Thursday, October 8, 2026

திருப்போரூரில் புதிய பள்ளிப் கட்டிடத்தைத் திறந்து வைத்து, ‘வீடுகளைச் சிறந்த இல்லங்களாக மாற்றுதல்’ எனும் தனது உயரிய நோக்கத்தை நோக்கி நகரும் வெர்சுனி இந்தியா!

திருப்போரூரில் புதிய பள்ளிப் கட்டிடத்தைத் திறந்து வைத்து, ‘வீடுகளைச் சிறந்த இல்லங்களாக மாற்றுதல்’ எனும் தனது உயரிய நோக்கத்தை நோக்கி நகரும் வெர்சுனி இந்தியா!  

தையூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள புதிய உள்கட்டமைப்பு வசதியினால், மாணவர் சேர்க்கைத் திறனை சுமார் 35-லிருந்து 100 முதல் 140 வரை உயர்த்தியுள்ளது. இது குழந்தைகள் சிறந்து கற்கவும், வளரவும், முன்னேறவும் மிகச் சிறந்த சூழலை உருவாக்குகிறது. 

சென்னை 2026: உலகின் முன்னணி வீட்டு உபயோகப் பொருள் பிராண்டுகளைக் கொண்ட வெர்சுனி இந்தியா, செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் தொகுதியில் அமைந்துள்ள தையூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நிறுவனம் சார்பில் புதிதாக கட்டிடம் ஒன்றை திறந்து வைத்துள்ளது. இந்நிறுவனம், “வீடுகளைச் சிறந்த இல்லங்களாக மாற்றுதல்” எனும் தனது உயரிய நோக்கத்தைக் கொண்டு சேர்ப்பதற்கான முயற்சிகளின் ஒரு பகுதியாக இத்திட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அனைவரும் பாதுகாப்பாகவும், வசதியாகவும், தங்கள் திறன்களை வளர்த்துக் கொள்ளக்கூடிய இடத்தைப் பெறத் தகுதியானவர்கள் என்ற நம்பிக்கையே இந்த நோக்கத்தின் மையக்கருத்தாகும். பள்ளி உள்கட்டமைப்பில் முதலீடு செய்வதன் மூலம், தையூர் பகுதி குழந்தைகளுக்கு சிறந்த கற்றல் சூழலையும், அவர்கள் வளர்ந்து தன்னம்பிக்கையுடன் எதிர்காலத்தை எதிர்நோக்குவதற்கான நல்வாய்ப்பையும் ஏற்படுத்தித் தர வெர்சுனி இந்தியா முயன்றுள்ளது.

ஐந்தாம் வகுப்பு வரை கல்வி வழங்கும் இப்பள்ளி, முன்பு மிகக் குறைந்த இடவசதி மற்றும் உள்கட்டமைப்புடன் ஒரு சிறிய கூரை போன்ற அமைப்பிலேயே இயங்கி வந்தது. இந்த இடநெருக்கடி கற்றல் சூழலைப் பாதித்ததோடு, கூடுதல் மாணவர்களைச் சேர்ப்பதற்கும் தடையாக இருந்தது. தற்போது புதிதாகக் கட்டப்பட்டுள்ள கட்டிடம் மேம்படுத்தப்பட்ட உள்கட்டமைப்பு மற்றும் கூடுதல் இடவசதியை வழங்குகிறது. இதன் மூலம் சுமார் 100 முதல் 140 மாணவர்கள் வரை கல்வி பயிலும் வகையில் பள்ளியின் மாணவர் சேர்க்கைத் திறன் உயர்ந்துள்ளது.

இக்கட்டிடம் 2025-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டு 2026-ஆம் ஆண்டில் நிறைவு செய்யப்பட்டது. வெர்சுனி இந்தியா நிறுவனத்தின் CSR திட்டத்தை அமல்படுத்தும் பார்ட்னராக 'ரைட்ஸ் எஜுகேஷன் அண்ட் டெவலப்மென்ட் சென்டர்' (REDC) செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனமானது, திட்டமிடல், செயலாக்கம் மற்றும் கண்காணிப்புப் பணிகளுக்கு உறுதுணையாக இருந்தது.

திறப்பு விழாவில் உரையாற்றிய வெர்சுனி இந்தியா நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநரும் முதன்மை நிர்வாக அதிகாரியுமான (MD & CEO) குல்பாஹார் தவ்ரானி கூறுகையில், “குழந்தைகள் கற்றுக்கொள்ளவும், வளரவும், கனவு காணவும் ஊக்கமளிக்கும் ஒரு சூழலை உருவாக்குவதிலிருந்தே கல்வி தொடங்குகிறது. வெர்சுனி நிறுவனத்தின் நோக்கம் வீடுகளைச் சிறந்த இல்லங்களாக மாற்றுவதாகும். மக்கள் வசதியாகவும், ஆதரவாகவும், தங்கள் திறன்களை வளர்த்துக்கொள்ளும் வகையிலான சூழலை உருவாக்குவது, நம்மைச் சுற்றியுள்ள சமூகங்களுக்கும் நீட்டிக்கப்பட வேண்டும் என்பதில் நாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளோம். தையூர் பள்ளியின் அன்றைய நிலையைப் பற்றி அறிந்தபோது, எங்களால் முடிந்த ஒரு பயனுள்ள பங்களிப்பை வழங்க வாய்ப்பு இருப்பதை உணர்ந்தோம். இந்நீதிய கட்டிடம் தையூர் குழந்தைகளுக்கு ஒரு சிறந்த கற்றல் சூழலை உருவாக்குவதற்கான ஒரு சிறிய அடியாகும்.

எங்களைப் பொறுத்தவரை, அதிகமான குழந்தைகள் இந்தப் பள்ளியின் கதவுகளைக் கடந்து உள்ளே நுழைவதையும், தன்னம்பிக்கையுடன் கற்றுக்கொள்வதையும், தங்களுக்குப் பிரகாசமான எதிர்காலத்தை அமைத்துக் கொள்வதற்கான வாய்ப்பைப் பெறுவதையுமே இத்திட்டத்தின் உண்மையான வெற்றியாகக் கருதுகிறோம். இத்திட்டத்தை நிஜமாக்க எங்களுடைய CSR கூட்டாளியான REDC அமைப்புக்கும், பள்ளி நிர்வாகம் மற்றும் உள்ளூர் மக்களுடன் இணைந்து பணியாற்றிய அனைவருக்கும் எங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். இந்தப் பயணத்தில் ஒரு பகுதியாக இருப்பது எங்களுக்குக் கிடைத்த பெருமையாகும்,” என்று தெரிவித்தார்.

திறப்பு விழாவில் மாணவர்கள், ஆசிரியர்கள், உள்ளூர் மக்கள், வெர்சுனி இந்தியா நிறுவனத்தின் ஊழியர்கள் மற்றும் REDC அமைப்பின் பிரதிநிதிகள் அனைவரும் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள், பள்ளிப் பைகள் மற்றும் கல்வி உபகரணப் பெட்டிகள் வழங்குதல், ஊழியர்களின் பங்கேற்பு நடவடிக்கைகள் மற்றும் மரக்கன்றுகள் நடுதல் ஆகியவை இடம்பெற்றன.

தற்போது இப்பள்ளியில் சுமார் 35 மாணவர்கள் கல்வி பயின்று வரும் நிலையில், இந்த புதிய உள்கட்டமைப்பு வரும் ஆண்டுகளில் சுற்றியுள்ள சமூகங்களைச் சேர்ந்த மேலும் பல குழந்தைகளை வரவேற்பதற்கான சாத்தியக்கூறுகளை உருவாக்கியுள்ளது. வாய்ப்புகளை உருவாக்குதல் மற்றும் மேம்பட்ட கற்றல் சூழல்களுக்கான அணுகலை சாத்தியமாக்குதல் ஆகியவற்றை மையமாகக் கொண்டு, தான் இயங்கும் சமூகங்களுக்குப் பயனுள்ள வகையில் பங்களிப்பளிப்பதற்கான வெர்சுனி இந்தியாவின் முயற்சிகளில் இத்திட்டமும் ஒரு பகுதியாகும்.

திருப்போரூரில் புதிய பள்ளிப் கட்டிடத்தைத் திறந்து வைத்து, ‘வீடுகளைச் சிறந்த இல்லங்களாக மாற்றுதல்’ எனும் தனது உயரிய நோக்கத்தை நோக்கி நகரும் வெர்சுனி இந்தியா

திருப்போரூரில் புதிய பள்ளிப் கட்டிடத்தைத் திறந்து வைத்து, ‘வீடுகளைச் சிறந்த இல்லங்களாக மாற்றுதல்’ எனும் தனது உயரிய நோக்கத்தை நோக்கி நகரும் வெர்சுனி இந்தியா!  

தையூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள புதிய உள்கட்டமைப்பு வசதியினால், மாணவர் சேர்க்கைத் திறனை சுமார் 35-லிருந்து 100 முதல் 140 வரை உயர்த்தியுள்ளது. இது குழந்தைகள் சிறந்து கற்கவும், வளரவும், முன்னேறவும் மிகச் சிறந்த சூழலை உருவாக்குகிறது. 

சென்னை 2026: உலகின் முன்னணி வீட்டு உபயோகப் பொருள் பிராண்டுகளைக் கொண்ட வெர்சுனி இந்தியா, செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் தொகுதியில் அமைந்துள்ள தையூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நிறுவனம் சார்பில் புதிதாக கட்டிடம் ஒன்றை திறந்து வைத்துள்ளது. இந்நிறுவனம், “வீடுகளைச் சிறந்த இல்லங்களாக மாற்றுதல்” எனும் தனது உயரிய நோக்கத்தைக் கொண்டு சேர்ப்பதற்கான முயற்சிகளின் ஒரு பகுதியாக இத்திட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அனைவரும் பாதுகாப்பாகவும், வசதியாகவும், தங்கள் திறன்களை வளர்த்துக் கொள்ளக்கூடிய இடத்தைப் பெறத் தகுதியானவர்கள் என்ற நம்பிக்கையே இந்த நோக்கத்தின் மையக்கருத்தாகும். பள்ளி உள்கட்டமைப்பில் முதலீடு செய்வதன் மூலம், தையூர் பகுதி குழந்தைகளுக்கு சிறந்த கற்றல் சூழலையும், அவர்கள் வளர்ந்து தன்னம்பிக்கையுடன் எதிர்காலத்தை எதிர்நோக்குவதற்கான நல்வாய்ப்பையும் ஏற்படுத்தித் தர வெர்சுனி இந்தியா முயன்றுள்ளது.

ஐந்தாம் வகுப்பு வரை கல்வி வழங்கும் இப்பள்ளி, முன்பு மிகக் குறைந்த இடவசதி மற்றும் உள்கட்டமைப்புடன் ஒரு சிறிய கூரை போன்ற அமைப்பிலேயே இயங்கி வந்தது. இந்த இடநெருக்கடி கற்றல் சூழலைப் பாதித்ததோடு, கூடுதல் மாணவர்களைச் சேர்ப்பதற்கும் தடையாக இருந்தது. தற்போது புதிதாகக் கட்டப்பட்டுள்ள கட்டிடம் மேம்படுத்தப்பட்ட உள்கட்டமைப்பு மற்றும் கூடுதல் இடவசதியை வழங்குகிறது. இதன் மூலம் சுமார் 100 முதல் 140 மாணவர்கள் வரை கல்வி பயிலும் வகையில் பள்ளியின் மாணவர் சேர்க்கைத் திறன் உயர்ந்துள்ளது.

இக்கட்டிடம் 2025-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டு 2026-ஆம் ஆண்டில் நிறைவு செய்யப்பட்டது. வெர்சுனி இந்தியா நிறுவனத்தின் CSR திட்டத்தை அமல்படுத்தும் பார்ட்னராக 'ரைட்ஸ் எஜுகேஷன் அண்ட் டெவலப்மென்ட் சென்டர்' (REDC) செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனமானது, திட்டமிடல், செயலாக்கம் மற்றும் கண்காணிப்புப் பணிகளுக்கு உறுதுணையாக இருந்தது.

