Tuesday, March 24, 2026

OpenAI உடன் இணைந்து UPES, ‘AI-First’ வளாகமாக மாற்றம் கற்பித்தல், கற்றல், ஆய்வு மற்றும் மாணவர் அனுபவத்தை மாற்ற ChatGPT Edu அறிமுகம்

OpenAI உடன் இணைந்து UPES, ‘AI-First’ வளாகமாக மாற்றம் கற்பித்தல், கற்றல், ஆய்வு மற்றும் மாணவர் அனுபவத்தை மாற்ற ChatGPT Edu அறிமுகம்

சென்னை: தேஹ்ராதூனில் அமைந்துள்ள முன்னணி பன்முக மற்றும் ஆய்வு மையப்படுத்தப்பட்ட பல்கலைக்கழகமான UPES, இன்று OpenAI உடன் இணைந்து தன்னை ஒரு ‘AI-First’ பல்கலைக்கழகமாக மாற்றிக் கொண்டுள்ளதாக அறிவித்துள்ளது. கற்பித்தல், கற்றல், ஆய்வு மற்றும் மாணவர் அனுபவம் ஆகியவற்றில் மேம்பட்ட விளைவுகளை உருவாக்கும் நோக்கில், பல்கலைக்கழகம் கட்டுப்பாடுடனும், சமச்சீருடனும், அளவிடத்தக்க வகையிலும் செயல்படும் எஐ திறன்களை அறிமுகப்படுத்துகிறது. இதன் ஒரு பகுதியாக, UPES வளாகத்தில் ChatGPT Edu அறிமுகப்படுத்தப்படுவதுடன், உருவாக்கும் எஐயை நிறுவனத்தின் அடிப்படை கட்டமைப்பின் மையமாக கொண்டு வந்து, அனைத்து மாணவர்கள், பேராசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கும் இலவச அணுகலை வழங்குகிறது.


ChatGPT Edu என்பது கல்வி நிறுவனங்களில் பொறுப்புடன், பல்கலைக்கழக அளவில் பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்ட OpenAI-இன் கல்வித் திட்டமாகும். இதில் நிறுவன நிர்வாக கட்டுப்பாடுகளும், எண்டர்பிரைஸ் தரத்திலான பாதுகாப்பும் உள்ளடக்கப்பட்டுள்ளன. UPES-இல் இதன் நடைமுறைப்படுத்தல், கற்றல் சூழலில் எஐ எப்படி ஒருங்கிணைக்கப்படுகிறது என்பதையே மாற்றும். மேலும், உயர்கல்வி நிறுவனங்களுக்கு ஒரு தைரியமான புதிய திசையையும் இது முன்வைக்கும். 


இதன் மூலம், மாணவர்கள் தங்களின் அன்றாட கல்விப் பயணத்தின் ஒரு பகுதியாகவே செயல்முறை சார்ந்த, துறைசார் எஐ திறன்களை வளர்த்துக் கொள்ள முடியும். இது அவர்களுக்கு பிளேஸ்மென்ட்கள் மற்றும் புதிய தலைமுறை வேலைவாய்ப்புகளில் முன்னிலை அளிக்கும்.

இந்த ஒத்துழைப்பின் மூலம், UPES-இல் மாணவர்களும் பேராசிரியர்களும் நேரடியாக அனுபவிக்கும் பல முக்கிய அம்சங்கள் உருவாக உள்ளன:


• ஒவ்வொரு மாணவருக்கும் ஒரு ஃபிளாக்ஷிப் எஐ டியூட்டர், இது பாடத்திட்டம் மற்றும் செமஸ்டர் அடிப்படையில் கற்றல் ஆதரவை வழங்கும். இதில் கருத்து தெளிவாக்கம், பயிற்சி உதவி மற்றும் பல்மொழி ஆதரவு அடங்கும்.


