கரூர் மாநகரில் விபிஜே ஆபரண நிறுவனத்தின் பிரத்யேக நகைக் கண்காட்சி தங்க, வைர மற்றும் சாலிட்டெர் நகைகளின் தேர்ந்தெடுத்த கலெக்ஷன்கள் இடம்பெறுகின்றன
கரூர், 4 ஜூன் 2026: இந்தியாவின் பாரம்பரியமான மற்றும் மக்களின் அதிக நம்பிக்கை பெற்ற நகை நிறுவனமான விபிஜே, VBJ, (வும்மிடி பங்காரு ஜுவல்லர்ஸ்), ஜூன் 5 மற்றும் 6 ஆம் தேதி, ஒரு பிரத்யேக நகைக் கண்காட்சியை கரூர் நகரில் நடத்தவிருக்கிறது. இக்கண்காட்சி, போலீஸ் லேன் தெருவில் உள்ள ஹோட்டல் ஹேமலா வளாகத்தில், ஹீமாஞ்சலி ஹால், முதல் தளத்தில் நடைபெறுகிறது. கரூர் மக்களின் அமோக ஆதரவையும் மற்றும் தொடர்ச்சியான வரவேற்பையும் கடந்த சில ஆண்டுகளாக நடத்தப்படும் தனது ஆபரண கண்காட்சிகளுக்காக விபிஜே பெற்றிருக்கிறது. அதன் சமீபத்திய, நவீன கலைநயமிக்க ஆபரண கலெக்ஷன்களை கரூர் மக்கள் நேரில் பார்வையிட்டு, விரும்பியதை வாங்கி மகிழ வேண்டுமென்ற நோக்கத்திற்காக இந்த ஆண்டும் இக்கண்காட்சியை விபிஜே நடத்துகிறது.
மூன்று நாட்கள் நடைபெறும் இந்த கண்காட்சியில், மணப்பெண்ணுக்கான தங்க நகைகள், வைர நகைகள், நெக்லஸ்கள், வளையல்கள், கம்மல்கள், மோதிரங்கள், செயின்கள், நவரத்தினங்கள் மற்றும் சாலிட்டெர் நகைகள் என பல வகையான கலைநயம் மிக்க, தரமான நகைகள் காட்சிப்படுத்தப்படுகின்றன. இவை ஒவ்வொன்றும் விபிஜே நிறுவனத்தின் பாரம்பரிய வடிவமைப்பிற்கும் மற்றும் நுட்பமான கைவினைத்திறனுக்கும் நேர்த்தியான சான்றாக விளங்குகின்றன.
இந்த கண்காட்சி குறித்து விபிஜே நிறுவனத்தின் நிர்வாகப் இயக்குநர் திரு. அமரேந்திரன் வும்மிடி கூறுகையில், "கரூர் வாடிக்கையாளர்கள் எங்கள் மீது வைத்துள்ள அன்பும் நம்பிக்கையும் எப்போதும் எங்களுக்கு மிகவும் தனிச்சிறப்பானது. இந்த நீடித்த நல்லுறவே எங்களை மீண்டும் இந்த நகரத்திற்கு அழைத்து வந்திருக்கிறது. பாரம்பரியம் மற்றும் வடிவமைப்பில் மாறிவரும் நவீன ரசனைகளுக்கேற்ப நேர்த்தியான கைவினைத்திறனுடன் வடிவமைக்கப்பட்ட எங்களின் சிறந்த நகைகளை இந்த கண்காட்சி மூலம் கரூர்வாழ் மக்களுக்கு வழங்குவதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்" என்றார்.
மற்றொரு நிர்வாகப் இயக்குநர் திரு. ஜித்தேந்திரா வும்மிடி பேசுகையில், "இன்றைய வாடிக்கையாளர்கள் தனித்துவமான வடிவமைப்புடன், அணிவதற்கு எளிதான மற்றும் பல்வேறு தருணங்களிலும் அணிவதற்குப் பொருத்தமான நகைகளையே அதிகம் விரும்புகிறார்கள். இவர்களின் விருப்பங்களை மனதில் வைத்தே கரூர் நகரில் நாங்கள் நடத்தும் இந்த கண்காட்சிக்காக நகைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இதில் பாரம்பரிய மணப்பெண் நகைகள் முதல் தினசரி மற்றும் சுபவிசேஷங்களுக்கு அணியக்கூடிய நவீன நகைகள் வரை பல புதுமையான வடிவமைப்புகள் இடம்பெற்றுள்ளன" என்று பகிர்ந்து கொண்டார்.
ஐந்து தலைமுறைகளாக இயங்கி வரும் ஒரு குடும்ப பிராண்டான விபிஜே, இந்தியாவின் ஜனநாயகப் பயணத்தின் புனித அடையாளமான வரலாற்றுச் சிறப்புமிக்க செங்கோலை தயாரித்து வழங்கியவர்கள் என்ற பெருமையைக் கொண்டுள்ளது. விபிஜே குழுவினரின் நுணுக்கமான தேடலின் மூலம் 72 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கண்டுபிடிக்கப்பட்ட இந்தச் செங்கோல், இந்தியாவின் புதிய நாடாளுமன்றக் கட்டடமான சன்சத் பவனில் சபாநாயகர் இருக்கைக்கு அருகில் மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் நிறுவப்பட்டது. இந்தியாவின் கலாச்சார மற்றும் தேசிய பாரம்பரியத்துடன் விபிஜே-க்கு உள்ள நீடித்த பிணைப்பிற்கு எடுத்துக்காட்டாக இது திகழ்கிறது. இந்த செழுமையான பாரம்பரியத்தைத் தொடரும் நோக்கத்தோடு இப்போது கோயம்புத்தூர் 100 அடி சாலையில் தனது மிகப்பெரிய நகை ஷோரூமைத் திறக்க விபிஜே தயாராகி வருகிறது.
வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப நகைகளை வடிவமைப்பதிலும், 125 ஆண்டுகளுக்கும் மேலான பாரம்பரியத்தோடு, மக்களின் ஆழமான நம்பிக்கையைப் பெற்றிருக்கும் விபிஜே, தமிழகம் முழுவதும் உள்ள வாடிக்கையாளர்களுடன் தனது பிணைப்பைத் தொடர்ந்து பலப்படுத்தி வருகிறது. இந்த நகைக் கண்காட்சி மூன்று நாட்களும் காலை 11 மணி முதல் இரவு 8 மணி வரை பொதுமக்களுக்காக நடைபெறுகிறது.
About VBJ, Vummidi Bangaru Jewellers
VBJ, Vummidi Bangaru Jewellers is one of South India’s most trusted fine jewellery brands, offering exceptional value, diverse choices, and unmatched quality across diamond, gold, and silver jewellery. Established in 1900, VBJ has earned the trust of over five generations and continues to be a name synonymous with heritage and craftsmanship. With two flagship stores in Chennai (Anna Salai and Anna Nagar) and a global presence through its Dallas showroom opened in October 2023, VBJ blends legacy with modernity to serve a wide range of jewellery connoisseurs. VBJ’s digital presence through www.vummidi.com allows patrons to explore elaborate collections online, while its dedicated silverware vertical www.vbjsilver.com, showcases masterful creations crafted from pure silver. The brand also boasts an in-house Creative Center and state-of-the-art manufacturing facility, enabling the design and production of timeless, original pieces that reflect both artistic finesse and generational expertise.

