Sunday, February 15, 2026

என்லைட் AIOps, AI ஆபரேஷன்ஸ் மேனேஜ்மெண்ட் பிரிவினுள் யுக்திபூர்வமான ESDS’s நுழைவை அடையாளப்படுத்துகிறது

என்லைட் AIOps, AI ஆபரேஷன்ஸ் மேனேஜ்மெண்ட் பிரிவினுள் யுக்திபூர்வமான ESDS’s நுழைவை அடையாளப்படுத்துகிறது 

 


சென்னை — இந்தியாவின் இறையாண்மை படைத்த கிளவுட் மற்றும் தரவு மைய வழங்குநரான ESDS சாஃப்ட்வேர் சொல்யூசன்ஸ் லிமிடெட்,  நிறுவனங்கள்  தங்கள்  AI பணிப்பளு  நடைமுறைகள்  மற்றும் GPU உள்கட்டமைப்புக்களை  ஒரே கட்டுப்பாட்டு தளத்தில்   பரவலமர்த்த, நிர்வகிக்க, கண்காணிக்க, உகந்ததாக்க மற்றும் மேலாண்மை செய்ய  உதவும் வகையில் வடிவமைக்கப்பட்ட ஒரு ஒருங்கிணைந்த AI இயங்கு தளமான Enlight AIOps மூலம்  அதன் வழங்கலை  மேலும் வலுப்படுத்தியிருக்கிறது. AI ஐ   ஏற்றுக் கொள்வதிலுள்ள     இயக்கமுறை   சிக்கல்களை  எளிதாக்குவதை நோக்கமாகக் கொண்ட இந்தத் தளம்  அதே நேரத்தில்   AI செயல் திட்டங்களைப் பாதுகாப்பாகவும் குறைந்த செலவிலும் மேம்படுத்தி விரிவாக்க நிறுவனங்களுக்கு உதவுகிறது.

வணிக வழிமுறை மாற்றத்திற்கான தேடலில்   நிறுவனங்கள் அதிகளவில் AI- இயக்கத்தை  ஆராய்ந்து வருவதில்  பல நிறுவனங்கள் பொதுவான இயக்க செயல்பாடுகளில் சவால்களை எதிர்கொள்கின்றன. AI மாதிரிகள் பைலட் திட்டங்களில் திறனைக் வெளிப்படுத்தினாலும், உற்பத்தி சூழமைவுக்கு உகந்த வகையில் அவற்றை மேம்படுத்தி விரிவுபடுத்துவதுவதில்   பல துண்டுகளான கருவி, அதிக GPU செலவுகள், நீடித்த ஆன்போர்டிங் சுழற்சிகள், இணக்க செயல்பாட்டு  அபாயங்கள் மற்றும் நிர்வாக இடைவெளிகள் போன்ற தடைகளை பெரும்பாலும் எதிர்கொள்ளவேண்டியிருக்கிறது  Enlight AIOps ,  AI இயக்க  சுழற்சியை,  மேம்பட்ட மாதிரி உருவாக்கம்  முதல் உற்பத்தி வரை ஒன்றிணைக்கும்  ஒரு  ஒருங்கிணைந்த இயங்கு தளத்தை வழங்குவதன் மூலம் மிகக் குறைவான  கூடுதல் உபரி செலவுகளுடன்  AI-ஐ செயல்படுத்த நிறுவனங்களுக்கு உதவி  இந்த சவால்களுக்கான தீர்வை அளிக்கிறது    

ESDS சாஃப்ட்வேர்  சொல்யூஷன்ஸ் லிமிட்டெட் மேம்பாட்டாளர்  , நிர்வாக இயக்குனர், மற்றும் தலைவர்  பியூஷ் சோமானி கூறினார் :

