இளம் இந்திய செஸ் ஆர்வலர்களுக்கு உலகின் நம்பர் 1 மேக்னஸ் கார்ல்சனை எதிர்த்து விளையாடும் வாய்ப்பு
YiPPee! ‘Cook. Share. Checkmate!’ போட்டி மூலம் பெங்களூரு மற்றும் சென்னையைச் சேர்ந்த 25 இளம் செஸ் வீரர்களுக்கு கிராண்ட்மாஸ்டர்களுடன் விளையாடும் வாய்ப்பு
சென்னை: YiPPee! மற்றும் Alpine APL Pipers இணைந்து நடத்தும் ‘Cook. Share. Checkmate!’ போட்டி மூலம் பெங்களூரு மற்றும் சென்னையைச் சேர்ந்த 25 இளம் செஸ் வீரர்களுக்கு, உலக செஸ் சாம்பியன்களுடன் நேரடியாக விளையாடும் அரிய வாய்ப்பு கிடைக்கிறது. இதில் உலகின் நம்பர் 1 வீரரும் ஐந்து முறை உலக சாம்பியனுமான மேக்னஸ் கார்ல்சன், இந்திய செஸ் நட்சத்திரம் கொனேரு ஹம்பி மற்றும் வளர்ந்து வரும் இளம் நட்சத்திரம் திவ்யா தேஷ்முக் ஆகியோருடன் சந்தித்து, உரையாடி, செஸ் விளையாடும் வாய்ப்பும் அடங்கும்.
‘Cook. Share. Checkmate!’ போட்டி 13 முதல் 19 வயது வரையிலான, Chess.com அல்லது Lichess.org-ல் பதிவு செய்துள்ள பெங்களூரு மற்றும் சென்னை செஸ் வீரர்களுக்காக நடத்தப்படுகிறது.
இந்தப் போட்டியில் பங்கேற்க, இளம் செஸ் ஆர்வலர்கள் தங்களுக்குப் பிடித்த வகையில் YiPPee! நூடுல்ஸைத் தயாரித்து, அதனுடன் தங்களின் மறக்க முடியாத, பரபரப்பான அல்லது எதிர்பாராத செஸ் அனுபவத்தைப் பகிர வேண்டும். இதில் தேர்வு செய்யப்படும் 25 வெற்றியாளர்களுக்கு சாம்பியன்களை நேரில் சந்தித்து, அவர்களுடன் உரையாடி, செஸ் விளையாடும் பிரத்யேக அனுபவம் கிடைக்கும்.
பங்கேற்பாளர்கள் அதிகாரப்பூர்வ போட்டிப் படிவத்தைப் பூர்த்தி செய்து, தாங்கள் தயாரித்த YiPPee! உணவின் புகைப்படம் அல்லது வீடியோ, Chess.com அல்லது Lichess.org சுயவிவர விவரங்கள் மற்றும் தங்களின் செஸ் அனுபவத்தைப் பகிரலாம். போட்டி ஆகஸ்ட் 26 முதல் செப்டம்பர் 2, 2026 வரை நடைபெறுகிறது. பதிவுகளை செப்டம்பர் 2, 2026 அன்று மதியம் 12 மணி IST வரை சமர்ப்பிக்கலாம். வெற்றியாளர்கள் பிரத்யேக செஸ் அனுபவத்திற்கு முன்பாக அறிவிக்கப்படுவார்கள்.
செஸ் விளையாட்டைத் தாண்டியும், வெற்றியாளர்கள் தங்களின் சொந்த YiPPee! படைப்புகளை தயாரித்து, சாம்பியன்களுடன் சூடான நூடுல்ஸ் பகிர்ந்து சாப்பிடுவதோடு, செஸ் மீதான தங்களின் ஆர்வத்தைப் பற்றிய கதைகளையும் பகிர்ந்து கொள்ளலாம்.
இந்த முயற்சி குறித்து அட்ல் புஜார், மார்க்கெட்டிங் பிரிவு தலைவர், ஸ்நாக்ஸ் & நூடுல்ஸ், ஃபுட்ஸ் டிவிஷன், ITC Ltd. கூறுகையில், “இளைஞர்களை மையமாகக் கொண்ட பிராண்டாக YiPPee! தொடர்ந்து விளையாட்டுத் துறைக்கு ஆதரவளித்து, இந்தியாவின் இளம் திறமைகளை ஊக்குவித்து வருகிறது. Alpine APL Pipers உடனான இந்த இணைப்பின் மூலம், செஸ்ஸை விரும்பும் இளம் வீரர்கள் உலகின் முன்னணி சாம்பியன்களுடன் நேரடியாக சந்தித்து, விளையாட்டை இன்னும் நெருக்கமாக அனுபவிக்கும் ஒரு தனித்துவமான வாய்ப்பை உருவாக்குகிறோம்” என்றார்.
இந்த முயற்சி #BeyondTheMove பிரச்சாரத்தின் ஒரு பகுதியாகும். செஸ் போர்டில் நகர்த்தப்படும் ஒவ்வொரு காயின் பின்னாலும் இருக்கும் ஆர்வம், கதைகள் மற்றும் அனுபவங்களை இந்தப் பிரச்சாரம் கொண்டாடுகிறது.
About YiPPee!
YiPPee! is an Instant Noodle brand from ITC foods and is the Principal Partner of Alpine APL Pipers for the upcoming Tech Mahindra Global Chess League.
