Thursday, October 22, 2026

காவலர்கள் நலன் காக்க இணைந்த அப்போலோ மருத்துவமனை & ஆவடி காவல் ஆணையரகம்: 'காவல் குடும்பம்' திட்டத்தின் மூலம் நடத்தப்பட்டசிறப்பு மருத்துவ முகாம்!

காவலர்கள் நலன் காக்க இணைந்த அப்போலோ மருத்துவமனை & ஆவடி காவல் ஆணையரகம்: 'காவல் குடும்பம்' திட்டத்தின் மூலம் நடத்தப்பட்டசிறப்பு மருத்துவ முகாம்! 


• ஆவடி காவல் துறை சமுதாயக் கூடத்தில் நடைபெற்ற இம்மருத்துவ முகாமில் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று பயனடைந்தனர்.

• நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தம் உள்ளிட்ட தொற்றா நோய்களுக்கான பரிசோதனைகளுக்கு இம்முகாமில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.

சென்னை, 22 அக்டோபர் 2026: வானகரம் அப்போலோ ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையும், ஆவடி காவல் ஆணையரகமும் இணைந்து 'காவல் குடும்பம்' திட்டத்தின் கீழ் காவல் துறை பணியாளர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்த குடும்ப உறுப்பினர்களுக்கான பொது மருத்துவ முகாமை நடத்தப்பட்டது. ஆவடி காவல்துறை சமுதாயக் கூடத்தில் நடைபெற்ற இந்த முகாமில் 500-க்கும் மேற்பட்ட நபர்கள் பங்கேற்றனர். நீரிழிவு (சர்க்கரை நோய்) மற்றும் உயர் இரத்த அழுத்தம் போன்ற தொற்றா நோய்களுக்கான (NCDs) பரிசோதனைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது. 

'காவல் குடும்பம்' திட்டம் என்பது, தமிழ்நாடு காவல் துறையினரையும் அவர்தம் குடும்பத்தினருக்கும் உடல்நல ஆதரவளிக்கும் ஒரு சிறப்பான நலத்திட்டமாகும். பக்கவிளைவுகள் தீவிரமடையும் வரை வெளியே தெரியாமல் இருக்கும் தொற்றா நோய்களை ஆரம்பக்கட்டத்திலேயே கண்டறிவதற்கும், உரிய காலஅளவுகளில் உடல் பரிசோதனைகள் செய்வதன் அவசியத்தை வலியுறுத்துவதற்கும் இந்த மருத்துவ முகாம் நல்வாய்ப்பாக அமைந்தது.

தமிழக காவல் துறைத் தலைவர் முனைவர் மகேஷ் குமார் அகர்வால் ஐ.பி.எஸ் அவர்கள் இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். 'காவல் குடும்பம்' அமைப்பின் தலைவர் முனைவர் வனிதா அகர்வால் அவர்கள் இந்நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கினார்.

”இந்நிகழ்ச்சியில் சென்னை வானகரம் அப்போலோ ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் தலைமை இயக்க அதிகாரி (COO) திரு. கார்த்திக் இராமமூர்த்தி அவர்கள் பேசுகையில்: “காவல் துறையினர் பிறரின் பாதுகாப்பிற்காகவே தங்களின் வாழ்க்கையை அர்ப்பணித்து பணியாற்றுகின்றனர்; எனவே, அவர்களின் ஆரோக்கியத்திற்கும், அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கும் அதே அளவிலான அக்கறையும், பராமரிப்பும் அளிக்கப்பட வேண்டும். 'காவல் குடும்பம்' போன்ற நல்முயற்சிகள் மூலம் தரமான மருத்துவச் சேவைகளை எளிதில் கிடைக்கச் செய்யவும், நோய்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து, நலமுடன் அவர்கள் வாழ உதவவும் நாங்கள் விரும்புகிறோம். நோய்த்தடுப்பு நடவடிக்கைகள், வலுவான கூட்டுமுயற்சிகள் மற்றும் ஒவ்வொரு உயிரையும் பேணிக் காக்கும் அர்ப்பணிப்பு ஆகியவற்றில்தான் பயனளிக்கும் அர்த்தமுள்ள மருத்துவச் சேவை தொடங்குகிறது என்று அப்போலோ மருத்துவமனை உறுதியாக நம்புகிறது,” என்று கூறினார்.

அரசு மற்றும் பொதுத்துறை அமைப்புகளுடனான கூட்டுமுயற்சிகள் மூலம் தரமான மருத்துவச் சேவைகள் மக்களுக்கு எளிதில் கிடைக்கவும், நீரிழிவு மற்றும் உயர் ரத்த அழுத்தம் போன்ற நோய்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் அப்போலோ மருத்துவமனை தொடர்ந்து சிறப்பு முயற்சிகளை எடுத்து வருகிறது. உரிய காலஅளவுகளில் உடல்நலப் பரிசோதனைகளை மேற்கொள்வதும், தேவைப்படும் மருத்துவச் சிகிச்சைகளை பெறுவதும் நீண்டகால ஆரோக்கியத்தை உறுதிப்படுத்தி வளமான வாழ்வுக்கு வழிவகுக்கும் என்பதை அப்போலோ – ன் இந்த பொதுநல முன்னெடுப்புகள் வலியுறுத்துகின்றன. 

அப்போலோ மருத்துவமனைகள் பற்றி: 

1983 ஆம் ஆண்டு சென்னையில் டாக்டர் பிரதாப் ரெட்டி, அப்போலோ குழுமத்தின் முதல் மருத்துவமனையைத் தொடங்கிய போது, சுகாதாரத் துறையில் ஒரு பெரிய புரட்சிக்கு வித்திட்டது. இன்று, 78 மருத்துவமனைகள், 10,900-க்கும் மேற்பட்ட படுக்கைகள், 7,200+ மருந்தகங்கள், 300+ கிளினிக்குகள் மற்றும் 2,500 நோயறிதல் மையங்களைக் கொண்ட உலகின் மிகப்பெரிய ஒருங்கிணைந்த சுகாதார சேவை குழுமமாக அப்போலோ விளங்குகிறது. 3,00,000-க்கும் மேற்பட்ட ஆஞ்சியோபிளாஸ்டி மற்றும் 2,00,000 அறுவைசிகிச்சைகளைச் செய்துள்ள இது, உலகின் முன்னணி இதய சிகிச்சை மையங்களில் ஒன்றாகும். நோயாளிகளுக்கு உலகின் தலைசிறந்த சிகிச்சைகள் கிடைப்பதை உறுதி செய்வதற்காக, அதிநவீன தொழில்நுட்பங்கள், உபகரணங்கள் மற்றும் சிகிச்சை முறைகளைக் கொண்டுவர அப்போலோ தொடர்ந்து ஆராய்ச்சிகளிலும், கண்டுபிடிப்புகளிலும் முதலீடு செய்து வருகிறது. அப்போலோவின் 1,20,000 குடும்ப உறுப்பினர்களும் நோயாளிகளுக்குச் சிறப்பான அக்கறையுடன் சிகிச்சை அளித்து, இந்த உலகத்தை ஆரோக்கியமானதாக மாற்ற அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகின்றனர். மேலும் விவரங்களுக்கு: www.apollohospitals.com