Friday, July 3, 2026

இந்தியாவில் கார்டன்ட் ஹெல்த் நிறுவனத்தின் ஷீல்ட்™ பலவகை புற்றுநோய் கண்டறியும் சோதனையை அறிமுகம் செய்த முதல் நிறுவனமாக அப்போலோ கேன்சர் சென்டர்ஸ் இணைந்துள்ளது

இந்தியாவில் கார்டன்ட் ஹெல்த் நிறுவனத்தின் ஷீல்ட்™ பலவகை புற்றுநோய் கண்டறியும் சோதனையை அறிமுகம் செய்த முதல் நிறுவனமாக அப்போலோ கேன்சர் சென்டர்ஸ் இணைந்துள்ளது

Mr. Harshad Reddy, Director – Group Oncology, Apollo Hospitals 

Dr. Harit Kumar Chaturvedi, Chief Executive Officer and Clinical Head – Oncology Network, Apollo Hospitals 

Dr. T. Raja, Director – Medical Oncology, Apollo Speciality Hospitals, Teynampet 

Mr. Simranjit Singh, Chief Executive Officer, Guardant Health AMEA 

Dr. Keyur Parekh, President – BU Biologics and Corporate Strategy, Zydus Lifesciences Ltd.

நம் நாட்டில் இந்த இரத்தப் பரிசோதனை மூலம் புற்றுநோய் கண்டறியும் வசதியை அதிகப்படுத்த ஜைடஸ் லைஃப்சயின்சஸ் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது -


சென்னை, ஜூலை 3, 2026: புற்றுநோயை ஆரம்பக்கட்டத்திலேயே கண்டறிவது, நோயாளிகளின் உயிர்வாழ்வு விகிதத்தையும் வாழ்க்கைத் தரத்தையும் மேம்படுத்துவதற்கான மிகச் சிறந்த வழியாகும். இந்த நிலையில், இந்தியாவின் முன்னணி மற்றும் பிரத்யேக விரிவான புற்றுநோய் சிகிச்சை அமைப்பான அப்போலோ கேன்சர் சென்டர்ஸ் (ACCs), 'சைடஸ் லைஃப்சயின்சஸ்' (Zydus Lifesciences) நிறுவனத்துடன் இன்று ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இதன் மூலம், துல்லியமான புற்றுநோய் சிகிச்சைக்கான நிறுவனமான 'கார்டன்ட் ஹெல்த்' (Nasdaq: GH) உருவாக்கியுள்ள, ஆய்வக அடிப்படையிலான 'ஷீல்டு™ மல்டி-கேன்சர் டிடெக்ஷன்'  பரிசோதனை முறை இந்தியாவில் வழங்கப்படவுள்ளது. இந்த அறிமுகத்தின் மூலம், இந்தியாவிலேயே முதன்முறையாக இந்த அதிநவீனப் பரிசோதனைக்கான வாய்ப்பை வழங்கும் முதல் சுகாதாரப் பராமரிப்பு நிறுவனமாக ஏசிசிஸ் உருவெடுத்துள்ளது.


இந்தியாவில் புற்றுநோயின் பாதிப்பு 2040-ஆம் ஆண்டிற்குள் 2.08 மில்லியனாக உயரும் என கணிக்கப்பட்டுள்ளது — இது 2020-ஆம் ஆண்டை விட 57.5% அதிகமாகும் . எனவே, தகுந்த நேரத்தில் மருத்துவ ஆதரவு, ஆரம்பக்கட்ட தலையீடு, நம்பகமான தகவல்கள் ஆகியவை தற்போதைய மிக முக்கியத் தேவையாக மாறியுள்ளன. 2022-ஆம் ஆண்டில் மட்டும் 1.41 மில்லியனுக்கும் அதிகமான இந்தியர்களுக்குப் புற்றுநோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது . பெண்களிடையே ஏற்படும் புற்றுநோய் மரணங்களுக்கு மார்பகப் புற்றுநோய் தொடர்ந்து முதன்மைக் காரணமாக இருக்கும் வேளையில் , ஆண்களிடையே வாய்வழிப் புற்றுநோய் மிகவும் பரவலாகக் காணப்படும் புற்றுநோயாக உள்ளது . புற்றுநோயின் பாதிப்புகள் இவ்வாறு தொடர்ந்து அதிகரித்து வந்தபோதிலும், நாடு முழுவதும் புற்றுநோய் கண்டறியும் பரிசோதனை செய்து கொள்பவர்களின் விகிதம் இன்னும் குறைவாகவும், சீரற்றதாகவுமே உள்ளது .


