ஆர்செலார்மிட்டல் நிப்பான் ஸ்டீல் இந்தியா, அடுத்த தலைமுறை வாகன உற்பத்திக்கு இறக்குமதி மாற்றீட்டை ஆதரிக்கும் உலகத் தரம் வாய்ந்த, காப்புரிமை பெற்ற எஃகான Zagnelis® Protect -ஐ அறிமுகப்படுத்துகிறது
●சென்னையில் இருந்து தொடங்கப்பட்ட இந்த பிரீமியம் கோடட் ஸ்டீல் பிராண்ட், விநியோகச் சங்கிலியை வலுப்படுத்துவதோடு, ஆத்மநிர்பர் பாரத் தொலைநோக்குப் பார்வைக்கும் பங்களிக்கிறது.
●ஐரோப்பிய சந்தைகளில் பெற்ற வெற்றியைத் தொடர்ந்து, இந்தியாவில் முதன்முறையாக அறிமுகப்படுத்தப்படுகிறது.
●காப்புரிமை பெற்ற மற்றுமொரு தயாரிப்பின் மூலம், நிறுவனம் தனது மதிப்புக்கூட்டு ஸ்டீல் தொகுப்பை விரிவுபடுத்துகிறது.
சென்னை, ஜூன் 17, 2026: உயர் செயல்திறன் கொண்ட வாகனப் பயன்பாடுகளுக்காக வடிவமைக்கப்பட்ட, துத்தநாகம்-அலுமினியம்-மக்னீசியம் பூசப்பட்ட உயர்தர ஸ்டீல் பிராண்டான Zagnelis® Protect-ஐ, ஆர்செலர் மிட்டல் நிப்பான் ஸ்டீல் இந்தியா (AM/NS இந்தியா) இன்று அறிமுகப்படுத்தியது.
ஐரோப்பிய சந்தைகளில் நிரூபிக்கப்பட்ட, ஆர்செலர் மிட்டலின் காப்புரிமை பெற்ற Zagnelis® Protect கோட்டிங்குகள், -உலகின் மூன்றாவது பெரிய வாகன உற்பத்தியாளரான இந்தியாவில், இவ்வகையில் முதல்முறையாக ஒரு உற்பத்தித் திறனைக் -குறிக்கின்றன . இதுவரை, இதற்கு இணையான தொழில்நுட்பத் திறனும் தரமும் கொண்ட ஸ்டீல் பொருட்கள் முழுவதுமாக இறக்குமதி செய்யப்பட்டு வந்தன. சென்னையில் முக்கிய வாடிக்கையாளர்கள் குழுவின் முன்னிலையில் நடைபெற்ற இந்த அறிமுகத்தின் மூலம், ஆர்செலர் மிட்டல் நிப்பான் ஸ்டீல் இந்தியா, வாகனப் பயன்பாடுகளுக்காக உயர்தரமான, பிரீமியம் துத்தநாகம்-அலுமினியம்-மக்னீசியம் கோட் செய்யப்பட்ட ஸ்டீல் பிராண்டை அறிமுகப்படுத்திய முதல் நிறுவனமாக உருவெடுத்து, தனது தொழில்நுட்பத் தலைமைத்துவத்தை மேலும் வலுப்படுத்தியுள்ளது.
இந்தியாவின் வாகனச் சூழல் அமைப்பின் மையப்புள்ளியாக இப்பகுதி திகழ்வதோடு, வாகன நிறுவனங்கள், உதிரிபாக உற்பத்தியாளர்கள் மற்றும் மேம்பட்ட தொழில்துறை உள்கட்டமைப்பு ஆகியவற்றின் வலுவான வலையமைப்பின் ஆதரவுடன், நாட்டின் வாகன உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் கணிசமான பங்கைக் கொண்டுள்ள இப்பகுதியின் நிலைப்பாட்டிற்கு ஏற்ப சென்னையிலிருந்து இந்தத் திட்டம் வியூகரீதியாக அமைந்துள்ளது.
உள்நாட்டு மற்றும் உலகளாவிய சந்தைகளில் தங்களை மேலும் போட்டித்தன்மை மிக்கவர்களாக ஆக்குவதற்காக, வாகன உற்பத்தியாளர்கள் நீடித்துழைப்பு, செயல்திறன், பாதுகாப்பு மற்றும் உற்பத்தி நிலைத்தன்மை ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்தி வரும் நிலையில், உலகத் -தரம் வாய்ந்த, உயர் செயல்திறன் கொண்ட வாகன ஸ்டீல் பிராண்டான Zagnelis® Protect, அவர்களுக்குக் குறைந்த கால அவகாசம், சீரான தரம் மற்றும் மேம்பட்ட விநியோக உறுதிப்பாடு ஆகியவற்றிலிருந்து பயனடைய உதவும்.