திறப்பு விழாவில் உரையாற்றிய வெர்சுனி இந்தியா நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநரும் முதன்மை நிர்வாக அதிகாரியுமான (MD & CEO) குல்பாஹார் தவ்ரானி கூறுகையில், “குழந்தைகள் கற்றுக்கொள்ளவும், வளரவும், கனவு காணவும் ஊக்கமளிக்கும் ஒரு சூழலை உருவாக்குவதிலிருந்தே கல்வி தொடங்குகிறது. வெர்சுனி நிறுவனத்தின் நோக்கம் வீடுகளைச் சிறந்த இல்லங்களாக மாற்றுவதாகும். மக்கள் வசதியாகவும், ஆதரவாகவும், தங்கள் திறன்களை வளர்த்துக்கொள்ளும் வகையிலான சூழலை உருவாக்குவது, நம்மைச் சுற்றியுள்ள சமூகங்களுக்கும் நீட்டிக்கப்பட வேண்டும் என்பதில் நாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளோம். தையூர் பள்ளியின் அன்றைய நிலையைப் பற்றி அறிந்தபோது, எங்களால் முடிந்த ஒரு பயனுள்ள பங்களிப்பை வழங்க வாய்ப்பு இருப்பதை உணர்ந்தோம். இந்நீதிய கட்டிடம் தையூர் குழந்தைகளுக்கு ஒரு சிறந்த கற்றல் சூழலை உருவாக்குவதற்கான ஒரு சிறிய அடியாகும்.

எங்களைப் பொறுத்தவரை, அதிகமான குழந்தைகள் இந்தப் பள்ளியின் கதவுகளைக் கடந்து உள்ளே நுழைவதையும், தன்னம்பிக்கையுடன் கற்றுக்கொள்வதையும், தங்களுக்குப் பிரகாசமான எதிர்காலத்தை அமைத்துக் கொள்வதற்கான வாய்ப்பைப் பெறுவதையுமே இத்திட்டத்தின் உண்மையான வெற்றியாகக் கருதுகிறோம். இத்திட்டத்தை நிஜமாக்க எங்களுடைய CSR கூட்டாளியான REDC அமைப்புக்கும், பள்ளி நிர்வாகம் மற்றும் உள்ளூர் மக்களுடன் இணைந்து பணியாற்றிய அனைவருக்கும் எங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். இந்தப் பயணத்தில் ஒரு பகுதியாக இருப்பது எங்களுக்குக் கிடைத்த பெருமையாகும்,” என்று தெரிவித்தார்.

திறப்பு விழாவில் மாணவர்கள், ஆசிரியர்கள், உள்ளூர் மக்கள், வெர்சுனி இந்தியா நிறுவனத்தின் ஊழியர்கள் மற்றும் REDC அமைப்பின் பிரதிநிதிகள் அனைவரும் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள், பள்ளிப் பைகள் மற்றும் கல்வி உபகரணப் பெட்டிகள் வழங்குதல், ஊழியர்களின் பங்கேற்பு நடவடிக்கைகள் மற்றும் மரக்கன்றுகள் நடுதல் ஆகியவை இடம்பெற்றன.

தற்போது இப்பள்ளியில் சுமார் 35 மாணவர்கள் கல்வி பயின்று வரும் நிலையில், இந்த புதிய உள்கட்டமைப்பு வரும் ஆண்டுகளில் சுற்றியுள்ள சமூகங்களைச் சேர்ந்த மேலும் பல குழந்தைகளை வரவேற்பதற்கான சாத்தியக்கூறுகளை உருவாக்கியுள்ளது. வாய்ப்புகளை உருவாக்குதல் மற்றும் மேம்பட்ட கற்றல் சூழல்களுக்கான அணுகலை சாத்தியமாக்குதல் ஆகியவற்றை மையமாகக் கொண்டு, தான் இயங்கும் சமூகங்களுக்குப் பயனுள்ள வகையில் பங்களிப்பளிப்பதற்கான வெர்சுனி இந்தியாவின் முயற்சிகளில் இத்திட்டமும் ஒரு பகுதியாகும்.

Wednesday, October 7, 2026

தமிழ்நாட்டின் கடலூரில் புதிய ஆதார் சேவை மையம் தொடக்கம்

தமிழ்நாட்டின் கடலூரில் புதிய ஆதார் சேவை மையம் தொடக்கம்

சென்னை: தமிழ்நாட்டின் கடலூரில் புதிய அதிநவீன ஆதார் சேவை மையம் (ASK) செயல்பாட்டுக்கு வந்துள்ளது. இந்த மையத்தின் மூலம், பொதுமக்கள் ஆதார் பதிவு மற்றும் ஆதார் விவரங்களைப் புதுப்பிக்கும் சேவைகளை எளிதாகவும் வசதியாகவும் பெற முடியும்.


கடலூர், சூரப்பநாயக்கன் சாவடி, காந்தி பில்டிங், தரைத்தளம், 24A என்ற முகவரியில் அமைந்துள்ள இந்தப் புதிய மையத்தில், ஆதார் பதிவு மற்றும் புதுப்பிப்பு சேவைகளுக்காக எட்டு முழுமையாக செயல்படும் கிட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. இப்பகுதியில் அதிகரித்து வரும் ஆதார் சேவைகளுக்கான தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் இந்த மையம் அமைக்கப்பட்டுள்ளது.


அரசுகள் மற்றும் பொதுமக்களுக்கு உலகளவில் AI மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த சேவைகளை வழங்கி வரும் முன்னணி நிறுவனமான BLS International இந்த ஆதார் சேவை மையத்தை நிர்வகித்து செயல்படுத்துகிறது. இந்தியா முழுவதும் டிஜிட்டல் அடையாள உள்கட்டமைப்பை மேலும் வலுப்படுத்துவதுடன், பொதுமக்களுக்கு சேவைகளை எளிதாகவும் விரைவாகவும் சென்றடையச் செய்வதில் BLS International கொண்டுள்ள தொடர்ச்சியான உறுதிப்பாட்டை இந்த மையம் பிரதிபலிக்கிறது.


ஆதார் சேவை மையத்தில் புதிய ஆதார் பதிவு, பெயர், முகவரி மற்றும் பிறந்த தேதி உள்ளிட்ட மக்கள்தொகை சார்ந்த விவரங்களைப் புதுப்பித்தல், பயோமெட்ரிக் விவரங்களைப் புதுப்பித்தல் உள்ளிட்ட பல்வேறு சேவைகள் வழங்கப்படுகின்றன. மேலும், புகார் தீர்வு மற்றும் ஆதார் தொடர்பான கேள்விகளுக்கு பதிலளிக்கும் சேவைகளும் இங்கு கிடைக்கின்றன.


இந்த மையத்தின் தொடக்க விழாவில், மாவட்ட ஆட்சியர் (IAS) திரு. ஆதித்யா செந்தில் குமார் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.


பொதுமக்களுக்கு எளிதான மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய சேவையை வழங்கும் வகையில், இந்த மையத்தில் சக்கர நாற்காலி பயன்படுத்துவோருக்கான அணுகல் வசதி மற்றும் அனைவரும் எளிதாகப் பயன்படுத்தக்கூடிய கழிப்பறைகள் உள்ளிட்ட நவீன வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஆதார் பதிவு, மக்கள்தொகை சார்ந்த மற்றும் பயோமெட்ரிக் விவரங்களைப் புதுப்பித்தல், ஆவணங்களைப் புதுப்பித்தல் உள்ளிட்ட பல்வேறு சேவைகளைப் பாதுகாப்பான மற்றும் வசதியான சூழலில் பொதுமக்கள் பெற முடியும்.

இந்த மையம் தினசரி 200 முதல் 250 பொதுமக்களுக்கு ஆதார் சேவைகளை வழங்கும் திறன் கொண்டது. மேலும், தனி உதவி மையம், வசதியான காத்திருப்பு பகுதிகள், டோக்கன் மற்றும் வரிசை மேலாண்மை அமைப்பு, குடிநீர் மற்றும் குளிர்சாதன வசதி ஆகியவையும் இங்கு ஏற்படுத்தப்பட்டுள்ளன. சேவைகள் தொடர்பான தகவல்கள் தெளிவாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதுடன், மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் தேவைகளை கருத்தில் கொண்டு சிறப்பு வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.

உடல் பருமன் மற்றும் வளர்சிதை மாற்றப் பிரச்சனைகளுக்கென 'சமத்வா' சிறப்பு மையத்தை தொடங்கியது காவேரி மருத்துவமனை

உடல் பருமன் மற்றும் வளர்சிதை மாற்றப் பிரச்சனைகளுக்கென 'சமத்வா' சிறப்பு மையத்தை தொடங்கியது காவேரி மருத்துவமனை

காவேரி மருத்துவமனை, ரேடியல் ரோட்டில், உடல் பருமன், வளர்சிதை மாற்ற ஆரோக்கியம் மற்றும் வாழ்க்கை முறை மாற்றத்திற்கான SAMATVA மையத்தை தெலுங்கானா முன்னாள் ஆளுநரும், புதுச்சேரி முன்னாள் துணைநிலை ஆளுநருமான டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் தொடங்கி வைத்தார்.இந்நிகழ்வில் காவேரி மருத்துவமனை ரேடியல் ரோட்டின் மருத்துவ இரைப்பைக் குடல் பிரிவின் மருத்துவத் தலைவர் டாக்டர் பியூஷ் பவானே, காவேரி மருத்துவமனை ரேடியல் ரோட்டின் ஹார்மோன் துறை (எண்டோக்ரினாலஜி) ஆலோசகர் டாக்டர் ரமீஸ் ராஜா பி மற்றும் SAMATVA குழுவினர் உடனிருந்தனர்.


●தெலுங்கானா முன்னாள் ஆளுநரும், புதுச்சேரி முன்னாள் துணை நிலை ஆளுநருமான டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் திறந்து வைத்தார்.

சென்னை, அக்டோபர் 07, 2026: உடல் பருமன் மற்றும் வளர்சிதை மாற்ற பிரச்சனைகளுக்கு விரிவான, ஒருங்கிணைந்த சிகிச்சை, அத்துடன் வாழ்க்கை முறை மாற்றத்திற்கான பிரத்யேக வழிமுறைகளை தகுந்த நிபுணர்களைக் கொண்டு வழங்குவதற்காக காவேரி மருத்துவமனை - ரேடியல் ரோடு, ‘சமத்வா’ என்ற சிறப்பு மையத்தை தொடங்கியுள்ளது. இந்த மையத்தை தெலுங்கானா முன்னாள் ஆளுநரும், புதுச்சேரி முன்னாள் துணை நிலை ஆளுநருமான டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் இன்று தொடங்கி வைத்தார்.


உடல் பருமன் மற்றும் வளர்சிதை மாற்றம் தொடர்பான உடல் நல பிரச்சனைகள் அதிகரித்து வருகின்றன.  சமீபத்திய தேசிய குடும்ப சுகாதார சர்வே-6 (2023-24)ன் படி, தமிழ்நாட்டில் 15 முதல் 49 வயதுடைய பெண்களில் 44.2% பேர் அதிக எடை அல்லது உடல் பருமனுடன் உள்ளனர். உடல் பருமன் பிரச்சனைகளுக்கு வழக்கமான எடைக் குறைப்பு திட்டங்கள் மட்டும் போதுமானதாக இருக்காது. ஒவ்வொரு நபரின் வளர்சிதை மாற்றம், ஊட்டச்சத்து, உடலியல் சார்ந்த நிலைகளுக்கு ஏற்ப தனியாக சிகிச்சை முறைகளை உருவாக்க வேண்டும். தவிர, தகுந்த வாழ்க்கை முறை மாற்றங்களும் அவசியம். எனவே இவை அனைத்தையும் மக்கள் ஒரே இடத்தில் ஒருங்கிணைந்த முறையில் பெறுவதற்காக சமத்வா மையம் உருவாக்கப்பட்டுள்ளது.


