Wednesday, May 13, 2026

Berger Paints India Limited. 31 மார்ச், 2026 அன்று முடிவடைந்த காலாண்டு மற்றும் நிதியாண்டிற்கான நிதி முடிவுகள்

Berger Paints India Limited, CHENNAI, 31  மார்ச், 2026 அன்று முடிவடைந்த காலாண்டு மற்றும் நிதியாண்டிற்கான நிதி முடிவுகள்

Q4-FY26 தனிப்பட்ட  செயல்பாட்டுத்திறனின் சிறப்பம்சங்கள்

சவாலான சந்தை நிலைகளுக்கு மத்தியிலும் விற்பனை அளவு வளர்ச்சி  11.8% வளர்ச்சியை எட்டியுள்ளது.

கடந்த 10 காலாண்டுகளில் இல்லாத மிக உயர்ந்த மொத்த லாப வரம்பு (42.3%) மற்றும் EBIDTA லாப வரம்(18.3%) எட்டப்பட்டுள்ளது.

செயல்பாட்டு லாபம் கடந்த  ஆண்டை விட 17.8% அதிகரித்துள்ளது மற்றும் வரிக்குப் பிந்தைய இலாபம் கடந்த ஆண்டை விட 38.1% (YOY)  அதிகரித்துள்ளது.

ஒருங்கிணைந்த காலாண்டு முடிவுகளின் முக்கிய அம்சங்கள்:

a) 31  மார்ச் 2026 அன்று முடிவடைந்த காலாண்திற்கான செயல்பாடு வருவாய் ரூ. 2,868.0 கோடி ஆகும்.  இது கடந்த நிதியாண்டின் இதே காலாண்டில் இதே காலாண்டில் ரூ. 2,704.0 கோடியுடன் ஒப்பிடுகையில் 6.1% வளர்ச்சியாகும்.

b) 31  மார்ச் 2026 அன்று முடிவடைந்த காலாண்டிற்கான EBIDTA (இதர வருமானம் நீங்கலாக) கடந்த நிதியாண்டின் இதே காலாண்டில் இருந்த ரூ. 427.8 கோடியுடன் ஒப்பிடுகையில், 12.6% அதிகரிப்பைக் குறிக்கும் வகையில் ரூ. 481.7  கோடியாக இருந்தது.

c) 31  மார்ச் 2026 அன்று முடிவடைந்த காலாண்டிற்கான நிகர லாபம் ரூ. 335.3 கோடி ஆகும். இது கடந்த நிதியாண்டின் இதே காலாண்டில் ஈடுப்பட்ட ரூ. 262.9  கோடியுடன் ஒப்பிடுகையில் 27.5% வளர்ச்சியாகும். 

தனிப்பட்ட காலாண்டு முடிவுகளின் முக்கிய அம்சங்கள்:

a) 31  மார்ச் 2026 அன்று முடிவடைந்த காலாண்டில் செயல்பாடு வருவாய் ரூ. 2,504.0 கோடி ஆகும். இது கடந்த நிதியாண்டின் இதே காலாண்டில் ஈடுப்பட்ட ரூ. 2,347.5 கோடியுடன் ஒப்பிடுகையில் 6.7% வளர்ச்சியாகும். 

b) 31  மார்ச் 2026 அன்று முடிவடைந்த காலாண்டிற்கான EBIDTA (இதர வருமானம் நீங்கலாக) ரூ. 458.7 கோடி ஆகும். இது கடந்த நிதியாண்டின் இதே காலாண்டில் ஈடுப்பட்ட ரூ. 389.5 கோடியுடன் ஒப்பிடுகையில்  17.8% வளர்ச்சியாகும்.

c) 31  மார்ச் 2026 அன்று முடிவடைந்த காலாண்டிற்கான நிகர லாபம்ரூ. 327.3 கோடி ஆகும். இது கடந்த நிதியாண்டின் இதே காலாண்டில் ஈடுப்பட்ட ரூ. 236.9 கோடியுடன் ஒப்பிடுகையில் 38.1% வளர்ச்சியாகும்.