இந்த மைல்கல்லின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்து, அப்போலோ மருத்துவமனையின் நிர்வாகத் துணைத் தலைவர் டாக்டர் பிரீத்தா ரெட்டி அவர்கள் இவ்வாறு கூறினார், “அப்போலோவில், மருத்துவப் பராமரிப்பின் எதிர்காலம் என்பது தடுப்பு மற்றும் ஆரம்பக்கட்ட கண்டறிதலில் தான் உள்ளது என்று நாங்கள் எப்போதும் நம்புகிறோம். நமது காலத்தின் மிக முக்கியமான சுகாதார சவால்களில் ஒன்றாக புற்றுநோய் தொடர்கிறது; மேலும் பரிசோதனைகள் மூலம் இதனை ஆரம்பத்திலேயே கண்டறிவதுதான், நோயைக் குணப்படுத்துவதில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரே முக்கிய படியாகும். இந்தியாவில் 'ஷீல்டு மல்டி-கேன்சர் டிடெக்ஷன்' பரிசோதனை அறிமுகப்படுத்தப்பட்டிருப்பது, மருத்துவப் புதுமைகளை நோக்கிய ஒரு முக்கியமான படியாகும். இது இந்தியா முழுவதும் உள்ள மக்களுக்கு அதிநவீன பரிசோதனை தீர்வுகளைக் கிடைக்கச் செய்கிறது. நாடு முழுவதும் புற்றுநோய் கண்டறியும் பரிசோதனை விகிதங்கள் குறைவாக உள்ள நிலையில், புற்றுநோயைத் தடுத்தல், பரிசோதனை செய்தல் மற்றும் ஆரம்பக்கட்டத்திலேயே கண்டறிவது குறித்த உரையாடல்களை மக்களிடையே முதன்மைப்படுத்தவும் இந்த சோதனை உதவும்.” 


ஷீல்டு எம்சிடி என்பது, புற்றுநோய் வருவதற்கான சாதாரண சராசரி அபாயம் கொண்ட 45 வயது அல்லது அதற்கு மேற்பட்ட நபர்களுக்கு, மெத்திலேஷன் முறையில் இரத்தப் பரிசோதனை மூலம் பல வகையான புற்றுநோய்களைக் கண்டறியும் ஒரு சோதனை ஆகும். இதில் சிறுநீர்ப்பை, குடல், மார்பகம், புரோஸ்டேட், உணவுப்பாதை, இரைப்பை, கல்லீரல், நுரையீரல், கருப்பை மற்றும் கணையப் புற்றுநோய்கள் அடங்கும். அமெரிக்காவில், வளர்ந்து வரும் எம்சிடி தொழில்நுட்பத்தை மதிப்பீடு செய்யும் 'தேசிய புற்றுநோய் நிறுவனத்தின் வான்கார்ட் ஆய்வில்', புற்றுநோயின் இருப்பு மற்றும் அது எந்த திசுவிலிருந்து உருவானது என்பதைக் கணிப்பதில் இந்த சோதனை சிறப்பான செயல்திறனை வெளிப்படுத்தியது. இதன் அடிப்படையில், அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாக அமைப்பிடமிருந்து இச்சோதனை 'பிரேக்த்ரூ டிவைஸ் டெசிக்னேஷன்*' பெற்றுள்ளது.