இம்மையத்தின் பல்துறை மருத்துவக் குழுவில் பொது மருத்துவர்கள், ஹார்மோன் நிபுணர்கள் (எண்டோக்ரினாலஜிஸ்ட்ஸ்), இரைப்பைக் குடல் மருத்துவ நிபுணர்கள், கல்லீரல் மருத்துவ நிபுணர்கள் மற்றும் பிற துறை நிபுணர்கள் இடம்பெற்றுள்ளனர். சமத்வா உடல் எடையை குறைப்பதில் மட்டும் கவனம் செலுத்தாமல், வளர்சிதை மாற்ற செயல்பாடுகளை மேம்படுத்துவதிலும், உடல் பருமனால் ஏற்பட வாய்ப்புள்ள பிற நோய்களை வராமல் தடுப்பதிலும், சரியான வாழ்க்கை முறைகளை பரிந்துரைப்பதிலும் கவனம் செலுத்தும்.


சமத்வா மையம் குறித்து காவேரி மருத்துவமனை ரேடியல் ரோட்டின் மருத்துவ இரைப்பைக் குடல் பிரிவின் மருத்துவத் தலைவர் டாக்டர் பியூஷ் பவானே பேசுகையில், “உடல் பருமன் வளர்சிதை மாற்ற பிரச்சனைகள் நீரிழிவு நோய், கொழுப்பு கல்லீரல் நோய், உயர் இரத்த அழுத்தம் மற்றும் இருதய நோய் போன்ற நோய்கள் தோன்ற காரணமாக அமையலாம். இந்த அபாயங்களை விரிவாக மதிப்பீடு செய்து, ஒவ்வொரு நோயாளிக்கும் ஏற்ற தகுந்த சிகிச்சைகளை சமத்வா மையம் வழங்கும்,” என்றார்.


காவேரி மருத்துவமனை ரேடியல் ரோட்டின் ஹார்மோன் துறை (எண்டோக்ரினாலஜி) ஆலோசகர் டாக்டர் ரமீஸ் ராஜா பி பேசுகையில், “உடல் பருமன் என்பது ஒரு சிக்கலான வளர்சிதை மாற்ற நிலையாகும். இது உடலின் பல உறுப்பு மண்டலங்களையும் பாதிக்கிறது. உடல் பருமன் மேலாண்மைக்கு பல்வேறு துறை சார்ந்த பிரத்யேகமான அணுகுமுறையே  முக்கிய தீர்வு. சமத்வா மையத்தில் நோயாளிகளுக்கு விரிவான மதிப்பீட்டின் மூலம் தனிப்பட்ட அபாயங்களைக் கண்டறிந்து, பொருத்தமான சிகிச்சை அணுகுமுறையை தீர்மானித்து திறம்பட வழங்குகிறோம்,” என்றார்.


காவேரி மருத்துவமனை குழுமத்தின் இணை நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குநர் டாக்டர் அரவிந்தன் செல்வராஜ் கூறுகையில், “மக்களின் மாறிவரும் ஆரோக்கியத் தேவைகளுக்கு ஏற்ப மருத்துவச் சேவைகளும் மாற வேண்டும் என்று காவேரி மருத்துவமனை நம்புகிறது. உடல் பருமன் மற்றும் வளர்சிதை மாற்றக் கோளாறுகள் அதிகரித்து வரும் நிலையில், மருத்துவமனைகள் நீண்ட கால மற்றும் ஒருங்கிணைந்த அணுகுமுறைகளின் தேவையும் அதிகரித்துள்ளது. இதை கருத்தில் கொண்டு எடைக் குறைப்பையும் தாண்டி, ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் வாழ்க்கைத் தரத்தையும் மேம்படுத்துவதில் கவனம் செலுத்தும் ஒரு மருத்துவ சேவை முறையை சமத்வா மையம் மூலம் அறிமுகப்படுத்தியுள்ளோம். மருத்துவ நிபுணத்துவத்தையும் வாழ்க்கை முறை மாற்றங்களையும் ஒன்றிணைக்கும் நோக்கமே இம்மையத்தின் தனிச்சிறப்பு,” என்றார்.


நிலையான வாழ்க்கை முறை மாற்றத்திற்குத் தொடர்ச்சியான வழிகாட்டுதலும் கண்காணிப்பும் தேவைப்படுவதால், சிகிச்சைக்கு பிறகும் இந்த மையம் நோயாளிகளுடன் தொடர்ந்து பயணம் செய்து நோயாளிகளின் முன்னேற்றம் மற்றும் மாறிவரும் தேவைகளின் அடிப்படையில் தனது சிகிச்சை முறைகளை  தகவமைத்து வழங்கும்.

Kauvery Hospital Radial Road Launches SAMATVA, Bringing Obesity and Metabolic Care Together Under One Roof

Kauvery Hospital Radial Road Launches SAMATVA, Bringing Obesity and Metabolic Care Together Under One Roof


photo and the caption for them below

The launch of SAMATVA, Centre for Obesity, Metabolic Health & Lifestyle Transformation, at Kauvery Hospital, Radial Road, by Dr. Tamilisai Soundararajan, former Governor of Telangana and former Lieutenant Governor of Puducherry, along with Dr. Piyush Bawane, Clinical Lead, Medical Gastroenterology, and Dr. Rameez Raja B, Consultant, Endocrinology, Kauvery Hospital, Radial Road, and the SAMATVA team.

Dr. Tamilisai Soundararajan, Former Governor of Telangana and Former Lieutenant Governor of Puducherry, launched the clinic 

Chennai, 07 October 2026: Kauvery Hospital Radial Road has launched SAMATVA, Centre for Obesity, Metabolic Health & Lifestyle Transformation, a dedicated centre offering comprehensive and coordinated care for people with obesity and related metabolic health concerns. Dr. Tamilisai Soundararajan, former Governor of Telangana and former Lieutenant Governor of Puducherry, launched the clinic.

The latest National Family Health Survey-6 (2023-24) indicates that 44.2% of women aged 15-49 in Tamil Nadu are overweight or obese, highlighting the growing burden of excess weight and its associated health risks. Against this backdrop, SAMATVA takes an integrated approach that moves beyond conventional weight-loss programmes. The centre brings together medical expertise and evidence-based lifestyle interventions to assess an individual's medical, metabolic, nutritional, physical and behavioural needs and develop a personalised care pathway accordingly.

The multidisciplinary team at SAMATVA includes physicians, endocrinologists, gastroenterologists, hepatologists and allied health professionals, enabling patients to access coordinated care under one roof. The approach focuses not only on weight reduction, but also on improving metabolic health, reducing obesity-related health risks and supporting sustainable lifestyle changes.

Commenting on the launch, Dr. Piyush Bawane, Clinical Lead, Medical Gastroenterology, Kauvery Hospital, Radial Road, said, “Obesity can have a significant impact on metabolic health and is often associated with conditions such as diabetes, fatty liver disease, hypertension and cardiovascular risk. At SAMATVA, our approach is to assess these associated risks comprehensively and develop an appropriate treatment plan for each patient. This allows us to address obesity as a health condition while also managing the broader metabolic risks associated with it.”

Dr. Rameez Raja B, Consultant, Endocrinology, Kauvery Hospital, Radial Road said, “Obesity is a complex metabolic condition, and its impact can extend across multiple organ systems. A comprehensive assessment helps identify individual risks and determine the appropriate treatment approach. SAMATVA brings together multidisciplinary expertise to support a more personalised approach to obesity management.”


Dr. Aravindan Selvaraj, Co-founder and Executive Director, Kauvery Group of Hospitals, said, “At Kauvery, we believe healthcare must evolve with the changing health needs of the communities we serve. The growing burden of obesity and metabolic disorders calls for a more integrated and long-term approach to care. With SAMATVA, we are bringing together medical expertise and lifestyle interventions to create a structured model that goes beyond weight management and focuses on improving overall health and quality of life.”

The centre also places emphasis on structured follow-up, as sustainable lifestyle change requires continued guidance and monitoring. Patients will receive ongoing support through their health journey, with interventions adapted based on their progress and evolving healthcare needs.

Through SAMATVA, Kauvery Hospital aims to provide a structured, coordinated and patient-centred approach to obesity management, with continuous monitoring and guidance focused on improving metabolic health, reducing associated health risks and supporting sustainable lifestyle changes.

About Kauvery Hospital

Kauvery Hospital is a leading multi-specialty healthcare provider in India, recognized for its commitment to clinical excellence, patient-centric care, and advanced medical infrastructure. The hospital group operates a network of twelve hospitals across six key locations - Trichy, Chennai, Salem, Hosur, Tirunelveli, and Bengaluru - and employs over 11000 healthcare professionals. Serving millions of patients annually, Kauvery Hospital is dedicated to delivering high-quality secondary and tertiary care, supported by a strong focus on innovation, clinical outcomes, and continuous advancement in healthcare delivery.

What Samsung’s 30-year bet on India helped build beyond its business

What Samsung’s 30-year bet on India helped build beyond its business

India’s transformation over the past 30 years, from a market opening to the world to an economy aspiring to achieve Viksit Bharat by 2047, has been shaped by companies that invested in its future. Samsung has been one of them, contributing to India’s manufacturing, employment, research, innovation and skilling ecosystem since entering the country in 1995.

Three decades later, the outcome is visible in factories supplying overseas markets, Indian engineers developing technology for global use and community programmes that Samsung says have reached more than 15 lakh people. Its investment has helped establish capabilities that extend from industrial production to preparing young people to create technology themselves.

“Thirty years ago, many global companies came to India because they saw a large market. Samsung came because we saw something much bigger — we saw potential,” said JB Park, President & CEO, Samsung Southwest Asia.

The company has built manufacturing facilities in Noida and Chennai, along with three R&D centres at Samsung's three R&D centres and a design centre and has filed more than 14,000 patents in India.

Manufacturing provided the foundation. Samsung’s Noida plant, one of the world’s largest smartphone manufacturing facilities, has grown into a major export hub. Together with its Chennai factory, it anchors the company’s production presence in India. Samsung is also looking to deepen its component footprint, potentially extending local activity further into the electronics supply chain.

The more consequential evolution has been in the work undertaken by Indian engineers. Samsung’s three R&D centres and design centre place research and design alongside manufacturing, giving its Indian operations a role in developing what the company sells worldwide.

Designing for 1.4 billion people with different languages, abilities and levels of digital familiarity tests on whether technology is intuitive and inclusive. Solutions developed around these needs can serve consumers elsewhere, making India’s diversity an asset in Samsung’s global innovation work.

Engineers in Bengaluru have worked on language models for Galaxy AI. Samsung’s Noida research centre has partnered with IIT Madras on AI for Indian languages, healthcare and generative AI, connecting corporate research with academic expertise.

“But more importantly, we evolved from bringing technology to India to creating technology with India,” he added.

Building the skills to sustain that transition extends beyond Samsung’s workforce. Under its vision of “Together for Tomorrow. Enabling People”, the company supports pathways from school education to technical training, workplace experience and youth innovation.

Samsung Innovation Campus has trained more than 26,500 young people in AI, Big Data, IoT and coding, including 20,000 last year, nearly half of them women, since its India launch in 2022. DOST’s expanded sales programme aims to train 13,000  youth from underserved communities, combining classroom instruction with five months of paid workplace training in retail stores.

At school level, DigiArivu brings STEM laboratories, digital learning and teacher development to 3,000 students across 10 government schools in Tamil Nadu’s Kancheepuram and Ranipet districts.

The clearest sign that AI is spreading beyond the metros comes from this year's Samsung Solve for Tomorrow competition, which received applications from 648 cities and held 184 design-thinking workshops across 135 cities. More than half of its 20 finalist teams come from towns such as Sundargarh in Odisha, Chittoor in Andhra Pradesh and Raebareli in Uttar Pradesh, five are building solutions under an "AI Living for India" theme, and all are working with mentors at IIT Delhi and Samsung's research centres ahead of an October finale that carries Rs 2 crore in incubation grants.