"செயற்கை நுண்ணறிவு இனி ஒரு தொழில்நுட்ப உரையாடல் மட்டுமே அல்ல, அதற்கும் மேலாக ஒரு வணிக நடைமுறை மாற்றத்திற்கான  கட்டாயமாகும். இந்தியாவின் AI சந்தை எதிர் வரும் ஆண்டுகளில் கிட்டத்தட்ட  35–40% CAGR அளவில்  வளர்ச்சி காணும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் , நிறுவனங்கள் இன்று நேரடியாக எதிர்கொள்ளும் உண்மையான கேள்வி  AI ஐ ஏற்றுக்கொள்வதா அல்லது இல்லையா என்பது அல்ல, மாறாக விரைவான முடிவுகள், குறைந்த செலவுகள், அதிக வருவாய் மற்றும் வலுவான போட்டித்தன்மை போன்றவற்றில் அளவிடக்கூடிய வணிக முடிவுகளை எட்ட  , AI ஐ  எவ்வாறு இணக்கமாக மாற்றியமைப்பது என்பதுதான்.  

ESDS-இல்  எங்களது  உறுதிப்பாடு எப்போதும் தெளிவாக இருக்கிறது, AI என்பது தொழில்நுட்ப பரிசோதனையாக மட்டுமே  இருக்கக்கூடாது,  அது  வணிக தாக்கத்தை வெளிப்படுத்த வேண்டும் இந்த உறுதிப்பாடுதான்  எங்களை வேறுபடுத்திக் காட்டுகிறது . நாங்கள் வெறும்  உள்கட்டமைப்பை அல்லது கணக்கீடுகளை வழங்குவதோடு நின்றுவிடுவதில்லை    எங்கள் நிறுவன வாடிக்கையாளர்களுக்கான AI பயணத்தின் முழுப்பொறுப்புரிமையையும்   நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். அவர்களின் குறிப்பிட்ட வணிக அளவீடுகளுக்கு உகந்த சரியான AI உத்தியை வரையறுப்பதில் இருந்து, AI பணிப்பளு  நடைமுறைகளை  கட்டமைத்தல் , பயன்படுத்துதல், நிர்வகித்தல் மற்றும் தொடர்ந்து மேம்படுத்துதல் வரை அனைத்தையும் முழுமையாக நிர்வகிக்கப்பட்ட, விளைவு சார்ந்த ஈடுபாட்டுடன் வழங்குவதை  எங்கள் நோக்கமாகக் கொண்டுள்ளோம். 

இந்த கருத்தாக்கத்தின்  உருவகமாக திகழ  என்லைட் AIOps  தொடர்ந்து செயல்பட்டுவருகிறது  இது வெறும் ஒரு இயங்குதளம் மட்டுமல்ல, நிறுவனங்கள் அதன் செயல்பாடுகளில் உள்ளமைந்த இணக்கம், நிர்வாகம் மற்றும் இறையாண்மை,  தரவுக் கட்டுப்பாடுகளுடன் தங்களின்  மதிப்புக் கூட்டுத் தொடர் முழுவதும் AI ஐ செயல்படுத்துவதற்கான  ஒருங்கிணைந்த ஒரு கட்டளை மையமாகும்.   

." ESDS- தனித்துவமான ஒன்றாகத் திகழ்வதற்கான காரணம் என்னவென்றால்   , இறையாண்மையுடனான AI உள்கட்டமைப்பிலிருந்து  தொடங்கி அதன் மேல் அடுக்குகளில்  சேவை மற்றும்    தீர்வுகள் வரை  ஒரு முழு அளவிலான மேம்பட்ட அடுக்குகளை  நாங்கள் கட்டமைத்துள்ளோம். கணக்கீடுகள் இயங்கு தளங்கள், இணக்க செயல்பாடுகள்  மற்றும் நிபுணத்துவத்திற்காக பல்வேறு  விற்பனையாளர்களை நிறுவனங்கள் ஒன்றிணைக்க வேண்டியதில்லை. இந்திய நிறுவனங்கள் AI-ஐ ஒரு தொழில்நுட்ப செயல் திட்டமாக அல்லாமல், வணிக மாற்றத்திற்கான ஒரு இயந்திரமாக எவ்வாறு ஏற்றுக்கொள்ள முடியும் என்பதற்கான  ஒரு தீர்க்கமான படிநிலையை முன்வைத்து  இந்த  அறிமுகம் அடையாளப்படுத்துகிறது.   

