அரகொண்டாவில் இருந்து ஆரோக்கியமான இந்தியாவை நோக்கி: கிராமப்புற சுகாதாரம் எவ்வாறு மக்களின் வாழ்க்கையை மாற்றியமைக்க முடியும் என்பதை வெளிப்படுத்தும் அப்போலோவின் ‘டோட்டல் ஹெல்த்’ முன்மாதிரி
ஒரு கிராமப்புற மருத்துவமனையில் இருந்து ஒருங்கிணைந்த சமூக மேம்பாட்டுக்கான ஒரு முன்மாதிரியாக மாறியுள்ள அப்போலோ பவுண்டேஷனின் முன்முயற்சிகள், சுகாதாரம், கல்வி, ஊட்டச்சத்து, வாழ்வாதாரம் மற்றும் பிற அத்தியாவசிய சேவைகள் மூலம் 483 மில்லியனுக்கும் அதிகமான மக்களைச் சென்றடைந்துள்ளன.
அரகொண்டா, ஆந்திரப் பிரதேசம், அக்டோபர் 27, 2026 – சுகாதாரப் பராமரிப்பு எவ்வாறு சமுதாய மாற்றத்திற்கான உந்துசக்தியாக மாற முடியும் என்பதை வெளிப்படுத்தும் வகையில், அப்போலோ ஹாஸ்பிடல்ஸ் என்டர்பிரைஸ் லிமிடெட் (ஏஎச்இஎல்) மற்றும் அப்போலோ பவுண்டேஷன் ஆகியவை ஆந்திரப் பிரதேசத்தின் சித்தூர் மாவட்டத்திலுள்ள அரகொண்டாவில் ‘டோட்டல் ஹெல்த்’ (Total Health) முன்மாதிரியின் தாக்கத்தை இன்று கொண்டாடின. ஒரு கிராமப்புற மருத்துவமனையுடன் தொடங்கிய இந்த முயற்சி, தற்போது ஒருங்கிணைந்த சமூக மேம்பாட்டு அணுகுமுறையாக உருவெடுத்துள்ளது. சுகாதாரம், தடுப்பு நலவாழ்வு, கல்வி, ஊட்டச்சத்து, பாதுகாப்பான குடிநீர், திறன் மேம்பாடு, வாழ்வாதார வாய்ப்புகள் ஆகியவற்றை ஒருங்கிணைத்து 483 மில்லியனுக்கும் அதிகமான மக்களின் வாழ்வில் இது தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
2013-ஆம் ஆண்டு அப்போலோ பவுண்டேஷனால் அரகொண்டாவில் தொடங்கப்பட்ட ‘டோட்டல் ஹெல்த்’ திட்டம், ஏஎச்இஎல்-இன் சிஎஸ்ஆர் முன்முயற்சி ஆகும். இது மருத்துவச் சிகிச்சை முறைகளைத் தாண்டி, வாழ்நாள் முழுமைக்குமான நல்வாழ்வை உறுதிசெய்யும் காரணிகளை மையமாகக் கொண்டு அப்போலோவின் சுகாதார தொலைநோக்குப் பார்வையை விரிவுபடுத்துகிறது. தொடங்கப்பட்ட இந்த 13 ஆண்டுகளில், இந்த முன்முயற்சி 23-க்கும் மேற்பட்ட பகுதிகளுக்கு விரிவடைந்துள்ளது. 2 இலட்சத்திற்கும் அதிகமான யோகா பயிற்சி வகுப்புகளை வழங்கியுள்ளது. மேலும் ஊட்டச்சத்து உணவுத் திட்டத்தின் மூலம் 10.89 இலட்சத்திற்கும் அதிகமான உணவுகளை வழங்கியுள்ளது. அத்துடன், ஜவுளி மற்றும் சணல் உற்பத்தி பிரிவுகள் மூலம் 300-க்கும் மேற்பட்ட கிராமப்புற பெண்களுக்கு வேலைவாய்ப்பையும் உறுதி செய்துள்ளது.
