டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் சென்னை வண்ணாரப்பேட்டையில் புதிதாக ‘ஹர்தீப் மோட்டார்ஸ்’ டீலர்ஷிப்பை தொடங்கியது!
சென்னை, ஜூன் 24, 2026: இருசக்கர மற்றும் மூன்றுசக்கர வாகனத் தயாரிப்பில் சர்வதேச அளவில் முன்னணி நிறுவனமாகத் திகழும் டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் (TVS Motor Company), சென்னையில் தனது புதிய அங்கீகாரம் பெற்ற ‘ஹர்தீப் மோட்டார்ஸ்’ டீலர்ஷிப்பை இன்று தொடங்கியது. இந்த புதிய விற்பனை மற்றும் சேவை மையத்தின் மூலம், சென்னை பிராந்தியத்தில் டிவிஎஸ் நிறுவனத்தின் விற்பனை மேலும் வலுவடைவதோடு, வாடிக்கையாளர்களுக்கான சேவைகளையும், அனுபவத்தையும் மேம்படுத்துவதில் நிறுவனம் கொண்டுள்ள தொடர் அர்ப்பணிப்பை இது வெளிப்படுத்துகிறது.
பழைய வண்ணாரப்பேட்டை பகுதியில், வாடிக்கையாளர்கள் எளிதில் வந்து செல்லும் முக்கிய இடத்தில் அமைந்துள்ளது இந்த ‘ஹர்தீப் மோட்டார்ஸ்’. வாகனம் வாங்குவது முதல் அதற்கான சேவைகள் வரை வாடிக்கையாளர்களுக்கு ஒரு ஒருங்கிணைந்த முழுமையான அனுபவத்தை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இங்கு டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் பல்வேறு வகையான பயணிகள் (Passenger) மற்றும் சரக்கு (Cargo) மூன்றுசக்கர வாகனங்கள் அனைத்தும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இது பல்வேறு தரப்பு மக்களின் போக்குவரத்து மற்றும் வணிகத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் அமைந்துள்ளது.
இப்பகுதியில் டிவிஎஸ் மோட்டார் பிராண்டின் பயணத்தில் ஒரு முக்கிய மைல்கல்லாக அமைந்த இந்தத் தொடக்க விழாவில், டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் வணிக வாகன பிரிவின் வர்த்தக தலைவர் திரு. ரஜத் குப்தா (Mr. Rajat Gupta - Business Head Commercial Mobility, TVS Motor Company) மற்றும் இந்த டீலர்ஷிப்பின் உரிமையாளர் திரு. தீபக் பன்டாரி [Mr. Deepak Bhandari, Dealer Owner] ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
இத்தொடக்க விழாவில் டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் வணிகப் வாகனப் பிரிவின் வர்த்தகத் தலைவர் திரு. ரஜத் குப்தா (Mr. Rajat Gupta - Business Head Commercial Mobility TVS Motor Company) பேசுகையில், "சென்னையிலும் ஒட்டுமொத்த தமிழகத்திலும் டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் வணிகப் போக்குவரத்து வாகனங்களின் விற்பனை மற்றும் சேவைகளை வலுப்படுத்துவதில், இந்த ஹர்தீப் மோட்டார்ஸ் தொடக்கம் மற்றொரு முக்கியமான மைல்கல்லாகும். முழுமையான சேவைகள் மற்றும் இறுதி மைல் இணைப்பு வரையிலான போக்குவரத்துத் தீர்வுகளுக்கான (Last-mile mobility) தேவை தொடர்ந்து அதிகரித்து வரும் வேளையில், எங்களது வலுவான விற்பனை மற்றும் சேவை வசதிகள் கொண்ட இந்த ஹர்தீப் மோட்டார்ஸ் டீலர்ஷிப் எங்களின் பயணிகள் மற்றும் சரக்கு மூன்றுசக்கர வாகனங்களை வாடிக்கையாளர்களுக்கு மிக அருகில் கொண்டு சேர்க்கும். இந்த கூட்டு செயல்பாட்டின் மூலம், தொழில்முனைவோர் மற்றும் வணிகங்களின் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் உதவும் நம்பகமான போக்குவரத்துத் தீர்வுகளை வழங்குவதோடு, அவர்களைத் தொடர்ந்து ஊக்குவிப்பதில் நாங்கள் உறுதியுடன் இருக்கிறோம்" என்று கூறினார்.
ஹர்தீப் மோட்டார்ஸ் டீலர்ஷிப்பின் தொடக்கத்தின் மூலம், டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் தனது நம்பகமான விற்பனை செயல்பாடுகளைத் தொடர்ந்து விரிவுபடுத்தி வருகிறது; இதன் மூலம் புதுமையான, நம்பகமான மற்றும் வாடிக்கையாளர்-மைய போக்குவரத்துத் தீர்வுகளை இந்தியா முழுவதும் உள்ள வாகன உரிமையாளர்களுக்கு எளிதில் சென்றடையும் வகையில் கொண்டு சேர்க்கிறது.