 AI  இயக்க செயல்பாடுகளில் முக்கிய சவால்கள்

AI-ஐ செயல்படுத்த விரும்பும் நிறுவனங்கள் பல செயல்பாட்டு சவால்களை எதிர்கொள்கின்றன:

தனிப்பட்ட பல்வகை கருவிகள் மற்றும் செயல்முறைகள்: AI குழுக்கள் பெரும்பாலும் GPU உள்கட்டமைப்பு மேலாண்மை, MLOps தொடர் பணி நடைமுறைகள் , கண்காணிப்பு, நிர்வாகம் மற்றும் விலை அறிக்கையிடலுக்கு தனித்தனி கருவிகள் மீது சார்ந்திருக்கின்றன.  இந்த தனித் தனியான செயல்பாடுகள்    திட்ட கால வரையறைகளை மேலும் நீட்டிக்கிறது மற்றும்  மெதுவாக்குகிறது மற்றும் இயக்க செயல்பாட்டு ஆபத்தை அதிகரிக்கிறது.

அதிக GPU மற்றும் கிளவுட் செலவுகள்: GPUகள், குறிப்பாக  செயல்திறன் மிக்க  மாதிரிகள்   மிக அதிக விலை   கொண்டவை, மேலும் அதன் திறன் குறைந்த பயன்பாடு அல்லது செயல்படுத்தாத நிலை போன்றவை அதிக செலவுக்கு    வழிவகுக்கும்.

முன்னோடியிலிருந்து -உற்பத்தி இடைவெளி வரை : பல்வேறு  AI முயற்சிகள் சோதனை அளவில்  வெற்றி பெறுகின்றன, ஆனால் உற்பத்தி பணி நடைமுறைகளுக்கு உட்படுத்தப்பட்டு மேம்படுத்தப்படும் போது,    தாமதங்கள் அல்லது தோல்விகளை சந்திக்கின்றன.

இணக்கம் மற்றும் நிர்வாக சிக்கல்கள் : நிறுவனங்கள், குறிப்பாக ஒழுங்கமைக்கப்பட்ட  துறைகளில், தணிக்கைக்குத் தயாரான பதிவுகள், பங்களிப்பு  அடிப்படையிலான அணுகல் கட்டுப்பாடுகள், ஒப்புதல்கள் மற்றும் கடுமையான தரவு இருப்பை கடைப்பிடித்தல்     ஆகியவற்றைக் கோருகின்றன.

இயக்க செயல்பாட்டுக்கான     கூடுதல் உபரி செலவு குறைவு : GPU கிளஸ்டர்களின் மேலாண்மை   பயிற்சி மற்றும் மேலதிக பணிகளை  உய்த்தறிதளுக்கான  ஏற்பாடுகள்      மற்றும் செயல்திறன் அளவீடுகளைக் கண்காணித்தல் ஆகியவற்றிற்கு அடிக்கடி பல்வகை  கட்டுப்பாட்டகங்கள்  மற்றும் குறிப்பிடத்தக்க வகையில்  நேரடி  தலையீடு தேவைப்படுகிறது.

இந்தச் சவால்கள் ஒன்று சேர்ந்து கூட்டாக AI  இன் ஒட்டு மொத்த செலவை மேலும் அதிகரிக்கின்றன, நேரத்தின் மதிப்பை குறைக்கின்றன மற்றும் , மேலும் இயக்க செயல்பாட்டு ஆபத்தை உருவாக்குகின்றன, இது AI பயன்பாடுகளை மேற்கொள்வதிலிருந்து பல நிறுவனங்கள் தயங்க அல்லது கட்டுப்படுத்த   வழிவகுக்கிறது.

