2027 நிதியாண்டின் இரண்டாம் அரையாண்டு நிதி முடிவுகள் வெளியீடு!
இந்தியாமார்ட் இன்டெர்மெஸ் லிமிடெட் 2027 நிதியாண்டின் இரண்டாம் காலாண்டு முடிவுகளை வெளியிட்டது; ரூ. 429 கோடி ஒருங்கிணைந்த வருவாய், 10% வளர்ச்சி
• செயல்பாடுகள் மூலமான ஒருங்கிணைந்த வருவாய் ரூ. 429 கோடி, இது கடந்த ஆண்டின் இதே காலஅளவில் பதிவானதைவிட (YoY) 10% வளர்ச்சியாகும்.
• தனித்து நிற்கும் EBITDA ரூ. 156 கோடியாக பதிவாகியிருக்கிறது; இது 40% EBITDA வரம்பைக் குறிக்கிறது.
• செயல்பாடுகள் மூலம் திரட்டப்பட்ட ஒருங்கிணைந்த ரொக்கம் ரூ. 135 கோடியாகும்.
சென்னை, செப்டம்பர் 2, 2026: இந்தியாமார்ட் இன்டெர்மெஸ் லிமிடெட் (“இந்தியாமார்ட்” அல்லது “நிறுவனம்” என அழைக்கப்படுவது), 2026 செப்டம்பர் 30-ல் முடிவடைந்த இரண்டாவது காலாண்டிற்கான அதன் நிதிசார் முடிவுகளை இன்று அறிவித்திருக்கிறது.
ஒருங்கிணைக்கப்பட்ட நிதிசார் முடிவுகளின் முதன்மை அம்சங்கள் (Q2 FY2027):
கடந்த ஆண்டின் இதே காலாண்டின்போது ரூ. 391 கோடியாக இருந்த இயக்கச் செயல்பாடுகளின் ஒருங்கிணைக்கப்பட்ட வருவாய், இந்த ஆண்டின் இரண்டாம் காலாண்டில் ரூ. 429 கோடியாக பதிவாகி, 10% வளர்ச்சியை எட்டியிருக்கிறது. இத்தொகையானது, இந்தியாமார்ட்டின் தனித்து நிற்கும் வருவாயான ரூ. 389 கோடி மற்றும் பிஸி இன்ஃபோடெக்-ன் வருவாயான ரூ. 37 கோடியை உள்ளடக்கியதாகும்.
இக்காலாண்டின்போது வாடிக்கையாளர்களிடமிருந்து பெறப்பட்ட கட்டண வசூல் தொகை முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில், 9% வளர்ச்சியுடன் ரூ. 443 கோடியாக அதிகரித்திருக்கிறது. இந்தியாமார்ட்-ன் தனித்து நிற்கும் கலெக்ஷனான ரூ. 394 கோடி மற்றும் பிஸி இன்ஃபோடெக்-ன் கலெக்ஷனான ரூ. 46 கோடி இதில் பிரதானமாக உள்ளடங்கும்.
2026 செப்டம்பர் 30 அன்று ஒத்திவைக்கப்பட்ட வருவாய் ரூ. 2,029 கோடியாக அதிகரித்து, YoY அடிப்படையில் 16% வளர்ச்சியை பதிவு செய்திருக்கிறது. இந்தியாமார்ட்டின் ரூ. 1,863 கோடி மற்றும் பிஸி இன்ஃபோடெக்-ன் ரூ. 155 கோடி ஒத்திவைக்கப்பட்ட வருவாய் இதில் பிரதானமாக உள்ளடங்கும்.
இக்காலாண்டிற்கான நிகர இலாபம் ரூ. 91 கோடியாகவும். இயக்கச் செயல்பாடுகளிலிருந்து கிடைத்த பணப்பாய்வு இக்காலாண்டில் ரூ. 135 கோடியாகவும் இருந்தது. 2026 செப்டம்பர் 30 அன்று ரொக்கம் மற்றும் முதலீடுகளின் மொத்த கையிருப்பு ரூ. 3,234 கோடியாக இருக்கிறது.
தனித்து நிற்கும் நிதிசார் முடிவுகளின் முதன்மை அம்சங்கள் (Q2 FY2027):
இயக்கச் செயல்பாடுகளிலிருந்து கிடைத்த தனித்து நிற்கும் வருவாய் முந்தைய ஆண்டின் ரூ. 360 கோடியுடன் ஒப்பிடுகையில் 8% வளர்ச்சியுடன் ரூ. 389 கோடியாக உயர்ந்திருக்கிறது. பணம் செலுத்தும் சப்ளையர்களிடமிருந்து கிடைக்கும் தொகையில் முன்னேற்றமே இந்த வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக இருந்திருக்கிறது.
வாடிக்கையாளர்களிடமிருந்து கிடைக்கும் கலெக்ஷன்கள் ரூ. 394 கோடியாக உயர்ந்து, 8% YoY வளர்ச்சியை பதிவு செய்திருக்கிறது. 2026 செப்டம்பர் 30 அன்று, ஒத்திவைக்கப்பட்ட வருவாய் ரூ.1863 கோடியாக 14% YoY வளர்ச்சியை வெளிப்படுத்தியிருக்கிறது.