“For us, investing in people is not philanthropy. It is nation-building,” Park says.

That ambition takes practical form when young participants gain access to researchers, prototyping support and incubation. Across three decades, Samsung’s engagement has expanded from building its own operations in India to supporting capabilities in universities, schools and communities. The opportunities now include both contributing to a global technology company and acquiring the skills and support to develop ideas independently.

Samsung இந்தியாவில் 30 ஆண்டுகளாக மேற்கொண்ட முதலீடு அதன் வணிகத்திற்கு அப்பால் உருவாக்க உதவியது என்ன?

Samsung இந்தியாவில் 30 ஆண்டுகளாக மேற்கொண்ட முதலீடு அதன் வணிகத்திற்கு அப்பால் உருவாக்க உதவியது என்ன?


கடந்த 30 ஆண்டுகளில், உலகிற்கான சந்தையைத் திறந்த நாடாக இருந்த இந்தியா, 2047ஆம் ஆண்டுக்குள் வளர்ச்சியடைந்த பாரதத்தை அடைய விரும்பும் பொருளாதாரமாக மாறியுள்ள இந்தப் பயணம், நாட்டின் எதிர்காலத்தில் முதலீடு செய்த நிறுவனங்களால் வடிவமைக்கப்பட்டுள்ளது. 1995ஆம் ஆண்டு இந்தியாவில் நுழைந்தது முதல், இந்தியாவின் உற்பத்தி, வேலைவாய்ப்பு, ஆராய்ச்சி, புத்தாக்கம் மற்றும் திறன் மேம்பாட்டு சூழலுக்கு Samsung பங்களித்து வருகிறது.

மூன்று தசாப்தங்களுக்குப் பிறகு, வெளிநாட்டு சந்தைகளுக்கு பொருட்களை வழங்கும் தொழிற்சாலைகளிலும், உலகளாவிய பயன்பாட்டிற்கான தொழில்நுட்பத்தை உருவாக்கும் இந்தியப் பொறியாளர்களிலும், 15 லட்சத்திற்கும் அதிகமான மக்களை சென்றடைந்துள்ளதாக Samsung கூறும் சமூகத் திட்டங்களிலும் இதன் விளைவு தெளிவாகத் தெரிகிறது. தொழில்துறை உற்பத்தி முதல் இளைஞர்கள் தாங்களே தொழில்நுட்பத்தை உருவாக்கத் தயார்படுத்தப்படுவது வரை விரியும் திறன்களை நிறுவுவதற்கு அதன் முதலீடு உதவியுள்ளது.

“முப்பது ஆண்டுகளுக்கு முன்பு, பல உலகளாவிய நிறுவனங்கள் இந்தியாவுக்கு வந்தன. ஏனெனில் அவை ஒரு பெரிய சந்தையைப் பார்த்தன. Samsung வந்ததற்குக் காரணம், நாங்கள் அதைவிட மிகப் பெரிய ஒன்றைப் பார்த்தோம் — நாங்கள் சாத்தியத்தைக் கண்டோம்,” என்று Samsung தென்மேற்கு ஆசியாவின் தலைவர் மற்றும் CEO JB Park கூறினார்.

நிறுவனம் நொய்டா மற்றும் சென்னையில் உற்பத்தி மையங்களை அமைத்துள்ளது. இதனுடன் Samsung-ன் மூன்று R&D மையங்கள் மற்றும் ஒரு வடிவமைப்பு மையமும் உள்ளன. மேலும், இந்தியாவில் 14,000-க்கும் மேற்பட்ட காப்புரிமைகளைப் பதிவு செய்துள்ளது.

உற்பத்தி இதற்கான அடித்தளத்தை அமைத்தது. உலகின் மிகப்பெரிய ஸ்மார்ட்போன் உற்பத்தி மையங்களில் ஒன்றான Samsung-ன் நொய்டா ஆலை, முக்கியமான ஏற்றுமதி மையமாக வளர்ந்துள்ளது. சென்னையில் உள்ள அதன் தொழிற்சாலையுடன் இணைந்து, இந்தியாவில் நிறுவனத்தின் உற்பத்தி இருப்புக்கான முக்கிய ஆதாரமாக இது விளங்குகிறது. உதிரிபாகங்கள் தொடர்பான தனது செயல்பாடுகளையும் Samsung மேலும் வலுப்படுத்த முயன்று வருகிறது. இதன் மூலம் மின்னணு விநியோகச் சங்கிலியில் உள்ளூர் செயல்பாடுகள் மேலும் விரிவடையக்கூடும்.

இந்தியப் பொறியாளர்கள் மேற்கொண்ட பணிகளில் ஏற்பட்டுள்ள மாற்றமே இன்னும் முக்கியமான வளர்ச்சியாகும். Samsung-ன் மூன்று R&D மையங்களும் வடிவமைப்பு மையமும் உற்பத்தியுடன் சேர்த்து ஆராய்ச்சி மற்றும் வடிவமைப்புக்கும் முக்கியத்துவம் அளிக்கின்றன. இதன் மூலம், நிறுவனம் உலகம் முழுவதும் விற்பனை செய்யும் பொருட்களை உருவாக்குவதில் அதன் இந்திய செயல்பாடுகளுக்கு முக்கியப் பங்கு கிடைத்துள்ளது.

வெவ்வேறு மொழிகள், திறன்கள் மற்றும் டிஜிட்டல் பரிச்சய நிலைகளைக் கொண்ட 140 கோடி மக்களுக்காக வடிவமைப்பது, தொழில்நுட்பம் எளிதில் புரிந்துகொள்ளக்கூடியதாகவும் அனைவரையும் உள்ளடக்கியதாகவும் உள்ளதா என்பதைச் சோதிக்கிறது. இந்தத் தேவைகளை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்படும் தீர்வுகள் பிற இடங்களில் உள்ள நுகர்வோருக்கும் பயன்படக்கூடும். இதனால் Samsung-ன் உலகளாவிய புத்தாக்கப் பணியில் இந்தியாவின் பன்முகத்தன்மை ஒரு பலமாக மாறுகிறது.

பெங்களூருவில் உள்ள பொறியாளர்கள் Galaxy AI-க்கான மொழி மாதிரிகளில் பணியாற்றியுள்ளனர். இந்திய மொழிகள், சுகாதாரம் மற்றும் உருவாக்கும் AI ஆகியவற்றுக்கான AI தொடர்பான பணிகளில் Samsung-ன் நொய்டா ஆராய்ச்சி மையம் IIT மெட்ராஸுடன் இணைந்து செயல்பட்டுள்ளது. இதன் மூலம் நிறுவன ஆராய்ச்சியும் கல்வித்துறை நிபுணத்துவமும் இணைக்கப்பட்டுள்ளன.

“ஆனால் அதைவிட முக்கியமாக, இந்தியாவுக்கு தொழில்நுட்பத்தை கொண்டு வருவதிலிருந்து, இந்தியாவுடன் இணைந்து தொழில்நுட்பத்தை உருவாக்கும் நிலைக்கு நாங்கள் வளர்ந்துள்ளோம்,” என்று அவர் மேலும் கூறினார்.

இந்த மாற்றத்தைத் தொடர்ந்து நிலைநிறுத்துவதற்குத் தேவையான திறன்களை உருவாக்கும் பணி Samsung-ன் பணியாளர்களைத் தாண்டியும் விரிகிறது. “நாளைக்காக ஒன்றிணைந்து. மக்களுக்கு அதிகாரமளித்தல்” என்ற அதன் நோக்கத்தின் கீழ், பள்ளிக் கல்வி முதல் தொழில்நுட்பப் பயிற்சி, பணியிட அனுபவம் மற்றும் இளைஞர் புத்தாக்கம் வரை பல்வேறு பாதைகளை நிறுவனம் ஆதரிக்கிறது.

இந்தியாவில் 2022ஆம் ஆண்டு தொடங்கப்பட்டதிலிருந்து, Samsung Innovation Campus AI, Big Data, IoT மற்றும் coding ஆகிய துறைகளில் 26,500-க்கும் மேற்பட்ட இளைஞர்களுக்குப் பயிற்சி அளித்துள்ளது. இதில் கடந்த ஆண்டு பயிற்சி பெற்ற 20,000 பேரும் அடங்குவர். இவர்களில் கிட்டத்தட்ட பாதி பேர் பெண்கள். DOST-ன் விரிவுபடுத்தப்பட்ட விற்பனைத் திட்டம், வசதிகள் குறைவாக உள்ள சமூகங்களைச் சேர்ந்த 13,000 இளைஞர்களுக்குப் பயிற்சி அளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்தத் திட்டம் வகுப்பறைக் கற்பித்தலுடன், சில்லறை விற்பனை நிலையங்களில் ஐந்து மாத ஊதியத்துடன் கூடிய பணியிடப் பயிற்சியையும் இணைக்கிறது.

பள்ளி அளவில், தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் உள்ள 10 அரசு பள்ளிகளைச் சேர்ந்த 3,000 மாணவர்களுக்கு DigiArivu STEM ஆய்வகங்கள், டிஜிட்டல் கற்றல் மற்றும் ஆசிரியர் மேம்பாட்டு வசதிகளை வழங்குகிறது.

பெருநகரங்களுக்கு அப்பாலும் AI பரவி வருகிறது என்பதற்கான தெளிவான அறிகுறி, இந்த ஆண்டின் Samsung Solve for Tomorrow போட்டியில் இருந்து கிடைக்கிறது. இந்தப் போட்டிக்கு 648 நகரங்களில் இருந்து விண்ணப்பங்கள் கிடைத்தன. மேலும், 135 நகரங்களில் 184 வடிவமைப்பு சிந்தனைப் பயிலரங்குகள் நடத்தப்பட்டன. இதன் 20 இறுதிப் போட்டியாளர் அணிகளில் பாதிக்கும் மேற்பட்டவை ஒடிசாவின் சுந்தர்கர், ஆந்திரப் பிரதேசத்தின் சித்தூர் மற்றும் உத்தரப் பிரதேசத்தின் ராய்பரேலி போன்ற நகரங்களில் இருந்து வந்துள்ளன. அவற்றில் ஐந்து அணிகள் “AI Living for India” என்ற கருப்பொருளின் கீழ் தீர்வுகளை உருவாக்குகின்றன. அக்டோபரில் நடைபெறவுள்ள இறுதிப் போட்டிக்கு முன்பு, அனைத்து அணிகளும் IIT டெல்லி மற்றும் Samsung-ன் ஆராய்ச்சி மையங்களின் வழிகாட்டிகளுடன் இணைந்து பணியாற்றுகின்றன. இந்த இறுதிப் போட்டியில் ரூ.2 கோடி மதிப்பிலான இன்குபேஷன் மானியங்கள் வழங்கப்படவுள்ளன.

“எங்களைப் பொறுத்தவரை, மக்களிடம் முதலீடு செய்வது தொண்டு அல்ல. அது தேசக் கட்டமைப்பு,” என்று Park கூறுகிறார்.

இளம் பங்கேற்பாளர்கள் ஆராய்ச்சியாளர்களை அணுகும் வாய்ப்பு, முன்மாதிரி உருவாக்கத்திற்கான ஆதரவு மற்றும் இன்குபேஷன் வசதிகளைப் பெறும்போது, அந்த நோக்கம் நடைமுறை வடிவம் பெறுகிறது. மூன்று தசாப்தங்களாக, இந்தியாவில் தனது சொந்த செயல்பாடுகளை உருவாக்குவதிலிருந்து பல்கலைக்கழகங்கள், பள்ளிகள் மற்றும் சமூகங்களில் திறன்களை ஆதரிக்கும் நிலைக்கு Samsung-ன் பங்களிப்பு விரிவடைந்துள்ளது. தற்போது கிடைக்கும் வாய்ப்புகளில் உலகளாவிய தொழில்நுட்ப நிறுவனத்திற்கு பங்களிப்பதும், சுயமாக யோசனைகளை உருவாக்குவதற்குத் தேவையான திறன்கள் மற்றும் ஆதரவைப் பெறுவதும் அடங்கும்.