இப்பயணம் குறித்து அப்போலோ மருத்துவமனைகள் குழுமத்தின் நிறுவனத் தலைவர் டாக்டர் பிரதாப் சி. ரெட்டி அவர்கள் இவ்வாறு கூறினார், “அரகொண்டா என்பது என் பயணம் தொடங்கிய இடம். மக்கள் எங்கு வாழ்ந்தாலும் சரி, தரமான, நியாமான சுகாதாரம் ஒவ்வொரு இந்தியரையும் சென்றடைய வேண்டும் என்ற எனது நம்பிக்கையை அது எப்போதும் வலுப்படுத்தியுள்ளது. இந்த கிராமத்திற்கு நவீன மருத்துவத்தைக் கொண்டு வருவதன் மூலமே நாங்கள் தொடங்கினோம். ஆனால் சுகாதாரத்தின் உண்மையான நோக்கம் நோய்களுக்குச் சிகிச்சை அளிப்பதோடு முடிந்துவிடுவது இல்லை – மக்கள் செழித்து வளரக்கூடிய சூழலை உருவாக்குவதிலும் உள்ளது. மருத்துவம் உயிர்களைக் காப்பாற்ற முடியும், ஆனால் ஒரு தலைமுறையின் சுகாதாரத்தை மாற்றியமைக்க, அவர்கள் வாழும் வாழ்க்கைச் சூழலையும் நாம் மாற்ற வேண்டும். அரகொண்டா தன்னை விடவும் ஒரு மகத்தான கொள்கையின் அடையாளமாகத் திகழும் என்று நான் நம்புகிறேன்: ஆரோக்கியமான இந்தியா என்பது அதன் பெருநகரங்களில் மட்டுமல்ல, அதன் மிகச் சிறிய கிராமங்களிலும் கட்டமைக்கப்படும் என்பதே அது.”
அப்போலோ ஹாஸ்பிடல்ஸ் என்டர்பிரைஸ் லிமிடெட்டின் செயல் துணைத் தலைவர் திருமதி ப்ரீத்தா ரெட்டி அவர்கள் மேலும் இவ்வாறு கூறினார், “கடந்த இரண்டு தசாப்தங்களாக, சுகாதாரப் பராமரிப்பின் தாக்கம் மருத்துவ சிகிச்சைகளுக்கு அப்பாலும் விரிவடைகிறது என்பதை அரகொண்டா அப்போலோ மருத்துவமனை நிரூபித்துள்ளது. தனது முன்னோடி மாதிரியின் மூலம், இந்த மருத்துவமனை சுகாதார நிலையை மேம்படுத்தியதோடு மட்டுமல்லாமல், பெண்கள் வாழ்வாதாரத்தைப் பெறவும், குடும்பங்களை வலுப்படுத்தவும், மக்கள் தங்கள் நல்வாழ்வுக்குத் தாங்களே பொறுப்பேற்கும் அதிகாரத்தைப் பெறவும் வழிவகுத்துள்ளது.”
சுகாதாரத்தைத் தாண்டி, ஆரோக்கியமான சமுதாயங்களை உருவாக்குதல்
அப்போலோ பவுண்டேஷன் தனது பல்வேறு பிரிவுகள் மற்றும் கூட்டாளர்களான ‘டோட்டல் ஹெல்த்’ (Total Health), ‘பில்லியன் ஹார்ட்ஸ் பீட்டிங் ஃபவுண்டேஷன்’ (Billion Hearts Beating Foundation), ‘அப்போலோ டெலிமெடிசின் நெட்வொர்க்கிங் ஃபவுண்டேஷன்’ (Apollo Telemedicine Networking Foundation), ‘சாச்சி’ (SACHi) மற்றும் ‘அரகொண்டா விகாஸ் டிரஸ்ட்’ (Aragonda Vikas Trust) ஆகியவற்றின் மூலம் சமூகத்தை மையமாகக் கொண்ட பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. இவை ஆரம்பச் சுகாதாரம், நோய் கண்டறிதல், தொலைதூர மருத்துவம், நடமாடும் மருத்துவச் சேவைகள், புற்றுநோய் பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கான வசதிகள், அத்துடன் குழந்தைகளுக்கான இலவச இதய அறுவை சிகிச்சைகள் மற்றும் வாழ்நாள் முழுவதுமான தொடர் கண்காணிப்பு ஆகியவற்றை உள்ளடக்கியது ஆகும்.
