Thursday, August 27, 2026

BESS பிரிவில் 261 kWh தயாரிப்பை அறிமுகம் செய்து, VSL பவர்ஹைவ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக களமிறங்கியுள்ளது

BESS பிரிவில் 261 kWh தயாரிப்பை அறிமுகம் செய்து, VSL பவர்ஹைவ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக களமிறங்கியுள்ளது

சென்னை, ஆகஸ்ட் 27, 2026: விக்ரம் சோலார் லிமிடெட் (Vikram Solar Limited) நிறுவனத்தின் பேட்டரி மற்றும் எனர்ஜி ஸ்டோரேஜ் பிரிவான VSL பவர்ஹைவ் (PowerHive) பிரைவேட் லிமிடெட், இன்று அதன் P261 என்கிற தயாரிப்பினை வெளியிடுவதாக அறிவித்துள்ளது; இந்தியா மற்றும் சர்வதேச சந்தைகளில் உள்ள தொழில்சாலை மற்றும் வர்த்தக நுகர்வோர்களுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட இது 125kW/261kWh திறன் கொண்ட ஒரு லிக்விட்-கூல்டு BESS (பேட்டரி மின்னாற்றல் சேமிப்பு சிஸ்டம்) தயாரிப்பாகும். VION ஏற்கனவே PowerHive போர்ட்ஃபோலியோவின் ஒரு பகுதியாக இருந்து வரும் சூழலில், இந்த P261 தயாரிப்பானது அதன் பிராண்டின் முதலாவது அதிகாரப்பூர்வ தயாரிப்பாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது VSL பவர்ஹைவ் நிறுவனத்தின் வளர்ச்சியில் ஒரு முக்கியமான மைல்கல்லாக கருதப்படுகிறது.

P261 தயாரிப்பானது தொழிற்சாலைகள் மற்றும் வர்த்தக நுகர்வோர் எதிர்கொள்ளும் பேக்அப் பவர், பீக்-லோட் (peak-load) மேலாண்மை, சோலார் மின்சார சேமிப்பு, டீசல் ஜெனரேட்டர் பயன்பாட்டைக் குறைத்தல், மின்னாற்றல் தரம் மற்றும் நம்பகத்தன்மையுடன் ஆதரவளித்தல், EV சார்ஜிங் மற்றும் மைக்ரோகிரிட் (microgrid) தேவைகள் போன்ற பல்வேறு மின்னாற்றல் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் அறிமுகத்தின் மூலம், VSL பவர்ஹைவ் எனர்ஜி ஸ்டோரேஜ் பிரிவில் தனது இருப்பை வலுப்படுத்துகிறது. மேலும், விக்ரம் சோலார் நிறுவனத்தின் உற்பத்தித் நிபுணத்துவத்தை உறுதுணையாகக் கொண்டு, மின்னாற்றல் மாற்றுத் துறையின் அனைத்துப் பிரிவு வாடிக்கையாளர்களுக்கும் சேவை வழங்கத் தயாராகியுள்ளது.

இந்த P261 தயாரிப்பானது – ஒரு கச்சிதமான, ஒற்றை-கேபினட் டிசைனுடன் கூடிய துல்லியமான லிக்விட் கூலிங் (திரவ குளிர்விக்கும்) தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ளது. அது செல் ஆரோக்கியத்தை  பாதுகாத்து, வழக்கமான சிஸ்டம்களை விட பேட்டரி ஆயுளை கணிசமாக நீட்டிக்கிறது. மேலும் இதில் ஒருங்கிணைந்த எனர்ஜி மேனேஜ்மென்ட் சிஸ்டம், நிகழ்-நேர கண்காணிப்பு, மற்றும் ரிமோட் ஆய்வு வசதிகளை மேற்கொள்ளும் அம்சங்கள் உள்ளன. மேலும், இதில் தீயைத் தடுக்கும் ஃபயர் சப்ரஷன் வசதி மற்றும் ஓவர் சார்ஜிங், ஷார்ட் சர்க்யூட், வெப்ப பாதிப்புகள் ஏற்படாமல் பாதுகாக்கும் பல அடுக்கு பாதுகாப்பு அம்சங்களும் வசதிகளும் உள்ளன. இதன் கட்டமைப்பானது, எதிர்கால கொள்திறன் விரிவாக்கத்திற்கு ஏற்றவாறு உருவாக்கப்பட்டுள்ளதால் சோலார் மின்சார உள்ளீடு,  கிரிட் (grid), ஸ்டோரேஜ் (storage) மற்றும் EV சார்ஜிங் ஆகிய அனைத்தையும் ஒரே சாதனத்திற்குள் ஒருங்கிணைக்கிறது.

