பெண்களுக்கான அறுவைச் சிகிச்சை முறையில் தொழில்நுட்பம் சார்ந்த மாற்றத்தை முன்னெடுத்து, சென்னை கிளெனீகிள்ஸ் மருத்துவமனையின் டாக்டர் பத்மப்பிரியா 500 'டா வின்சி' ரோபோடிக் அறுவைச் சிகிச்சைகளை நிறைவு செய்து சாதனை
• டாக்டர் பத்மப்பிரியா விவேக் 500 ரோபோடிக் மகளிர் நல அறுவைச் சிகிச்சைகளை நிறைவு செய்திருப்பது, பெண்களுக்கான சிறிய துளை அறுவைச் சிகிச்சை முறையில் அவரது மருத்துவ நிபுணத்துவத்தையும் தரமான சிகிச்சை முடிவுகளையும் பிரதிபலிக்கிறது.
• டா வின்சி (da Vinci) அறுவைச் சிகிச்சை முறையில் அவருக்குள்ள விரிவான அனுபவம், உலக சாதனை அங்கீகாரம் பெற்ற 5 கிலோ கருப்பை நார்த்திசுக் கட்டியை அகற்றும் அறுவைச் சிகிச்சையை உள்ளடக்கியது; இது சிக்கலான மகளிர் நல சவால்களில் இத்தொழில்நுட்பத்தின் துல்லியத்தையும் பாதுகாப்பையும் வெளிப்படுத்துகிறது.
• இந்த மைல்கல், அறுவைச் சிகிச்சையில் தொழில்நுட்பத்தில் ஒரு பெண்ணாக டாக்டர் பிரியாவின் தலைமையை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது, மற்றவர்களை ஊக்குவிக்கிறது, மேலும் அவரது நிபுணத்துவத்தின் மூலம் பெண்களுக்கான மேம்பட்ட, நோயாளி மையப்படுத்தப்பட்ட சிகிச்சை விருப்பங்களை விரிவுபடுத்துகிறது.
சென்னை, 04 மார்ச்சு 2026: சென்னை கிளெனீகிள்ஸ் மருத்துவமனையின் மகப்பேறு மற்றும் மகளிர் நலத்துறை இயக்குநரும், முன்னணி ரோபோடிக் அறுவைச் சிகிச்சை நிபுணருமான டாக்டர் பத்மப்பிரியா விவேக், 'டா வின்சி' ரோபோடிக் முறையைப் பயன்படுத்தி 500 மகளிர் நல அறுவைச் சிகிச்சைகளை வெற்றிகரமாக முடித்துள்ளார். 22 ஜூன் 2023 அன்று இந்த ரோபோடிக் சிகிச்சைத் திட்டத்தைத் தொடங்கியதில் இருந்து, மூன்றாண்டுகளுக்கும் குறைவான காலத்திலேயே இந்த மைல்கல்லை அவர் எட்டியுள்ளார். பெண்களுக்கான சிறு துளை அறுவைச் சிகிச்சை (minimally invasive surgery) முறையில் அவரது நீடித்த மருத்துவ அனுபவத்தையும், நோயாளிகளின் பாதுகாப்பையும், தரமான சிகிச்சை முடிவுகளில் அவர் கொண்டுள்ள அர்ப்பணிப்பையும் இந்தச் சாதனை உறுதிப்படுத்துகிறது.
டாக்டர் பத்மப்பிரியா விவேக் மேற்கொண்ட இந்த 500 சிகிச்சைகளில் சிக்கலான கருப்பை அகற்றம், தசைக்கட்டி அகற்றம், தீவிர எண்டோமெட்ரியோசிஸ், அதிக ஆபத்துள்ள மகளிர் நல புற்றுநோய் சிகிச்சைகள் எனப் பல்வேறு பிரிவுகள் அடங்கும். இதில் குறிப்பிடத்தக்க சாதனையாக, உலக சாதனை அங்கீகாரம் பெற்ற 5 கிலோ கருப்பை நார்த்திசுக்கட்டியை ரோபோடிக் முறையில் அவர் அகற்றியது அமைந்தது. மிகவும் சவாலான இத்தகைய சிகிச்சைகளில், நவீன தொழில்நுட்பம் எவ்வாறு துல்லியமாகவும் கட்டுப்பாட்டுடனும் செயல்பட உதவும் என்பதற்கு இது ஒரு சிறந்த உதாரணமாகும். 'டா வின்சி' ரோபோடிக் முறையில் மேற்கொள்ளப்படும் இந்த அறுவைச் சிகிச்சைகள், குறைந்த இரத்தப்போக்கு, விரைவாக குணமடைதல், மிகக் குறுகிய காலம் மருத்துவமனையில் தங்குதல் போன்ற நன்மைகளை வழங்குகின்றன. இது பெண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதுடன், அவர்களின் நீண்டகால வாழ்க்கைத் தரத்தையும் உறுதி செய்கிறது.