இக்காலாண்டிற்கான EBITDA, 40% இலாப வரம்பை பிரதிபலித்து ரூ. 156 கோடியாக பதிவாகியிருக்கிறது. இக்காலாண்டிற்கான நிகர இலாபம் ரூ. 106 கோடியாக உயர்ந்திருக்கிறது.
இயக்க ரீதியிலான முதன்மை அம்சங்கள் (Q2 FY2027):
Q2FY27-ல் 27 மில்லியன் தனித்துவமான பிசினஸ் விசாரணைகளை இந்தியாமார்ட் பதிவு செய்திருக்கிறது. சப்ளையர் ஸ்டோர்ஃபிரண்ட்களின் எண்ணிக்கை YoY அடிப்படையில் 4% அதிகரித்து, 8.9 மில்லியனாக வளர்ச்சி கண்டிருக்கின்றது. பணம் செலுத்தும் சப்ளையர்களின் எண்ணிக்கை இக்காலாண்டின் இறுதியில் 217K என பதிவாகியிருக்கிறது.
இக்காலாண்டில் நிறுவனத்தின் சிறப்பான செயல்திறன் குறித்து கருத்து தெரிவித்த நிறுவனரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான தினேஷ் அகர்வால், "வாங்குபவர்களுக்கும் விற்பவர்களுக்கும் பாதுகாப்பான மற்றும் நம்பகமான ஒரு வர்த்தகத் தளத்தை உருவாக்குவதன் மூலம், நிறுவனத்தின் நிலையான வளர்ச்சியை உறுதி செய்வதில் நாங்கள் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறோம். எங்களது தளத்தின் நம்பகத்தன்மையை வலுப்படுத்தும் முயற்சிகள், வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிக நம்பிக்கையையும், சந்தையில் மேலும் வலுவான மற்றும் அர்த்தமுள்ள ஈடுபாட்டையும் வளர்த்து வருகின்றன. பொருட்களைத் தேடிக் கண்டறிவது மற்றும் சரியான வணிகத் தொடர்புகளை ஏற்படுத்துவது முதல் நவீன உரையாடல் கருவிகள் வரை, பயனர்களின் ஒட்டுமொத்த அனுபவத்தை மேம்படுத்துவதில் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் தொடர்ந்து முக்கியப் பங்காற்றுகிறது. அதேவேளையில், புதிய வருவாய் ஈட்டும் வழிகளையும் நாங்கள் ஆராய்ந்து வருகிறோம். வலுவான வணிகக் கட்டமைப்பு மற்றும் உறுதியான நிதி ஆதாரத்துடன், எங்களது பங்குதாரர்கள் அனைவருக்கும் நீண்டகால மதிப்பை உருவாக்கக்கூடிய சிறந்த நிலையில் நாங்கள் தொடர்ந்து பயணிக்கிறோம்."
Q2 FY2027 செயல்பாடு அளவீடுகள்
(வேறு விதமாக குறிப்பிட்டாலொழிய, இலக்கங்கள் கோடிகளில்)
தனித்து நிற்பது ஒருங்கிணைக்கப்பட்டது
Q2FY27 Y-o-Y Q-o-Q Q2FY27 Y-o-Y Q-o-Q
மொத்த வருவாய் 380 3% (18%) 421 5% (19%)
இயக்கச் செயல்பாடுகளிலிருந்து வருவாய் 389 8% 3% 429 10% 3%
EBITDA 156 36% 5% 159 23% 9%
EBITDA இலாப வரம்பு (%) 40% 37%
இக்கால அளவிற்கான நிகர இலாபம் 106 27% (40%) 91 10% (47%)
நிகர இலாப வரம்பு (%) 28% 22%
வாடிக்கையாளர்களிடமிருந்து வசூல் 394 8% (2%) 443 9% (4%)
இயக்கச் செயல்பாடுகளிலிருந்து திரட்டப்பட்ட பணப்பாய்வு
124 14% (19%) 135 19% (17%)
ஒத்திவைக்கப்பட்ட வருவாய்
1,863 14% 0% 2,029 16% 1%
ரொக்கம் & முதலீடுகள் 2,970 11% (10%) 3,234 13% (9%)
பணம் செலுத்தும் சப்ளையர்கள் (In ‘000) 217 (2%) (0%) - - -
இந்தியாமார்ட் குறித்து:
பிசினஸ் தயாரிப்புகள் மற்றும் சேவைகளுக்கான இந்தியாவின் மிகப்பெரிய ஆன்லைன் B2B சந்தையாக இந்தியாமார்ட் திகழ்கிறது. இந்தியாவின் பல்வேறு பிராடக்ட் வகைகள் மற்றும் புவியியல் பகுதிகளில் உள்ள வாங்குபவர்களையும் விற்பனையாளர்களையும் இணைத்து, பிசினஸ் செய்வதை இந்தியாமார்ட் எளிதாக்குகிறது. பிராடக்ட்களின் விரிவான தொகுப்பையும் விரைந்து பதிலளிக்கும் விற்பனையாளர் தளத்தையும் வழங்குவதன் மூலம் வாங்குபவர்களுக்கு எளிமையையும் சௌகரியத்தையும் அளிக்கிறது; அதே நேரத்தில், விற்பனையாளர்களுக்கு லீடு உருவாக்கம், லீடு மேலாண்மை மற்றும் பிசினஸ் ஏதுவாக்கல் தீர்வுகளையும் வழங்குகிறது.
.jpeg)