Monday, November 23, 2026

இந்தியாவின் வளர்ச்சிக்கான பிரதமரின் தொலைநோக்குப் பார்வைக்கு ஆதரவாக தொழில்துறையும் அரசும் ஒன்றிணைய அனில் அகர்வால் அழைப்பு விடுக்கிறார்

இந்தியாவின் வளர்ச்சிக்கான பிரதமரின் தொலைநோக்குப் பார்வைக்கு ஆதரவாக தொழில்துறையும் அரசும் ஒன்றிணைய  அனில் அகர்வால் அழைப்பு விடுக்கிறார்

சமீபத்திய சமூக ஊடகப் பதிவில், வேதாந்தா குழுமத்தின் தலைவர் அனில் அகர்வால், FICCI மாநாட்டில் தொழில்துறையினருக்கு பிரதமர் ஆற்றிய உரை குறித்துப் பகிர்ந்துகொண்டார். இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்தவும், பெரிய அளவிலான வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் அரசுக்கும் தனியார் துறைக்கும் இடையே அதிக ஒத்துழைப்பு தேவை என்று அவர் அழைப்பு விடுத்தார்.

உற்பத்தித்திறனை மேம்படுத்தவும், வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், MSME-களின் வளர்ச்சியை ஊக்குவிக்கவும் தனியார் துறை நிர்வாகத்தின் சாத்தியக்கூறுகளை முக்கியப்படுத்தி, இயற்கை வளங்கள், எரிசக்தி, உற்பத்தி மற்றும் கனரக தொழில்துறை ஆகிய துறைகளில் அரசுக்கு சொந்தமான நிறுவனங்களை அதிக அளவில் தனியார்மயமாக்க வேண்டும் என்று அவர் பரிந்துரைத்துள்ளார். தனியார்மயமாக்கலுடன் ஆட்குறைப்பு இருக்கக்கூடாது மற்றும் வேலைவாய்ப்பு மும்மடங்கு அதிகரிக்க வேண்டும் ஆகிய இரண்டு நிபந்தனைகளும் இணைக்கப்பட வேண்டும் என்று அவர் பரிந்துரைக்கிறார். கார்ப்பரேட் கையகப்படுத்துதலுக்கு மாற்றாக பொதுமக்களுக்கு பங்கு விநியோகம் செய்வதையும் அவர் முக்கிய படுத்துகிறார். தனியார்மயமாக்கலின் மூலம் கிடைக்கும் வருவாயை, அரசாங்கக் கடனைக் குறைப்பதற்கும் உள்கட்டமைப்பில் முதலீடு செய்வதற்கும் பயன்படுத்த வாய்ப்புள்ளதன் மூலம் பெருநிறுவனங்களைக் கையகப்படுத்துவதற்கு மாற்றாகப் பொதுப் பங்கு விநியோகத்தையும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.

நம்பிக்கை மீது பிரதமர் கொண்டுள்ள கவனத்தை வலியுறுத்தும் அகர்வால், நீண்ட ஒப்புதல் செயல்முறைகளுக்கு பதிலாக சுயச் சான்றழிப்பு மற்றும் எளிமையான ஒழுங்குமுறைகளைக் கொண்டுவர அகர்வால் அழைப்பு விடுத்துள்ளார். தெளிவான விதிகளை அரசு வகுக்க வேண்டும், தணிக்கைகள் மூலம் இணக்கத்தை உறுதி செய்ய வேண்டும்; இதன்மூலம் வணிகங்களும் புதிய தொழில்களும் விரைவாகத் தொடங்கி விரிவாக்க முடியும் என்று அவர் நம்புகிறார்.

கனிமங்கள், உலோகங்கள் மற்றும் ஹைட்ரோகார்பன்கள் துறைகளில் உள்ள இளம் தொழில்முனைவோர் மற்றும் புத்தொழில் நிறுவனங்களுக்கு ஆய்வுப் பணி ஒரு குறிப்பிடத்தக்க வாய்ப்பு என்பதை அகர்வால் சுட்டிக்காட்டியுள்ளார்.  ஆய்வுப் பணி புத்தொழில் நிறுவனங்கள் தங்கள் கண்டுபிடிப்புகளை ONGC மற்றும் ஹிந்துஸ்தான் ஜிங்க் போன்ற பெரிய அளவிலான சுரங்கம் மற்றும் செயலாக்க முதலீடுகளை மேற்கொள்ளும் திறன் கொண்ட நிறுவனங்களுக்கு விற்க அனுமதிப்பதை அவர் வாதிடுகிறார். இது நூற்றுக்கணக்கான ஆய்வுப் பணி புத்தொழில் நிறுவனங்களை ஊக்குவிக்கும், தொழில்முனைவு வாய்ப்புகளை உருவாக்கும் மற்றும் இந்தியாவின் உள்நாட்டு வள சூழலமைப்பை வலுப்படுத்தும் என்று அவர் நம்புகிறார்.

அவரது பதிவை முடிக்கையில், தனியார்மயமாக்கல், சுயச் சான்றளிப்பு மற்றும் ஆய்வு ஆகியவற்றை மையமாகக் கொண்டு ஒரு தேசிய இயக்கத்தை உருவாக்க தொழில்துறை, அரசு மற்றும் குடிமக்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று அவர் அழைப்பு விடுத்துள்ளார். உணவில் தன்னிறைவு அடைவதில் ஜெய் ஜவான் ஜெய் கிசான் இயக்கம் பெற்ற வெற்றியுடன் ஒப்பீடு செய்து, வேலைவாய்ப்புகளை உருவாக்குதல், வருமானத்தை உயர்த்துதல் மற்றும் இந்திய ரூபாயை வலுப்படுத்துதல் ஆகியவற்றுக்காக இதேபோன்ற கூட்டு முயற்சியை அவர் பரிந்துரைக்கிறார்.