இந்தியா ஃபர்ஸ்ட் லைஃப் அறிமுகம் செய்துள்ள ‘கோல்டு டெர்ம் பிளான்’ ஆயுள் காப்பீட்டுக் காலத்திற்குப் பிறகும் பாதுகாப்பு வழங்குகிறது
முக்கிய சிறப்பம்சங்கள்:
• பாதுகாப்பு, உங்கள் வழியில்: ஆயுள் காப்பீட்டுடன் பிரீமியம் தொகையை திரும்பப் பெறுவது அல்லது லைஃப் கவர் மட்டும் வழங்கும் ஆப்ஷன்கள் உள்ளன.
• முழு ஆயுள் பாதுகாப்பு: ஆயுள் காப்பீட்டு வகைப்பாட்டின் கீழ் 99 வயது வரை ஆயுள் காப்பீட்டை நீட்டிப்பதற்கான ஆப்ஷன் உள்ளது.
• வாழ்க்கைத் துணைக்கான பாதுகாப்பு: பாலிசிதாரரின் மரணம் ஏற்பட்டால் மனைவிக்கு கூடுதலாக ஆயுள் காப்பீடு வழங்கப்படும்.
• ஸ்மார்ட் எக்ஸிட் ஆப்ஷன்: பாலிசி விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு, ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் பாலிசியை விட்டு வெளியேறுவதற்கான வசதியும், செலுத்திய பிரீமியங்களை 100% திரும்பப் பெறும் வாய்ப்பும் உள்ளது.
• காப்பீட்டுக்கு அப்பால் ஆரோக்கியத்தில் கவனம்: பாலிசிதாரருக்கு ஆண்டுக்கு ரூ.75,000 வரை மதிப்புள்ள உடல்நலனை நிர்வகிக்கும் சேவைகள் உள்ளன.
• குடும்பங்களுக்கு சௌகரியமான வகையில் காப்பீட்டுத் தொகை வழங்குதல்: மொத்தமாக, வழக்கமான வருமானமாக அல்லது இரண்டின் கலவையாக டெட்த் பெனிஃபிட் (இறப்பு காப்பீடு) வழங்கப்படும்.
• மகளிருக்கு முக்கியத்துவம் தரும் விமென்ஃபர்ஸ்ட் நன்மைகள்: மகளிர் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு நன்மைகள் மற்றும் பிரீமியம் தள்ளுபடிகள் உள்ளன.
சென்னை, ஆகஸ்ட் 25, 2026: இந்தியாஃபர்ஸ்ட் லைஃப் இன்ஷூரன்ஸ் கம்பெனி லிமிடெட் (இந்தியாஃபர்ஸ்ட் லைஃப்), இன்று இந்தியாஃபர்ஸ்ட் லைஃப் கோல்டு டெர்ம் பிளான் என்கிற காப்பீட்டுத் திட்டத்தை அறிமுகப்படுத்துவதாக அறிவித்தது; இது ஆயுள் காப்பீடு, ஆரோக்கிய நன்மைகள் மற்றும் குடும்பத்தை மையமாகக் கொண்ட அம்சங்களை ஒரே திட்டத்தில் ஒன்றிணைக்கும் ஒரு முழுமையான பாதுகாப்பு தீர்வாக உள்ளது.