வாழ்வாதாரத்தை உருவாக்குவது ‘டோட்டல் ஹெல்த்’ திட்டத்தின் மற்றொரு முக்கிய தூணாகும். அரகொண்டா, அம்ராபாத், செவெல்லா ஆகிய இடங்களில் உள்ள ஆடை மற்றும் சணல் உற்பத்தி பிரிவுகள் மூலம், இத்திட்டம் பெண்களின் பொருளாதார சுதந்திரத்தை ஊக்குவிக்கிறது. கடந்த ஓராண்டில் மட்டும், இந்த பிரிவுகளில் பணிபுரியும் சுமார் 300 பெண்கள் கிட்டத்தட்ட 2.9 இலட்சம் சணல் பைகளையும், 1.25 இலட்சத்திற்கும் அதிகமான ஆடைகளையும் தயாரித்துள்ளனர்.
அப்போலோ ஹாஸ்பிடல்ஸ் என்டர்பிரைஸ் லிமிடெட்டின் சிஎஸ்ஆர் துணைத் தலைவரும் திட்டப் பிரிவு இயக்குநருமான திருமதி உபாசனா காமினேனி கொனிடேலா அவர்கள் கூறியதாவது, “நீடித்த சுகாதாரப் பலன்கள் ஒரு மருத்துவமனையின் நான்கு சுவர்களுக்கு அப்பால்தான் உருவாகின்றன என்பதை அரகொண்டா நிரூபித்துக் காட்டியுள்ளது. இங்கு நாம் கண்ட மாற்றம், ஒருங்கிணைந்த மற்றும் சமூகம் முன்னெடுக்கும் சுகாதார முன்மாதிரிகள் எவ்வாறு நீடித்த மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்பதையும், பிற மாநிலங்களுக்கும் பின்தங்கிய பகுதிகளுக்கும் இது எவ்வாறு ஒரு வழிகாட்டி வரைபடமாகத் திகழ முடியும் என்பதையும் எடுத்துக்காட்டுகிறது.”
எலும்பியல் சிகிச்சையை இல்லங்களுக்கு அருகிலேயே கொண்டு சேர்த்தல்: அரகொண்டாவில் 1,000 முழங்கால் மூட்டு மாற்று அறுவை சிகிச்சைகள்
உலகத்தரம் வாய்ந்த மருத்துவம் பெருநகரங்களுக்குள் மட்டுமே முடங்கிக் கிடக்கக் கூடாது என்ற தனது அசைக்க முடியாத நம்பிக்கையின் காரணமாக, அப்போலோ மருத்துவமனைகள் குழுமத்தின் நிறுவனத் தலைவர் டாக்டர் பிரதாப் சி. ரெட்டி அவர்கள், தனது சொந்த ஊரான அரகொண்டாவில் 2000ஆம் ஆண்டு 50 படுக்கைகள் கொண்ட இரண்டாம் நிலை பராமரிப்பு மருத்துவமனையை நிறுவினார். இருபத்தாறு ஆண்டுகளுக்குப் பிறகு, அரகொண்டா அப்போலோ மருத்துவமனை 1.67 இலட்சத்துக்கும் மேற்பட்ட நோயாளிகளுக்குச் சிகிச்சை அளித்துள்ளதுடன், 12,000-க்கும் அதிகமான அறுவை சிகிச்சைகளையும் நிறைவு செய்துள்ளது. இதில் 1,000 முழு முழங்கால் மூட்டு மாற்று (TKR) அறுவை சிகிச்சைகள் என்ற மைல்கல்லும் அடங்கும். கிராமப்புற மக்களுக்கு மேம்பட்ட நவீன மருத்துவ சேவைகளை எவ்வாறு எளிதில் கிடைக்கச் செய்ய முடியும் என்பதையும், சிறப்பு சிகிச்சைகளுக்காக நோயாளிகள் தொலைதூர நகரங்களுக்குப் பயணம் செய்ய வேண்டிய தேவையை இது எப்படிக் குறைத்துள்ளது என்பதையும் இந்தச் சாதனை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
இம்மருத்துவமனையின் முழு முழங்கால் மூட்டு மாற்று சிகிச்சைத் திட்டம் சீரான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. 2019-இல் 100 சிகிச்சைகள், 2022-இல் 500 சிகிச்சைகள் என்ற எண்ணிக்கையில் இருந்து தற்போது 1,000-ஐ எட்டியுள்ளது. மேலும், டாக்டர் மதன் மோகன் ரெட்டி, டாக்டர் விஜய் கிஷோர் கொண்ட்ரெட்டி, டாக்டர் குணால் படேல் மற்றும் மருத்துவக் குழுவினரின் தலைமையில் ஒரே நாளில் 19 முழங்கால் மூட்டு மாற்று அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாகச் செய்து முடித்ததன் மூலம் இம்மருத்துவமனை தனது மருத்துவத் திறனை மேலும் நிரூபித்துள்ளது.