P261-இன் முக்கிய அம்சமாக 832V நாமினல் வோல்டேஜ் மற்றும் 314Ah செல் கொள்ளளவு கொண்ட 261kWh LFP (லித்தியம் ஐயான் பாஸ்பேட்) பேட்டரியைக் கொண்டுள்ளது.  இது அதிக-திறன் கொண்ட சார்ஜ்-டிஸ்சார்ஜ் செயல்திறனை வழங்கிடும் வகையில் ஆன்-கிரிட் (on-grid) மற்றும் ஆஃப்-கிரிட் (off-grid) ஆகிய இரண்டு அமைப்புகளும் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த சிஸ்டம் -30°C முதல் 50°C வரை விரிவான வெப்பநிலை வரம்பிலும் நம்பகத்தன்மையுடன் இயங்கும் திறன் கொண்டது. மேலும், தூசி மற்றும் நீர் உட்புகாமல் பாதுகாக்கும் IP52S ரேட்டிங்கைக் கொண்டுள்ளதால், சவாலான தொழிற்சாலை சூழல்களுக்கு மிகவும் ஏற்றதாக அமைகிறது.


தொழிற்சாலை மற்றும் வர்த்தக நுகர்வோர்களுக்காக வடிவமைக்கப்பட்ட இந்த P261, பீக்-லோட் மேனேஜ்மென்ட் மற்றும் டிமான்ட் சார்ஜ் குறைப்புக்கு உறுதுணையாக இருக்கிறது. மேலும், அறிவார்ந்த ஷிஃப்ட்டிங் மூலம் சோலார் மின்சாரப் பயன்பாட்டை வலுப்படுத்துவதுடன், மின்தடை காலங்களில் நம்பகமான மாற்று பேக்அப் மின்சாரத்தையும் வழங்குகிறது. அதோடு, டீசல் ஜெனரேட்டர் பயன்பாட்டைக் குறைத்தல், EV சார்ஜிங் உள்கட்டமைப்பு மற்றும் மின்னாற்றல் தரத் தேவைகளுக்கும் ஆதரவளிப்பதால், இது மைக்ரோகிரிட் பயன்பாடுகளுக்கும் (microgrid) மற்றும் யூட்டிலிட்டி-ஸ்கேல் கிரிட் (utility-scale grid) ஆதரவிற்கும் சம அளவில் பொருத்தமானதாக அமைகிறது.


VSL பவர்ஹைவ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அலுவலர் (CEO) திரு. அருண் மிட்டல் அவர்கள் கூறுகையில், “இந்தியாவின் இண்டஸ்ட்ரியல் மற்றும் கமர்ஷியல் தொழில்துறைகள் அவற்றின் தேவைகளுக்கு உண்மையிலேயே ஏற்ற எனர்ஜி ஸ்டோரேஜ் தீர்வுகளுக்குத் தயாராக உள்ளன; மேலும் எங்களது P261 அந்தத் தேவையை சரியாகப் பூர்த்தி செய்கிறது. PowerHive பிராண்டின் கீழ் எங்களின் முதலாவது அதிகாரப்பூர்வ தயாரிப்பாக இதனை சந்தைக்குக் கொண்டு வருவது எங்களுக்கு ஒரு முக்கியமான கட்டமாகும்; மேலும் இது போன்ற பல தயாரிப்புகள் அடுத்தடுத்து நாங்கள் வெளியிடவுள்ளோம்,” என்று தெரிவித்துள்ளார்.

