அப்போலோ மருத்துவமனை நாள்பட்ட கணைய அழற்சி நோயாளிக்கு சிக்கலான ரோபோடிக் கணைய அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து முடித்துள்ளது
தேனாம்பேட்டை அப்போலோ ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்ட முதல் ரோபோடிக் ஃபிரேஸ் (Frey’s) அறுவை சிகிச்சை, குறைந்தபட்ச ஊடுருவும் (Minimally Invasive) தொழில்நுட்பத்தின் மூலம் சிக்கலான கணைய (Pancreatic) நோய்களை சிகிச்சையளிப்பதில் மருத்துவமனையின் மேம்பட்ட நிபுணத்துவத்தையும் தொழில்நுட்ப திறனையும் வெளிப்படுத்துகிறது.
சென்னை, 16 ஜூன் 2026: தேனாம்பேட்டையில் உள்ள அப்போலோ ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை, நாள்பட்ட கால்சிஃபிக் (கால்சியம் படிந்த) கணைய அழற்சியால் பாதிக்கப்பட்ட 39 வயது நோயாளிக்கு தனது முதல் ரோபோடிக் ஃபிரேஸ் (Frey's) செயல்முறையை வெற்றிகரமாகச் செய்து முடித்துள்ளது. இது மருத்துவமனையின் ரோபோடிக் கணைய அறுவை சிகிச்சை திட்டத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல் ஆகும். டா வின்சி எக்ஸ்ஐ ரோபோடிக் அறுவை சிகிச்சை முறையை (da Vinci Xi Robotic Surgical System) பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட இந்த அறுவை சிகிச்சை, சிக்கலான கணையக் கோளாறுகளைக் கையாள்வதில் ரோபோடிக் தொழில்நுட்பத்தின் பங்கினை விரிவுபடுத்துவதுடன், அதிநவீன இரைப்பைக் குடல் மற்றும் கல்லீரல்-கணைய-பித்தப்பை (HPB) அறுவை சிகிச்சையில் மருத்துவமனையின் வளர்ந்து வரும் நிபுணத்துவத்தை மேலும் வலுப்படுத்துகிறது.
இந்த நோயாளி கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக மீண்டும் மீண்டும் கடுமையான வயிற்று வலி மற்றும் பலமுறை கணைய அழற்சி பாதிப்புகளை எதிர்கொண்டிருந்தார். மருத்துவப் பரிசோதனையில், அவருக்கு கணையக் குழாய் கற்களுடன் கூடிய நாள்பட்ட கால்சிஃபிக் கணைய அழற்சி இருப்பது கண்டறியப்பட்டது. இந்த நிலை ஒருவரின் வாழ்க்கைத் தரத்தை கணிசமாகப் பாதிக்கக்கூடியது மேலும் இதற்கு பெரும்பாலும் சிறப்பு அறுவை சிகிச்சை தலையீடு தேவைப்படுகிறது. அறுவை சிகிச்சையைத் தொடர்ந்து, நோயாளிக்கு எந்தவிதமான சிக்கல்களும் இன்றி உடல்நலம் சீரடைந்தது. அவர் மீண்டும் வழக்கமான உணவை உட்கொள்ளத் தொடங்கினார், மேலும் அவரது உடல்நிலை சீராக இருந்ததால் அவர் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார்.
டா வின்சி ரோபோடிக் அறுவை சிகிச்சை முறையைப் பயன்படுத்தி, சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அப்போலோ ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் அறுவை சிகிச்சை இரைப்பை குடலியல் மற்றும் குறைந்தபட்ச ஊடுருவக்கூடிய அறுவை சிகிச்சை பிரிவின் சீனியர் கன்சல்டன்ட் மற்றும் கிளினிக்கல் லீட் டாக்டர் எஸ். ஸ்ரீவத்சன் குருமூர்த்தி அவர்கள் தலைமையிலான குழுவினர் இந்த அறுவை சிகிச்சையை மேற்கொண்டனர்.
ஃபிரேஸ் செயல்முறையானது, கணையத்தின் தலைப் பகுதியைச் சீரமைப்பதோடு லாங்கிடுடினல் பான்க்ரியாடோஜெஜுனோஸ்டமி (longitudinal pancreaticojejunostomy) எனப்படும் கணைய-குடல் இணைப்பு முறையையும் ஒருங்கிணைத்து செய்யப்படுவதாகும். இது கணைய நீர் தடையின்றி வெளியேறுவதை மேம்படுத்தவும், வலியைப் போக்கவும், கற்கள் மற்றும் நாள்பட்ட அழற்சியினால் ஏற்படும் அடைப்புகளைச் சரிசெய்யவும், நோயாளியின் நீண்டகால வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. இந்த அறுவை சிகிச்சை முறை மிகவும் பிரத்யேகமானது மற்றும் சிக்கலானது என்றாலும், இதனை ரோபோடிக் தொழில்நுட்பம் மூலம் வெற்றிகரமாகச் செய்வது குறைந்தபட்ச ஊடுருவக்கூடிய கணைய அறுவை சிகிச்சை துறையில் ஒரு முக்கியமான முன்னேற்றத்தைக் குறிக்கிறது.