Tuesday, October 6, 2026

இந்தியன் ஸ்கூல் ஆஃப் பிசினஸ் தனது 25ஆம் ஆண்டு நிறைவைக் கொண்டாடுகிறது, ஆண்டுதோறும் 250 கல்வி உதவித்தொகைகளை வழங்கவும், தேசிய அளவிலான ஆராய்ச்சித் தளத்தை நிறுவவும் உறுதியளித்துள்ளது

இந்தியன் ஸ்கூல் ஆஃப் பிசினஸ் தனது 25ஆம் ஆண்டு நிறைவைக் கொண்டாடுகிறது, ஆண்டுதோறும் 250 கல்வி உதவித்தொகைகளை வழங்கவும், தேசிய அளவிலான ஆராய்ச்சித் தளத்தை நிறுவவும் உறுதியளித்துள்ளது.


• ஐஎஸ்பி25 அறிஞர் திட்டம், பிஜிபி மற்றும் பிஜிபி ஒய்எல் பாடத்திட்டங்களுக்கு, ஆண்டுதோறும் 250 கல்வி உதவித்தொகைகளை 100% வரை கல்விக் கட்டண விலக்குடன் வழங்கும்.

• இந்தியா ரிசர்ச் காமன்ஸ், நாடு தழுவிய அறிஞர்களுக்குப் பகிரப்பட்ட தரவுத்தொகுப்புகள், ஆராய்ச்சிக் கருவிகள் மற்றும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த ஆராய்ச்சி உள்கட்டமைப்புக்கான அணுகலை வழங்கும்.

• புதிய தேசிய ஆசிரிய மேம்பாட்டு முயற்சி, ஐஎஸ்பி -யின் கற்பித்தல் முறைகளையும் தொழில்நுட்பம் சார்ந்த கற்பித்தல் வழிமுறைகளையும் இந்தியா முழுவதும் உள்ள மேலாண்மை நிறுவனங்களுக்கு விரிவுபடுத்தும்.

• இந்த அறிவிப்பு, 2001-ல் நிறுவப்பட்ட ஐஎஸ்பி-யின் 25-வது வெள்ளி விழாவைக் குறிக்கிறது.

ஹைதராபாத்/மொஹாலி, அக்டோபர் 06, 2026: 'ஃபைனான்சியல் டைம்ஸ் குளோபல் எம்பிஏ தரவரிசை 2026'-இல் இந்தியாவில் முதலிடத்தையும் உலகளவில் 12-வது இடத்தையும் பிடித்துள்ள 'இந்தியன் ஸ்கூல் ஆஃப் பிசினஸ்' (ஐஎஸ்பி), தனது 25-வது ஆண்டு விழாவைக் கொண்டாடும் விதமாக 'ஐஎஸ்பி@25' எனும் நீண்டகால நிறுவன உறுதிமொழிகளை அறிவித்துள்ளது. இவை, நிர்வாகக் கல்விக்கான அணுகலை விரிவுபடுத்துவதையும், இந்தியாவின் ஆராய்ச்சி மற்றும் கற்பித்தல் திறனை வலுப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டவை. 

ஐஎஸ்பி25 ஸ்காலர்ஸ் திட்டத்தின் கீழ், ஐஎஸ்பி தனது முதன்மைப் பாடத்திட்டங்களான 'மேலாண்மையில் முதுகலைத் திட்டம்' (பிஜிபி) மற்றும் 'இளம் தலைவர்களுக்கான மேலாண்மையில் முதுகலைத் திட்டம்' (பிஜிபி ஒய்எல்) ஆகியவற்றில், இனிவரும் ஆண்டுகளில் ஆண்டுதோறும் 250 கல்வி உதவித்தொகைகளை வழங்கவுள்ளது. தகுதி மற்றும் பொருளாதாரத் தேவையின் அடிப்படையில் வழங்கப்படும் இத்திட்டத்தில், கல்விக் கட்டணத்தில் 100%, 50%, 30% மற்றும் 25% வரையிலான சலுகைகள் அளிக்கப்படும். பல்வேறு பொருளாதார, புவியியல் மற்றும் தொழில்முறைப் பின்னணிகளைக் கொண்ட, சிறந்த திறமையுள்ள விண்ணப்பதாரர்கள் உலகத்தரம் வாய்ந்த மேலாண்மைக் கல்வியைப் பெறுவதை உறுதி செய்வதன் மூலம், ஐஎஸ்பி -யில் திறமையாளர்களின் எண்ணிக்கையை விரிவுபடுத்தும் வகையில் இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதனுடன் இணைந்து, ஐஎஸ்பி இந்தியா ரிசர்ச் காமன்ஸ் எனும் தேசிய தளத்தை நிறுவவுள்ளது. இத்தளம், இந்தியா முழுவதிலும் உள்ள ஆய்வாளர்களுக்குத் தொகுக்கப்பட்ட தரவுத்தொகுப்புகள், ஆய்வுக்கான கருவிகள், வழிமுறை சார்ந்த வளங்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் கொண்ட ஆய்வு உள்கட்டமைப்பு வசதிகளை அணுகும் வாய்ப்பை வழங்கும். இம்முயற்சியானது ஒரு புதிய தேசிய ஆசிரியர்கள் மேம்பாட்டுத் திட்டத்துடனும் இணைக்கப்படும். இதன் மூலம், ஐஎஸ்பி தனது கற்பித்தல் அணுகுமுறை, வகுப்பறை நடைமுறைகள் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த கற்பித்தல் முறைகளை நாடு முழுவதும் உள்ள மேலாண்மை நிறுவனங்களுடன் பகிர்ந்துகொள்ளும். இதன் வாயிலாக, கடந்த 25 ஆண்டுகளில் இந்நிறுவனம் வளர்த்தெடுத்த திறன்கள் மற்றும் அனுபவங்கள் பரந்த அளவிலான இந்தியக் கல்விச் சூழலுக்கும் கொண்டு செல்லப்படும்.

"ஐஎஸ்பி @25 என்பது நமது பயணத்தைக் கொண்டாடுவதற்கான ஒரு வாய்ப்பு மட்டுமல்ல, எதிர்காலத்திற்கான நமது உறுதிப்பாட்டை வரையறுப்பதற்கான ஒரு வாய்ப்பும் கூட," என்று இந்தியன் ஸ்கூல் ஆஃப் பிசினஸின் டீன் பேராசிரியர் மதன் பில்லுட்லா கூறினார். "நாடு முழுவதும் உள்ள நிறுவனங்கள் மற்றும் அறிஞர்களுக்குச் சிறப்பான செயல்பாடுகளை எளிதில் அணுகக்கூடியதாகவும், அறிவைப் பகிர்ந்துகொள்ளக்கூடியதாகவும், ஆராய்ச்சியின் பலன்களைப் பயன்படுத்தக்கூடியதாகவும் மாற்றுவதே எங்கள் வாக்குறுதியாகும்." என்றும் கூறினார்.

கற்பவர்களின் மாறிவரும் தேவைகளுக்கும் தொழில் துறையின் மாறிவரும் தேவைகளுக்கும் ஏற்ப, சமீபத்திய ஆண்டுகளில் ஐஎஸ்பி மேற்கொண்ட பல்வேறு முன்னெடுப்புகளின் தொடர்ச்சியாகவே இந்த புதிய உறுதிப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 2025-ஆம் ஆண்டில், 'இளம் தலைவர்களுக்கான மேலாண்மையில் முதுகலைத் திட்டம்' (பிஜிபி ஒய்எல்) அறிமுகப்படுத்தப்பட்டு, முதல் குழுவில் 130 மாணவர்கள் இதில் சேர்க்கப்பட்டனர்; இவர்களில் மூன்றில் ஒரு பங்கிற்கும் அதிகமானோருக்குக் கல்விக் கட்டண விலக்கு அளிக்கப்பட்டது. அதே ஆண்டில், ஐஎஸ்பி ஆனது ஐஎஸ்பி டிஸ்கவர் எனும் டிஜிட்டல் அறிவுத் தளத்தை அறிமுகப்படுத்தியது. இது, பேராசிரியர்கள் மேற்கொண்ட ஆய்வுகளைக் கொள்கை வகுப்பாளர்கள், வணிகத் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் எளிதில் புரிந்துகொள்ளக்கூடிய வடிவங்களில் வழங்குகிறது. மேலும், மாறிவரும் பணிச் சூழலுக்கு ஏற்ப அதிக நெகிழ்வுத்தன்மை, தனிப்பயனாக்கப்பட்ட கற்றல் வழிமுறைகள் மற்றும் வலுவான ஒருங்கிணைப்பு ஆகியவற்றை உள்ளடக்கும் வகையில், தனது முதன்மைத் திட்டமான பிஜிபி -யின் பாடத்திட்டத்தை ஐஎஸ்பி அண்மையில் விரிவாக மறுஆய்வு செய்துள்ளது. முன்னாள் மாணவர்கள், பணியமர்த்துநர்கள் மற்றும் தொழில் துறை சார்ந்தோருடன் மேற்கொள்ளப்பட்ட விரிவான ஆலோசனைகளின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

2001-இல் நிறுவப்பட்டதிலிருந்து, 65-க்கும் மேற்பட்ட நாடுகளில் 20,000-க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்களைக் கொண்ட ஐஎஸ்பி, உலகின் முன்னணி வணிகக் கல்வி நிறுவனங்களில் ஒன்றாக வளர்ந்துள்ளது. இந்நிறுவனத்தின் பிஜிபி தற்போது இந்தியாவில் முதலிடத்திலும், ஆசியாவில் இரண்டாம் இடத்திலும் உள்ளது. மேலும், எஃப்டி குளோபல் எம்பிஎ தரவரிசை 2026-இன் படி, இத்திட்டத்திற்கு முந்தைய மற்றும் பிந்தைய காலக்கட்டத்திலான ஊதிய உயர்வு விகிதத்தில் ஐஎஸ்பி -யின் பட்டதாரிகள் உலகளவில் முதலிடம் பிடித்துள்ளனர். ஹைதராபாத் மற்றும் மொஹாலியில் வளாகங்களைக் கொண்டுள்ளதோடு, எஎசிஎஸ்பி, எஎம்பிஎ மற்றும் இக்யூஐஎஸ் ஆகிய மூன்று அங்கீகாரங்களையும் பெற்றுள்ள ஐஎஸ்பி, சிக்கலான வணிக மற்றும் சமூக சவால்களை எதிர்கொள்ளும் திறன் கொண்ட தலைவர்களை உருவாக்குவதில் சிறப்பானதொரு சாதனையைப் படைத்துள்ளது.

ஐஎஸ்பி@25 நிகழ்வின் மூலம், இந்த நிறுவனம் தனது ஸ்தாபக நோக்கத்தை மீண்டும் உறுதிப்படுத்துகிறது — அதாவது, 25 ஆண்டுகால நிறுவனத் திறனை, இந்தியா முழுவதும் வாய்ப்புகளை விரிவுபடுத்தி, ஆராய்ச்சியை வலுப்படுத்தி, மேலாமைக் கல்வித் திறனை வளர்க்கும் நீடித்த பொதுச் சொத்துக்களாக மாற்றுவதே அந்த நோக்கமாகும்.


 

###

About the Indian School of Business (ISB) 

The Indian School of Business (ISB) is India’s highest-ranked business school and features in the top league of several global business school rankings. A vibrant pool of research-oriented resident faculty, robust academic partnerships, a thriving alumni network, the backing of an influential board, and the guidance of the industry’s thought leadership have enabled ISB to fast emerge and consolidate itself as a premier global business school that grooms future leaders for India and the world.

அப்போலோ குழந்தைகள் மருத்துவமனையின் உலக சாதனை

அப்போலோ குழந்தைகள் மருத்துவமனையின் உலக சாதனை:

• பிறவி இதயக் குறைபாடுகள் உள்ள 50 குழந்தைகளுக்கு குறைந்தபட்ச ஊடுருவல் முறையில் தோல் வழியாக ஃபோன்டன் சிகிச்சை புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.

