டாடா ஸ்டீல் கலர்ஸ் நிறுவனம், தனது பிரத்யேக 'கலர்கோட்®' (Colorcoat®) வர்ணம் பூசப்பட்ட ஸ்டீல் பொருட்களை இந்தியாவில் அறிமுகம் செய்கிறது
● உயர்தரமான, நீடித்த நிலைத்தன்மை கொண்ட மற்றும் நவீன வடிவமைப்புடன் கூடிய கட்டிடக் கூரை மற்றும் சுவர்களுக்கான தீர்வுகள் தொடர்பாக இந்தியாவில் அதிகரித்து வரும் தேவையைப் பூர்த்தி செய்ய, உலகளவில் நிரூபிக்கப்பட்ட வர்ணம் பூசப்பட்ட அதிநவீன ஸ்டீல் தொழில்நுட்பத்தை டாடா ஸ்டீல் அறிமுகப்படுத்துகிறது.
சென்னை, அக்டோபர் 13, 2026: டாடா ஸ்டீல் கலர்ஸ் பிரைவேட் லிமிடெட் (TSCPL) நிறுவனம், உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட 'கலர்கோட்®' (Colorcoat®) வர்ணம் பூசப்பட்ட ஸ்டீல் பொருட்களை இந்தியாவில் அறிமுகப்படுத்துவதாக இன்று அறிவித்துள்ளது. இதன் மூலம் பல தசாப்த கால ஐரோப்பிய நிபுணத்துவம், அதிநவீன தொழில்நுட்பம் மற்றும் நிரூபிக்கப்பட்ட கட்டிட அமைப்பிற்கான தீர்வுகள் நாட்டின் வளர்ந்து வரும் உள்கட்டமைப்புத் துறைக்குக் கிடைக்கின்றன.
இந்தியாவிற்கென பிரத்தியேகமாகத் தயாரிக்கப்பட்ட அதிநவீன பூச்சுத் தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்டுள்ள 'கலர்கோட்®', நாட்டின் பல்வேறு கட்டிடத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் நீடித்த உழைப்பு, அழகியல், வெப்பத் தடுப்புத் திறன் மற்றும் சூழலுக்கு உகந்த தன்மைகளை ஒன்றிணைத்து வழங்குகிறது. இயற்கையின் என்றும் மாறாத அழகால் ஈர்க்கப்பட்டு, கவனமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட வண்ணங்கள் மற்றும் நிரூபிக்கப்பட்ட செயல்திறனுடன் உருவாக்கப்பட்டுள்ள 'கலர்கோட்®', அழகும் வலிமையும் நிறைந்த கட்டிடக் கலை அமைப்புகளை உருவாக்க உதவுகிறது.
வெப்பமான மற்றும் இதமான காலநிலைகளுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ள இதன் அதிநவீன பூச்சுத் தொழில்நுட்பம், நிலையான நிறம் மற்றும் பொலிவு, துரு மற்றும் விளிம்புப் பகுதிகள் சேதமடைவதில் இருந்து பாதுகாப்பு, கீறல் எதிர்ப்புத் திறன் மற்றும் நீண்ட கால அழகியலை வழங்குகிறது. இதன் பரந்த வண்ணங்கள் மற்றும் வடிவமைப்பு வகைகள் கட்டிடக் கலைஞர்கள் மற்றும் கட்டுமான மேம்பாட்டாளர்களுக்கு சிறந்த வடிவமைப்புச் சுதந்திரத்தை அளிக்கின்றன. ஜம்ஷெட்பூரில் உள்ள அதிநவீன உற்பத்தி ஆலையில், டாடா ஸ்டீல் கலர்ஸ் நிறுவனம் இந்தியா மற்றும் வெளிநாடுகளுக்கான 'கலர்கோட்®'-ஐ (Colorcoat®) தயாரித்து, விநியோகம் செய்து விற்பனை செய்யவுள்ளது. இதன் மூலம் உலகளாவிய தொழில்நுட்பமும் நிபுணத்துவமும் உள்ளூரிலேயே கிடைப்பது உறுதி செய்யப்படுகிறது.
