Thursday, July 23, 2026

சென்னையை சேர்ந்த அறுவை சிகிச்சை நிபுணர் ஒரு வருடத்திற்குள் 300 எவல்யூஷன் மீடியல்-பிவோட் முழங்கால் மாற்று அறுவை சிகிச்சைகளை நிறைவுசெய்து, தனிப்பட்ட முழங்கால் மாற்று அறுவை சிகிச்சைக்கு முன்னுதாரணமாக திகழ்கிறார்

சென்னையை சேர்ந்த அறுவை சிகிச்சை நிபுணர் ஒரு வருடத்திற்குள் 300 எவல்யூஷன் மீடியல்-பிவோட் முழங்கால் மாற்று அறுவை சிகிச்சைகளை நிறைவுசெய்து, தனிப்பட்ட முழங்கால் மாற்று அறுவை சிகிச்சைக்கு முன்னுதாரணமாக திகழ்கிறார்

சென்னை, 23 ஜூலை 2026 - முழங்கால் மாற்று அறுவை சிகிச்சையானது. வலியை போக்குவதை போலவே முழங்காலின் இயல்பான இயக்கவியலை மீட்டெடுப்பதில் முக்கியத்துவம் பெறும் ஒரு புதிய சகாப்தத்தில் நுழைந்துள்ளது இந்த மாற்றத்தை பிரதிபலிக்கும் வகையில், சென்னையில் உள்ள பார்வதி மருத்துவமனையின் மூத்த எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணரான, டாக்டர் வெற்றி குமார். ஒரு வருடத்திற்கும் குறைவான காலத்தில் எவல்யூஷன் மீடியல்-பிவோட் முழங்கால் அமைப்பை பயன்படுத்தி 300-க்கும் மேற்பட்ட முழுமையான முழங்கால் மாற்று அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாக நிறைவுசெய்த தெற்காசியாவின் முதல் அறுவை சிகிச்சை நிபுணர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இதன் மூலம், தனிப்பட்ட முழங்கால் மாற்று அறுவை சிகிச்சை மற்றும் இயக்கவியல் சீரமைப்பின் முன்னணி ஆதரவாளராக தன்னை நிலைநிறுத்தியுள்ளார்.

இந்த மைல்கல், வெறுமனே ஒரு செயற்கை மூட்டுவை பொருத்துவதை விட முழங்காலின் இயல்பான இயக்கவியலை மீட்டெடுப்பதற்கு முன்னுரிமை அளிக்கும் ஒரு அணுகுமுறையின் மீதான வளர்ந்து வரும் நம்பிக்கையை பிரதிபலிக்கிறது.


ஆதார அடிப்படையிலான நடைமுறைகளை மேம்படுத்துவதில் பரவலாக அங்கீகரிக்கப்பட்ட டாக்டர். வெற்றி, அனைவருக்கும் பொருந்தும் ஒரே மாதிரியான அணுகுமுறைக்கு பதிலாக, ஒவ்வொரு நோயாளிக்கும் தனிப்பட்ட உடற்கூறியலை ஏற்கும் ஒரு உள்வைப்பு தேவை என்று நம்புகிறார். காப்புரிமை பெற்ற எவல்யூஷன் ட்ரூ மீடியல்- பிவோட் த்துவமானது. இயற்கையான முழங்காலின் நிலைத்தன்மை மற்றும் உயிரியல் இயக்கவியலை மீண்டும் உருவாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது நோயாளிகள் சுறுசுறுப்பான வாழ்க்கை முறைக்கு திரும்புவதற்கும், பல சந்தர்ப்பங்களில், தாங்கள் முழங்கால் மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்டதையே கிட்டத்தட்ட மறக்கவும் உதவுகிறது-இந்த விளைவு, பெருகிவரும் அங்கீகாரத்தை பெற்றுள்ள ஃபர்காட்டன் ஜாயின்ட் ஸ்கோர்' மூலம் பிரதிபலிக்கப்படுகிறது.

முதன்மையாக இயந்திர சீரமைப்பில் கவனம் செலுத்தும் வழக்கமான முழங்கால் வடிவமைப்புகளை போல் அல்லாமல், எவல்யூஷன்" மீடியல் பிவடமுழங்கால், உடலியல் ரீதியான உள் பக்க நிலைத்தன்மையை பாதுகாப்பதன் மூலம் இயற்கையான முழங்கால் உயிரியக்கவியலை மீண்டும் உருவாக்குகிறது. அதே நேரத்தில் இயற்கையான சுழற்சி இயக்கத்தையும் அனுமதித்து, மேம்பட்ட செயல்பாடு, இயக்க வரம்பு மற்றும் நீண்ட கால உள்வைப்பு செயல்திறனை ஆதரிக்கிறது.


