Tuesday, June 23, 2026

உங்கள் தந்தையின் தியாகங்களை மட்டுமன்றி, அவரை ஒரு மனிதராகப் புரிந்துகொள்ளுமாறு வலியுறுத்தும் இந்தியாஃபர்ஸ்ட் லைஃப் இன்சூரன்ஸின் “ஏக் ஷாம் பாப்பா கே நாம்” விளம்பரம்

உங்கள் தந்தையின் தியாகங்களை மட்டுமன்றி, அவரை ஒரு மனிதராகப் புரிந்துகொள்ளுமாறு வலியுறுத்தும் இந்தியாஃபர்ஸ்ட் லைஃப் இன்சூரன்ஸின் “ஏக் ஷாம் பாப்பா கே நாம்” விளம்பரம் 

தி வொம்ப் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட இந்த விளம்பரம், ஷுஜாத் சௌதாகர் இயக்கத்தில், அவினாஷ் திவாரி நடிப்பில் ஒரு உணர்வுபூர்வமான குறும்படமாக வெளிவருகிறது.


சென்னை, 23 ஜூன் 2026: இந்தியாஃபர்ஸ்ட் லைஃப் இன்சூரன்ஸ் நிறுவனம், தந்தையர் தினத்தை முன்னிட்டு “ஏக் ஷாம் பாப்பா கே நாம்” (Ek Shaam Papa Ke Naam) என்ற பெயரில் இதயத்தை நெகிழவைக்கும் ஒரு உணர்வுபூர்வமான பரப்புரை திட்டத்தை தொடங்கியுள்ளது. தந்தையை குடும்பத்தின் பொறுப்புகளை அக்கறையுடன் பூர்த்தி செய்யும் நபராக மட்டும் பார்க்காமல், அவரை ஒரு தனிப்பட்ட நபராக புரிந்துகொள்ள முயற்சி செய்யுமாறு குழந்தைகளையும், பிள்ளைகளையும் இந்த விளம்பரப்படம் கேட்டுக்கொள்கிறது.


தி வொம்ப் நிறுவனத்தின் கருத்தாக்கத்தில் உருவான இந்த விளம்பர திரைப்படத்தை, குட் மார்னிங் ஃபிலிம்ஸ் தயாரித்துள்ளது. ஷுஜாத் சௌதாகர் இயக்கியுள்ள இந்த குறும்படத்தில் அவினாஷ் திவாரி நடித்துள்ளார். தலைமுறைகளாக, தந்தையர்கள் தங்கள் பொறுப்புகளை நிறைவேற்றுவதன் வழியாகவே தங்களது அன்பை வெளிப்படுத்தி வந்திருக்கின்றனர். குடும்பத்திற்காக உழைப்பதிலும், அவர்களைப் பாதுகாப்பதிலும் அவர்கள் காட்டும் அக்கறையில், அவர்களின் சொந்தக் கனவுகள், விருப்பங்கள் மற்றும் உணர்வுகள் பெரும்பாலும் குடும்ப உறுப்பினர்களால் கவனிக்கப்படாமலேயே போய்விடுகின்றன. தந்தைக்கும் பிள்ளைகளுக்கும் இடையே இருக்கும் இந்த இடைவெளியைக் குறைப்பதும், மற்றும் பிள்ளைகளின் தேவைகளை பூர்த்தி செய்ய பல தியாகங்களையும், முயற்சிகளையும் செய்கிற தந்தையின் மறுபக்கத்தை பிள்ளைகளும், குழந்தைகளும் உண்மையிலேயே அறியுமாறு செய்வதே இந்த பரப்புரை திட்டத்தின் நோக்கமாகும்.


"இந்தியாஃபர்ஸ்ட் லைஃபின் ‘ஜிம்மேதாரி ஆஹ் ஹம்ஸே பாண்டியே, ஹல்கா லகேகா’ (Zimmedariyaan Humse Baantiye, Halka Lagega) என்ற பிராண்ட் வாக்குறுதியின் அடிப்படையில் உருவான இந்தப் பரப்புரை, குடும்பத்தின் சுமையைத் தாங்கும் நபரான தந்தையின் சுமையைக் குறைத்து இலகுவாக்கும் பயணத்தில் ஒரு முக்கியப் படியாகும். தந்தையர்களுக்கு எப்போதும் முன்னுரிமை அளிக்கும் ஒரு பிராண்டாக, இந்தியாஃபர்ஸ்ட் லைஃப் குழந்தைகளிடம் ஒரு வேண்டுகோளை வைக்கிறது: உங்கள் அப்பாவிற்குப் பேசுவதற்குத் தேவையான இடத்தையும் நேரத்தையும் கொடுத்து, தனது எண்ணங்களை அவர் பகிர்ந்து கொள்ள உதவுங்கள்; இது அவரது மனதின் பாரத்தைக் குறைத்து, அவருக்கு மகிழ்ச்சியையும், மனஅமைதியையும் வழங்கும்."