“இந்தியாவின் மின்னாற்றல் மாற்றமானது அதன் மிக முக்கியமான தீர்மானிக்கும் கட்டத்தை எட்டியுள்ளது - நாம் எவ்வளவு வேகமாகவும் எவ்வளவு தூரமும் பயணிக்கப்போகிறோம் என்பதை எனர்ஜி ஸ்டோரேஜ்தான் தீர்மானிக்கவுள்ளது. சோலார் துறையில் விக்ரம் சோலாரின் பயணத்தை வரையறுத்த அதே சீரான உற்பத்தி முறைமை மற்றும் தரக் கட்டுப்பாட்டின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட P261 மூலம், பவர்ஹைவ் என்பது ஒரு கான்செப்ட்டாக இருந்த நிலையைத் தாண்டி தற்போது வர்த்தக ரீதியான பயன்பாட்டிற்கு வந்துள்ளது. இது வெறும் தயாரிப்பின் அறிமுகம் மட்டுமல்ல; எதிர்வரும் ஆண்டுகளில் இந்தியா மற்றும் சர்வதேச சந்தைகளுக்குச் சேவை செய்யும் முழுமையான எனர்ஜி ஸ்டோரேஜ் தீர்வுகளை வழங்கும் ஒரு நிறுவனமாக பவர்ஹைவ்-ஐ உருவாக்கும் நோக்கில், பெரிய இலக்குகளை விரிவாக கட்டமைக்கும் ஒரு வணிகத்தின் அடித்தளத்தையும் உருவாக்குகிறோம்,” என்று விக்ரம் சோலார் நிறுவனத்தின் சேர்மன் மற்றும் மேலாண் இயக்குநர், திரு. ஞானேஷ் சௌத்ரி அவர்கள் கூறினார்.


P261-இன் அறிமுகத்தின் மூலம், C&I (வர்த்தக & தொழிற்சாலை) பிரிவின் வளர்ந்து வரும் மின்னாற்றல் சேமிப்புத் தேவைகளைப் பூர்த்தி செய்ய VSL பவர்ஹைவ் ஒரு தீர்க்கமான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இத்துறையில் எங்களின் முதல் தயாரிப்பான P261, நடைமுறைக்கு சாத்தியமான, வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட தீர்வுகளை வழங்க வேண்டுமென்கிற எங்களது நோக்கத்தைப் பிரதிபலிப்பதுடன், விரிவான எனர்ஜி ஸ்டோரேஜ் தயாரிப்புகளுக்கான அடித்தளத்தையும் நிறுவுகிறது. எதிர்வரும் ஆண்டுகளில் தொழிற்சாலைகள், வர்த்தகம் மற்றும் யூட்டிலிட்டி-ஸ்கேல் ஆகிய துறைகளில் மின்னாற்றல் சேமிப்பு பிரிவுகளில் எங்களது தயாரிப்புகளை விரிவுபடுத்தவும், அதன் இருப்பை வலுப்படுத்தவும் நிறுவனம் உறுதிபூண்டுள்ளது.



About VSL PowerHive


Founded in 2024, VSL PowerHive is a wholly owned subsidiary of Vikram Solar and a leading provider of integrated energy storage solutions, committed to accelerating the adoption of clean and sustainable power across India. Backed by expertise in LFP technology, distributed energy systems, and renewable power infrastructure, the company delivers high-quality, technology-driven solutions for residential, commercial, industrial, and utility-scale applications. VSL PowerHive's product lineup includes the P261, catering to commercial and industrial customers, alongside its flagship brand VION, which delivers reliable, scalable battery systems across residential, mobility, commercial, and utility-scale segments. Together, these offerings enable greater energy independence and support India's transition to clean energy.