மலபார் குழுமம் புதுமையாக கொண்டாடிய மலபார் தினம் தமிழ்நாடு முழுவதும் நடத்திய தூய்மைப்பணி இயக்கம்
சென்னை, 04 செப்டம்பர் 2026: 34-வது மலபார் நிறுவன தினத்தை ('மலபார் தினம்') முன்னிட்டு நாடு தழுவிய அளவில் தூய்மைப் பணிகளை மிகப்பெரிய அளவில் மலபார் குழுமம் முன்னெடுத்தது. இதன் ஒரு பகுதியாக, தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் தீவிர தூய்மைப்பணி திட்டங்கள் நடைபெற்றன. தமிழ்நாடு மாநிலத்தின் மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளது நிர்வாக அமைப்புகளுடன் இணைந்து நடத்தப்பட்ட இந்நிகழ்வுகளில், மலபார் கோல்டு & ட டைமண்ட்ஸ் நிறுவனத்தின் உயர் நிர்வாக அதிகாரிகள், ஷோரூம்களின் தலைமை பொறுப்பாளர்கள், பணியாளர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் ஆகியோர் ஆர்வத்துடனும், சமூக சேவையாற்றும் உத்வேகத்துடனும் பங்கேற்றனர்.
சுற்றுச்சூழல், சமூகம் மற்றும் நிர்வாகம் (ESG) சார்ந்த கொள்கைகளை ஊக்குவிப்பதற்கான மலபார் குழுமத்தின் தொடர் முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த மாபெரும் தூய்மைப்பணி திட்டம் செயல்படுத்தப்பட்டது. நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் நடைபெற்ற இத்தூய்மைப்பணியில் மலபார் குழுமத்தைச் சேர்ந்த 9,000-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் உரையாற்றிய மலபார் குழுமத்தின் தலைவர் திரு. எம்.பி. அஹமது அவர்கள், “சுற்றுச்சூழல் பொறுப்புணர்வு, சமூக ஈடுபாடு, வெளிப்படைத்தன்மை மற்றும் நன்னெறி சார்ந்த நிர்வாகம் ஆகியவற்றை எங்களது வணிக நடைமுறைகளுடன் ஒருங்கிணைத்து, சுற்றுச்சூழல், சமூகம் மற்றும் நிர்வாகம் சார்ந்த கொள்கைகளை செயல்படுத்துவதில் மலபார் நிறுவனம் உறுதியாக உள்ளது. சுற்றுச்சூழல் நிலைத்தன்மைக்கான எங்களது முயற்சிகளின் ஒரு பகுதியாக, அடுத்த ஆண்டுக்குள் இந்தியா முழுவதும் சுமார் 1 லட்சம் மரக்கன்றுகளை நடுவதற்கு மலபார் குழுமம் இலக்கு நிர்ணயித்து
செயல்படுத்த திட்டமிட்டுள்ளது,” என்று தெரிவித்தார்.
வணிக செயல்பாடுகளோடு நிறுத்திக் கொள்ளாமல் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், சமுதாயத்திற்கு ஆதரவளிக்கவும் பல்வேறு சிறப்பான சமூக முன்முயற்சிகளை மலபார் குழுமம் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. 'பசியில்லா உலகம்', வசதியற்ற குழந்தைகளுக்கான 'நுண் கற்றல் மையங்கள்', பெண் குழந்தைகளுக்கான கல்வி உதவித்தொகை மற்றும் ஆதரவற்ற முதியோர்களுக்கான 'கிராண்ட்மா ஹோம்ஸ்' (Grandma Homes) ஆகியவை இக்குழுமம் செயல்படுத்தி வரும் குறிப்பிடத்தக்க முக்கியத் திட்டங்களாகும். சமூகப் பொறுப்புணர்வு மற்றும் நிலைப்புத்தன்மையுள்ள வளர்ச்சி மீது இக்குழுமம் கொண்டிருக்கும் தொடர்ச்சியான அர்ப்பணிப்பைப் இத்திட்டங்கள் பிரதிபலிக்கின்றன.
மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் - ஒரு பார்வை:
1993-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் நிறுவனம், இந்தியாவின் முன்னணி பன்முக வணிகக் கூட்டமைப்பான மலபார் குழுமத்தின் முதன்மை நிறுவனமாகும். ஆண்டு டர்ன்ஓவர் 9.41 பில்லியன் யுஎஸ் டாலர் கொண்ட இந்நிறுவனம், தற்போது ஆபரண சில்லறை விற்பனையில் உலகத் தரவரிசையில் 4-வது மிகப்பெரிய நிறுவனமாகத் திகழ்கிறது.
இந்நிறுவனம் 14 நாடுகளில் 450-க்கும் மேற்பட்ட ஷோரூம்களுடன் வலுவான விற்பனை வலையமைப்புடன் இயங்குகிறது. மேலும்; இந்தியா, மத்திய கிழக்கு நாடுகள், தூர கிழக்கு நாடுகள், அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளில் இதன் அலுவலகங்கள், வடிவமைப்பு மையங்கள், மொத்த விற்பனைப் பிரிவுகள் மற்றும் ஆபரண உற்பத்தி ஆலைகளும் செயல்பட்டு வருகின்றன.
3,500-க்கும் மேற்பட்ட பங்குதாரர்களைக் கொண்டுள்ள இக்குழுமத்தில், 26-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 30,000-க்கும் மேற்பட்ட தொழில்முறை வல்லுநர்கள் இதன் தொடர்ச்சியான வளர்ச்சிக்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றி வருகின்றனர்.
.jpeg)