சன்ஃபீஸ்ட் டார்க் ஃபேண்டஸி, முன்னெப்போதும் இல்லாத வகையில் ஒரு விளம்பரத்தின் மூலம் ‘SRK-உடனான பார்ட்டி” (Party with SRK) என்ற ஒரு புதிய நூதனமான நேரலை கொண்டாட்ட நிகழ்வுப் பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளது.
சன்ஃபீஸ்ட் டார்க் ஃபேண்டஸி உருவாக்கத்தில் ஓர் அரிய அனுபவம்
Instagram - https://www.instagram.com/reel/DWWhNQajPHt/?igsh=c3Q3cWE3Yjhhc2xv
சென்னை, மார்ச் 31, 2026: சன்ஃபீஸ்ட் டார்க் ஃபேண்டஸி (Sunfeast Dark Fantasy) பொதுவெளியில் ஒரு பிரம்மாண்டமான மற்றும் கண்கவர் ‘ OOH நூதன விளம்பர வடிவமைப்பின் மூலம் பாரம்பரிய விளம்பரப் பலகையை ஒரு நேரடி கொண்டாட்டக் களமாக மாற்றியமைத்து , தனது சமீபத்திய ‘1 மில்லியன் ஃபேண்டஸீஸ்’ (1 Million Fantasies) பிரச்சாரத்தை, வீதிகளுக்குக் கொண்டுவந்து காட்சிப்படுத்தியது .
ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் பிரம்மிக்கவைக்கும் காட்சிகளின் தொடக்கத்தை காண ஆர்வத்துடன் திரண்ட இந்தத் தருணமானது , வழக்கமான விளம்பர வடிவத்தை புதிய கண்ணோட்டத்தில் ஒரு நேரடி பொழுதுபோக்கு அனுபவமாக மாற்றியமைத்து வழங்கியது.
இந்த இயக்கச் செயல்பாடுகளின் மையமாக அமைந்த ஒரு பிரம்மாண்டமான, 'டார்க் ஃபேண்டஸி' விளம்பரப் பலகையில் ஒரு வீடியோ திடீரென்று உயிர்பெற்று எழுகிறது அதில் தோன்றும் ஷாருக் கான் தான், மில்லியன் கணக்கான மக்கள் கூட்டத்தின் கனவுகளை நனவாக்க வந்திருப்பதாக அறிவிக்கிறார் அதைத் தொடர்ந்து அடுத்த சில கணங்களிலேயே, எந்த ஒரு முன்னேற்பாடும் இன்றி திடீரென்று இசை முழங்க , வண்ணக் காகிதத் துண்டுகள் சிதறத் தொடங்குகிறது , அந்தக் காட்சியைக், காண, படம் பிடித்து காட்சிப்படுத்த மற்றும் அதை அனுபவித்து மகிழ மக்கள் கூட்டம் ஆர்வத்தோடு திரள அந்த இடம் முழுவதும் ஒரு அதிரடி கொண்டாட்டக் களமாக மாறி எல்லையில்லா உற்சாகத்தை பரவச் செய்கிறது.
இப்பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, 40 அதிர்ஷ்டசாலி நுகர்வோருக்கு , “பார்ட்டி வித் SRK” - (Party with SRK) கனவு நனவாகும் வாய்ப்பு வழங்கப்படப்போவதை பிராண்ட் அறிவித்தது. இந்தக் கருத்தாக்கமானது முன்னெப்போதும் இல்லாத வகையில் விளம்பரப் பலகை (billboard) மீது நடத்தப்படும் ஒரு தனித்துவமான ஒரு ஆழமான நூதன வடிவமைப்பில் வழங்கப்படுகிறது. இந்த நூதனமான வடிவமைப்பு, பொது வெளி ஊடக நடைமுறைகளுக்கும் நேரடி அனுபவத்திற்கும் இடையிலான ஒரு இடைவெளியை அகற்றி ஒன்றிணைத்து ஒரு பிரம்மாண்ட நிகழ்வின் அங்கமாகத் திகழ்வதற்கான அரிய வாய்ப்பை, ரசிகர்களுக்கு வழங்கியது.
இந்த விளம்பரச் செயல்பாடு குறித்துப் பேசிய ITC Ltd நிறுவன - பிஸ்கட்ஸ் , ஃபுட்ஸ் வைஸ் பிரசிடெண்ட் அண்ட் மார்க்கெட்டிங் ஹெட் திரு. சூரஜ் கத்தூரியா, கூறுகையில் “பொது வெளி விளம்பர ஊடகங்கள் (Outdoor media) வழக்கமாக தொலைவிலிருந்து காணும் வகையிலேயே வடிவமைக்கப்படுகின்றன. அத்தகைய ஒரு விளம்பரப் பலகையின் (Hoarding) பிரம்மாண்டத்தை இந்த தற்போதைய நூதனமான இயக்கச் செயல்பாட்டின் மூலம், விரிவுபடுத்தி, மக்கள் நேரடியாக அதில் கலந்து கொண்டு கொண்டாடி மகிழக்கூடிய ஒரு அனுபவமாக, மாற்றியமைக்க நாங்கள் விரும்பினோம். இந்த ‘பார்ட்டி வித் SRK’ (‘Party with SRK’) தருணமானது, பிரம்மாண்டமான அனுபவங்களை வழங்குவதற்கான எங்கள் குறிக்கோளை நோக்கிய நடைமுறைகளின் ஒரு கண்ணோட்டத்தை வழங்குவதற்காகவே வடிவமைக்கப்பட்டுள்ளது,”
சன்ஃபீஸ்ட் டார்க் ஃபேண்டஸி (Sunfeast Dark Fantasy) இன் தொடர்ந்து நடைபெற்றுவரும் ‘1 மில்லியன் ஃபேண்டஸீஸ்’ பிரச்சாரத்தின் ஒரு நீட்சியாக கருத்த்காக்கம் செய்யப்பட்ட இந்த வடிவமைப்பு நடைமுறை செயல்பாடுகள் வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே வாய்க்கக்கூடிய — ஷாருக் கானுடன் பார்ட்டியில் இணைந்து கொண்டாடி மகிழும் — அந்த அரிய பிரம்மாண்டமான வெகுமதிக்கான வாய்ப்பை எதிர்நோக்கிக் காத்திருக்கும் ஆர்வத்தை ரசிகர்கள் மத்தியில் மேலோங்கச் செய்கிறது . .
