Thursday, October 29, 2026

பள்ளி மாணவர்களிடையே பக்கவாத விழிப்புணர்வு முகாமை நடத்திய சென்னை அப்போலோ மருத்துவமனை: ‘FAST’ மனிதச் சங்கிலி மூலம் விழிப்புணர்வு

பள்ளி மாணவர்களிடையே பக்கவாத விழிப்புணர்வு முகாமை நடத்திய சென்னை அப்போலோ மருத்துவமனை: ‘FAST’ மனிதச் சங்கிலி மூலம் விழிப்புணர்வு


பவன்ஸ் பள்ளியில் நடந்த உலக பக்கவாத தின நிகழ்ச்சியில் அமைச்சர் ராஜ்மோகன் ஆறுமுகம் பங்கேற்பு; அறிகுறிகளை உடனடியாகக் கண்டறிந்து தாமதமின்றி அவசர சிகிச்சையைப் பெற வேண்டியதன் அவசியத்தை இந்த முன்னெடுப்பு வலியுறுத்துகிறது

சென்னை, 29 அக்டோபர் 2026: சென்னை பவன்ஸ் ராஜாஜி வித்யாஷ்ரமம் பள்ளி மாணவர்கள், பக்கவாத பாதிப்பின் அறிகுறிகளை அறிந்துகொள்வதன் அவசியத்தையும், அதற்கான உடனடி மருத்துவச் சிகிச்சையை எவ்வாறு பெறவேண்டும் என்பதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தும் வகையில், சென்னை அப்போலோ மருத்துவமனை மற்றும் அப்பல்லோ ஷைன் பௌண்டேஷன்  ஏற்பாடு செய்திருந்த பக்கவாத விழிப்புணர்வு நிகழ்ச்சியில் ‘ஃபாஸ்ட்’ (FAST) என்ற எழுத்துக்களை மனிதச் சங்கிலி வடிவில் மாணவர்கள் உருவாக்கினர்.

உலக பக்கவாத தினத்தைக் குறிக்கும் வகையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறை அமைச்சர் திரு. ராஜ்மோகன் ஆறுமுகம் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். மேலும், ஸ்ரீ பி.ஜி. சுப்பிரமணியம், முதல்வர், பவன்ஸ் ராஜாஜி வித்யாஷ்ரம், கீழ்ப்பாக்கம் - சென்னை இந்நிகழ்வில் கலந்து கொண்டார். பக்கவாதத்தின் முன்னெச்சரிக்கை அறிகுறிகள் குறித்த அடிப்படை அறிவை மாணவர்களுக்கு வழங்குவதையும், அந்த தகவலை அவர்கள் தங்கள் குடும்பத்தினருடன் பகிர்ந்துகொள்ள ஊக்குவிப்பதையும் இந்த முன்னெடுப்பு Motivation கொண்டுள்ளது.

‘ஃபாஸ்ட்’ என்பது, ஒரு பக்கம் முகம் கோணுதல், கைகளில் ஏற்படும் பலவீனம், பேசுவதில் ஏற்படும் சிரமம் மற்றும் உடனடியாகச் செயல்படுவதற்கான நேரம் ஆகியவற்றைக் குறிக்கிறது. பொதுவான எச்சரிக்கை அறிகுறிகளை மக்கள் எளிதில் கண்டறிய உதவுவதும், பக்கவாதம் ஏற்பட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கும் நிலையில் அவசர மருத்துவ சிகிச்சை உதவி அவசியம் தேவை என்பதைப் புரியவைப்பதுமே இந்த செய்தியின் நோக்கமாகும்.