 என்லைட் AIOps (Enlight AIOps) : ஒரு ஒருங்கிணைந்த அணுகுமுறை

என்லைட் AIOps என்பது GPU உள்கட்டமைப்பு மேலாண்மை, MLOps பணி நடைமுறைகள் , கண்காணிப்பு, நிர்வாகம் மற்றும் விலை மதிப்பு மேலாண்மை ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் ஒற்றை கட்டுப்பாட்டு தளமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த தளம் நிறுவனங்களுக்கு அவர்களின் வளாகத்தினுள், கலப்பின மற்றும் பல்வகை -கிளவுட் அணிவகுப்புக்களுக்கு ஆதரவளித்து தங்கள் சொந்த தரவு மையங்கள் அல்லது ESDS   இறையாண்மை கிளவுட் உள்கட்டமைப்பிலிருந்து AI பணிப்பளு  நடைமுறைகளை நிர்வகிப்பதில் நெகிழ்வுத்தன்மையை வழங்குகிறது.

இந்த தளம் பின்வருபவற்றை மேற்கொள்ள நிறுவனங்களுக்கு ஆதரவளித்து உதவுகிறது:

தடையற்ற GPU கிளஸ்டர் பயன்பாடு   : ஏற்கனவே உள்ள Kubernetes GPU கிளஸ்டர்களை இறக்குமதி செய்து உடனடி பயன்பாட்டிற்கான செயல் திறனைக் கண்டறியலாம்.

திறம்பட்ட  AI பணிப்பளு நடைமுறை பயன்பாடுகள் : பயிற்சி வேலைகள், அனுமான சேவைகள் மற்றும் குறிப்பேடுகள்/மேம்பாட்டு சூழமைப்புக்களை எந்த ஒரு நேரடி   குறுக்கீடுகளும் தேவையில்லாமல்    பயன்படுத்த இதன்  முன்-கட்டமைக்கப்பட்ட மாதிரி வடிவமைப்புக்கள் அனுமதிக்கின்றன.

செயல்திறன் மற்றும் பயன்பாட்டளவு   கண்காணிப்பு: நிகழ்நேர டேஷ்போர்டுகள்,  GPU ஆரோக்கியம், பணிப்பளு நடிமுறைகள் செயல்திறன், ஒதுக்கீடு, நினைவக பயன்பாடு, மின் நுகர்வு மற்றும் பணி நிலை டெலிமெட்ரி குறித்த  நுண்ணறிவுகளை வழங்குகின்றன.

நிர்வாகம் மற்றும் பாதுகாப்பான இயக்க செயல்பாடுகள்: பல்வகை டெனண்ட் இருப்புக் கட்டமைப்பு, பங்களிப்பு அடிப்படையிலான அணுகல் கட்டுப்பாடு (RBAC), ஒப்புதல்கள் மற்றும் தணிக்கைப் பதிவுகள்,  ஒழுங்குமுறை விதிகள்  மற்றும் உள்ளக நிர்வாகத் தேவைகளுக்கு இணக்கமாக இருப்பதை  உறுதி செய்கின்றன.

GPU பயன்பாடு மற்றும் செலவுகளின் தொடர் கண்காணிப்பு   :ஷோபேக் மற்றும் சார்ஜ்பேக் பார்வைத் தெளிவு நிலை, நிறுவனங்களுக்கு செயல் திட்டம், குழு அல்லது பணிப்பளு நடைமுறைகளுக்கான அந்தந்த GPU- கால அளவுகளை பிந்தொடர்ந்து கண்காணிக்க உதவி கணித்தறியக்கூடிய செலவுகளை உறுதி செய்கிறது.

