இந்தியாவில் ஆடம்பர வீடுகளை வாங்க விரும்பும் NRIகளுக்கான ஒரு முதன்மை நிகழ்வான ‘பூர்வா NRI ஹோம் ஃபெஸ்ட்’-ஐ புரவங்கரா அறிவிக்கிறது
சென்னை செப்டம்பர் 27, 2024- இந்தியாவின் முன்னணி ரியல் எஸ்டேட் நிறுவனங்களில் ஒன்றான புரவங்கரா லிமிடெட், துபாயில் உள்ள வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு (NRIகள்) தனது திட்டங்களைக் காட்சிப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்ட ஒரு சிறப்பு நிகழ்வாக 'பூர்வா NRI ஹோம் ஃபெஸ்ட்' ஐ அறிவித்துள்ளது. செப்டம்பர் 28, சனி மற்றும் செப்டம்பர் 29, ஞாயிறு ஆகிய நாட்களில் காலை 10:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை துபாயில் உள்ள ஷங்கிரி-லா ஹோட்டலில் இரண்டு நாட்கள் இந்த நிகழ்வு நடைபெறும்.
இந்த பூர்வா NRI ஹோம் ஃபெஸ்ட், பெங்களூரு, சென்னை, கொச்சி, மும்பை மற்றும் புனே ஆகிய ஐந்து முக்கிய இந்திய நகரங்களில் உள்ள 20 க்கும் மேற்பட்ட மதிப்புமிக்க திட்டங்களில் 4,000க்கும் மேற்பட்ட வீடுகளை ஆராய்ந்து தேர்வு செய்வதற்கான ஒரு வாய்ப்பை NRI களுக்கு வழங்குகிறது. இந்த நிகழ்வானது, சாத்தியமான வாங்குபவர்களுக்கு அவர்களின் முதலீட்டுத் தேவைகளுக்கு ஏற்றவாறு பல்வேறு சொத்து விருப்பங்களை வழங்குகிற சொகுசு அடுக்குமாடி குடியிருப்புகள், உலகத் தரம் வாய்ந்த வில்லாக்கள் மற்றும் வில்லா ப்ளாட்கள் ஆகியவற்றின் பொருத்தமான ஒரு வரிசையைக் காட்சிப்படுத்துகிறது.
பூர்வா NRI ஹோம் ஃபெஸ்ட் இன் சிறப்பம்சங்கள், அனைவருக்குமான சொத்து விருப்பங்களின் ஒரு விரிவான வரிசையை உள்ளடக்கியுள்ளது. வருங்கால வாங்குபவர்கள், தோராயமாக 600 சதுர அடி முதல் 5,000 சதுர அடி வரையிலான அளவுகள் கொண்ட 1-5 BHK அடுக்குமாடி குடியிருப்புகள், வில்லாக்கள் மற்றும் வில்லா ப்ளாட்டுகளை உள்ளடக்கிய ஒரு பலதரப்பட்ட போர்ட்ஃபோலியோவை ஆராய்ந்து தேர்வு செய்வதற்கான வாய்ப்பைப் பெறுவார்கள்.
புரவங்கரா லிமிடெட் நிறுவனத்தின் குழும தலைமை நிர்வாக அதிகாரி அபிஷேக் கபூர் கூறுகையில், “கோவிட்க்குப் பின், NRIகள் தங்கள் முதலீட்டின் மீதான அதிக வருவாய் தரக்கூடிய சொத்தை வாங்குவதில் ஒரு திட்டவட்டத்துடன் மிகுந்த ஆர்வம் உள்ளது. ஏப்ரல் 2023 மற்றும் பிப்ரவரி 2024 க்கு இடையில் NRI களின் வைப்புத்தொகையில் செய்யப்படும் பணம் 84.4 சதவீதம் அதிகரித்து $6.40 பில்லியனில் இருந்து $11.8 பில்லியனாக உயர்ந்துள்ளதால், இது தரவு மூலம் தெளிவாகத் தெரிகிறது. இந்த பூர்வா NRI ஹோம் ஃபெஸ்ட் என்பது எங்கள் ‘YOU’ தத்துவத்தை அனுபவிப்பதற்கான ஒரு வாய்ப்பாக இருக்கிறது,
இது வாடிக்கையாளரை நாங்கள் செய்யும் எல்லாவற்றிலும் முக்கியத்துவத்துடன் வைக்கிறது. ஒவ்வொரு NRI வீடு வாங்குபவரும் இந்தியாவில் ஒரு சொந்த வீடு வாங்குவதற்கான பயணத்தில் நம்பிக்கை மற்றும் ஆதரவை உணர்வதை நாங்கள் உறுதி செய்வோம்."என்றார்.
