இளையராஜாவின் இசையைத் தழுவிய மெட்டுடன் ‘ஜென் சீ’ இளமை துடிப்பைக் கலந்து ஃபார்ம்லி வழங்கும்:
மக்கா ஷக்கா புதிய டிஜிட்டல் விளம்பரம்!
சென்னை, 22 ஜூன், 2026: இந்தியாவின் முன்னணி ஆரோக்கியமான நொறுக்குத்தீனி பிராண்டான ஃபார்ம்லி (Farmley), தனது "மக்கா ஷக்கா" (Makha Shaka) பிராண்டிற்காக "வைப புடிங்க மக்கா" (Vibe-a Pudinga Makka) என்ற புதிய டிஜிட்டல் விளம்பரப் பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளது. தமிழக இளைஞர்களின் வாழ்க்கைமுறையை மையமாகக் கொண்ட இந்த விளம்பரம், இசைஞானி இளையராஜாவின் மெகா ஹிட் பாடலின் மறுவடிவத்தோடு உயிர்பெற்றுள்ளது.
தமிழ்நாட்டின் பரபரப்பான தெருக்கள் மற்றும் மொட்டை மாடிகளில் நடப்பதாக இந்த விளம்பரம் படமாக்கப்பட்டுள்ளது. ஒரு இளைஞன் கடைசி ‘மக்கா ஷக்கா’ பாக்கெட்டை எடுப்பதில் தொடங்கும் இந்த வீடியோ, விறுவிறுப்பான 'பார்கூர்' (Parkour) சாகசத் துரத்தலாக மாறுகிறது. 'மைண்ட் யுவர் லாங்குவேஜ்!' (MYL) நிறுவனம் தயாரித்துள்ள இந்த ஆக்ஷன் காட்சிகள், தங்களுக்குப் பிடித்த நொறுக்குத்தீனிக்காக மக்கள் எந்த எல்லைக்கும் செல்வார்கள் என்பதை சுவாரஸ்யமாகக் காட்டுகிறது.
அமன் குப்தா, மார்க்கெட்டிங் தலைவர், ஃபார்ம்லி: "நுகர்வோர்கள் உள்ளூர் சுவையையும் ஆரோக்கியத்தையும் விரும்புகிறார்கள். முக்கிய சந்தையான தமிழ்நாட்டு வாடிக்கையாளர்களின் மனதிற்கு நெருக்கமாக இந்த விளம்பரம் இருக்க விரும்பினோம். இளையராஜாவின் அசல் இசையும், தெரு சாகசங்களும் இன்றைய இளைஞர்களை எளிதில் சென்றடையும்."
தீபன் ராமச்சந்திரன், நிறுவனர், MYL: "மக்கா ஷக்கா என்பது இளமைத் துடிப்பு நிறைந்த ஒரு தனி 'வைப்'. பிராண்ட் பெயரின் ஒலியிலிருந்தே இந்த யோசனை கிடைத்தது. ட்ரெண்டான பார்கூர் சாகசங்களையும், இளையராஜாவின் என்றும் அழியாத இசையையும் இணைத்து இந்த அற்புதமான விளம்பரத்தை உருவாக்கியுள்ளோம்."
இந்த விளம்பரம் 'ஜென் சீ' மற்றும் 'மில்லினியல்' இளைஞர்களைக் கவரும் வகையில், தயாரிப்பின் ஆரோக்கிய நன்மைகளையும் விளக்குகிறது:
• வறுத்த முறை: எண்ணெயில் பொறிக்கப்படாதது.
• பாம் ஆயில் இல்லாதது: உடலுக்கு தீங்கு விளைவிக்காது.
• மக்கானா மாவு: தாமரை விதை மாவைக் கொண்டு தயாரிக்கப்பட்டது.
இவ்விளம்பரம் யூடியூப், மெட்டா, கூகுள் மற்றும் OTT தளங்களிலும், ஸ்டார் விஜய், சன் மியூசிக், கேடிவி உள்ளிட்ட முன்னணி தமிழ் தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்பாகிறது. 25,000-க்கும் மேற்பட்ட கடைகள் மூலம் ஃபார்ம்லி நிறுவனம் தமிழக சந்தையில் தனது வினியோகத்தை விரிவுபடுத்தி வருகிறது.
ஃபார்ம்லி நிறுவனம் குறித்து:
உலர் பழங்களின் நன்மைகளை அடிப்படையாகக் கொண்டு, ஸ்நாக்ஸ் சாப்பிடுவதை மிகவும் ஆரோக்கியமானதாகவும், அதேசமயம் சுவையானதாகவும் மாற்றுவதே ஃபார்ம்லியின் முக்கிய நோக்கமாகும். இன்றைய காலகட்டத்தில், ஆரோக்கியமான, ஆனால் சுவையற்ற தின்பண்டங்களைச் சாப்பிடுவதா? அல்லது சுவையான, ஆனால் ஆரோக்கியமற்ற தின்பண்டங்களைச் சாப்பிடுவதா? என்ற குழப்பம் வாடிக்கையாளர்கள் மத்தியில் நிலவுகிறது. இந்த நிலையை மாற்றி, மக்கள் எந்தவித குற்றவுணர்ச்சியும் இன்றி ஆரோக்கியமான மற்றும் சுவையான ஸ்நாக்ஸ் வகைகளை ரசித்துச் சாப்பிட வேண்டும் என்பதே எங்களின் இலக்கு. உலர் பழங்கள் மற்றும் நட்ஸ்களைப் புதிய சுவைகளிலும், புதுமையான வடிவங்களிலும் ஃபார்ம்லி வழங்கி வருகிறது. நாங்கள் வழங்கும் வறுத்த பெரி பெரி மக்கானா, தாய் சில்லி முந்திரி மற்றும் சுவையான டேட் பைட்ஸ் ஆகியவை நாடு முழுவதும் உள்ள மக்களை கவர்ந்து அவர்களின் மனதில் ஆழமான இடம்பிடித்திருக்கின்றன.
நேரடியான சிறந்த கொள்முதல் முறைகள், சொந்த உற்பத்தி ஆலைகள் மற்றும் புதுமையான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பிரிவு (R&D) ஆகியவற்றின் மூலமாக, ஒவ்வொரு முறை சாப்பிடும்போதும் ஆரோக்கியமும், சுவையும் நிறைந்த தனித்துவமான தயாரிப்புகளை வாடிக்கையாளர்களுக்காக எங்களால் உருவாக்க முடிகிறது. இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட்டின் ஆதரவைப் பெற்றுள்ள ஃபார்ம்லி நிறுவனம், தற்போது புதிய தலைமுறையினரால் அதிகம் விரும்பப்படும் ஆரோக்கியமான ஸ்நாக்ஸ் பிராண்டாக உருவெடுத்து வருகிறது.