NVIDIA HGX H100/H200/B200/B300 GPUs முழுவதுமாக, மல்டி டெனண்ட் GPU ஆர்கெஸ்ட்ரேஷன்,     தானியங்கி வழங்கல் மற்றும் நிகழ்நேர கண்காணிப்புகளுக்கு ஆதரவளிக்கும் இந்தத் தளம் ,   ஒற்றை  கிளஸ்டரிலிருந்து 8,000 GPUகளுக்கு மேலான ஃப்ளீட்கள் அளவில் கையாளக்கூடிய தன்மையை உறுதி செய்கிறது.

இறையாண்மை மற்றும் இணக்கமான AI இயக்கம் 

என்லைட் AIOps இல் இறையாண்மை, கையாளும் திறன்  மற்றும் பாதுகாப்பு கொள்கைகளை உள்ளமைக்கப்படுவதை ESDS, தனது நோக்கமாகக்  கொண்டுள்ளது. Tier III சான்றளிக்கப்பட்ட தரவு மையங்கள் மற்றும் அரசாங்க சமூக கிளவுட் இல்  வழங்கப்படும் இந்தத் தளம் ,  தரவு ரெஸிடென்சி தேவைகள் மற்றும் ISO 27001, SOC 2, DPDPA மற்றும் இதர பல கட்டாய அரசு  வழிகாட்டுதல்கள்   போன்ற இணக்க வரையறைகளை நிறைவு செய்கிறது.  செய்கிறது.

"எங்கள் இறையாண்மை கிளவுட் அணுகுமுறையானது, எந்த ஒரு  முக்கியமான தரவுகளும் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் இந்தியாவை விட்டு வெளியேறாமல் இருப்பதை உறுதி செய்கிறது," குறிப்பிட்ட, "நிறுவனங்கள் இணக்க செயல்பாடுகள் , பாதுகாப்பு மற்றும் இயாக்க செயல்பாட்டுக் கட்டுப்பாடுகள்    உள்ளமைக்கப்பட்டிருப்பதை உணர்ந்து , தன்னம்பிக்கையோடு AI மூலம் புத்தாக்கங்களை உருவாக்க முடியும்."


CMO மற்றும் CHRO ESDS சாஃப்ட்வேர் சொல்யூசன்ஸ் லிமிட்டெட் முழுநேர இயக்குநர் கோமல் சோமானி கூறினார்:

"தொழில்துறைகள் முழுவதும்  நிறுவனங்களுடனான எங்கள் ஈடுபாடு ஒரு நிலையான போக்கை  வெளிப்படுத்தியது, AI தொடர்பான  லட்சியம் மிக அதிகளவில்   , என்றாலும் செயலியக்க இடையூறுகள் உண்மையான செயல்திறனை தாக்கத்தை மட்டுப்படுத்துகிறது   . மாதிரிகளை உருவாக்குவதில்  முனைப்போடு  ஈடுபட்டுவரும் குழுக்கள்  பகுதி பகுதியாக அமைந்த உள்கட்டமைப்பு, அதிகரித்து வரும் GPU செலவுகள், நிர்வாக அழுத்தங்கள் மற்றும் தாமதமான உற்பத்தி வெளிப்பாடுகள் ஆகியவற்றால் மிகுந்த சிரமத்துக்குள்ளாகின்றன. இந்த இடைவெளியை நிரப்புவதற்கான ஒரு நேரடியான எங்கள் பதில்தான் என்லைட்  AIOps   இது ஒருங்கிணைந்த இயக்க தள அணுகுமுறை மூலம் AI செயல்பாடுகளுக்கு, கட்டமைப்பு, எளிமை மற்றும் பொறுப்பேற்பை கொண்டுவருகிறது. ஒற்றைக்  கட்டுப்பாட்டு தளத்தில் அனைத்து ஏற்பாட்டு செயல்பாடுகள் , கண்காணிப்பு, நிர்வாகம் மற்றும் செலவு பார்வைத்திறன் ஆகியவற்றை   ஒருங்கிணைப்பதன் மூலம்,   பரிசோதனை முயற்சிகளுக்கு மேலாக நிலைத் தன்மையோடுடனான  நிலையான AI-இயக்க  வெளிப்பாடுகளை நோக்கிய அடுத்த கட்டத்துக்கு   முன்னேறிச் செல்ல நிறுவனங்களுக்கு  நாங்கள்  உதவுகிறோம்.