ஒருங்கிணைந்த ஆண்டு முடிவுகளின் முக்கிய அம்சங்கள்:

a) 31 மார்ச் 2026 அன்று முடிவடைந்த நிதியாண்டில் செயல்பாட்டு வருவாய் ரூ. 11,880.3 கோடி ஆகும். இது கடந்த நிதியாண்டில் ஈடுப்பட்ட ரூ. 11,544.7 கோடியுடன் ஒப்பிடுகையில்  2.9% வளர்ச்சியாகும். 

b) 31  மார்ச் 2026 அன்று முடிவடைந்த ஆண்டிற்கான நிதியாண்டிற்கான EBIDTA (இதர வருமானம் நீங்கலாக) ரூ. 1,833.3 கோடி ஆகும். இது கடந்த நிதியாண்டில் ஈட்டப்பட்ட ரூ. 1856.1 கொடியுடன் ஒப்பிடுகையில்  1.2% வீழ்ச்சியாகும்.

c) 31  மார்ச் 2026 அன்று முடிவடைந்த நிதியாண்டிற்கான  நிகர லாபம் ரூ. 1,128.0 கோடியாகும். இது கடந்த நிதியாண்டின் ஈட்டப்பட்ட ரூ. 1,182.8 கோடியுடன் ஒப்பிடுகையில், 4.6% சரிவைக் குறிக்கிறது.

தனிப்பட்ட ஆண்டு முடிவுகளின் முக்கிய அம்சங்கள்:

a) 31 மார்ச் 2026 அன்று முடிவடைந்த நிதியாண்டில் செயல்பாட்டு வருவாய் ரூ. 10,420.1 கோடி ஆகும். இது கடந்த நிதியாண்டில் ஈட்டப்பட்ட ரூ. 10,169.2 கோடியுடன் ஒப்பிடுகையில் 2.5% வளர்ச்சியாகும். 

b) 31  மார்ச் 2026 அன்று முடிவடைந்த நிதியாண்டிற்கான EBIDTA (இதர வருமானம் நீங்கலாக)ரூ. 1,686.6 கோடி ஆகும். இது கடந்த நிதியாண்டில்  ஈட்டப்பட்ட ரூ. 1,674.1 கோடி ஒப்பிடுகையில்  0.7% அதிகரித்துள்ளது. 

c) 31  மார்ச் 2026 அன்று முடிவடைந்த நிதியாண்டிற்கான நிகர லாபம் ரூ. 1095.7 கோடி ஆகும். இது கடந்த நிதியாண்டின்  ஈட்டப்பட்ட 1.7% அதிகரிப்பைக் குறிக்கிறது.

31  மார்ச் 2026 அன்று முடிவடைந்த நிதியாண்டிற்கு, தலா ரூ. 1/- முகமதிப்புள்ள ஒவ்வொரு ஈக்விட்டி பங்கிற்கும் ரூ. 4.00 (400%) ஈவுத்தொகை வழங்க வாரியம் பரிந்துரைத்தது.

“முந்தைய காலாண்டில் காணப்பட்ட படிப்படியான தேவை மேம்பாடு, நான்காவது காலாண்டிலும் தொடர்ந்தது. இது அக்காலண்டின் 11.8% என்ற ஆரோக்கியமான விற்பனை அளவு வளர்ச்சியை அடைய முடிந்தது. தயாரிப்பு கலவையில் ஏற்பட்ட தரமான முன்னேற்றம் மற்றும் மூலப்பொருட்களின் விலைக் குறைவு ஆகியவற்றால் இந்த வளர்ச்சி ஆதரிக்கப்பட்டது. இதன் விளைவாக, கடந்த 10 காலாண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகபட்ச மொத்த லாப வரம்பு மற்றும் செயல்ப்பாட்டு லாப வரம்பு எட்டப்பட்டது.

எங்களது முக்கிய கவனப் பிரிவுகளான நீர்ப்புகாப்பு, கட்டுமான இரசாயனங்கள் மற்றும் மரப் பூச்சுகள் ஆகியவற்றில் நாங்கள் தொடர்ந்து ஆரோக்கியமான மற்றும் வலுவான வளர்ச்சியைப் பதிவு செய்து வருகிறோம். பிரீமியம் எமல்ஷன் பிரிவில் நாங்கள் புதிதாக அறிமுகப்படுத்திய “Kolor Plus” - தயாரிப்பிற்கு சந்தையில் கிடைத்துள்ள  சாதகமான வரவேற்பு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. குறைந்த சந்தைப் பங்குள்ள நகர்ப்புற சந்தைகளில் எங்களின் வலையமைப்பு விரிவாக்கம் மற்றும் வளர்ச்சியை மேம்படுத்துவதற்கான முயற்சிகள் மாதம் தோறும் நேர்மறையான முன்னேற்றத்தைக் காட்டி வருகின்றது. இது வரும் காலங்களில் இன்னும் சிறந்த முடிவுகளைப் பெறுவோம் என்ற நம்பிக்கையை எங்களுக்கு அளிக்கிறது” 