• கதீட்டர் அடிப்படையிலான ஃபோன்டன் சிகிச்சை முறை, ஒற்றை-இதய கீழறை நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு பாரம்பரிய திறந்தநிலை இதய அறுவைசிகிச்சைக்கு மாற்றாக அமைந்துள்ளது.


Photo caption

L To R

Dr.Ilankumaran Kaliamoorthy,Chief Executive Officer,Apollo Hospitals,Chennai region.

Dr. Neville A.G. Solomon – Director – Paediatric Cardiothoracic Services, Apollo Children’s Hospitals

Dr. C.S. Muthukumanaran – Senior Consultant & Head, Paediatric Cardiology, Apollo Children’s Hospitals

Dr.Sushila Narayanasamy,Unit Head,Apollo Women’s and Children’s Hospitals,Chennai

சென்னை, 6 அக்டோபர் 2026:

சென்னை அப்போலோ குழந்தைகள் மருத்துவமனை, அறுவைசிகிச்சைக்கு முன்னதாக தயாரிப்பு ஏற்பாடுகள் எதுவுமின்றி 50 பெர்குடேனியஸ் ஃபோன்டன் சிகிச்சை செயல்முறைகளை நிகழ்த்தி உலகளவில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளதை பெருமிதத்துடன் அறிவித்துள்ளது. சிக்கலான ஒற்றை-இதயக்கீறை நோயால் பாதிக்கப்பட்ட குறிப்பிட்ட சில குழந்தைகளுக்கு, வழக்கமான திறந்தநிலை இதய ஃபோன்டன் அறுவைசிகிச்சைக்கு மாற்றாக கதீட்டர் அடிப்படையிலான அணுகுமுறையைப் பயன்படுத்தியிருக்கும் இச்சாதனை, வளர்ந்து வரும் மருத்துவ அனுபவத்தையும் நவீன தொழில்நுட்பத் திறனையும் எடுத்துக்காட்டுகிறது.

உடலில் இரத்த ஓட்டத்தைப் பராமரிக்க ஒரே ஒரு இதய கீழறை மட்டுமே செயல்படும் சிக்கலான இதயக் குறைபாடுகளுடன் சில குழந்தைகள் பிறக்கின்றன. இக்குழந்தைகளுக்கு ஃபோன்டன் செயல்முறையே சிகிச்சையின் இறுதி கட்டமாகும். இது உடலின் கீழ்ப்பகுதியிலிருந்து திரும்பும் இரத்தத்தை நேரடியாக நுரையீரலுக்கு திருப்பி விடுகிறது, இதன் மூலம் அந்த ஒற்றை இதயக் கீழறை ஆக்ஸிஜன் செறிவான இரத்தத்தை உடல் முழுவதும் செலுத்துகிறது.

அப்போலோவின் குழந்தைகளுக்கான இதயவியல் மற்றும் இதய அறுவைசிகிச்சை மருத்துவக் குழுவினரால் உருவாக்கப்பட்டு மேம்படுத்தப்பட்ட இந்த தொழில்நுட்பம், முன்னதாக எந்தவொரு அறுவைசிகிச்சை ஏற்பாடுகளும் இன்றி, அறுவைசிகிச்சையின் போது இரத்த நாளங்கள் வழியாக கதீட்டர்கள், வயர்கள் மற்றும் ஸ்டெண்டுகளைப் பயன்படுத்தி ஃபோன்டன் வழிமுறையை முழுமையாகச் செய்து முடிக்க உதவுகிறது.

குழந்தைகளுக்கான இதயவியல் துறைத் தலைவர் டாக்டர் சி.எஸ். முத்துகுமரன் கூறுகையில், “ஒற்றை-இதயக் கீழறை நோயுள்ள குழந்தைகளுக்கு ஃபோன்டன் கட்டத்திற்கு முன்பே பல பெரிய இதய அறுவைசிகிச்சைகள் செய்ய வேண்டியுள்ளது. உடற்கூறியலும், இரத்த இயக்கவியலும் பொருத்தமாக இருக்குமானால், கதீட்டர் அடிப்படையிலான இச்செயல்முறை மற்றொரு திறந்தநிலை அறுவைசிகிச்சை இல்லாமலேயே ஃபோன்டன் வழிமுறையைச் செய்ய வழிவகுக்கிறது. பெரிய இதய சிகிச்சைக்குட்பட்ட குழந்தைக்கு மற்றொரு அறுவைசிகிச்சையின் வலியைக் குறைப்பதே இதன் நோக்கமாகும்” என்றார்.

இந்த அணுகுமுறை எல்லா குழந்தைகளுக்கும் ஏற்றதாக அமையாது. நோயாளிகளைத் தேர்ந்தெடுப்பதற்கு, நுரையீரல் தமனி உடற்கூறியல் மற்றும் அழுத்தங்கள், இதய கீழறையின் செயல்பாடு மற்றும் சிரை வழிகள் உள்ளிட்ட இதய உடற்கூறியல் மற்றும் இரத்த இயக்கவியல் பற்றிய விரிவான மதிப்பீடு தேவைப்படுகிறது. நோயாளியின் நிலையைப் பொறுத்து, எக்கோ கார்டியோகிராபி, சிடி ஸ்கேன் மற்றும் கார்டியாக் கேத்தடரைசேஷன் போன்ற பரிசோதனைகள் தேவைப்படலாம்.

இதய-மார்பறை அறுவைசிகிச்சை சேவைகள் இயக்குநர் டாக்டர் நெவில் ஏ.ஜி. சாலமன் கூறுகையில், “அறுவைசிகிச்சைக்குப் பதிலாக முழுமையான மாற்றாக இருப்பது இப்புதிய தொழில்நுட்பத்தின் நோக்கமல்ல. ஒவ்வொரு குழந்தைக்கும் சிறந்த சிகிச்சையைத் தீர்மானிக்க, இதயவியல் மற்றும் இதய அறுவைசிகிச்சை ஆகிய இரண்டையும் ஒன்றிணைத்துச் செயல்படுவதாகும். சில குழந்தைகளுக்கு அறுவைசிகிச்சையே சிறந்த தேர்வாக இருக்கும். அதே நேரத்தில் கவனமாக தேர்ந்தெடுக்கப்பட்ட சிலருக்கு, இந்த கதீட்டர் அடிப்படையிலான சிகிச்சை சிறந்த மாற்று வழியாகும்” என்றார்.

அப்போலோ குழந்தைகள் மருத்துவமனை, குழந்தைகளுக்கான 14,000-க்கும் மேற்பட்ட கதீட்டர் அடிப்படையிலான இதய சிகிச்சைகளை செய்திருப்பது குழந்தைகளுக்கு சிக்கலான இதய சிகிச்சையில் இம்மருத்துவமனையின் சிறந்த அனுபவத்தைப் பிரதிபலிக்கிறது. 50 சிகிச்சை செயல்முறைகள் என்ற இந்த சாதனை, இந்த அணுகுமுறையில் இம்மருத்துவமனையின் அதிகரித்து வரும் நிபுணத்துவத்திற்கும், அனுபவத்திற்கும் சான்றாக இருக்கிறது. தற்போதைய மருத்துவ சான்றுகள் இதன் சாத்தியக்கூறு மற்றும் ஊக்கமளிக்கும் ஆரம்பகால சிகிச்சை விளைவுகளை நிரூபித்தாலும், வழக்கமாக அறுவைசிகிச்சை முறையில் செய்யப்படும் ஃபோன்டானுடன் ஒப்பிடுகையில் பெர்குடேனியஸ் ஃபோன்டன் சிகிச்சையின் முடிவுகள் எவ்வாறு அமையும் என்பதைப் புரிந்துகொள்ள நீண்டகால அடிப்படையிலான ஒப்பீட்டு தரவுகள் தேவைப்படுகின்றன.

அப்போலோ மருத்துவமனைகளின் செயல் உத்திகளுக்கான இயக்குநர் திருமதி. சிந்தூரி ரெட்டி கூறுகையில், “ஒரு சிக்கலான நோய்க்கு எவ்வாறு சிகிச்சையளிக்கலாம் என நாங்கள் மறு சிந்தனை செய்யும்போது, சாத்தியமான சிகிச்சை வாய்ப்புகளை விரிவுபடுத்துகிறோம். தோல் வழியாக ஃபோன்டன் சிகிச்சைகளில் 50 என்ற இலக்கை எட்டியிருப்பது அதையே பிரதிபலிக்கிறது. இது தகுதியான குழந்தைகளுக்கு மற்றொரு திறந்தநிலை அறுவைசிகிச்சைக்கு மாற்றாக குறைந்தபட்ச ஊடுருவல் சிகிச்சையை வழங்குகிறது. மருத்துவ நிபுணத்துவத்தையும் புதிய தொழில்நுட்பத்தையும் ஒன்றிணைத்து சிகிச்சையின் வரம்பெல்லையை விரிவுபடுத்துவதே எமது செயல்திட்டமாகும்” என்றார்.

இந்நிகழ்வில் அப்போலோவின் சென்னை மண்டல தலைமைச் செயல் அதிகாரி டாக்டர் இளங்குமரன் களியமூர்த்தி, சென்னை அப்போலோ மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையின் தலைவர் டாக்டர் சுசீலா நாராயணசாமி மற்றும் மருத்துவக் குழுவினர் கலந்துகொண்டனர்.

இந்த அணுகுமுறை மருத்துவ அனுபவம் மற்றும் சக மதிப்பாய்வு செய்யப்பட்ட ஆராய்ச்சியின் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது. இக்குழுவின் ஆரம்பக்கட்ட ஆய்வறிக்கை 2023-ல் 'Progress in Pediatric Cardiology' இதழிலும், நோயாளி தேர்வு குறித்த விரிவான அறிக்கை 2024-ல் 'JACC: Case Reports' இதழிலும், இதன் மேம்படுத்தப்பட்ட அறிக்கை 2025-லும் வெளியானது.

சிக்கலான பிறவி இதய நோயைக் கையாளுவதில் கதீட்டர் அடிப்படையிலான சிகிச்சை முறைகளின் வளர்ச்சியை இந்த சாதனை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. அதே நேரத்தில், கவனமான நோயாளி தேர்வு, பல்துறை நிபுணர்களின் கூட்டு முடிவு மற்றும் தொடர்ச்சியான மருத்துவக் கண்காணிப்பு ஆகியவற்றின் முக்கியத்துவத்தையும் இது வலியுறுத்துகிறது.

அப்போலோ மருத்துவமனைகள் குறித்து: இதன் நிறுவனர் மற்றும் தலைவர் டாக்டர் பிரதாப் ரெட்டி, 1983-ல் சென்னையில் முதல் மருத்துவமனையை தொடங்கினார். 78 மருத்துவமனைகளில் 10,900 படுக்கைகள், 7200+ மருந்தகங்கள், 300 கிளினிக்குகள், 2,500 நோயறிதல் மையங்களுடன் மிகப்பெரிய சுகாதார சேவை வழங்குநராக அப்போலோ குழுமம் இப்போது வளர்ந்துள்ளது. 3,00,000-க்கும் மேற்பட்ட ஆஞ்சியோபிளாஸ்டிகள், 2,00,000-க்கும் மேற்பட்ட அறுவைசிகிச்சைகளை இதுவரை செய்துள்ள அப்போலோ, மேம்பட்ட சிகிச்சையை வழங்க புதிய தொழில்நுட்பத்திலும், ஆராய்ச்சியிலும் தொடர்ந்து முதலீடு செய்து வருகிறது.


இந்தியாவில் OPPO F35 சீரிஸ் அறிமுகம்: புதிய தலைமுறைக்கான குரூப் செல்ஃபி எக்ஸ்பர்ட்டுடன் 10-வது ஆண்டைக் கொண்டாடும் ஒப்போ!

இந்தியாவில் OPPO F35 சீரிஸ் அறிமுகம்: புதிய தலைமுறைக்கான குரூப் செல்ஃபி எக்ஸ்பர்ட்டுடன் 10-வது ஆண்டைக் கொண்டாடும் ஒப்போ!