.” புத்தாக்கம்  என்பது மென்மேலும் சிக்கல்களை அதிகரித்துக் கொண்டே போவதல்ல அல்ல, அவற்றை அறவே  நீக்குவதுதான் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம். AI- செயல்பாடுகளை நிறுவனங்களுக்கு  மேலும் அணுகக்கூடியதாகவும், அளவிடக்கூடியதாகவும், தயார் நிலையில் இருப்பதற்கான  தீர்வுகளை வழங்குவதில் எங்களுக்கிருக்கும் நிலையான  எங்கள் உறுதிப்பாட்டை என்லைட் AIOps பிரதிபலிக்கிறது.

முன்னோடியான மற்றும் தொடக்க நிலை அணுகல் திட்டம்

ஏற்றுக்கொண்டு செயல்படுத்துவதை எளிதாக்க, ESDS ஒரு  14 நாள் முன்னோடி செயல் திட்டத்தை வழங்குகிறது. நிறுவனங்கள் AI பணிப்பளு நடைமுறைகள்  உள்ளேற்றலாம்,  பயிற்சி மற்றும் அனுமான பணிப்பளு நடைமுறைகளை செயல்படுத்தலாம் , டாஷ்போர்டுகள் மற்றும் முன்னறிவுப்புக்களை  இயக்கலாம், மேலும் பயன்பாடு மற்றும் செயல்திறனை அளவிட GPU- கால அளவு ஷோபேக் அறிக்கைகளையும் உருவாக்கலாம்.

முழு அளவிலான பயன்பாட்டுக்கு முன்னர் ஒருங்கிணைந்த AI செயல்பாடுகளின் பயன்களை எடுத்துக் காட்டும்    வகையில், வெற்றிக்கான ஒரு தெளிவான வரன்முறைகளை  நிறுவனங்களுக்கு வழங்குவதே இந்த முன்னோடி திட்டத்தின் நோக்கமாகும்.

ஆக்கச்சிந்தனைத் தலைமைத்துவம் மற்றும் எதிர்காலத் திட்ட வழிமுறைகள் 

என்லைட் AIOps என்பது ESDS இன் ஒரு பரந்த ஒருங்கிணைக்கப்பட்ட  AI இயங்கு தளத்தின் ஒரு பகுதியாகும், இது MLOps, GPU வழங்கல்கள் , கண்காணிப்பு மற்றும் நிர்வாகம் ஆகியவை உட்பட ஒட்டுமொத்தமாக முழுமையான AI லைஃப்சைக்கிளுக்கும் ஒரே, ஒற்றைக் கட்டுப்பாட்டுத் தளத்தை வழங்குகிறது.

 என்லைட்ட AIOps- க்கு திட்டமிடப்பட்டுள்ள எதிர்கால மேம்படுத்தல்களில் பின்வருபவை உள்ளடங்கும்   :

GPU நிறுவல் மற்றும் வள ஆதார பயன்பாட்டிற்கான   தகுதிவாய்ந்த  இயந்திரங்களை உகந்ததாகச் செய்தல் 

இயக்க செயலிழப்பு கால அளவை  குறைக்க முன்எச்சரிக்கை அறிவிப்புகள்   

தானியங்கி இணக்க & நிர்வாக நடைமுறைகள்

பல்செயல்திறன் மிக்க  கலப்பின AI பயன்பாடுகளை செயல்படுத்த பல பிராந்திய கூட்டமைப்பு.




