VBJ அண்ணா சாலையில் புதிய ஃபிளாக்ஷிப் ஷோரூமை திறந்துள்ளது
(தற்போதைய ஷோரூமிற்கு அருகில்)
சென்னை, 30 ஏப்ரல் 2026: இந்தியாவின் மிகவும் நம்பகமான பாரம்பரிய நகை பிராண்டான விபிஜே, VBJ, (வும்மிடி பங்காரு ஜுவல்லர்ஸ்), சென்னை அண்ணா சாலையில் தனது புதிய ஃபிளாக்ஷிப் ஷோரூமை திறந்துள்ளது. அதன் தற்போதய ஷோரூமிற்கு அருகில் அமைந்துள்ள இந்த புதிய கடை, 125 ஆண்டுகளைக் கடந்த இந்த பிராண்டின் பயணத்தில் ஒரு முக்கியமான கட்டமாகும். மேலும், சென்னையுடன் VBJ கொண்டுள்ள நீண்டநாள் உறவை இது வலுப்படுத்துகிறது.
குறிப்பாக, சென்னை நகரின் முக்கியமான சாலைகளில் ஒன்றான அண்ணா சாலையில் இவ்வகையான பெரிய நகைக் கடை இதுவே ஒன்றாகும்.
14,000 சதுர அடி (sq.ft) பரப்பளவில் அமைந்துள்ள இந்த புதிய ஷோரூம் பலதள கட்டமைப்பில் திட்டமிடப்பட்டுள்ளது. தரைத்தளம் தங்கம், விலைமதிப்புள்ள மற்றும் ஜடாவ் நகைகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது; இது வாடிக்கையாளர்களுக்கு எளிதான அணுகலும் சுலபமான இயக்கமும் வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. முதல் தளம் வைரம், சோலிடேர் மற்றும் பிளாட்டினம் நகைகளுக்காக அமைக்கப்பட்டுள்ளது; இது வாடிக்கையாளர்கள் கவனமாக தேர்வு செய்ய உதவுவது மட்டுமல்லாமல் அமைதியான சூழலை வழங்குகிறது.
இரண்டாவது தளத்தில் VBJ Atelier என்ற புதிய வடிவம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது தனிப்பட்ட அனுபவத்தை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. தனிப்பட்ட லவுஞ்ச்கள், தனியார் பார்வை அறைகள் மற்றும் தனிப்பயன் சேவைகள் இதில் இடம்பெற்றுள்ளன. காட்சிப் பொருட்கள் குறைந்த அளவில் மட்டுமே வைக்கப்பட்டு, பெரிய தொகுப்பு தேவைக்கேற்ப வழங்கப்படும் என்பது இதன் சிறப்பு.
இந்த திறப்பு குறித்து VBJ நிர்வாக இயக்குநர் திரு அமரேந்திரன் வும்மிடி கூறியதாவது: “VBJ-யின் பாரம்பரியத்தை இன்றைய காலத்திற்கு பொருந்துமாறு மாற்றுவது இந்த கடையின் வடிவமைப்பின் நோக்கமாக இருந்தது. ஒவ்வொரு நகை பிரிவுக்கும் தனித்தனி சூழல் வழங்கப்பட்டதால், வாடிக்கையாளர்களின் பயணம் எளிமையாகிறது. தளங்களுக்கு இடையிலான மாற்றங்கள் முதல் பொருட்களின் தேர்வு வரை ஒவ்வொரு அம்சத்திலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.”