• மதிப்பீட்டு-நிலைத்த கற்றல் அணுகுமுறைகள், இவை கல்வி நேர்மையை உறுதிப்படுத்துவதோடு, எஐ பயன்படுத்தப்பட்டாலும் மாணவர்கள் தங்களுடைய உண்மையான புரிதலை வெளிப்படுத்த முடியும் என்பதை உறுதி செய்யும்.


• ஸ்டூடன்ட் சர்வீசஸ் மாட்யூல், இது கொள்கைகள் குறித்த விழிப்புணர்வு, படிப்படியான வழிகாட்டுதல் ஆகியவற்றை வழங்கி, தேவையான விவகாரங்களை நிர்ணயிக்கப்பட்ட முறைகளின் படி மனித தலையீட்டிற்காக சரியான நிலைகளுக்கு மாற்றி அனுப்பும்; இதன் மூலம் மாணவர் அனுபவம் மேலும் வலுப்பெறும்.


• ரெஸ்பான்சிபிள் எஐ சார்டர், இது ஏற்றுக்கொள்ளத்தக்க பயன்பாடு, தனியுரிமை மற்றும் தரவு கையாளல் குறித்த எதிர்பார்ப்புகளுக்கு திசை நிர்ணயித்து, பல்கலைக்கழகம் முழுவதும் நம்பிக்கை, பொறுப்புணர்வு மற்றும் ஒரே மாதிரியான நடைமுறைகளை உறுதி செய்யும்.


• மாணவர்களுக்கும் பேராசிரியர்களுக்கும் டீப் ரிசர்ச் மாடல்களுக்கு அணுகல், இது ஆழமான ஆய்வு, வலுவான கல்வி மற்றும் அறிவு சார்ந்த விளைவுகள் மற்றும் மேம்பட்ட கிரெடிட்களின் ஆதரவுடன் தீவிரமான ஆராய்ச்சியை மேற்கொள்ள உதவும்.

இந்த மூலோபாய ஒத்துழைப்பை பற்றி தனது கருத்துகளை பகிர்ந்துகொண்ட டாக்டர் சுனில் ராய், வைஸ் சான்ஸலர், UPES, கூறியதாவது:


“எஐயை சிதறிய சில முயற்சிகளாக மட்டும் பார்க்காமல், கல்வி மற்றும் சேவை அமைப்பின் அடிப்படை கட்டமைப்பாக கருதி, இந்த அளவில் கட்டுப்பாடுடனும், முழு வளாக அளவிலும் GenAI-ஐ செயல்படுத்த உறுதிபூண்டுள்ள இந்தியாவின் முன்னோடி பல்கலைக்கழகங்களில் ஒன்றாக இருப்பதில் நாங்கள் மகிழ்ச்சி கொள்கிறோம். கற்றல், கற்பித்தல், ஆய்வு மற்றும் மாணவர் வாழ்க்கையின் ஒவ்வொரு அடுக்கிலும் எஐ பின்னிப் பிணைந்திருக்கும் வகையில், நாங்கள் சிந்தனையுடன் ஒரு AI-First பல்கலைக்கழகத்தை வடிவமைத்து வருகிறோம். முதல் நாளிலிருந்தே ஒவ்வொரு மாணவருக்கும், ஒவ்வொரு பேராசிரியருக்கும், வளாகத்தின் ஒவ்வொரு செயல்முறைக்கும் எஐ அறிவாற்றல் அடிப்படைத் தளமாக இருக்கும்.”


ராகவ் குப்தா, ஹெட் ஆஃப் எஜுகேஷன் - இந்தியா அண்ட் ஏஷியா-பசிபிக், OpenAI, கூறியதாவது:


“ChatGPT-இல் உலகிலேயே மிகப்பெரிய மாணவர் சமூகமானது இந்தியாவில் உள்ளது. எஐ கருவிகள் பயன்படுத்தப்படும் ஆழம் அதிகரிக்க அதிகரிக்க, அவை அன்றாடக் கற்றலின் ஓர் அங்கமாக மாறும். அந்த மாற்றத்தை UPES இந்த முயற்சியின் மூலம் முன்னெடுக்கிறது. இதனால் எஐ கல்வி அனுபவத்தின் மையத்தில் இடம் பெறும்; மேலும், எஐ வழிநடத்தப்படும் உலகிற்கான வேலைத் தயார்தன்மையையும் இது உருவாக்கும்.”