ESDS சாஃப்ட்வேர் சொல்யூஷன்ஸ் லிமிட்டெட் பற்றி

ESDS சாஃப்ட்வேர் சொல்யூஷன்ஸ்  நிறுவனமானது,  கிளவுட், தரவு மையம், GPU உள்கட்டமைப்பு மற்றும் AI தீர்வுகளை வழங்கிவரும்  இந்தியாவின் இறையாண்மை   கிளவுட் மற்றும் நிர்வாக  சேவைகளுக்கான ஒரு நிறுவனமாகும்  . இந்த நிறுவனம் இந்தியா முழுவதும் அடுக்கு III சான்றளிக்கப்பட்ட தரவு மையங்களை இயக்கிவருகிறது மற்றும்   அரசு மற்றும் ஒழுங்குமுறை வரையறைகளுக்கு இணக்கமான சேவைகளை வழங்கி தனது  வாடிக்கையாளர்களுக்கு ஆதரவளித்துவருகிறது. BFSI, அரசு, சுகாதாரம், ஆராய்ச்சி மற்றும் IT துறைகள் முழுவதும் நிறுவனங்களுக்கு ஒரு பாதுகாப்பான, அளவிடக்கூடிய    மற்றும் இணக்க நடைமுறைகளுக்கான  தீர்வுகளை நிறுவனங்களுக்கு வழங்குவதில் ESDS  நிபுணத்துவம் பெற்ற ஒரு நிறுவனமாகத் திகழ்கிறது 

மேலும் அதிக தகவல்களுக்கு தயவு செய்து வருகை தரவும் www.esds.co.in 


 “ESDS சாஃப்ட்வேர் லிமிட்டட்  , தேவையான ஒப்புதல்கள், சந்தை நிலவரங்கள்  மற்றும் இத்ரா பரிசீலனைகளுக்கு உட்பட்டு, அதன்  பங்குகளின் தொடக்க நிலை  பொது வெளியீட்டை வழங்க முன்மொழிகிறது மற்றும் இந்திய நிதியாவணங்கள்  மற்றும் பங்குச் சந்தை  வாரியத்தின்  (“SEBI”) வலைத்தளத்தில் www.sebi.gov.in ஒரு வரைவு ரெட் ஹெர்ரிங் முன்மொழிவை  (“DRHP”) தாக்கல் செய்துள்ளது]  அத்துடன் சேர்த்து முறையே  நிறுவனத்தின் வலைத்தளத்தில் புக் ரன்னிங்  லீட் மேனேஜர் DAM Capital Advisors Limited இன் வலைத்தளத்திலும்    [●] [குறிப்பு: வலைத்தளத்தின் URL ஐச் செருகவும்.], தேசிய பங்குச் சந்தை இந்திய லிமிட்டெட் வலைத்தளத்திலும்  www.nseindia.com மற்றும் BSE லிமிட்டெட்  வலைத்தளத்திலும்  www.bseindia.com வெளியிட்டுள்ளது  சம  பங்கு சந்தைகளில்  முதலீடு செய்வது அதிக அளவு ஆபத்தை உள்ளடக்கியது என்பதை முதலீட்டாளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். மேலும் விவரங்களுக்கு, சாத்தியக்கூறுள்ள  முதலீட்டாளர்கள் எதிர்காலத்தில் மும்பை  மகாராஷ்டிரா   நிறுவனங்கள்  பதிவாளரிடம் தாக்கல் செய்யப்படவிருக்கிற RHP ஐ "ஆபத்து காரணிகள்" என்ற தலைப்பில் உள்ள பிரிவு உட்பட.  பார்வையிடவேண்டும் , சாத்தியக் கூறுள்ள முதலீட்டாளர்கள் SEBI இல் தாக்கல் செய்யப்பட்ட DRHP ஐ மட்டுமே சார்ந்து எந்த ஒரு முதலீட்டு முடிவுகளையும் மேற்கொள்ளக் கூடாது