கணைய அறுவை சிகிச்சை என்பது இரைப்பை குடல் அறுவை சிகிச்சை பிரிவிலேயே மிகவும் நுட்பமான மற்றும் சவாலான பகுதிகளில் ஒன்றாகும். இதற்கு மிகத் துல்லியமான பிரித்தெடுத்தல், அதிநவீன மறுகட்டமைப்பு நுட்பங்கள், சிறந்த கையாளுமைத் திறன் மற்றும் மென்மையான கணைய திசுக்களை மிகக் கவனமாகக் கையாளுதல் ஆகியவை அவசியமாகும். அப்போலோ மருத்துவமனையின் முதல் ரோபோடிக் ஃபிரேஸ் செயல்முறை வெற்றிகரமாக முடிவடைந்திருப்பது, சிக்கலான கணையக் கோளாறுகளைக் கையாள்வதில் ரோபோடிக் தொழில்நுட்பத்தின் வளர்ந்து வரும் பயன்பாட்டைப் பிரதிபலிக்கிறது. மேலும் இது மருத்துவமனையின் ரோபோடிக் இரைப்பைக் குடல் மற்றும் கல்லீரல்-கணைய-பித்தப்பை (HPB) அறுவை சிகிச்சை திட்டத்தை மேலும் வலுப்படுத்துகிறது.
இந்த மைல்கல் குறித்து, சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அப்போலோ ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் Senior Consultant & Clinical Lead, Surgical Gastroenterology & Minimal Access Surgery, டாக்டர் எஸ். ஸ்ரீவத்சன் குருமூர்த்தி அவர்கள் இவ்வாறு கூறினார், "நாள்பட்ட கால்சிஃபிக் கணைய அழற்சியானது, மீண்டும் மீண்டும் ஏற்படும் வலி மேலும் தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிப்பது ஆகியவை ஒரு நோயாளியின் வாழ்க்கைத் தரத்தை கணிசமாகப் பாதிக்கும். எங்களது முதல் ரோபோடிக் ஃபிரேஸ் செயல்முறையை மேற்கொண்டது, எங்களின் ரோபோடிக் கணைய அறுவை சிகிச்சை திட்டத்தில் ஒரு முக்கியமான முன்னேற்றத்தைக் குறிக்கிறது. ரோபோடிக் தளம் வழங்கும் துல்லியத்தன்மை, மிக நுட்பமான பிரித்தெடுத்தல் மற்றும் மறுகட்டமைப்புக்கு வழிவகுக்கிறது, இது குறைந்தபட்ச ஊடுருவக்கூடிய நுட்பங்களுடன் சிக்கலான கணைய பாதிப்புகளைக் கையாள எங்களுக்கு உதவுகிறது."
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அப்போலோ ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் CEO திரு. கரண் பூரி அவர்கள் மேலும் கூறியதாவது, "இந்த சாதனை மருத்துவச் சிறப்பு, புதுமைகள் மற்றும் சிக்கலான அறுவை சிகிச்சை முறைகளுக்கான மேம்பட்ட ரோபோடிக் தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதில் தேனாம்பேட்டையில் உள்ள அப்போலோ மருத்துமனையின் உறுதிப்பாட்டைப் பிரதிபலிக்கிறது. ரோபோடிக் அறுவை சிகிச்சையில் எங்களது தொடர்ச்சியான முதலீடு, சவாலான இரைப்பை குடல் மற்றும் கணைய நோய்களால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கான சிகிச்சை சாத்தியங்களை விரிவுபடுத்த எங்களை அனுமதிக்கிறது."
இந்த மைல்கல் சாதனை, அதிநவீன ரோபோடிக் இரைப்பை குடல் மற்றும் கணைய அறுவை சிகிச்சையில் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அப்போலோ ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் திறன்களை மேலும் வலுப்படுத்துகிறது. மேலும் இது சிக்கலான, குறைந்தபட்ச ஊடுருவக்கூடிய அறுவை சிகிச்சை பராமரிப்பை விரிவுபடுத்துவதில் அப்போலோ மருத்துவமனையின் தொடர்ச்சியான கவனத்தை பிரதிபலிக்கிறது. ரோபோடிக் தொழில்நுட்பம் தொடர்ந்து வளர்ச்சியடைந்து வருவதால், கணைய அறுவை சிகிச்சை போன்ற மிகவும் பிரத்யேகமான செயல்முறைகளில் அதன் பயன்பாடு, சவாலான இரைப்பை குடல் கோளாறுகள் உள்ள நோயாளிகளுக்கான சிகிச்சை சாத்தியங்களை பரந்ததாக்க உதவுகிறது.
About Apollo Hospitals:
Apollo revolutionised healthcare when Dr. Prathap Reddy opened the first hospital in Chennai in 1983. Today, Apollo is the world’s largest integrated healthcare platform with over 10,400 beds across 76 hospitals, 6,600+ pharmacies, 264 clinics, 2,182 diagnostic centres, and 800+ telemedicine centres. It is one of the world’s leading cardiac centers, having performed over 3,00,000 angioplasties and 2,00,000 surgeries. Apollo continues to invest in research and innovation to bring the most cutting-edge technologies, equipment, and treatment protocols to ensure patients have access to the best care in the world. Apollo’s 1,20,000 family members are dedicated to delivering exceptional care and leaving the world better than we found it.