அப்போலோ மருத்துமனை புற்றுநோயியல் துறையின் சிஇஓ மற்றும் மருத்துவத் தலைவர் டாக்டர் ஹரித் கே. சதுர்வேதி அவர்கள் மேலும் இவ்வாறு தெரிவித்தார், “ஷீல்டு மல்டி-கேன்சர் டிடெக்ஷன் (MCD) என்பது சில குறிப்பிட்ட புற்றுநோய்களைக் கண்டறிவதில் மிகச் சிறந்த துல்லியத்தன்மை மற்றும் நம்பகத்தன்மையைக் கொண்ட ஒரு எளிய இரத்தப் பரிசோதனை ஆகும்; இருப்பினும், ஒரே ஒரு பரிசோதனை மூலமே அனைத்துப் புற்றுநோய்களையும் ஆரம்பக்கட்டத்திலேயே கண்டறிந்து விட முடியும் என்ற இலட்சிய நிலையை அடைய நாம் இன்னும் நீண்டதூரம் செல்ல வேண்டியுள்ளது. தகுந்த மருத்துவ வழிகாட்டுதலின் கீழ் இந்த சோதனை மிகப்பெரிய பலனை அளிக்கும்.” 


சைடஸ் லைஃப்சயின்சஸ் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் டாக்டர் ஷர்வில் படேல் அவர்கள் கூறியதாவது, “இந்தியாவின் முன்னணி புற்றுநோயியல் நிறுவனமாக, புற்றுநோய் சிகிச்சையில் நோய் கண்டறிதல் முறைகளின் பங்கை நாங்கள் மறுவரையறை செய்து வருகிறோம். தற்போதுள்ள புற்றுநோய் கண்டறியும் பரிசோதனை முறைகளுக்குத் துணையாக இருக்கும் புதுமையான பரிசோதனைத் தொழில்நுட்பத்திற்கான அணுகலை விரிவுபடுத்தும் வகையில், இந்தியாவில் ஷீல்ட் எம்சிடி-யை அறிமுகப்படுத்த அப்போலோ மருத்துவமனை மற்றும் கார்டன்ட் ஹெல்த் நிறுவனங்களுடன் கூட்டு சேர்வதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம்.. எங்களது பிரத்யேக நோய் கண்டறியும் பரிசோதனை முறைகள் மூலம், முறையான விழிப்புணர்வு முன்முயற்சிகளை மேற்கொண்டு, சரியான நேரத்தில் பரிசோதனை செய்து கொள்வதையும், முன்கூட்டியே ஆரோக்கியத்தைக் கவனிப்பதையும் நாங்கள் தொடர்ந்து ஊக்குவித்து வருகிறோம். துல்லியமான நோய் கண்டறிதல் முறைகளை அதிக மக்களுக்குக் கிடைக்கச் செய்வதன் மூலம், நோயாளி பராமரிப்பில் புதிய சாத்தியங்களை உருவாக்க நாங்கள் உறுதியுடன் இருக்கிறோம்.” 


கார்டன்ட் ஹெல்த் ஏஎம்இஏ-இன் தலைமை நிர்வாக அதிகாரி சிம்ரன்ஜித் சிங் அவர்கள் மேலும் கூறியதாவது, "அப்போலோ கேன்சர் சென்டர்ஸ் மற்றும் எங்களது நீண்டகால வர்த்தகக் கூட்டாளியான சைடஸ் லைஃப்சயின்சஸ் மூலம் 'ஷீல்டு மல்டி-கேன்சர் டிடெக்ஷன்' (MCD) பரிசோதனையை இந்தியாவிற்குக் கொண்டு வருவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிவது, அதன் சிகிச்சை முடிவுகளில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் ஆற்றல் கொண்டது. ஒரே ஒரு இரத்தப் பரிசோதனை மூலம் புற்றுநோய் தொடர்பான அறிகுறிகளைக் கண்டறிய உதவும் ஒரு முக்கியமான முன்னேற்றமாக இந்த ஷீல்டு எம்சிடி விளங்குகிறது. நாங்கள் அனைவரும் இணைந்து, முன்கூட்டியே மருத்துவ மதிப்பீடுகளைச் செய்ய உதவக்கூடிய அதிநவீனப் பரிசோதனைத் தொழில்நுட்பங்களை அதிக மக்களுக்குக் கிடைக்கச் செய்கிறோம்; இது இந்தியாவில் புற்றுநோய் சிகிச்சையின் எதிர்காலத்தை வடிவமைக்க உதவும்." என்றார்.