இந்த மைல்கல் மற்றும் பெண்களின் அறுவைச் சிகிச்சை பராமரிப்புக்கான அதன் தாக்கங்கள் குறித்து கருத்து தெரிவிக்கையில், சென்னை கிளெனீகிள்ஸ் மருத்துவமனையின் மகப்பேறு மற்றும் மகளிர் நலத்துறை இயக்குநரும், முன்னணி ரோபோடிக் அறுவைச் சிகிச்சை நிபுணருமான டாக்டர் பத்மப்பிரியா விவேக் அவர்கள் கூறியதாவது, "500 அறுவைச் சிகிச்சைகளை நிறைவு செய்திருப்பது விலைமதிப்பற்ற மருத்துவ அனுபவத்தை அளித்துள்ளதோடு, பல்வேறு சிக்கலான மகளிர் நலப் பிரச்சினைகளைத் துல்லியமாகவும், கட்டுப்பாட்டுடனும் கையாள உதவுகிறது. குறிப்பாக 5 கிலோ கருப்பை நார்த்திசுக் கட்டியை அகற்றுதல் போன்ற சிகிச்சைகள், இத்தகைய நுணுக்கமான முறைகளில் 'டா வின்சி' தொழில்நுட்பம் வழங்கும் துல்லியத்திற்குச் சான்றாகும். மகளிர் நல மருத்துவத்தில் இது மிகவும் முக்கியமானது, ஏனெனில் கருவுறுதல் திறனைப் பாதுகாத்தல், நீண்டகால ஹார்மோன் ஆரோக்கியத்தைப் பராமரித்தல், ஒட்டுமொத்த நல்வாழ்வை உறுதி செய்தல் போன்ற பெண்களின் பரந்த ஆரோக்கிய இலக்குகளோடு இந்த சிகிச்சை முடிவுகள் பிணைந்துள்ளன. மருத்துவ ரீதியாகப் பொருத்தமான சூழல்களில், சிறு துளை அறுவைச் சிகிச்சை முறைகள், அறுவைச் சிகிச்சைக்குப் பிந்தைய அசௌகரியம், இரத்தப்போக்கு மற்றும் குணமடையும் காலத்தைக் கணிசமாகக் குறைக்கின்றன, இது பெண்கள் அதிக நம்பிக்கையுடன் தங்கள் குடும்பம், வேலை மற்றும் அன்றாடப் பணிகளுக்கு விரைவாகத் திரும்ப உதவுகிறது. மேம்பட்ட தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, முறையான விழிப்புணர்வுடன் கூடிய சிகிச்சைத் தேர்வுகள் மற்றும் எதிர்பார்க்கக்கூடிய தரமான முடிவுகள் மூலம் பெண்களை வலுப்படுத்தும் அதே வேளையில், ஒவ்வொருவருக்கும் ஏற்ற தனிப்பயனாக்கப்பட்ட பராமரிப்பை வழங்குவதே எங்களின் முதன்மையான நோக்கமாகும்.”
டாக்டர் பத்மப்பிரியா விவேக்கின் இந்த மைல்கல் சாதனை, இந்தியாவில் பெண்களுக்கான மேம்பட்ட, எளிதில் அணுகக்கூடிய, மற்றும் நோயாளிகளை மையமாகக் கொண்ட சிகிச்சை முறைகளின் பரந்த பரிணாம வளர்ச்சியை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. உயர்தர அறுவைச் சிகிச்சை பிரிவுகளில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பது அவசியமாக உள்ள இந்த காலகட்டத்தில், தொழில்நுட்பம் சார்ந்த அறுவைச் சிகிச்சைகளில் அவரது இந்த சாதனை ஒரு தலைமைத்துவத்தை பிரதிபலிக்கிறது. இது மருத்துவத் துறையில் உள்ள மேலும் பல பெண்கள் புதுமையான தொழில்நுட்பங்களை நோக்கி பயணிக்க ஊக்கமளிப்பதோடு, சிக்கலான ரோபோடிக் சிகிச்சை திட்டங்களில் பெண் அறுவைச் சிகிச்சை நிபுணர்களின் பங்களிப்பை அதிகரிக்கவும் உதவுகிறது. 'டா வின்சி' போன்ற அறுவைச் சிகிச்சை தொழில்நுட்பங்களில் அவர் கொண்டுள்ள தொடர்ச்சியான ஈடுபாடு, திறமையான மற்றும் கனிவான சிகிச்சையை வழங்க உறுதுணையாக இருக்கிறது, இது அறுவைச் சிகிச்சையின் நேர்மறையான முடிவுகள், விரைவான உடல்நல முன்னேற்றம், மற்றும் பெண்களின் ஆரோக்கியமான வாழ்க்கைத் தரம் ஆகியவற்றிற்கு பங்களிக்கிறது.