VBJ தனது எதிர்கால வளர்ச்சி திட்டத்தின் ஒரு பகுதியாக தமிழ்நாடு மற்றும் தெலங்கானாவில் விரிவாக்கம் மேற்கொண்டு வருகிறது. கோயம்புத்தூர், திருச்சிராப்பள்ளி, ஹைதராபாத் போன்ற நகரங்களில் புதிய கடைகள் திறக்கப்படவுள்ளன. மேலும், சென்னை நகரில் டி.நகர் மற்றும் குரோம்பேட்டை போன்ற பகுதிகளில் தனது இருப்பை வலுப்படுத்த திட்டமிட்டுள்ளது. சர்வதேச அளவில், அமெரிக்காவில் தனது செயல்பாடுகளை விரிவுபடுத்தி வருகிறது; டெக்சாஸில் உள்ள தனது நிலையத்தை தொடர்ந்து கலிபோர்னியாவின் மில்பிடாஸ் நகரத்திலும் விரிவாக்கம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
VBJவின் மற்றொரு நிர்வாக பங்குதாரரான திரு ஜிதேந்திரா வும்மிடி கூறியதாவது: “இந்த கடை நகை விற்பனைக்கு ஒரு புதிய அணுகுமுறையை பிரதிபலிக்கிறது. பல்வேறு வடிவங்களை ஒரே இடத்தில் ஒருங்கிணைத்து, வாடிக்கையாளர்கள் ஒவ்வொரு பிரிவையும் முறையாக அனுபவிக்க உதவுகிறது. அன்றாட வாங்குதல் முதல் சிறப்பு நகைகள் வரை முழுமையான அனுபவத்தை வழங்குவதே இக்கடையின் நோக்கம்.”
ஐந்தாம் தலைமுறை குடும்ப நிறுவனம் ஆகிய VBJ, இந்தியாவின் ஜனநாயக பயணத்தின் ஒரு முக்கிய அடையாளமான ‘செங்கோல்’ உருவாக்கிய பெருமையை கொண்டுள்ளது. 72 ஆண்டுகளுக்குப் பிறகு VBJ குழுவின் ஆராய்ச்சியால் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்ட இந்த செங்கோல், தற்போது பாராளுமன்ற கட்டிடத்தில் (சன்சத் பவன்) சபாநாயகர் இருக்கையின் அருகில் நிறுவப்பட்டுள்ளது. பாரம்பரியத்தையும் நவீனத்தையும் இணைத்து, கல்யாண நகைகள் மற்றும் சமகால வடிவமைப்புகளில் VBJ தொடர்ந்து முன்னணி வகிக்கிறது.
இயற்கையை பிரதிபலிக்கும் ஃபிளோரல்ஸ் (Florals) மற்றும் தெய்வீக வடிவங்களை புதிய கோணத்தில் விளக்கும் அவதாரா (Avatara) போன்ற சிறப்பு தொகுப்புகள், இந்த அணுகுமுறையை வெளிப்படுத்துகின்றன.
இந்த புதிய ஃபிளாக்ஷிப் மூலம், VBJ பாரம்பரியம், கைவினை திறன் மற்றும் வாடிக்கையாளர்களின் தேவைகளை புரிந்துகொள்வதை ஒருங்கிணைத்து, நகை அனுபவத்தை புதிய நிலைக்கு கொண்டு செல்கிறது.
------------------------------
About VBJ, Vummidi Bangaru Jewellers
VBJ, Vummidi Bangaru Jewellers is one of South India’s most trusted fine jewellery brands, offering exceptional value, diverse choices, and unmatched quality across diamond, gold, and silver jewellery. Established in 1900, VBJ has earned the trust of over five generations and continues to be a name synonymous with heritage and craftsmanship. With two flagship stores in Chennai (Anna Salai and Anna Nagar) and a global presence through its Dallas showroom opened in October 2023, VBJ blends legacy with modernity to serve a wide range of jewellery connoisseurs. VBJ’s digital presence through www.vummidi.com allows patrons to explore elaborate collections online, while its dedicated silverware vertical www.vbjsilver.com, showcases masterful creations crafted from pure silver. The brand also boasts an in-house Creative Center and a state-of-the-art manufacturing facility, enabling the design and production of timeless, original pieces that reflect both artistic finesse and generational expertise.