கடந்த பல ஆண்டுகளாகவே இந்திய சுகாதாரப் பராமரிப்பில் பல முன்னோடித் திட்டங்களை அப்போலோ மருத்துமனை தொடர்ந்து முதன்முறையாக அறிமுகப்படுத்தி வந்துள்ளது. இதில் மேம்பட்ட ரோபோடிக் அறுவை சிகிச்சை, சைபர்நைஃப் ரேடியோசர்ஜரி, புரோட்டான் தெரபி, துல்லியமான புற்றுநோய் சிகிச்சை, மரபியல் மற்றும் ஏஐ சார்ந்த மருத்துவத் தீர்வுகள் ஆகியவை அடங்கும். தற்போது இந்த ஷீல்டு எம்சிடி பரிசோதனையின் அறிமுகம், புற்றுநோய் சிகிச்சை மற்றும் மருத்துவப் புதுமைகளில் அப்போலோவின் முன்னணி நிலையை மேலும் வலுப்படுத்துகிறது.


###


*The FDA Breakthrough Device designation referenced eight cancer types—bladder, colorectal, esophageal, gastric, liver, lung, ovarian, and pancreatic cancer—in individuals aged 45 or older who are at typical average risk for cancer, as defined by the agency at the time of designation. This designation does not imply FDA approval, clearance, or endorsement of the device’s safety or effectiveness. 



*The Shield MCD test is a Laboratory Developed Test (LDT) for export only and not for sale or use in the United States. 


About Apollo Hospitals Enterprise Ltd.

Apollo revolutionised healthcare when Dr Prathap Reddy opened the first hospital in Chennai in 1983. Today, Apollo is the world’s largest integrated healthcare platform with over 10,900 beds across 78 hospitals, 7,200+ pharmacies, 300+ clinics, 2,500 diagnostic centres. It is one of the world’s leading cardiac centres, having performed over 3,00,000 angioplasties and 2,00,000 surgeries. Apollo continues to invest in research and innovation to bring the most cutting-edge technologies, equipment, and treatment protocols to ensure patients have access to the best care in the world. Apollo’s 1,20,000 family members are dedicated to delivering exceptional care and leaving the world better than we found it. For further details, log onto: www.apollohospitals.com


About Zydus Lifesciences Limited

Zydus Lifesciences Ltd., with an overarching purpose of empowering people with freedom to live healthier and more fulfilled lives, is an innovative, global life sciences company that discovers, develops, manufactures, and markets a broad range of healthcare therapies. The group employs over 29,000 people worldwide, including 1,500 scientists engaged in R & D, and is driven by its mission to unlock new possibilities in life sciences through quality healthcare solutions that impact lives. The group aspires to transform lives through pathbreaking discoveries. Over the last decade, Zydus has introduced several innovative, first-in-class products in the market for treating unmet healthcare needs with vaccines, therapeutics, biologicals, and New Chemical Entities. For more details, visit www.zyduslife.com


About Guardant Health

Guardant Health AMEA is a wholly owned subsidiary of Guardant Health, a leading precision oncology company focused on guarding wellness and giving every person more time free from cancer. Founded in 2012, Guardant is transforming patient care by providing critical insights into what drives disease through its advanced blood and tissue tests, real-world data and AI analytics. Guardant tests help improve outcomes across all stages of care, including screening with Shield™ to find cancer early, monitoring for recurrence in early-stage cancer, and helping doctors select the best treatment for patients with advanced cancer. For more information, please visit www.guardanthealthamea.com and follow the company on LinkedIn.