GST வரிகுறைப்பு மற்றும் குறைந்த நிதிச் செலவுகள் காரணமாக வாகனப் பிரிவு சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்துகிறது. இதைத் தொடர்ந்து, பொதுத் தொழில் துறையும் நல்ல வளர்ச்சியைப் பெற்றது. பாதுகாப்பு மற்றும் பவுடர் கோட்டிங் பிரிவுகள் மாதந்தோறும் முன்னேற்றத்தைப் பதிவுசெய்தன. இது காலாண்டின் இறுதியில் வளர்ச்சி நிலைகளில் மீண்டுவருவதைக் குறிக்கிறது.

எங்களின் துணை நிறுவனங்கள் மற்றும் கூட்டு நிறுவனங்களான, Bolix SA,  Berger Becker Coatings, Berger Nippon மற்றும் Berger Rock ஆகியவை மொத்த வருவாய் மற்றும் செயல்பாட்டு இலாபம் ஆகிய இரண்டிலும் வலுவான இரட்டை இலக்க வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளன. SBL Specialty Coatings Private Limited நிறுவனம் இந்தக் காலாண்டில் மிதமான வருவாய் மற்றும் இலாப வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

நேபாளத்தில் நிலவிய அரசியல்  ஸ்திரமற்ற தன்மை  மற்றும் தேர்தல்களால் அங்குள்ள எங்களது செயல்பாடுகள் பாதிக்கப்பட்டன.  தற்போது மாறியுள்ள சூழலால் இது இனி மேம்படும் என்று  எதிர்பார்க்கப்படுகிறது. எஸ்.டி.பி லிமிடெட்டின் மொத்த வருவாய் பாதிக்கப்பட்டதால், அதன் செயல்பாட்டு லாபமும் மந்தமாகவே  இருந்தது.

பல்வேறு பிரிவுகள் மற்றும் சந்தைகளில் உள்நாட்டுத் தேவைக் குறிகாட்டிகளில் ஏற்படும் படிப்படியான முன்னேற்றம், தேவையில் ஏற்படும் தொடர்ச்சியான மாதாந்திர உயர்வு ஆகியவை சாதகமான அறிகுறிகளாகும். வரும் மாதங்களின் வெளிவரும் முடிவுகள் இந்த மாற்றங்களைப் பிரதிபலிக்கும் என்று  எதிர்பார்க்கப்படுகிறது. மார்ச் 26 இறுதி முதல் படிப்படியாகத் தொடங்கப்பட்ட  11%-க்கும் அதிகமான விலை உயர்வு, மூலப்பொருட்களின் விலை உயர்வுக்கிடையிலும் மொத்த லாப வரம்பை தக்கவைக்க உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அந்நியச் செலாவணி ஏற்ற இறக்கமும் புவிசார் அரசியல் நிச்சயமற்ற தன்மையும், விநியோகத் தடைகள் மற்றும் மூலப்பொருள் பணவீக்கம் ஆகியவற்றின் மூலம் குறுகிய கால லாப வரம்பு அபாயங்களைத் தொடர்ந்து ஏற்படுத்துகின்றன.

"Berger Paintsஸில் எங்கள் முயற்சிகள் நெட்வொர்க் விரிவாக்கம், தயாரிப்பு மற்றும் சேவை கண்டுபுடிப்புகள் மற்றும்பிரான்ட் உருவாக்கம் ஆகியவற்றில் தொடர்ந்து கவனம் செலுத்தும். இவை முதலீட்டாளர்கள் மற்றும் பங்குதாரர்களுக்கான மதிப்பை மேம்படுத்தும் நோக்கில் கொண்டவை, " என்று  Berger Paints India Limitedடின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி அபிஜித் ராய் கூறினார்.