ஓரியண்ட் எலெக்ட்ரிக் புதிய வகை வாட்டர் ஹீட்டர் மாடல்கள் 'உடனடியாக சூடாகும்' வாக்குறுதியுடன் அறிமுகப்படுத்தியுள்ளது
அக்வேட்டர் எட்ஜ், அக்வேட்டர் நியோ ஆகிய வாட்டர் ஹீட்டர்கள் வெர்ல்ஃப்ளோ டெக்னாலஜி மூலம் 20% வேகமான சூடேற்றத்தையும், அன்றாட வேலைகளை எளிமையாக்க வடிவமைக்கப்பட்ட டூரான் டெக் மூலம் நீடித்த உழைப்பையும் வழங்குகிறது.
நேஷ்னல், 24 டிசம்பர் 2025: பன்முகத்தன்மை கொண்ட 3 பில்லியன் யுஎஸ் டாலர் மதிப்புள்ள சிகேஏ பிர்லா குழுமத்தின் ஒரு அங்கமான ஓரியண்ட் எலெக்ட்ரிக் லிமிடெட் [BSE: 541301, NSE: ORIENTELEC], இந்திய வீடுகளில் பொதுவாகக் காணப்படும் மெதுவான சூடேற்றம், கடினநீர் ஏற்படுத்தும் சேதம் போன்ற பிரச்சனைகளைத் தீர்க்க மிக நுட்பமாக வடிவமைக்கப்பட்ட, மேம்பட்ட வாட்டர் ஹீட்டர் புதிய வகை மாடல்களை அறிமுகப்படுத்தியுள்ளது. அக்வேட்டர் எட்ஜ், அக்வேட்டர் நியோ மாடல்கள் உட்பட இந்தப் புதிய வகை மாடல்கள், அதிக வேகமான சூடேற்றத்திற்காக அதிநவீன வெர்ல்ஃப்ளோ டெக்னாலஜி, மேம்படுத்தப்பட்ட நீடித்துழைப்பு மற்றும் நீண்டகால நம்பகத்தன்மைக்காக டூரான் ஹீட்டிங் டெக்னாலஜி ஆகியவற்றை ஒருங்கிணைக்கிறது.
குளிர் காலங்களில் சூடான நீருக்காகக் காத்திருக்கும் சிரமம், கடினநீர்த் தன்மைகள் காரணமாகச் சாதனங்கள் சீக்கிரமே பழுதடைவது போன்ற பிரச்சனைகளால் நவீன குடும்பங்கள் அடிக்கடி பாதிக்கப்படுகின்றன. ஓரியண்ட் எலெக்ட்ரிக் நிறுவனத்தின் புதிய வாட்டர் ஹீட்டர்கள் இந்தப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காகவே வடிவமைக்கப்பட்டுள்ளன. புதுமையான வெர்ல்ஃப்ளோ டெக்னாலஜி சூடேற்றும் செயல்திறனில் ஒரு குறிப்பிடத்தக்க பாய்ச்சலை ஏற்படுத்துகிறது. டேங்கிற்குள் ஏற்கனவே சூடான நீருடன் புதிதாக உள்ளே வரும் குளிர்ந்த நீர் நேரடியாகக் கலப்பதைத் தடுப்பதன் மூலம், வெர்ல்ஃப்ளோ ஒரு நிலையான வெப்பநிலை வெளியீட்டை உறுதி செய்கிறது மேலும் 20% அதிக சூடான நீரை வழங்குகிறது, இது சிரமமில்லாத உடனடி குளிர்கால அனுபவத்தை அளிக்கிறது.
இதற்கு மேலும் வலு சேர்க்கும் விதமாக, இந்தப் புதிய வகை மாடல்கள் டூரான் ஹீட்டிங் டெக்னாலஜியைக் கொண்டுள்ளது, இது கடின நீரினால் ஏற்படும் அரிப்பு, படிவுகள் போன்ற பரவலான பிரச்சனைகளைத் தீர்க்க பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ளது. ஹீட்டிங் எலெமென்ட் மேம்பட்ட பிடிஎஃப்இ பூச்சுடன் பொருத்தப்பட்டுள்ளது, இது வலுவான படிவு எதிர்ப்பு பண்புகளையும் மேம்பட்ட அரிப்பு எதிர்ப்பையும் வழங்குகிறது. நீண்ட ஆயுள், மன அமைதி ஆகியவற்றுக்கான இந்த உறுதிப்பாட்டை, டேங்க் ஹீட்டிங் எலெமென்ட்டிற்குச் சிறந்த வகையிலான 7 வருட உத்தரவாதமும், உயர்ந்தபட்ச பயனர் பாதுகாப்பிற்காக விரிவான 5-லெவல் பாதுகாப்பு ஷீல்டும் மேலும் பலப்படுத்துகின்றன.