பூர்வா விண்டர்மேர் (சென்னை), பூர்வா க்ளெர்மான்ட் (மும்பை) மற்றும் பூர்வா பார்க் ஹில் (பெங்களூரு) போன்ற பிரீமியம் சொகுசு அடுக்குமாடி குடியிருப்புகள் முதல் சோமர்செட் ஹவுஸ் (சென்னை) மற்றும் ஓரியண்ட் கிராண்ட் (பெங்களூரு) போன்ற புதுமையான வேர்ல்ட்ஹோம் கலெக்ஷன் திட்டங்கள் வரை, ஒவ்வொருவரின் ரசனைக்கும் விருப்பத்திற்கும் ஏற்ப பொருந்தக்கூடியவைகள் அனைத்தும் உள்ளது. ஆடம்பரத்தின் உச்சத்தை விரும்புவோருக்கு, பெங்களூரில் உள்ள பூர்வா ஸ்பார்க்லிங் ஸ்பிரிங்ஸ் இல் உள்ள பிரசிடென்ஷியல் வில்லாக்கள் ஒரு ஒப்பிடமுடியாத வாழ்க்கை அனுபவத்தை வழங்குகிறன. கூடுதலாக, பூர்வா லேண்ட் பிராண்டின் வனம், ராகம் மற்றும் சௌக்கியம் போன்ற திட்டங்களில் உள்ள வில்லா ப்ளாட்டுகள், தனிப்பயன் வீடுகளை கட்ட விரும்பும் வாங்குபவர்களுக்கு சிறந்த வாய்ப்புகளை வழங்குகின்றன.
வாங்குவதில் இருந்து குடிபோகுதல் வரை ஒரு சுமூகமான நகர்வையும் அனுபவத்தையும் உறுதி செய்வதற்காக, புரவங்கரா, விரிவான விற்பனைக்கு பிந்தைய ஆதரவை வழங்குகிறது. வாங்குபவர்கள் எளிதாக நிதியளிப்பு விருப்பங்களை அணுக முடியும் என்பதை உறுதிப்படுத்துகின்ற கடன் வசதிக்கான உதவி இதில் அடங்குகிறது. கூடுதலாக பூர்வா ஸ்ட்ரீக்ஸ் மூலம், வாங்குபவர்கள் அவர்களின் புதிய வீடுகளை அவர்களின் விவரக்குறிப்புகளுக்கு ஏற்ப வடிவமைக்க அனுமதிக்கின்ற தனிப்பயனாக்கப்பட்ட உள்துறை வடிவமைப்பு சேவைகளை அவர்களே பெறலாம். கூடுதலாக, இந்த நிறுவனம், குடியேறத் தயாராக உள்ள சொத்துக்களில் ஆர்வமுள்ளவர்களுக்கு வாடகை உதவி மற்றும் ஒப்பந்தங்கள் மற்றும் ஆவணங்களை நிர்வகிக்க CRM ஆதரவு ஆகியவற்றை வழங்குகிறது. இந்த முழுமையான ஆதரவு அமைப்பு, இந்தியாவில் முதலீடு செய்யும் NRIகளுக்கு ஒரு மன அழுத்தமில்லாத அனுபவத்தை வழங்குவதில் புரவங்கரா நிறுவனத்தின் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துகிறது.
வாங்கும் அனுபவத்தை மேம்படுத்துவதற்காக இந்த நிகழ்விற்கான பிரத்யேக சலுகைகளையும் புரவங்கரா தேர்வு செய்துள்ளது. இந்த நிகழ்வின் போது முன்பதிவு செய்யும் வாங்குபவர்கள், நிறுவனத்தின் உட்புற வடிவமைப்புப் பிரிவான பூர்வா ஸ்ட்ரீக்ஸ் வழங்கும் ரூ. 1 லட்சம்
முதல் ரூ. 10 லட்சம் வரையிலான வவுச்சர்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
காட்சிப்படுத்தப்பட்ட 4,000க்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் பிரத்யேக பலன்களுடன், இந்த பூர்வா NRI ஹோம் ஃபெஸ்ட், இந்தியாவின் மிகச்சிறந்த ரியல் எஸ்டேட் வழங்கல்களில் முதலீடு செய்ய விரும்பும் NRIக்கள் ஒரு கட்டாயம் கலந்துகொள்ள வேண்டிய நிகழ்வாகும்.