Zagnelis® Protect-இன் ஆரம்பகட்டப் பயன்பாடு, ஜன்னல்கள், கண்ணாடிகள், வைப்பர்கள் மற்றும் இருக்கைகளில் பயன்படுத்தப்படும் நேர்மின்னோட்ட மோட்டார்களுக்கான முக்கிய உறைகளான மோட்டார் கப்களில் இருக்கும். ஒவ்வொரு காரிலும் இதுபோன்ற 20 முதல் 30 மோட்டார்கள் பயன்படுத்தப்படுவதால், இந்தத் தயாரிப்பு மேம்பட்ட செயல்திறன் மூலம் உடனடிப் பலனை வழங்குகிறது.
தற்போது, இந்தியாவில் பயன்படுத்தப்படும் முக்கிய வாகன ஸ்டீல் வகைகளில் சுமார் 8-10% இறக்குமதி செய்யப்படுகின்றன. இதற்கு முக்கிய காரணம் அவற்றின் கோட்டிங் மற்றும் உலோகவியல் சார்ந்த சிக்கலான தன்மையே ஆகும். இந்தியா ஆண்டுதோறும் அனைத்துப் பிரிவுகளிலும் 30 மில்லியனுக்கும் அதிகமான வாகனங்களை உற்பத்தி செய்வதாலும், வாகனத் தேவையானது உயர்தரமான, அரிப்பை எதிர்க்கும் மற்றும் எடை குறைந்த பொருட்களை நோக்கி நகர்வதாலும், இத்துறையின் அடுத்தகட்ட வளர்ச்சியில் மேம்பட்ட கோட்டிங் ஸ்டீல்களின் உள்நாட்டு உற்பத்தி ஒரு முக்கியப் பங்காற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த அறிமுகம் குறித்து கருத்து தெரிவித்த ஆர்கெலர் மிட்டல் நிப்பான் ஸ்டீல் இந்தியா (AM/NS இந்தியா) நிறுவனத்தின் இயக்குநர் மற்றும் விற்பனை, சந்தைப்படுத்தல் துணைத் தலைவர் திரு. ரஞ்சன் தார், “Zagnelis® Protect-இன் அறிமுகம், உயர்தர மற்றும் உயர் செயல்திறன் கொண்ட ஸ்டீல் தீர்வுகள் மூலம் நாட்டின் வாகன உற்பத்தித் திறன்களை மேம்படுத்துவதற்கான எங்கள் அர்ப்பணிப்பைப் பிரதிபலிக்கிறது. உலகளவில் போட்டித்தன்மை வாய்ந்த வாகனச் சூழலமைப்பை ஆதரிப்பதில் இது ஒரு குறிப்பிடத்தக்க படியாகும். 'புத்திசாலித்தனமான ஸ்டீல், பிரகாசமான எதிர்காலம்' என்ற எங்கள் பிராண்ட் வாக்குறுதிக்கு இணங்க, மதிப்பு கூட்டப்பட்ட ஸ்டீல் தீர்வுகளின் தொகுப்பை நாங்கள் விரிவுபடுத்துகிறோம். இந்தியா தொழில்நுட்பம் சார்ந்த வாகன உற்பத்தியில் கவனம் செலுத்துவதால், மேம்பட்ட ஸ்டீல் கிடைப்பது மிகவும் முக்கியமானதாகிறது. எங்கள் தாய் நிறுவனங்களான ஆர்கெலர் மிட்டல் மற்றும் நிப்பான் ஸ்டீல் ஆகியவற்றின் இணையற்ற தொழில்நுட்பம் மற்றும் நிபுணத்துவத்தின் ஆதரவுடன், இந்த உலகத் தரம் வாய்ந்த, இறக்குமதிக்கு மாற்றான தயாரிப்பை நாங்கள் உள்நாட்டிலேயே கிடைக்கச் செய்கிறோம். இது வாகன நிறுவனங்கள் உலகத் தரத்தை எட்ட உதவுவதோடு, ஆத்மநிர்பர் பாரத் தொலைநோக்குப் பார்வைக்கு அர்த்தமுள்ள பங்களிப்பையும் வழங்கும்” என்றார்
திரு. தார் மேலும் கூறுகையில், “இந்தியாவின் வாகன உற்பத்திச் சூழலமைப்பின் இதயமான சென்னையிலிருந்து இந்தத் தயாரிப்பை அறிமுகப்படுத்துவது, உத்திசார்ந்ததும் அடையாளப்பூர்வமானதும் ஆகும். இது, இந்தியாவின் வளர்ந்து வரும் தொழில்துறை அபிலாஷைகளைப் பூர்த்தி செய்வதோடு, உலகளாவிய தரநிலைகளைப் பூர்த்தி செய்யும் மேம்பட்ட, உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஸ்டீல் தீர்வுகளை வாகன நிறுவனங்களுக்கும் உதிரிபாக உற்பத்தியாளர்களுக்கும் வழங்குவதில் எங்களுடைய அர்ப்பணிப்பைப் பிரதிபலிக்கிறது.”