"நவீன முழங்கால் மாற்று அறுவை சிகிச்சை என்பது வலி நிவாரணத்தை விட மிக மேலானது. ஒவ்வொரு முழங்காலும் தனித்துவமானது. மேலு மேலும் அந்த தனித்துவத்தை மதிப்பது. இயற்கையான மற்றும் நிலையானதாக உணரக்கூடிய முடிவுகளை வழங்க உதவுகிறது. கிட்டத்தட்ட 6 கோடி இந்தியர்கள் கீல்வாதத்தால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பல நோயாளிகள் பல வருட வலிக்கு பிறகே சிகிச்சை பெற வருகின்றனர். அவர்கள் நம்பிக்கையுடன் நடக்கவும். தாங்கள் விரும்பும் செயல்களுக்கு திரும்புவதற்கும், இறுதியில் தாங்கள் முழங்கால் மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்டதையே மறக்கவும் உதவுவதே எங்கள் நோக்கம்," என்று டாக்டர் வெற்றி குமார் கூறினார்.


மைக்ரோபோர்ட் ஆர்த்தோபெடிகஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மற்றும் இந்தியா, தெற்காசியாவுக்கான மூத்த பொது மேலாளர் டாக்டர் முகேஷ் பார்மர் கூறுகையில், "இந்த 300 அறுவை சிகிச்சைகள், தனிப்பட்ட மூட்டு மாற்று அறுவை சிகிச்சை மூலம் சிகிச்சை அளிக்கப்பட்ட 300 பேரை குறிக்கின்றன. சிறந்த மருத்துவத் தத்துவத்தின் ஆதரவுடன் கூடிய புத்தாக்கமானது. முழங்காலின் இயல்பான செயல்பாட்டை மீட்டெடுத்து, வாழ்க்கைத் தரத்தை எவ்வாறு மேம்படுத்தும் என்பதை டாக்டர் வெற்றி நிரூபித்துள்ளார். நோயாளிகளின் நலனை மேம்படுத்துவதில் டாக்டர் வெற்றியின் அர்ப்பணிப்பு இந்தியாவில் முழங்கால் மாற்று அறுவை சிகிச்சையின் எதிர்காலத்தை வடிவமைக்க உதவுவதால், அவரை போன்ற திறமையான அறுவை சிகிச்சை நிபுணர்களுடன் இணைந்து பணியாற்றுவதில் நாங்கள் பெருமை கொள்கிறோம் என்றார்.


டாக்டர் வெற்றி, இந்தியாவில் உள்ள தனிப்பட்ட மூட்டு மாற்று அறுவை சிகிச்சை சங்கத்தின் (PAS) நிறுவன உறுப்பினராகவும். அதன் சர்வதேச சமூகத்தில் ஒரு தீவிர உறுப்பினராகவும் உள்ளார். அவர் அறுவை சிகிச்சை நிணர்களுக்கு வழிகாட்டுவதோடு உலகளவில் நிரூபிக்கப்பட்ட நுட்பங்களையும் ஊக்குவித்து வருகிறார். மேம்பட்ட மூட்டு மறுசீரமைப்பு மற்றும் நோயாளி பராமரிப்புக்கான உலகளவில் நிரூபிக்கப்பட்ட நுட்பங்களையும் ஊக்குவித்து வருகிறார். மேம்பட்ட மூட்டு மறுசீரமைப்பு மற்றும் நோயாளி பராமரிப்புக்கான அணுகலை விரிவுபடுத்தும் நோக்கில், சென்னையில் ஒரு பிரத்யேக முழங்கால் மற்றும் மூட்டு மாற்று மையத்தை தொடங்க அவர் தற்போது தயாராகி வருகிறார்.

தனிப்பட்ட முழங்கால் மாற்று அறுவை சிகிச்சை உலகளவில் வேகம் பெற்று வரும் நிலையில், இது போன்ற மைல்கற்கள், மேம்பட்ட மூட்டு மாற்று அறுவை சிகிச்சையில் இந்தியாவின் வளர்ந்து வரும் தலைமைத்துவத்தை வலுப்படுத்துவதோடு, நோயாளிகளுக்கும் எலும்பியல் சமூகத்திற்கும் பயனளிக்கின்றன.