மாணவர்களுக்கான கற்றல் இன்னும் அதிகமாக தனிப்பட்ட முறையில் அமையும்; உடனடி உதவி, மொழிபெயர்ப்பு மற்றும் பின்னூட்டம் கிடைக்கும். முதல் நாளிலிருந்தே அவர்கள் செயல்முறை எஐ திறனை வளர்த்துக் கொள்வார்கள். அதோடு, தங்களது துறைகளில் எஐயை எவ்வாறு பயன்படுத்துவது என்பதற்கான பயிற்சியும் வழங்கப்படும். இதன் மூலம், அவர்கள் அதிக வேலைத்திறன், மேம்பட்ட வேலைவாய்ப்பு தயார்நிலை மற்றும் எஐ வழிநடத்தப்படும் பணிச்சூழலுக்கான தகுதி உடன் பட்டம் பெறுவர். 


பேராசிரியர்களுக்கு, அன்றாட வழக்கமான பணிச்சுமையை எஐ குறைத்து, வழிகாட்டுதல், கலந்துரையாடல் மற்றும் ஆழமான கற்றலுக்காக அதிக நேரத்தை வழங்கும். 


ஆய்வாளர்களுக்கு, இலக்கியங்களை விரைவாக ஒருங்கிணைத்தல், தகவல்களை ஒழுங்குபடுத்தல் மற்றும் பகுப்பாய்வுக்கு ஆதரவு வழங்குதல் மூலம், எண்ணங்களிலிருந்து நம்பகமான விளைவுகளுக்குச் செல்லும் வேகத்தை எஐ அதிகரிக்கும்; அதேசமயம் கட்டுப்பாடு, நேர்மை மற்றும் மனித தீர்மானம் ஆகியவை மையமாகவே நிலைத்திருக்கும்.


குறிப்பாக, UPES எதிர்கால மையப்படுத்தப்பட்ட தொழில்நுட்பங்களை ஏற்றுக்கொள்வதோடு மட்டும் இல்லாமல், இந்திய கல்வித் துறையில் ஒரு புதிய அளவுகோலையும் உருவாக்குகிறது. மேலும் தகவல்களுக்கு: www.upes.ac.in










About UPES:

Established through the UPES Act, 2003, of the State Legislature of Uttarakhand, UPES is a top-ranked, UGC-recognised, private university. As per the National Institutional Ranking Framework (NIRF) 2025, the Ministry of Education, Government of India, UPES has been ranked 45 among universities, with a rank of 18 in Law, 36 in Management, and a rank of 43 in Engineering. As per the Times Higher Education (THE) World University Rankings 2026, UPES now stands in the 501-600 band globally and 5th in India, improving from 7th in 2025. Notably, in Research Quality, UPES jumped 57 positions in just one year to be ranked 299 globally. In addition to this, the university has been ranked the No.1 private university in academic reputation in India by the QS World University Rankings 2026. It is among the top 2% of universities in the world.

UPES has received 5 stars on Employability (placements) by the globally acclaimed QS Rating. The university has had 100% placements over the last five years. 50+ faculty members from UPES feature among the world’s top 2% researchers as per the Stanford University list.

UPES offers graduate and postgraduate programs through its seven schools: School of Advanced Engineering, School of Computer Science, School of Design, School of Law, School of Business, School of Health Sciences & Technology, and School of Liberal Studies and Humanities. The UPES family includes 19100+ students, 1,500+ faculty and staff members, and a thriving community of 40000+ alumni that work across sectors in marquee brands like EY, KPMG, Bain and Co., McKinsey & Company, Capgemini, Google, Microsoft, Oracle, Nestle, ITC, Adani Power, ONGC, GMR, TCS, Wipro, Infosys, Amazon, Flipkart, Accenture, Deloitte and more.