புரோஸ்டேட் புற்றுநோய் விழிப்புணர்வு மாதம்: விழிப்புணர்வு, முன்கூட்டிய பரிசோதனை மற்றும் புரோஸ்டேட் ஆரோக்கியம் குறித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளுமாறு AINU சென்னை வலியுறுத்தல்
சரியான காலத்தில் நோய் கண்டறிதலுக்கும் சிகிச்சைக்கும், ஆண்கள் தவறாமல் புரோஸ்டேட் ஆரோக்கிய பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்றும், எச்சரிக்கை அறிகுறிகளை கவனிக்க வேண்டும் என்றும் யூராலஜி மருத்துவர்கள் வலியுறுத்துகின்றனர்
சென்னை, செப்டம்பர் 23, 2026: புரோஸ்டேட் புற்றுநோய் விழிப்புணர்வு மாதத்தை முன்னிட்டு, ஆசியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் நெஃப்ராலஜி அண்ட் யூராலஜி (AINU), சென்னை, குறிப்பாக அதிக ஆபத்து வாய்ந்த வயதுப் பிரிவைச் சேர்ந்த ஆண்களை, அறிகுறிகள் தீவிரமாகும் வரை காத்திராமல், புரோஸ்டேட் ஆரோக்கியம் மற்றும் புரோஸ்டேட் புற்றுநோய் குறித்து அதிக கவனம் செலுத்தி, உரிய நேரத்தில் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தியுள்ளது.
ஆரம்ப கட்டத்தில் புரோஸ்டேட் புற்றுநோய் பெரும்பாலும் குறிப்பிடத்தக்க அறிகுறிகளை வெளிப்படுத்தாமல் இருக்கக்கூடும் எனினும், சிறுநீர் கழிக்கும் விதத்தில் மாற்றம், சிறுநீர் தொடங்குவதில் அல்லது தொடர்ச்சியாக கழிப்பதில் சிரமம், அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டிய தேவை, சிறுநீர் அல்லது விந்தில் ரத்தக்கசிவு, அல்லது தொடர்ச்சியான எலும்பு அல்லது முதுகுவலி ஆகியவற்றை புறக்கணிக்கக்கூடாது. சிறுநீர் தொடர்பான அறிகுறிகள் புற்றுநோய் அல்லாத புரோஸ்டேட் பிரச்னைகளாலும் ஏற்படலாம் என்பதால், உரிய மருத்துவ பரிசோதனை இன்றியமையாததாகிறது.
இந்த கருத்தரங்கில் பேசிய AINU-வின் தலைமை யூரோ-ஆன்காலஜிஸ்ட், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மற்றும் ரோபோடிக் சர்ஜன், நிர்வாக இயக்குநர் டாக்டர் அருண் குமார் பாலகிருஷ்ணன் கூறுகையில், “புரோஸ்டேட் புற்றுநோய் எந்தவித அறிகுறியும் இன்றி மெதுவாக வளரக்கூடியது; சிறுநீர் தொடர்பான அறிகுறிகள் இல்லாதது, நோய் இல்லை என்று அர்த்தமல்ல. ஆண்கள், குறிப்பாக வயதாகும்போது அல்லது குடும்பத்தில் புரோஸ்டேட் புற்றுநோய் வரலாறு இருந்தால், தங்கள் புரோஸ்டேட் ஆரோக்கியம் குறித்து மருத்துவர்களிடம் தயங்காமல் பேச வேண்டும். விழிப்புணர்வும், உரிய நேரத்தில் பரிசோதனையும், மேலும் ஆய்வு தேவைப்படும் ஆண்களை கண்டறிய உதவும்,” என்றார்.