இந்த சிக்கலின் தீவிரத்தன்மை, விழிப்புணர்வின் அவசியத்தை உணர்த்துகிறது. 2026 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட உலகளாவிய நோய்ச் சுமை மதிப்பீடுகளின்படி, 2023 ஆம் ஆண்டில் உலகெங்கிலும் 1.32 கோடி புதிய பக்கவாத பாதிப்புகளும், பக்கவாதம் தொடர்பான 68 லட்சம் மரணங்களும் பதிவாகியுள்ளன. உலகளாவிய பக்கவாத சுமையில் சுமார் 83 சதவீதம் மாற்றக்கூடிய இடர்ஆபத்து காரணிகளால் ஏற்படுகிறது என்றும், அதில் உயர் இரத்த அழுத்தம் முக்கியப் பங்கு வகிக்கிறது என்றும் இந்த மதிப்பாய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன.


இந்நிகழ்ச்சியில் சென்னை மண்டல அப்போலோ மருத்துவமனைகளின் தலைமைச் செயல் அதிகாரி டாக்டர் இளங்குமரன் கலியமூர்த்தி மற்றும் சென்னை கீழ்ப்பாக்கம் பவன்ஸ் ராஜாஜி வித்யாஷ்ரமம் பள்ளியின் முதல்வர் ஸ்ரீ பி.ஜி. சுப்பிரமணியன் ஆகியோர் பங்கேற்றனர்.


மேலும் இதுகுறித்து, அப்பல்லோ மருத்துவமனை, சென்னை பிராந்தியத்தின் தலைமை செயலக அதிகாரி டாக்டர் இளங்குமரன் கலியமூர்த்தி கூறுகையில்,

“சுகாதார விழிப்புணர்வு மருத்துவமனைகளுடன் மட்டும் நின்றுவிடாமல், வீடுகள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பணியிடங்களிலும் பரவ வேண்டும். இதுபோன்ற விழிப்புணர்வு முயற்சிகள், பள்ளிகள் மூலம் இளைஞர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான ஒரு வாய்ப்பாக அமைகின்றன. அவர்கள் இதுகுறித்த தகவல்களைத் தங்கள் குடும்பத்தினருடனும் பகிர்ந்துகொள்ள முடியும்.

ஸ்ட்ரோக் என்பது ஒரு மருத்துவ அவசரநிலை. அதன் அறிகுறிகளை அடையாளம் கண்டு, தாமதமின்றி செயல்படுவது மிகவும் முக்கியம். இதுபோன்ற சமூக விழிப்புணர்வுத் திட்டங்கள் மூலம், ஸ்ட்ரோக்கிற்கான எச்சரிக்கை அறிகுறிகள் தென்படும்போது மக்கள் விரைவாகச் செயல்படுவதன் அவசியத்தை எடுத்துரைக்கிறோம்,” என்றார்.


சென்னை கிரீம்ஸ் ரோடு அப்போலோ மருத்துவமனையின் மூத்த நரம்பியல் அறுவைசிகிச்சை நிபுணர் டாக்டர் சீனிவாசன் பரமசிவம் கூறுகையில், "பக்கவாத அறிகுறிகள் பெரும்பாலும் திடீரெனத் தோன்றும். ஒரு பக்கம் முகம் கோணுதல், ஒரு கையில் ஏற்படும் பலவீனம் அல்லது பேசுவதில் சிரமம் ஆகியவை இதில் அடங்கும். திடீரென உடல் சமநிலையை இழப்பது அல்லது பார்வைக் குறைபாடு ஏற்படுவதும் கூட ஒரு எச்சரிக்கை அறிகுறியாக இருக்கலாம்.

