மேட்டுப்பாளையத்தில் முதல் முறையாக பிரத்யேக நகைக் கண்காட்சியை நடத்தும் விபிஜே மேட்டுப்பாளையம், ஜூன் 18, 2026: இந்தியாவின் நம்பிக்கைக்குரிய பாரம்பரிய நகை நிறுவனமான விபிஜே, VBJ, (வும்மிடி பங்காரு ஜுவல்லர்ஸ்), தனது முதல் பிரத்யேக நகைக் கண்காட்சியை ஜூன் 19 & 20 ஆகிய தேதிகளில் மேட்டுப்பாளையம், ஹோட்டல் EMS மயூராவில் நடத்துகிறது.
இந்த இரண்டு நாள் கண்காட்சியில் தங்கம், வைரம், சாலிட்டையர் நகைகள், மணப்பெண் கலெக்ஷன்கள், நெக்லஸ், வளையல்கள், மோதிரங்கள், காதணிகள், நவீன வடிவமைப்புகள் இடம்பெறுகின்றன.
விபிஜே நிறுவனத்தின் நிர்வாகப் இயக்குநர் அமரேந்திரன் வும்மிடி கூறுகையில், “மேட்டுப்பாளையத்தில் முதன்முறையாக VBJ அனுபவத்தை கொண்டு வருவதில் மகிழ்ச்சி அடைகிறோம். எங்கள் பாரம்பரியமும் தரமான சேவையும் இப்பகுதி வாடிக்கையாளர்களை சென்றடையும் என்பதில் நம்பிக்கை உள்ளது” என்றார்.
மற்றொரு நிர்வாகப் இயக்குநர் ஜிதேந்திர வும்மிடி கூறுகையில், “பாரம்பரியமும் நவீனமும் இணைந்த, பல்வேறு தேவைகளுக்கு ஏற்ற நகைகளை வாடிக்கையாளர்களுக்காக தேர்வு செய்துள்ளோம்” என்றார்.
125 ஆண்டுகால பாரம்பரியத்தை தொடர்ந்து, கோயம்புத்தூர் 100 அடி சாலையில் தனது மிகப்பெரிய நகை ஷோரூமைத் திறக்க விபிஜே தயாராகி வருகிறது. இந்தக் கண்காட்சியின் மூலம் தனது தனித்துவமான நகை அனுபவத்தை மேலும் பலரிடம் கொண்டு செல்கிறது. இந்த நகைக் கண்காட்சி இரண்டு நாட்களும் காலை 11 மணி முதல் இரவு 8 மணி வரை பொதுமக்களுக்காக நடைபெறுகிறது.
About VBJ, Vummidi Bangaru Jewellers
VBJ, Vummidi Bangaru Jewellers is one of South India’s most trusted fine jewellery brands, offering exceptional value, diverse choices, and unmatched quality across diamond, gold, and silver jewellery. Established in 1900, VBJ has earned the trust of over five generations and continues to be a name synonymous with heritage and craftsmanship. With two flagship stores in Chennai (Anna Salai and Anna Nagar) and a global presence through its Dallas showroom opened in October 2023, VBJ blends legacy with modernity to serve a wide range of jewellery connoisseurs. VBJ’s digital presence through www.vummidi.com allows patrons to explore elaborate collections online, while its dedicated silverware vertical www.vbjsilver.com, showcases masterful creations crafted from pure silver. The brand also boasts an in-house Creative Center and state-of-the-art manufacturing facility, enabling the design and production of timeless, original pieces that reflect both artistic finesse and generational expertise.