இப்புதிய வகை மாடல்கள் குறித்துக் கருத்துத் தெரிவித்த ஓரியண்ட் எலெக்ட்ரிக் லிமிடெட், இசிடி வணிகத்தின் மூத்த துணைத் தலைவர் மற்றும் வணிகத் தலைவர், கௌரவ் தவான் அவர்கள் இவ்வாறு கூறினார், "செயல்பாட்டை மட்டுமின்றி, நீண்டகால நம்பகத்தன்மையையும், செயல்திறனையும் நாடும் இந்திய நுகர்வோரின் வளர்ந்து வரும் தேவைகளுக்கு எங்கள் புதிய வாட்டர் ஹீட்டர் புதிய வகை மாடல்கள் ஒரு நேரடி பதிலாகும். நாங்கள் புராடக்ட் புதுமையை முதன்மையாக வைத்துள்ளோம், வெர்ல்ஃப்ளோ டெக்னாலஜி உடனடி, போதுமான வெந்நீரை உறுதி செய்கிறது, அதே நேரத்தில் டூரான் ஹீட்டிங் டெக்னாலஜி கடினநீர் சேதத்திலிருந்து ஒப்பிடமுடியாத பாதுகாப்பை வழங்குகிறது. இந்த புதிய வகை வாட்டர் ஹீட்டர் மாடல்கள், மேம்பட்ட பொறியியலையும் சிந்தனைமிக்க வடிவமைப்பையும் உண்மையிலேயே கலந்து, சிறந்த வசதியையும், நீடித்துழைப்பையும் வழங்குகிறது, எங்கள் வாடிக்கையாளர்களுக்கு அன்றாட வேலைகளை எளிமையாகவும் வேகமாகவும் ஆக்குகிறது."
2 / 3
நவீன குளியலறை மற்றும் சமையலறை இடங்களுடன் தடையின்றி ஒன்றிணைக்க, நவீன அழகியலுடன் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த விரிவான தயாரிப்புத் தொகுப்பு, பல்வேறு தேவைகளைப் பூர்த்தி செய்கிறது. இதில் 5/4/3- ஸ்டார் மதிப்பீடுகளைக் கொண்ட, 6 லிட்டர் முதல் 50 லிட்டர் வரையிலான கொள்ளளவு கொண்ட ஸ்டோரேஜ் ஹீட்டர்களும் அடங்கும். இவை சதுர மற்றும் உருளை வடிவங்களிலும், செங்குத்து அல்லது கிடைமட்ட மவுண்டிங் விருப்பங்களுடனும் கிடைக்கின்றன. முக்கிய மாடல்களில் இணைப்பு குழாய்கள், பொருத்துதல் ஆகியவற்றை இந்நிறுவனம் இலவசமாக வழங்குகிறது. இன்ஸ்டன்ட் ஹீட்டர் வரிசை, 3kW/4.5kW ஹீட்டிங் எலெமென்ட் விருப்பங்களுடன் 3 லிட்டர் முதல் 5.9 லிட்டர் கொள்ளளவு வரை நீள்கிறது.
இந்த மேம்பட்ட புதிய வகை மாடல்களின் உயர்தர புராடக்ட் தயாரிப்புத் தன்மையை திறம்படத் தொடர்புகொள்ள, ஓரியண்ட் எலெக்ட்ரிக் தனது சீசன் விளம்பரமான “உடனடியாக சூடாகும்” (“Fatt Se Garam”)-ஐ வெளியிட்டுள்ளது. இந்த டிஜிட்டல் ஃபிலிமில், பிராண்ட் தூதர் எம்.எஸ். தோனி இடம்பெற்றுள்ளார், மேலும் இது புதிய வாட்டர் ஹீட்டர்களின் உடனடி சூடேற்றும் திறனை ஆக்கப்பூர்வமாக முன்னிலைப்படுத்துகிறது, இதன் மூலம் வேகமான, நம்பகமான வெந்நீர் குறித்த இப்பிராண்டின் வாக்குறுதியை மீண்டும் வலியுறுத்துகிறது. முக்கிய இடங்களில் வெளிப்புற விளம்பரங்கள், பிரிண்ட் விளம்பரங்கள் ஆகியவை சுற்றியுள்ள பார்வையை அதிகரிக்கின்றன.
இந்த புதிய வாட்டர் ஹீட்டர்கள் இப்போது நாடு முழுவதும் உள்ள முன்னணி சில்லறை விற்பனை நிலையங்களிலும், அமேசான், ஃபிளிப்கார்ட், மற்றும் குயிக் காமர்ஸ் தளங்கள் மூலம் ஆன்லைனிலும் கிடைக்கின்றன, இது நாடு முழுவதும் உள்ள நுகர்வோருக்கு எளிதில் கிடைப்பதையும், வசதியையும் உறுதி செய்கிறது.
About Orient Electric Ltd.
Orient Electric Limited is part of USD 3 billion diversified CKA Birla Group, with strong manufacturing capabilities and presence in over 30 countries. It is a trusted brand for consumer electrical products in India, offering a diverse portfolio of fans, lighting, home appliances, switches and switchgears. In the domestic market, it has penetration up to the small towns with a well organised distribution network reaching 1,35,000 retail outlets and a strong service network covering more than 450 cities. Orient Electric has established itself in the market as a one-stop solution provider of lifestyle electrical solutions. For more information, visit www.orientelectric.com.
About the CKA Birla Group
The CKA Birla Group, is an Indian multinational conglomerate with a multibillion dollar revenue. With over 35,000 employees, the group operates more than 50 manufacturing facilities across India and the world, with a presence in diverse sectors including technology, automotive, home and building and healthcare. The CKA Birla Group continuously adapts to stay ahead in a changing world. By harnessing technology and investing in people and digital transformation, the Group consistently remains agile and delivers profitable growth. Viewing value creation through a global lens, our companies operate without borders. The CKA Birla Group companies include Birlasoft, GMMCO, National Engineering Industries (manufacturer of NBC Bearings), BirlaNu (formerly HIL), Orient Electric, CKA Birla Healthcare (CKA Birla Hospitals and Birla Fertility & IVF), Orient Paper, AVTEC and Neosym. Our companies share a common purpose of serving customers, partners and communities to create long term value through trust based relationships. The CKA Birla Group is also known for its deep rooted commitment to community with
3 / 3
institutions like BIT Mesra, Modern High Schools, BM Birla Science Centre, and The CMRI Trust Hospitals, serving millions and nurturing generations of talent.