தமிழ்நாடு, அக்டோபர் 5, 2026: இந்தியாவில் OPPO F Series அறிமுகமாகி 10 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், OPPO நிறுவனம் இன்று OPPO F35 Pro மற்றும் OPPO F35 ஆகிய மாடல்களை உள்ளடக்கிய புதிய OPPO F35 Series மொபைல்களை அறிமுகப்படுத்தியுள்ளது. கடந்த பத்தாண்டுகளில், இந்த F சீரிஸ் தனது முதல் தலைமுறை F1 மாடலின் மூலம் "செல்ஃபி எக்ஸ்பர்ட்" (Selfie Expert) என்ற அடையாளத்துடன் தொடங்கி, இன்று புதிய F35 சீரிஸ் மூலம் "குரூப் செல்ஃபி எக்ஸ்பர்ட்" (Group Selfie Expert) ஆக பரிணாம வளர்ச்சி அடைந்துள்ளது. நுகர்வோர் தங்களின் அழகான தருணங்களைப் படம் பிடிப்பதிலும், பகிர்ந்து கொள்வதிலும் மற்றும் அனுபவிப்பதிலும் ஏற்பட்டுள்ள மாற்றங்களை இந்த புதிய சீரிஸ் மிகச்சரியாகப் பிரதிபலிக்கிறது.

  

F1 மாடலில் தொடங்கி, தற்போது அறிமுகமாகியுள்ள புதிய F35 சீரிஸ் வரை, இந்தியாவின் இளம் தலைமுறையினரின் மாறிவரும் தேவைகள், டிஜிட்டல் வாழ்க்கை முறை மற்றும் அன்றாடப் பயன்பாட்டு எதிர்பார்ப்புகளைப் புரிந்து கொண்டு, அதற்கேற்ற புதுமையான தொழில்நுட்ப அனுபவங்களை வழங்கும் வகையில் இந்த சீரிஸ் தொடர்ந்து பரிணாமம் அடைந்து வருகிறது. இந்த F சீரிஸ் தனது சிறப்புமிக்க கேமரா அம்சங்களைத் தொடர்ந்து மேம்படுத்தி வருகிறது.. கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவில் 3 கோடிக்கும் அதிகமான (30 million+) F சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம், ஸ்மார்ட்போன்களைத் தனிப்பட்ட தருணங்களைப் படம் பிடிக்கக் கேமராவாக மட்டும் பயன்படுத்தாமல், தங்களைச் சுற்றியுள்ளவர்களுடன் அனுபவங்களை உருவாக்கவும், இணையவும், பகிர்ந்து கொள்ளவும் விரும்பும் ஒரு தலைமுறையினரோடு சேர்ந்தே இந்த சீரிஸும் வளர்ந்துள்ளது. இந்த பயணத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் வகையில், புதிய F35 சீரிஸ் 50MP அல்ட்ரா-வைட் நேச்சுரல் செல்ஃபி கேமராவுடன் (50MP Ultra-Wide Natural Selfie Camera) 100° ஃபீல்ட் ஆஃப் வியூ (100° field of view) வசதியைக் கொண்டுள்ளது. இது ஒவ்வொரு ஃபிரேமிலும் அதிக நபர்களையும், அந்தத் தருணத்தின் முழு அழகையும் மிக எளிதாகக் கொண்டுவருகிறது.


OPPO F35 சீரிஸ் – OPPO F35 Pro 5G மாடலின் 6GB+128GB வேரியன்ட் ரூ.45,999, 8GB+128GB வேரியன்ட் ரூ.49,999 மற்றும் 8GB+256GB வேரியன்ட் ரூ.54,999 என்ற விலையில் கிடைக்கும். அதேபோல், OPPO F35 5G மாடலின் 6GB+128GB வேரியன்ட் ரூ.38,999 மற்றும் 8GB+128GB வேரியன்ட் ரூ.42,999 என்ற விலையில் கிடைக்கும். OPPO F35 சீரிஸ் 11 அக்டோபர் 2026 முதல், நாடு முழுவதும் உள்ள முக்கிய சில்லறை விற்பனை நிலையங்கள், OPPO இந்தியா இணையவழி விற்பனைத் தளம், Flipkart மற்றும் Amazon ஆகியவற்றில் விற்பனைக்கு கிடைக்கும்.OPPO F35 Pro 5G மாடல் Sunrise Orange, Wave Blue மற்றும் Twilight Brown ஆகிய மூன்று வண்ணங்களில் கிடைக்கும். OPPO F35 5G மாடல் Wave Blue, Titanium Grey மற்றும் Mist Pink ஆகிய வண்ணங்களில் கிடைக்கும். வாடிக்கையாளர்கள் 10% வரை உடனடி பணத்தள்ளுபடி, வட்டி இல்லாத மாதத் தவணை வசதி, 10% வரை எக்ஸ்சேஞ்ச் போனஸ் மற்றும் முன்பணம் இல்லாத கட்டணத் திட்டங்கள் ஆகியவற்றுடன், தேர்ந்தெடுக்கப்பட்ட OPPO தயாரிப்புகள் மற்றும் சேவைகளுக்கு வழங்கப்படும் கூடுதல் பண்டிகைக்கால சலுகைகளையும் பெறலாம்.


அறிமுகம் குறித்து OPPO இந்தியாவின் தகவல் தொடர்புத் துறைத் தலைவர் திரு. கோல்டி பட்நாயக் கூறியதாவது: “கடந்த 10 ஆண்டுகளில், இந்தியா முழுவதும் உள்ள நுகர்வோர் தங்களது வாழ்க்கையின் முக்கிய தருணங்களைப் படம் பிடிக்கும், தொடர்பு கொள்ளும் மற்றும் பகிர்ந்து கொள்ளும் விதத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்களுடன் இணைந்து F சீரிஸும் தொடர்ந்து பரிணாம வளர்ச்சி அடைந்துள்ளது. இந்தியா போன்ற பல்வேறு கலாச்சாரங்களைக் கொண்ட நாட்டில், ஒவ்வொரு பிராந்தியமும் ஒன்றிணைந்து கொண்டாடுவதற்கென தனித்துவமான வழிமுறையைக் கொண்டுள்ளது. வளமான குடும்ப கலாச்சாரம், பண்டிகைகள் மற்றும் அனைவரும் இணைந்து பகிர்ந்து கொள்ளும் தருணங்களைக் கொண்ட தமிழ்நாடு, இந்த உணர்வின் சிறந்த பிரதிபலிப்பாகத் திகழ்கிறது. 50MP அல்ட்ரா-வைடு நேச்சுரல் செல்ஃபி கேமரா மற்றும் 100° காட்சிப் பரப்புடன், ஒவ்வொரு புகைப்படச் சட்டகத்திலும் அதிகமான நபர்களையும், அந்தத் தருணத்தின் அதிகமான பகுதிகளையும் இடம்பெறச் செய்யும் வகையில் F35 சீரிஸ் இந்தப் பரிணாம வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்கிறது. ‘குரூப் செல்ஃபி எக்ஸ்பர்ட்’ அம்சத்தின் மூலம், இன்றைய நுகர்வோர் ஒன்றிணைந்து, கொண்டாடி, நினைவுகளை உருவாக்கும் விதத்தைப் பிரதிபலிக்கும் வகையில், F சீரிஸின் பத்தாண்டு காலப் படமெடுப்பு பாரம்பரியத்தை நாங்கள் அடுத்த கட்டத்திற்கு முன்னெடுத்துச் செல்கிறோம்.”


மாறிவரும் நுகர்வோர் தேவைகளை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட F-சீரிஸின் ஒரு தசாப்தம்


இந்தியாவில் F சீரிஸ் மேற்கொண்டுள்ள 10 ஆண்டுகாலப் பயணம், “ஸ்மார்ட்போன் புகைப்படத் தொழில்நுட்பத்தின் முன்னேற்றத்தையும், இந்திய நுகர்வோரின் மாறிவரும் எதிர்பார்ப்புகளையும் பிரதிபலிக்கிறது. தொடக்கத்தில் செல்ஃபி அனுபவங்களுக்கு முக்கியத்துவம் அளித்ததிலிருந்து, நவீன புகைப்படத் தொழில்நுட்ப வசதிகள் நீடித்த செயல்திறன் மற்றும் அன்றாடப் பயன்பாட்டிற்கு ஏற்ற வசதிகளை நுகர்வோருக்கு வழங்குவது வரை, F சீரிஸ் காலத்திற்கேற்ப தொடர்ந்து பரிணாம வளர்ச்சி அடைந்து வருகிறது.


இந்தப் பயணத்தின் அடுத்த அத்தியாயமாக F35 சீரிஸ் அறிமுகமாகிறது. இன்றைய நுகர்வோர் தங்களது தருணங்களைப் படம் பிடிக்கும் விதத்திற்கு ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்ட கேமரா அனுபவத்தையும், நீண்ட கால அன்றாடப் பயன்பாட்டிற்காக உருவாக்கப்பட்ட சிறப்பம்சங்களையும் இது ஒருங்கிணைக்கிறது.


இந்த வளர்ச்சியானது, இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் OPPO தொடர்ந்து வலுவான முன்னேற்றத்தைப் பதிவு செய்து வரும் நிலையில் ஏற்பட்டுள்ளது. IDC-யின் Worldwide Quarterly Mobile Phone Tracker (Q1 2026) அறிக்கையின்படி, OPPO ஆண்டுக்கு ஆண்டு 22% வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. இது முன்னணி ஐந்து ஸ்மார்ட்போன் பிராண்டுகளில் பதிவான அதிகபட்ச வளர்ச்சியாகும். இதே காலகட்டத்தில், OPPO-வின் சந்தைப் பங்கு முந்தைய ஆண்டின் 12.0% இலிருந்து 15.3% ஆக அதிகரித்துள்ளது. சமீபத்திய IDC இந்திய ஸ்மார்ட்போன் சந்தை தரவுகளின்படி, ரூ.20,000-க்கும் அதிகமான விலைப் பிரிவில் ஏற்பட்ட வளர்ச்சியின் காரணமாக, OPPO 13.8% சந்தைப் பங்குடன் மூன்றாவது இடத்தில் உள்ளது.



இந்த முன்னேற்றங்கள் அனைத்தும், வேகமாக வளர்ச்சியடைந்து வரும் இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் OPPO தொடர்ந்து வலுவான நிலைப்பாட்டைக் கொண்டிருப்பதை எடுத்துக்காட்டுகின்றன.


தமிழ்நாட்டில் OPPO அனுபவத்தை மேலும் வலுப்படுத்துதல்


தமிழ்நாடு எப்போதும் ஒப்போ (OPPO) நிறுவனத்திற்கு ஒரு முக்கியமான சந்தையாக இருந்து வருகிறது. இதற்கேற்ப, நிறுவனம் மாநிலம் முழுவதும் தனது வாடிக்கையாளர் தொடர்பு மையங்களைத் தொடர்ந்து வலுப்படுத்தி வருகிறது. ஒப்போ நிறுவனம் தற்போது தமிழ்நாடு முழுவதும் 42 பிரத்யேக சேவை மையங்களை (Exclusive Service Centres) கொண்டுள்ளதன் மூலம், வாடிக்கையாளர்களின் இருப்பிடத்திற்கு அருகிலேயே பிரத்யேக விற்பனைக்குப் பிந்தைய ஆதரவை (After-sales support) வழங்கி வருகிறது. இது, இந்தியா முழுவதும் 500-க்கும் மேற்பட்ட நகரங்களில் 620-க்கும் அதிகமான சேவை மையங்களைக் கொண்டு, 19 மொழிகளில் வாடிக்கையாளர்களுக்குச் சேவையாற்றி வரும் “ஒப்போ இந்தியாவின் விரிவான விற்பனைக்குப் பிந்தைய சேவை வலையமைப்பின் முக்கிய அங்கமாக இது உள்ளது”


வாடிக்கையாளர்களுக்கு சிறந்த அனுபவத்தை வழங்கும் நோக்கில், OPPO இந்தியா முழுவதும் அடுத்த தலைமுறை Service Center 3.0 Pro சேவை மையங்களின் வலையமைப்பையும் விரிவுபடுத்தி வருகிறது. ஏற்கனவே, 60-க்கும் மேற்பட்ட பிரீமியம் சேவை மையங்கள் 3.0 Pro அனுபவத்தின் கீழ் செயல்பட்டு வருகின்றன. மேலும், 2026ஆம் ஆண்டில் இந்தியா முழுவதும் 150-க்கும் மேற்பட்ட புதிய Service Center 3.0 Pro மையங்கள் அமைக்க OPPO திட்டமிட்டுள்ளது.இந்தப் புதிய சேவை மைய அமைப்பு, வாடிக்கையாளர்களுக்கு அதிக வசதி மற்றும் வெளிப்படைத்தன்மையை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் டிஜிட்டல் முறையிலான பதிவு, உடனுக்குடன் வரிசை நிலவரத் தகவல்கள் மாறும் டிஜிட்டல் அறிவிப்புப் பலகைகள், மேம்பட்ட வசதிகள் மற்றும் வாடிக்கையாளர் தொடர்பு சேவை அம்சங்கள்  உள்ளிட்ட பல்வேறு வசதிகள் இடம்பெற்றுள்ளன.