நிதிப் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு தொடர்ந்து அதிகரித்து வரும் சூழலில், இந்தியாவில் டெர்ம் இன்ஷூரன்ஸை நாடுவது ஒப்பீட்டளவில் குறைவாக உள்ளது; இது அதிக குடும்பங்களின் நிதிப் பாதுகாப்பை வலுப்படுத்துவதில் காப்பீட்டுத் துறையில் குறிப்பிடத்தக்க வாய்ப்புள்ளதை எடுத்துக்காட்டுகிறது. அதே நேரத்தில், வாடிக்கையாளர்கள் அடிப்படை ஆயுள் காப்பீட்டின் பாதுகாப்பைக் கடந்து - அதிக சௌகரியம், ஆரோக்கியமான வாழ்விற்கான ஆதரவு மற்றும் நீண்ட கால மதிப்பை வழங்கும் தீர்வுகளை நாடுகிறார்கள். இந்தியாஃபர்ஸ்ட் லைஃப் கோல்ட் டெர்ம் திட்டமானது வாழ்க்கையின் பல்வேறு நிலைகளில் பாதுகாப்பை மிகவும் பொருத்தமான வகையிலும், அதே நேரத்தில் வளர்ந்து வரும் பல்வேறு எதிர்பார்ப்புகளை நிவர்த்தி செய்யும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த அறிமுகம் குறித்து கருத்து தெரிவித்த வருண் குப்தா, அவர்கள் கூறுகையில், “ஏதாவது எதிர்பாராமல் நடக்கும் போது நிதி ஆதரவினை வழங்குதல் என்பதோடு காப்பீடு நின்றுவிடக் கூடாது. இது வாடிக்கையாளர்களுடன் சேர்ந்து மேம்பட வேண்டும், மற்றும் அவர்களின் வாழ்க்கை பயணம் முழுவதும் தேவையான மதிப்பை உருவாக்க வேண்டும். பாதுகாப்பு, ஆரோக்கியம் மற்றும் சௌகரியமான அம்சங்கள் ஆகியவற்றை ஒரே காப்பீட்டுத் திட்டத்தில் ஒருங்கிணைப்பதன் மூலம் இந்தியாஃபர்ஸ்ட் லைஃப் கோல்டு டெர்ம் பிளான் இந்த சிந்தனையை சாத்தியமாக்கியுள்ளது. அதன் முக்கிய அம்சமாக பின்வரும் ஒரு எளிய நம்பிக்கை உள்ளது - வாடிக்கையாளருக்கு சரியானதைச் செய்வது, அவர்களின் தேவைகளுக்கு உண்மையாக இருப்பது, மற்றும் தொடர்ந்து தேவையான மதிப்பீட்டை வழங்குவது,” என்றார்.
இந்தியாஃபர்ஸ்ட் லைஃப் நிறுவனத்தின் ஏஜென்சி & அலையன்சஸ், தலைமை விநியோக அலுவலர், சுமீத் சாஹ்னி அவர்கள் கூறுகையில், “நிதிப் பாதுகாப்பின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு கணிசமாக அதிகரித்துள்ளது; இருப்பினும் டெர்ம் இன்ஷூரன்ஸ் சேவைகளைப் பெறுவது இருக்க வேண்டிய அளவை விட குறைவாக உள்ளது. அடிப்படை ஆயுள் காப்பீட்டைத் தாண்டி அதிக சௌகரியங்கள், மற்றும் உறுதியான மதிப்பீட்டை வழங்கும் தீர்வுகளை வாடிக்கையாளர்கள் அதிகளவில் எதிர்பார்க்கிறார்கள். இந்தியாஃபர்ஸ்ட் லைஃப் கோல்ட் டெர்ம் பிளான் அவர்கள் எதிர்பார்க்கும் - பாதுகாப்பு, ஆரோக்கியம் மற்றும் குடும்பத்தை மையமாகக் கொண்ட நன்மைகளை ஒருங்கிணைத்து வழங்குவதன் மூலம் இத்தேவையை பூர்த்தி செய்கிறது; வாடிக்கையாளர்கள் தங்கள் எதிர்காலத்தைப் பாதுகாக்கவும், தங்கள் வாழ்க்கையின் பொறுப்புகளை அதிக நம்பிக்கையுடன் வழிநடத்தவும் உதவுகிறது,” என்றார்.
இந்தியாஃபர்ஸ்ட் லைஃப் கோல்ட் டெர்ம் பிளான் வழக்கமான ஆயுள் காப்பீட்டுத் திட்டத்தைக் கடந்து அதிக பாதுகாப்பை நாடும் தனிநபர்கள் மற்றும் குடும்பங்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. நிதி பாதுகாப்பு, ஆரோக்கியமான வாழ்விற்கான ஆதரவு மற்றும் குடும்பத்தை மையமாகக் கொண்ட நன்மைகளை இணைப்பதன் மூலம், இந்த திட்டம் காப்பீட்டு பாதுகாப்புக்கு ஒரு முழுமையான அணுகுமுறையை வழங்குகிறது. இந்த காப்பீட்டுத் திட்டத்தை அறிமுகம் செய்ததன் மூலம் வாடிக்கையாளர்களின் எதிர்காலத்தைப் பாதுகாக்கும் அதே நேரத்தில் வாழ்க்கையின் பொறுப்புகளை அவர்கள் வழிநடத்தவும் உதவுகிறது; வாடிக்கையாளரை மையமாகக் கொண்ட தீர்வுகளின் மூலம் இந்தியாஃபர்ஸ்ட் லைஃப் நிறுவனம் அதன் போர்ட்ஃபோலியோவை மேலும் வலுப்படுத்தியுள்ளது.