Monday, July 29, 2024

தமிழ்நாட்டில் மேலும் 25 லட்சம் குடும்பங்களுக்கு ஏர்டெல் தன் Wi-Fi சேவைகளை விரிவாக்குகிறது

தமிழ்நாட்டில் மேலும் 25 லட்சம் குடும்பங்களுக்கு ஏர்டெல் தன் Wi-Fi சேவைகளை விரிவாக்குகிறது 


பரமக்குடி, குன்னூர், சென்னை, கோயம்புத்தூர், மதுரை, காஞ்சிபுரம் ஆகியவற்றை உள்ளடக்கிய 38 மாவட்டங்களில் Wi-Fi சேவையை விரிவாக்குகிறது

முன்னணி தமிழ் OTT யையும் ஸ்டார் விஜய், சன் TV, கலைஞர் TV போன்றவற்றை உள்ளடக்கிய ஏராளமான TV சேனல்களையும் வழங்குகிறது


சென்னை, ஜூலை 29, 2024: இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்களில் ஒன்றான பாரதி ஏர்டெல் (“ஏர்டெல்”) இன்று, தமிழ்நாட்டில் கூடுதலாக 25 லட்சம் புதிய குடும்பங்களுக்கு Wi-Fi சேவையைக் கூடுதலாக வழங்கியுள்ளதாக அறிவித்துள்ளது.


ஏர்டெல் Wi-Fi மூலம், ஒரு வாடிக்கையாளர் அதிவேகமானதும் நம்பகத்துக்குரியதுமான வயர்லெஸ் இணையச் சேவையைப் பெறுவது மட்டுமல்லாமல் வரம்பற்ற அளவில் ஸ்ட்ரீமிங், 20+ OTT சேவைகள் மற்றும் 350+ டிவி சேனல்களுக்கான அணுகல் உள்ளிட்ட பல நன்மைகளைப் பெறுகிறார். ஏர்டெல் தேங்க்ஸ் செயலி மூலம் ஆர்டர் செய்து அல்லது 8130181301 என்ற எண்ணை அழைப்பதன் மூலம் வாடிக்கையாளர்கள் ஏர்டெல் Wi-Fi யை முன்பதிவு செய்யலாம்.


தமிழ்நாடு பாரதி ஏர்டெல் தலைமை நிர்வாக அதிகாரி தருண் விர்மானி “ஏர்டெல் Wi-Fi இப்போது தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் கிடைக்கிறது என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். ஏர்டெல் Wi-Fi மூலம்,  வாடிக்கையாளர்கள் 20+ OTTகள், 350+ தொலைக்காட்சி சேனல்கள் மற்றும் நம்பகமான அதிவேக வயர்லெஸ் Wi-Fi சேவைக்கான அணுகல் உட்பட பல்வேறு வகையான பொழுதுபோக்கு விருப்பத் தேர்வுகளை மாதம் 699 என்ற மலிவான கட்டணத்தில் பெறலாம். வாடிக்கையாளர்கள் இதைப் பயன்படுத்தி எல்லையற்ற விதமாகப் பொழுதுபோக்கை அனுபவித்து மகிழ்வார்கள் என்று நம்புகிறோம்” என்றார்.


திட்டங்கள் ஒரு பார்வை:

 

Tariff

Speed

Benefits

Other Benefits



₹699

Up to 40 Mbps

350+ TV channels (HD included)

Disney+ Hotstar, 20+ OTTs & much more



₹899

Up to 100 Mbps

350+ TV channels (HD included)

Disney+ Hotstar, 20+ OTTs & much more



₹1099

Up to 200 Mbps

350+ TV channels (HD included)

Amazon Prime, Disney+ Hotstar, 20+ OTTs & much more



₹1599

Up to 300 Mbps

350+ TV channels (HD included)

Netflix, Amazon Prime, Disney+ Hotstar, 20+ OTTs & much more



₹3999

Up to 1 Gbps

350+ TV channels (HD included)

Netflix, Amazon Prime, Disney+ Hotstar, 20+ OTTs & much more



 

தமிழ்நாட்டு வாடிக்கையாளர்கள் ஸ்டார் விஜய், சன் TV, கலைஞர் TV, விஜய் TV, ஸீ தமிழ், பாலிமர் TV, புதுயுகம் TV மற்றும் டிஸ்னி+ ஹோல்ஸ்டார் தமிழ், ஸீ5 தமிழ், மற்றும் சோனிLIV தமிழ் போன்ற பிரபலமான OTT தளங்கள் உள்ளிட்ட சில முன்னணி தமிழ் OTT தளங்கள் மற்றும் சேனல்களை வரம்பற்ற முறையில் அணுகி அனுபவித்து மகிழ முடியும்.