இந்தியாஃபர்ஸ்ட் லைஃப்-ன் சந்தைப்படுத்தல் பிரிவின் தலைவர் சுபங்கர் சென்குப்தா கூறுகையில், “பாதுகாப்பு என்பது நிதி ரீதியிலான பாதுகாப்பு மட்டுமல்ல; அதையும் கடந்து நாம் கொண்டிருக்கும் உறவுகளின் வலிமையையும் உள்ளடக்கியது என்று இந்தியாஃபர்ஸ்ட் நிறுவனத்தில் நாங்கள் நம்புகிறோம். தந்தையர்கள் நமது வாழ்க்கையில் பெரும்பாலும் அதிகம் பேசாத, ஆனால் குடும்பத்தை தாங்குகிற அமைதியான தூண்கள்; அவர்கள் என்ன செய்கிறார்கள் என்றுதான் பார்க்கப்படுகிறார்களே தவிர, அவர்கள் யார் என்று நாம் பார்ப்பதில்லை. இந்த நிலையை மாற்றி, பிள்ளைகள் தந்தையர்களுடன் உரையாடி வலுவான பிணைப்புள்ள உறவை மீண்டும் கட்டமைத்து அவர்களைப் புரிந்துகொள்ள வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். ஏனென்றால், நாம் தவறவிடும் தருணங்களே, பின்னாளில் நாம் ஒருபோதும் கேட்காத கதைகளாகிவிடுகின்றன” என்றார்.


தி வொம்ப் நிறுவனத்தின் முதுநிலை கிரியேட்டிவ் பார்ட்னர் குஞ்சன் கபா கூறுகையில், “தந்தையர் தினத்தில் பல நிறுவனங்கள் தந்தையர்களைப் புகழ்ந்து பாராட்டுகின்றன; ஆனால் அந்த செய்திகளுள் பலவும் பெரும்பாலும் கவனிக்கப்படாமல் போய்விடுகின்றன. குடும்பத்திற்காக உழைத்து வருவாய் ஈட்டும் நபர்களுக்காக செயல்படும் ஒரு நிறுவனமாக, நாங்கள் ஒரு எளிய உண்மையை உணர்ந்தோம்: நம் தந்தையை, அப்பாவாக மட்டுமே நாம் பார்க்கிறோம். பெரும்பாலும் அவர் தான் முதலில் வீட்டிலிருந்து பணிக்காக வெளியே செல்பவராகவும், கடைசியாக வீட்டிற்கு திரும்புபவராகவும் இருக்கிறார். தன் அன்புக்குரியவர்களுக்காகத் தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணிக்கும் அவர், ஒரு மனிதராகப் அவர் அன்பு செய்யும் அதே நபர்களாலேயே அறியப்படாத நபராகவே இருந்து விடுகிறார். வருத்தத்தை  வெளிப்படுத்தும் ஒரு கதையின் மூலம் சொல்ல நாங்கள் முடிவு செய்தோம். ஒரு மனிதரின் வருத்தம், பலருக்கு ஒரு நினைவூட்டலாக இருக்கக்கூடும் என்பதே இதற்கு காரணம். காலம் கடந்துவிடுவதற்கு முன்பே தந்தையை புரிந்துகொள்ளுங்கள்” என்றார்.



இவ்விளம்பர படத்தின் இயக்குநர் ஷுஜாத் சௌதாகர் கூறுகையில், “நினைவுகள் கேள்விகளாக மாறும் வரை காத்திருக்காதீர்கள். நம் தந்தை என்று நாம் அழைக்கும் மனிதரைத் தெரிந்துகொள்ள நேரம் ஒதுக்காத அந்த வருத்தம், எனது உணர்வுகளை தட்டியெழுப்பியது. உணர்ச்சிகரமான ஒரு கதையை உருவாக்கி சொல்வதே இந்த முயற்சி. இதற்காக தி வொம்ப் மற்றும் இந்தியாஃபர்ஸ்ட் லைஃப் குழுவினருடன் பணியாற்றியது ஒரு அற்புதமான அனுபவம். அவினாஷ் திவாரியுடன் மீண்டும் இணைந்தது மகிழ்ச்சி அளிக்கிறது; அவர் தனது சிறப்பான நடிப்பால் இந்த உணர்வுகளை மிக அழகாக வெளிப்படுத்தியுள்ளார்” என்றார்.


இந்த விளம்பர திரைப்படம் தந்தையர் தினத்தை முன்னிட்டு சமூக ஊடகங்கள், டிஜிட்டல் தளங்கள் மற்றும் பிற ஒருங்கிணைக்கப்பட்ட தளங்களில் வெளியாகிறது.


இவ்விளம்பர திரைப்படத்தை இங்கு காணவும்: https://youtu.be/9fVdZSzmSTU


விளம்பர திரைப்படத்தின் காட்சி:

 


விளம்பர திரைப்படக் குழுவினர்: 

நிறுவனம்: இந்தியாஃபர்ஸ்ட் லைஃப் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட்

கிரியேட்டிவ் ஏஜென்சி: தி வொம்ப் 

தயாரிப்பு நிறுவனம்: குட் மார்னிங் ஃபிலிம்ஸ் 

இயக்குநர்: ஷுஜாத் சௌதாகர்

நடிகர்: அவினாஷ் திவாரி

####


About IndiaFirst Life Insurance Company Ltd: Headquartered in Mumbai, IndiaFirst Life Insurance Company Limited (IndiaFirst Life), with a paid-up share capital of INR 754 crores, is one of the country's youngest life insurance companies. Its current shareholders include Bank of Baroda, Union Bank of India, and Carmel Point Investments India Private Limited, which hold 65%, 09%, and 26% stakes in the company. Carmel Point Investments India Pvt Ltd. is incorporated by Carmel Point Investment Ltd, a body corporate incorporated under the laws of Mauritius and owned by private equity funds managed by Warburg Pincus LLC, New York, United States. The company’s key differentiator is its simple, easy-to-understand products that are fairly-priced and efficiently serviced.