உலகளவில், Zagnelis® Protect கோட்டிங்குகள், வழக்கமான கால்வனைஸ்டு (GI) கோட்டிங்களை விட கணிசமாக அதிக அரிப்புத் தடுப்புத் திறனை வழங்குவதற்காக அங்கீகரிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, வாகனக் கூறுகள் பொதுவாக முதலில் அரிப்புக்குள்ளாகும் வெட்டு விளிம்புகள், மடிப்பு ஓரங்கள் மற்றும் வடிவமைக்கப்பட்ட பகுதிகளில் இந்தத் திறன் சிறப்பாக வெளிப்படுகிறது. இந்தப் புதிய பிராண்ட், விதிவிலக்கான அரிப்புத் தடுப்புத் திறன், தானாகவே சரிசெய்யும் பாதுகாப்பு, சிறந்த இழுக்கும் திறன் மற்றும் நம்பகமான பற்றவைக்கும் திறன் ஆகியவற்றை வழங்குகிறது. உள்நாட்டு உற்பத்தியானது, விநியோகச் சங்கிலியின் செயல்திறனையும் தரத்தின் நிலைத்தன்மையையும் மேம்படுத்தி, வாடிக்கையாளர்களின் செயல்பாட்டுத் திறனையும் போட்டி நன்மையையும் வலுப்படுத்த உதவும்.
இந்த அறிமுகம் ஆரம்பத்தில் மோட்டார் கப்களில் கவனம் செலுத்தித் தொடங்கப்பட்டாலும், Zagnelis® Protect ஆனது சேசிஸ் பாகங்கள், கதவு உள் பேனல்கள், ஹூட்/பானட் உள் பேனல்கள் மற்றும் டெக்லிட்/டெயில்கேட் உள் பேனல்கள் உள்ளிட்ட பரந்த அளவிலான வாகனப் பயன்பாடுகளுக்காகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
காப்புரிமை பெற்ற இந்தத் தயாரிப்பு முத்திரையின் வெளியீடானது, இந்தியாவின் வாகனத் தொழில் ஒரு வரலாற்று அளவை எட்டியுள்ள நேரத்தில் வந்துள்ளது. 2025-26 நிதியாண்டில் பயணிகள் வாகன விற்பனை சுமார் 4.7 மில்லியன் அலகுகளைத் தாண்டியுள்ளது. இது இந்தியாவை உலகின் மிகப்பெரிய வாகனச் சந்தைகளில் ஒன்றாகவும், வளர்ந்து வரும் ஏற்றுமதி மையமாகவும் ஆக்கியுள்ளது.
கூரைகள், வெளிப்புற உறைகள், முன்வடிவமைக்கப்பட்ட கட்டிடங்கள் மற்றும் கட்டடக்கலைப் பயன்பாடுகளுக்கான உயர்தர கலர்கோட்டிங் ஸ்டீலான Optigal® ஆகிய ஆர்செலர் மிட்டலின் இரண்டு காப்புரிமை பெற்ற தயாரிப்புகளை அறிமுகப்படுத்தியதைத் தொடர்ந்து, மேம்பட்ட ஸ்டீல் தீர்வுகளை உள்நாட்டிலேயே உருவாக்கும் ஆர்செலர் மிட்டல் நிப்பான் ஸ்டீல் இந்தியாவின் உத்தியை இந்த அறிமுகம் மேலும் வலுப்படுத்துகிறது .-
இந்த உள்நாட்டுமயமாக்கல் முயற்சிகள், இந்தியாவில் அடுத்த தலைமுறை வாகன மற்றும் மதிப்புக்கூட்டு ஸ்டீல் உற்பத்தியை ஆதரிப்பதற்காக, மூலப்பொருள் உற்பத்தி, இறுதிநிலை உற்பத்தி மற்றும் துணை உள்கட்டமைப்புகளின் மேம்பாட்டை உள்ளடக்கிய, ஹசிராவில் AM/NS இந்தியாவின் ₹60,000 கோடி மதிப்பிலான விரிவான விரிவாக்கத் திட்டத்தின் ஒரு பகுதியாகும்.
ABOUT ARCELORMITTAL NIPPON STEEL INDIA (AM/NS India):
ArcelorMittal Nippon Steel India (AM/NS India) is a joint venture between ArcelorMittal and Nippon Steel, two of the world’s leading steel manufacturing organisations. A leading integrated flat carbon steel producer in India, the company has a crude steel capacity of 9 million tonnes per annum with state-of-the-art downstream facilities. It produces a fully diversified range of flat steel products, including value-added steel, and has a pellet capacity of 20 million tonnes. The company is also setting up an 8.2 million tonnes per annum integrated steel plant in Andhra Pradesh. ArcelorMittal Nippon Steel India currently stands as the only integrated steel company in the country to have received the Green Steel Certificate from the Ministry of Steel.