பிரபல நடிகர் திரு. கார்த்திக் குமார் கூறுகையில், “ஆண்களின் ஒட்டுமொத்த நல்வாழ்விற்கு புரோஸ்டேட் ஆரோக்கியம் முக்கியமான ஒரு அங்கமாக இருந்தாலும், அறிகுறிகள் புறக்கணிக்க முடியாத அளவிற்கு தீவிரமாகும் வரை பெரும்பாலும் இது கவனிக்கப்படுவதில்லை. விழிப்புணர்வும், உரிய நேரத்தில் மருத்துவ பரிசோதனையும், குறிப்பாக வயதாகும்போது, பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும். ஆண்கள் தங்கள் புரோஸ்டேட் ஆரோக்கியம் குறித்து முன்னெச்சரிக்கையுடன் செயல்பட்டு, தயக்கமின்றி மருத்துவ ஆலோசனை பெற ஊக்குவிக்கும் AINU சென்னையின் இந்த முயற்சிக்கு ஆதரவு தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். தொடர்ச்சியான ஆரோக்கிய உரையாடல்களையும் முன்கூட்டிய பரிசோதனையையும் பொறுப்புள்ள சுய பராமரிப்பின் ஒரு பகுதியாக மாற்றுவோம்,” என்றார். ஆரம்பத்திலேயே கவனம் செலுத்துவது மாற்றத்தை ஏற்படுத்தும் புரோஸ்டேட் புற்றுநோய் சந்தேகிக்கப்படும்போது, மருத்துவர்கள் மருத்துவ பரிசோதனை, PSA பரிசோதனை, டிஜிட்டல் ரெக்டல் பரிசோதனை, மல்டிபேராமெட்ரிக் MRI போன்ற இமேஜிங் மற்றும் தேவைப்படும்போது பயாப்சி ஆகியவற்றின் ஒருங்கிணைப்பைப் பயன்படுத்தி நோயறிதலை உறுதி செய்கின்றனர். ஆணின் வயது, ஆபத்து காரணிகள், PSA அளவுகள் மற்றும் பிற மருத்துவ கண்டறிதல்களுக்கு ஏற்ப நோயறிதல் முறை மேலும் தனிப்பயனாக்கப்பட்டு வருகிறது. சிகிச்சை முடிவுகள், புற்றுநோயின் ஆபத்து வகை, நிலை மற்றும் நோயாளியின் ஒட்டுமொத்த ஆரோக்கியம் மற்றும் விருப்பங்களைப் பொறுத்தே அமைகின்றன. நோயின் தன்மைக்கு ஏற்ப, குறைந்த ஆபத்து கொண்ட புற்றுநோய்களுக்கு செயலில் கண்காணிப்பு முதல், தீவிர சிகிச்சை தேவைப்படும் புற்றுநோய்களுக்கு அறுவை சிகிச்சை, கதிர்வீச்சு சிகிச்சை மற்றும் முறையான சிகிச்சைகள் வரை பராமரிப்பு முறை வேறுபடலாம்.
இந்த முயற்சியின் ஒரு பகுதியாக, “மிஸ்டர் புரோஸ்டேட் -- என்னமாமா கண்ணு, சௌக்கியமா?” எனும் விழிப்புணர்வு பிரச்சாரத்தை AINU சென்னை அறிமுகப்படுத்தியுள்ளது. புரோஸ்டேட் ஆரோக்கியம் குறித்த உரையாடல்களை மேலும் நெருக்கமானதாக மாற்றவும், குறிப்பிடத்தக்க அறிகுறிகள் இல்லாத நிலையிலும் ஆண்கள் தங்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த ஊக்குவிக்கவும் இந்த பிரச்சாரம் வடிவமைக்கப்பட்டுள்ளது. அறிகுறிகள் இன்றியே புரோஸ்டேட் புற்றுநோய் உருவாகக்கூடும் என்பதும், சிறுநீர் அறிகுறிகளுக்காக காத்திராமல் ஆண்கள் புரோஸ்டேட் ஆரோக்கியம் குறித்து மருத்துவரிடம் பேச வேண்டும் என்பதும் இந்த பிரச்சாரம் முன்வைக்கும் முக்கிய செய்தி. இதன் ஒரு பகுதியாக, 40 வயதிற்கு மேற்பட்ட ஆண்கள், மருத்துவ நிபுணரின் ஆலோசனையுடன் முன்னெச்சரிக்கையான புரோஸ்டேட் ஆரோக்கிய பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என AINU ஊக்குவித்து வருகிறது.
முன்கூட்டிய பரிசோதனை மற்றும் விழிப்புணர்வுக்கு ஆதரவாக, செப்டம்பர் 24 முதல் 30, 2026 வரை இலவச புரோஸ்டேட் ஆரோக்கிய பரிசோதனை முகாமை AINU சென்னை நடத்துகிறது.
இலவச புரோஸ்டேட் ஆரோக்கிய பரிசோதனை முகாம் -- பரிசோதனையில் அடங்குபவை:
• PSA பரிசோதனை
• யூரோஃப்ளோமெட்ரி (Uroflowmetry)
• அல்ட்ராசவுண்ட்
• CUE (முழுமையான சிறுநீர் பரிசோதனை)
• மருத்துவர் ஆலோசனை
அறிகுறிகளுக்காக காத்திராமல், புரோஸ்டேட் ஆரோக்கியத்தை தங்கள் வழக்கமான சுகாதார உரையாடல்களின் ஒரு பகுதியாக ஆண்கள் மாற்றிக்கொள்ள ஊக்குவிப்பதே இந்த முயற்சியின் நோக்கமாகும்.
About Asian Institute of Nephrology & Urology
Asian Institute of Nephrology & Urology (AINU), part of Asia Healthcare Holdings, is India’s leading super-speciality hospital network exclusively focused on Urology and Nephrology.
With 8 cutting-edge hospitals across 5 cities, AINU is at the forefront of delivering world- class kidney and urological care. Known for its clinical excellence, AINU offers advanced services including, Urology Robotic Surgery, Uro-Oncology, Reconstructive Urology, Nephrology & Kidney Transplantation, Dialysis, Female Urology, Pediatric Urology, Men's
Health & Andrology. A trailblazer in Robotic Urological Surgery in India, AINU has treated over 600,000 patients, performed more than 1500 robotic surgeries, and operates a 500+ bed network. Accredited by NABH and recognized for postgraduate training programs likeDNB and FNB, AINU continues to redefine standards in specialized care and innovation.