டாடா ஸ்டீல் கலர்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் திரு. பிரவீன் வி. தம்பி கூறுகையில், “இந்தியா எதிர்காலத்தை நோக்கி வேகமாக வளர்ந்து வரும் வேளையில், நீண்டகால உழைப்பு, சிறந்த வடிவமைப்பு மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த செயல்திறன் ஆகிய அனைத்துத் தேவைகளையும் பூர்த்தி செய்யும் தரமான பொருட்கள் தொழில்துறைகளுக்கும் சமூகம் சார்ந்த திட்டங்களுக்கும் அவசியமாகின்றன. சர்வதேச அரங்கில் இந்திய உள்கட்டமைப்புத் துறை புதிய தரநிலைகளைப் படைக்க உதவும் வகையில், அதிநவீன உலகளாவிய தீர்வுகளை வழங்குவதே எங்கள் இலக்காகும். உலகளவில் பாராட்டைப் பெற்ற இந்தத் தீர்வுகளை உள்நாட்டு மற்றும் சர்வதேச சந்தைகளுக்குக் கொண்டு வருவதில் டாடா ஸ்டீல் கலர்ஸ் பெருமிதம் கொள்கிறது. இது கட்டிடக் கலைஞர்கள் மற்றும் கட்டுமானப் பணியாளர்கள் எதிர்காலத் தேவைகளுக்கேற்ப வடிவமைக்க பெரும் உறுதுணையாக இருக்கும்,” என்று தெரிவித்தார்.
இதன் கூரை மற்றும் சுவரின் உறைப்பூச்சு (கிளாடிங்) மெட்ரோ மற்றும் போக்குவரத்து உள்கட்டமைப்பு, துறைமுகங்கள், சேமிப்புக் கிடங்குகள், விநியோக மையங்கள், உற்பத்தி மற்றும் ஆட்டோமொபைல் ஆலைகள், வணிக வளாகங்கள், பாதுகாப்புத்துறை மற்றும் நவீன உயர்கல்வி / நிறுவனத் திட்டங்கள் உள்ளிட்ட பரந்த அளவிலான பயன்பாடுகளுக்குப் பெருமளவில் ஏற்றவை ஆகும்.
டாடா ஸ்டீல் கலர்ஸ் பிரைவேட் லிமிடெட் குறித்த ஓர் பார்வை:
முன்னதாக 'டாடா ப்ளூஸ்கோப் ஸ்டீல் பிரைவேட் லிமிடெட்' என்று அழைக்கப்பட்டு, தற்போது 2025-ல் தொடங்கப்பட்ட 'டாடா ஸ்டீல் கலர்ஸ் பிரைவேட் லிமிடெட்' நிறுவனம், டாடா ஸ்டீலின் முழுமையான துணை நிறுவனமாகும். மேலும் இது இந்தியாவின் வர்ணம் பூசப்பட்ட ஸ்டீல் துறையில் முன்னணி நிறுவனமாகத் திகழ்கிறது.
வர்ணம் பூசப்பட்ட எஃகு மற்றும் கூரை மற்றும் சுவருக்கான உறைப்பூச்சு பொருட்களை முக்கிய வணிகமாகக் கொண்டுள்ள டாடா ஸ்டீல் கலர்ஸ், கட்டிடக் கலைச் சிறப்பை வெளிப்படுத்தும் வகையில் நீடித்த, சூழலுக்கு உகந்த மற்றும் அழகியல்மிக்க கட்டிடத் தீர்வுகளை வழங்குகிறது. புனேவை தலைமையிடமாகக் கொண்ட இந்நிறுவனம், வர்ணம் பூசப்பட்ட ஸ்டீல் பொருட்கள் மற்றும் நவீன கட்டிடக் கலைக்கான தீர்வுகளை இந்தியா முழுவதும் பல துறைகளுக்கு வடிவமைத்து, உற்பத்தி செய்து, விநியோகித்து, கட்டுமானப் பணிகளை மேற்கொண்டு, சேவைகளையும் வழங்கி வருகிறது. புதுமை மற்றும் சூழல் நிலைத்தன்மையை மையமாகக் கொண்டு இயங்கும் டாடா ஸ்டீல் கலர்ஸ், சந்தையின் தேவைகளைத் துல்லியமாக அறிந்து, வாடிக்கையாளர்களுக்குச் சிறந்த அனுபவத்தை வழங்கும் நோக்கில் நாடு தழுவிய அளவில் வலுவாகச் செயல்பட்டு வருகிறது.