ஒருவருக்கு இத்தகைய அறிகுறிகள் ஏற்பட்டால், அவை தானாகவே சரியாகிவிடும் என்று காத்திருக்காமல் உடனடியாக அவசர மருத்துவ சிகிச்சை உதவியை நாட வேண்டும். அறிகுறிகள் தொடங்கிய நேரத்தைக் குறித்து வைத்துக்கொள்வது, நோயாளியைப் பரிசோதித்துச் சிகிச்சை அளிக்க மருத்துவர்களுக்குப் பெரிதும் உதவும். உயர் .ரத்த அழுத்தம் பக்கவாதத்திற்கான முக்கிய இடர்ஆபத்து காரணியாகும். நீரிழிவு நோய், புகைப்பிடித்தல் மற்றும் அதிக கொலஸ்ட்ரால் ஆகியவையும் இந்த இடர்ஆபத்தை அதிகரிக்கச் செய்யும். முறையான மருத்துவப் பரிசோதனைகள் மற்றும் இந்த மருத்துவப் பிரச்சனைகளை கட்டுப்பாட்டில் வைத்திருப்பது பக்கவாதம் ஏற்படும் இடர்வாய்ப்பைக் குறைப்பதற்கான முக்கியப் படிகளாகும்,” என்று தெரிவித்தார்.

இந்த முன்னெடுப்பின் மூலம், சென்னை அப்போலோ மருத்துவமனையும் பவன்ஸ் பள்ளியும், பக்கவாத விழிப்புணர்வை மருத்துவச்சூழலையும் கடந்து, சமூகத்திற்குள் கொண்டு செல்லவும், மேலும் பக்கவாத பாதிப்பு எச்சரிக்கை அறிகுறிகளைக் கண்டறிந்து உடனடியாகச் செயல்படவும், பக்கவாதம் ஏற்படும் இடர்ஆபத்தை அதிகரிக்கும் காரணிகள் குறித்துக் கவனம் செலுத்தவும் மாணவர்களையும் அவர்களின் குடும்பத்தினரையும் ஊக்குவிக்கின்றன.

அப்போலோ மருத்துவமனைகள் பற்றி: 1983ஆம் ஆண்டு சென்னையில் டாக்டர் பிரதாப் ரெட்டி, அப்போலோ குழுமத்தின் முதல் மருத்துவமனையைத் தொடங்கிய போது, சுகாதாரத் துறையில் ஒரு பெரிய புரட்சிக்கு வித்திட்டது. இன்று, 78 மருத்துவமனைகள், 10,900-க்கும் மேற்பட்ட படுக்கைகள், 7,200+ மருந்தகங்கள், 300+ கிளினிக்குகள் மற்றும் 2,500 நோயறிதல் மையங்களைக் கொண்ட உலகின் மிகப்பெரிய ஒருங்கிணைந்த சுகாதார சேவை குழுமமாக அப்போலோ விளங்குகின்றது. நோயாளிகளுக்கு உலகின் தலைசிறந்த சிகிச்சைகள் கிடைப்பதை உறுதி செய்வதற்காக, அதிநவீன தொழில்நுட்பங்கள், உபகரணங்கள் மற்றும் சிகிச்சை முறைகளைக் கொண்டுவர அப்போலோ தொடர்ந்து ஆராய்ச்சிகளிலும், கண்டுபிடிப்புகளிலும் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகிறது. 3,00,000 க்கும் மேற்பட்ட ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சைகள் மற்றும் 2,00,000 அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாகச் செய்து முடித்துள்ள இது, உலகின் முன்னணி இதய சிகிச்சை மையங்களில் ஒன்றாக விளங்குகிறது. நோயாளிகளுக்கு உலகின் மிகச்சிறந்த சிகிச்சை கிடைப்பதை உறுதிசெய்யும் வகையில், அதிநவீன தொழில்நுட்பங்கள், உபகரணங்கள் மற்றும் சிகிச்சை முறைகளைக் கொண்டுவர அப்போலோ தொடர்ந்து ஆராய்ச்சிகளிலும் புதிய கண்டுபிடிப்புகளிலும் முதலீடு செய்து வருகிறது. அப்போலோவின் 1,20,000 குடும்ப உறுப்பினர்கள் சிறப்பான மருத்துவச் சேவையை வழங்கி, இந்த உலகை நாம் வந்தடைந்ததை விட சிறந்ததாக மாற்றுவதில் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகின்றனர். மேலும் விவரங்களுக்கு: www.apollohospitals.com