Monday, October 26, 2026

அவாடா எலக்ட்ரோ நிறுவனத்துடன் 1 ஜிகாவாட் டொமஸ்டிக் செல் ஒப்பந்தத்தினை மேற்கொண்டுள்ள விக்ரம் சோலார் நிறுவனம் DCR சந்தையில் அதன் நிலையை வலுப்படுத்தியுள்ளது

அவாடா எலக்ட்ரோ நிறுவனத்துடன் 1 ஜிகாவாட் டொமஸ்டிக் செல் ஒப்பந்தத்தினை மேற்கொண்டுள்ள விக்ரம் சோலார் நிறுவனம் DCR சந்தையில் அதன் நிலையை வலுப்படுத்தியுள்ளது

கொல்கத்தா, 16 செப்டம்பர்: இந்திய சோலார் மாட்யூல் உற்பத்தியில் முன்னோடி நிறுவனமான விக்ரம் சோலார், அவாடா எலக்ட்ரோ நிறுவனத்துடன் டொமஸ்டிக் செல் விநியோகத்திற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது; இது இந்தியாவில் வேகமாக விரிவடைந்து வரும் உள்நாட்டு உற்பத்தி தேவை (டொமஸ்டிக் கான்டென்ட் ரெக்குயர்மென்ட் - DCR) பிரிவில் அதன் இருப்பை வலுப்படுத்தியுள்ளது. மேலும், நீண்ட கால விநியோக சங்கிலி அதன் உறுதியான நிலைப்பாட்டையும் வலுப்படுத்தியுள்ளது.

இந்த ஒப்பந்தத்தின் கீழ், அவாடா எலக்ட்ரோ நிறுவனம்  விக்ரம் சோலாரின் மாட்யூல் உற்பத்தி செயல்முறைக்கு உட்பட்டு உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஹாஃப்-கட் N-டைப் G12R TOPCon சோலார் செல்களை 1 GW (ஜிகாவாட்) அளவில் ALMM-விதிகளுக்கு இணக்கமாக தயாரித்து வழங்கவுள்ளது. நாட்டின் வளர்ந்து வரும் DCR தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக விநியோகம் மற்றும் செயல்பாடுகளை தொடர்வதில் நிலைத்தன்மையை உறுதி செய்யும் வகையில் அதன் டெலிவரிகளை செப்டம்பர் 2026-இல் தொடங்க விக்ரம் சோலார் திட்டமிட்டுள்ளது.

உள்நாட்டு DCR சந்தையில் விக்ரம் சோலார் நிறுவனத்தின் ஊடுருவல் மற்றும் அதன் செல் விநியோகச் சங்கிலியை பன்முகத்தன்மை வாய்ந்ததாக வலுப்படுத்தும் யுக்தியில் அடுத்த கட்ட முன்னேற்றமாக இந்த ஒப்பந்தம் கருதப்படுகிறது. மேலும், இந்த ஆண்டின் தொடக்கத்தில் நிறுவனம் கையெழுத்திட்ட பல்வேறு விநியோக ஒப்பந்தங்களுள் இதுவும் ஒன்றாகும். இது விக்ரம் சோலாரின் பின்னிருந்து ஒருங்கிணைக்கும் யுக்தியாகக் கருதப்படுகிறது. இந்த ஒப்பந்தமானது நிறுவனத்தின் எதிர்கால 9 ஜிகாவாட் உயர் திறன் கொண்ட சோலார் செல் உற்பத்தி ஆலையின் உதவியுடன் மேற்கொள்ளப்படவுள்ளது. FY27 நிதியாண்டின் நான்காவது காலாண்டில் (Q4) இந்த ஆலையானது துவங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

விக்ரம் சோலார் நிறுவனத்தின் சேர்மன் & நிர்வாக இயக்குனர், திரு. ஞானேஷ் சவுத்ரி அவர்கள் கூறுகையில், 

“இந்தியாவின் சோலார் துறையின் வளர்ச்சியின் அடுத்த கட்டத்தின் வெற்றியானது உற்பத்தி அளவில் மட்டுமில்லாமல், விநியோகச் சங்கிலி செயல்பாடுகளாலும் அதன் வெற்றி அல்லது தோல்வி நிர்ணயிக்கப்படலாம். இந்த ஒப்பந்த ஏற்பாடு அதை நோக்கிய மற்றொரு படியாகும் - இது எங்கள் விநியோகஸ்தர் தளத்தை விரிவுபடுத்துகிறது; DCR மீதான நமது கட்டுப்பாட்டை வலுப்படுத்துகிறது; அதுமட்டுமில்லாமல், நமது கட்டுப்பாட்டிற்கு வெளியே குறைவான காரணிகளை வைப்பதன் மூலம் இந்தியாவின் மின்னாற்றல் துறையை பாதுகாப்பாக வைக்கலாம் என்கிற நம்பிக்கையையும் உறுதி செய்கிறது. ‘தற்சார்பு இந்தியா’ என்ற நிலையை எந்த ஒரு குறிப்பிட்ட ஒரேயொரு கூட்டாண்மையாலும் உருவாக்க இயலாது; ஆண்டுதோறும் இது போன்ற தொடர் ஒப்பந்தங்களை மேற்கொள்ளும் நிறுவனங்கள் தான் அந்த நிலையை எட்டுவதற்கு பங்களிக்கும்,” என்று தெரிவித்தார்.