ந்து விரிவுபடுத்துவதன் மூலம், சென்னை மாநகரில் பரவலாக இருக்கும் மக்களுக்குத் தரமான இமேஜிங் சேவைகளை எளிதில் கிடைக்கச் செய்வதே ஜெமினி ஸ்கேன்ஸின் நோக்கமாகும். குறிப்பாக, உயர்நிலை ஆய்வுகளுக்காக NABL அங்கீகாரம் பெற்ற மையங்களை நாடும் நோயாளிகளுக்கும் மருத்துவ நிறுவனங்களுக்கும் இச்சேவை பெருமளவில் உதவும்.

நோய்த்தடுப்பு சுகாதாரப் பரிசோதனைகளை அனைவருக்கும் எளிதாகக் கிடைக்கச் செய்யும் தனது இலக்கின் ஒரு பகுதியாக, ஜெமினி ஸ்கேன்ஸ் ரூ. 1,250 முதல் தொடங்கும் ‘லைஃப் செக்’ (Life Check) முழு உடல் பரிசோதனைத் திட்டங்களையும் அறிமுகப்படுத்தியுள்ளது. பொதுமக்கள் வழக்கமான சுகாதாரப் பரிசோதனைகளை எளிய முறையில் மேற்கொள்வதற்கு ஏற்றவாறு இந்தத் திட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. மேலும் நோயாளிகளின் கூடுதல் வசதிக்காக, வீட்டிலிருந்தே ரத்த மாதிரிகளைச் சேகரிக்கும் (Home collection) சேவையையும் ஜெமினி ஸ்கேன்ஸ் வழங்குகிறது.