கலிபோர்னியா அறிவியல் மற்றும் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் இருதயவியல் பிரிவு மருத்துவ இணைப் பேராசிரியர் டாக்டர் ஜெயபால் (அனில்) ரெட்டி அவர்கள் கூறியதாவது, “அரகொண்டா அப்போலோ மருத்துவமனை ‘ஹீல் இன் இந்தியா’ (Heal in India) திட்டத்தின் தொலைநோக்குப் பார்வைக்கு ஒரு வலிமையான சான்றாகும். உலகத்தரம் வாய்ந்த சுகாதாரப் பராமரிப்பு என்பது புவியியல் எல்லைகளுக்குள் கட்டுப்பட்டிருக்க வேண்டிய அவசியமில்லை என்பதை இது நிரூபிக்கிறது. அமெரிக்காவில் மருத்துவராகப் பணிபுரிபவராகவும், அரகொண்டாவைச் சேர்ந்தவராகவும், எனது சொந்தக் கிராமத்திலேயே மேம்பட்ட அறுவை சிகிச்சை, அவசர தீவிர சிகிச்சை மற்றும் நோய் கண்டறிதல் வசதிகள் கிடைப்பதைக் கண்டு நான் பெருமிதம் கொள்கிறேன். டாக்டர் பிரதாப் சி. ரெட்டி அவர்களின் தொலைநோக்குப் பார்வை வெறும் மருத்துவமனையை மட்டுமல்லாமல், தலைமுறைகள் கடந்து நிலைத்திருக்கும் ஒரு சுகாதாரப் பாரம்பரியத்தையே உருவாக்கியுள்ளது.”
About Apollo Hospitals Enterprise Ltd.
In 1983, Dr. Prathap C. Reddy founded Apollo Hospitals in Chennai with a vision to strengthen India’s healthcare capabilities and bring advanced medical care closer to the people who need it. Since then, Apollo has expanded its presence across hospitals, pharmacies, clinics, diagnostic centres and telemedicine services. Its network includes over 10,400 beds across 76 hospitals, 7,113+ pharmacies, 308 clinics, 2,457 diagnostic centres and 800+ telemedicine centres. Apollo has performed over 300,000 angioplasties and 200,000 cardiac surgeries. The organisation continues to invest in research and innovation and in the adoption of advanced medical technologies and treatment options, with the aim of expanding access to specialised healthcare for patients across India and beyond.
About Apollo Foundation – Total Health
Established in Aragonda, Andhra Pradesh, in 2013, Total Health is Apollo Foundation’s integrated community development initiative. Working across health and hygiene, community engagement and alternative livelihoods, it addresses the physical, mental, social, ecological and economic factors that influence wellbeing. The programme aims to develop sustainable, scalable and accountable models that enable communities to become healthier, more resilient and self-reliant.