தமிழ்நாட்டு வாடிக்கையாளர்களின் வசதிக்காக தொடர்ந்து விரிவுபடுத்தப்பட்டு வரும் இந்த சேவை வலையமைப்பு  (Service Ecosystem) ஒப்போவின் விரிவடைந்து வரும் தயாரிப்புகளுக்கு கூடுதல் பலமாக அமைகிறது. இது வாடிக்கையாளர்கள் போனை வாங்குவதோடு மட்டுமல்லாமல், அதற்குப் பிறகும் அவர்களுக்கான பிரத்யேக ஆதரவை மிக எளிதாகப் பெற வழிவகை செய்கிறது.




குரூப் செல்ஃபி எக்ஸ்பர்ட்: எல்லோரையும் ஒரே ஃபிரேமிற்குள் கொண்டுவருகிறது

புதிய F35 சீரிஸின் மிக முக்கிய அம்சமாக 50MP அல்ட்ரா-வைட் நேச்சுரல் செல்ஃபி கேமரா (50MP Ultra-Wide Natural Selfie Camera) 100° ஃபீல்ட் ஆஃப் வியூ (100° field of view) வசதியுடன் அமைந்துள்ளது. இது அதிக நபர்களையும், உங்களைச் சுற்றியுள்ள தருணத்தின் முழு அழகையும் ஒரே ஃபிரேமிற்குள் கொண்டுவரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த அல்ட்ரா-வைட் கேமராவிற்குத் துணையாக AI ஆட்டோ வைடு-ஆங்கிள் ஸ்விட்ச் (AI Auto Wide-Angle Switch) அம்சம் வழங்கப்பட்டுள்ளது. இது குடும்ப விழாக்கள், பண்டிகைகள், திருமணங்கள், பயணங்கள் மற்றும் அன்றாடக் கொண்டாட்டங்களின் போது பெரிய குழுக்களை மிக எளிதாகப் படம் பிடிக்க உதவுகிறது.


OPPO F35 ப்ரோ 5G (OPPO F35 Pro 5G) மாடல்  நேச்சுரல் டோன் 2.0 (Natural Tone 2.0) மற்றும் OIS தொழில்நுட்பத்துடன் கூடிய 50MP முதன்மை கேமரா (50MP Main Camera with OIS) மூலம் புகைப்பட அனுபவத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்கிறது. மேலும், விரிவான காட்சிகளைப் பதிவு செய்ய 8MP அல்ட்ரா-வைட் பின்புற கேமராவும் இதில் இடம்பெற்றுள்ளது. காணொளி படைப்பாளர்களுக்காக”, F35 ப்ரோ மாடலின் முன்புற மற்றும் பின்புற கேமராக்கள் இரண்டிலுமே 4K வீடியோ ரெக்கார்டிங் (4K Video Recording) வசதி கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், அசையாத நிலையான வீடியோக்களை எடுக்க இதில் அல்ட்ரா-ஸ்டெடி மோட் (Ultra-Steady Mode) உள்ளது. இதிலுள்ள டூயல்-வியூ வீடியோ (Dual-View Video) அம்சம், முன்புற மற்றும் பின்புற கேமராக்கள் மூலம் ஒரே நேரத்தில் வீடியோவை பதிவு செய்ய அனுமதிக்கிறது. இதன் மூலம் ஒரு அழகான தருணத்தையும், அதற்கான உங்களின் சொந்த எதிர்வினையையும் (Reaction) ஒரே நேரத்தில் உங்களால் படம் பிடிக்க முடியும்.


F35 ப்ரோ மாடலானது போர்ட்ரெய்ட் மோட் (Portrait Mode) வசதியை அறிமுகப்படுத்துவதோடு, AI பாப்அவுட் (AI Popout) மற்றும் AI ரீமிக்ஸ் கொலாஜ் (AI Remix Collage) போன்ற ஆக்கப்பூர்வமான டூல்களையும் (Creative Tools) உள்ளடக்கியுள்ளது. இது வாடிக்கையாளர்கள் தங்களின் அன்றாடப் புகைப்படங்களை சமூக ஊடகங்களில் எளிதாகப் பகிர்ந்து கொள்ளக்கூடிய வகையில் மிகவும் அழகாக மாற்ற உதவுகிறது.


OPPO F35 5G மாடலும் 100° FOV (ஃபீல்ட் ஆஃப் வியூ) கொண்ட 50MP அல்ட்ரா-வைட் முன்புற கேமரா மற்றும் 50MP முதன்மை பின்புற கேமரா ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இது இந்த 'குரூப் செல்ஃபி எக்ஸ்பர்ட்' (Group Selfie Expert) அனுபவத்தை இன்னும் கூடுதலான வாடிக்கையாளர்களுக்குக் கொண்டு சேர்க்கிறது.


நீண்ட நாள் பயன்பாட்டிற்கும் நீடித்த உழைப்பிற்கும் ஏற்றவாறு உருவாக்கப்பட்டுள்ளது

புகைப்பட அனுபவத்தைத் தாண்டி, அன்றாடத் தேவைகளுக்கு ஏற்ற வகையில் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட பல்வேறு அம்சங்களை F35 சீரிஸ் ஒருங்கிணைக்கிறது. OPPO F35 Pro மற்றும் F35 ஆகிய இரு மாடல்களிலும் 6 ஆண்டுகள் நீடிக்கும் 8000mAh பெரிய பேட்டரி மற்றும் 80W SUPERVOOC™ வேகமான சார்ஜிங் வசதி இடம்பெற்றுள்ளன. இதன் மூலம், நாள் முழுவதும் புகைப்படம் எடுப்பதுடிஜிட்டல் படைப்புகளை உருவாக்குவது, பொழுதுபோக்கு மற்றும் தகவல் தொடர்பு போன்ற பல்வேறு பயன்பாடுகளுக்கு இடையே தடையின்றி மாறிச் செயல்படத் தேவையான நீடித்த பேட்டரி செயல்திறனை நுகர்வோர் பெறுகின்றனர்.பேட்டரி அதன் உண்மையான  திறனில் 80%-க்கும் அதிகமான திறனை, 1,800 முறை சார்ஜ் செய்த பின்னரும் தக்கவைத்துக் கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது நீண்ட கால அன்றாடப் பயன்பாட்டிற்கு சிறந்த ஆதரவை வழங்குகிறது. மேலும், இந்த சீரிஸில் IP69K, IP69, IP68 மற்றும் IP66 தரங்களுடன் கூடிய நீர் மற்றும் தூசித் தடுப்பு வசதிகளும், மழையிலும் தொடுதிரை செயல்படும் வசதி  மற்றும் ராணுவத் தர அதிர்வுகளைத் தாங்கும் திறன்  வசதிகளும் இடம்பெற்றுள்ளன. எதிர்பாராத மழை, தண்ணீர் தெறித்தல் மற்றும் தவறுதலான கீழே விழுதல் உள்ளிட்ட அன்றாடச் சூழ்நிலைகளில் கூடுதல் நம்பிக்கையுடன் சாதனத்தைப் பயன்படுத்தும் வகையில் இந்த அம்சங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

F35 சீரிஸ் ColorOS 16 இயங்குதளத்தில் செயல்படுகிறது. இது உற்பத்தித்திறன், படைப்பாற்றல் மற்றும் அன்றாடப் பயன்பாட்டை எளிதாக்கும் வகையில் செயற்கை நுண்ணறிவு சார்ந்த பல்வேறு கருவிகளை வழங்குகிறது. இதில் AI Recording, AI Ultra-Clear Documents, AI Call Guard மற்றும் One-Tap Security Guard உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.


புதிய டிரினிட்டி இன்ஜின், கணினி வளங்களை மேலும் சிறப்பாக நிர்வகித்து, வேகமான மற்றும் தடையற்ற பயன்பாட்டு அனுபவத்தை வழங்க உதவுகிறது. அதேபோல், நீண்ட காலப் பயன்பாட்டிற்கான பராமரிப்பு 2.0 மற்றும் ஆறு ஆண்டுகளுக்கான சீரான செயல்திறன் பாதுகாப்பு ஆகியவை, நீண்ட காலப் பயன்பாட்டிலும் சாதனத்தின் செயல்திறனைத் தொடர்ந்து பராமரிக்க உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.


தொடர்ந்து செயல்படும் திறன்

OPPO F35 Pro 5G மாடல் MediaTek Dimensity 7360 MAX செயலியால் இயக்கப்படுகிறது. அதிக செயல்திறன் தேவைப்படும் பயன்பாடுகளின்போது வெப்பத்தை சிறப்பாக வெளியேற்ற உதவும் வகையில் 5000mm² SuperCool VC System இதில் இடம்பெற்றுள்ளது.F35 Pro மாடலில் 17.22 செ.மீ. 1.5K 144Hz AMOLED Ultra-Bright Display வழங்கப்பட்டுள்ளது. அதேபோல், F35 மாடலில் 16.69 செ.மீ. FHD+ 120Hz AMOLED Ultra-Bright Display இடம்பெற்றுள்ளது. இவை பொழுதுபோக்கு, உள்ளடக்கங்களைப் பார்வையிடுதல் மற்றும் அன்றாடப் பயன்பாடு ஆகியவற்றில் மென்மையான மற்றும் தெளிவான காட்சிகளை வழங்குகின்றன.

OPPO Celebrates a 10 of F Series in India with the Launch of F35 Series, Bringing the Group Selfie Expert to a New Generation

OPPO Celebrates a 10 of F Series in India with the Launch of F35 Series, Bringing the Group Selfie Expert to a New Generation

Chennai, October 5th, 2026:As OPPO marks 10 years of the F Series in India, the brand today announced the launch of the OPPO F35 Series, comprising the OPPO F35 Pro and OPPO F35. Over the past decade, the F Series has evolved from introducing the “Selfie Expert” with the first-generation F1 to becoming the “Group Selfie Expert” with the new F35 Series — reflecting how the way consumers capture, share and experience moments has evolved.


From the F1 to the F35 Series, the F Series has continued to build on its imaging legacy while staying closely attuned to the aspirations and lifestyles of India's young, digitally connected service professionals. With 30 million+ F Series smartphones sold in India over the last 10 years, the series has grown alongside a generation that increasingly uses smartphones not just to capture individual moments, but to create, connect and share experiences with the people around them. The F35 Series takes this journey forward with its 50MP Ultra-Wide Natural Selfie Camera with a 100° field of view, bringing more people and more of the moment into every frame.


OPPO F35 Series - Priced at INR 45,999 for the 6GB+128GB variant, INR 49,999 for the 8GB+128GB variant and INR 54,999 for the 8GB+256GB variant of OPPO F35 Pro 5G, and INR 38,999 for the 6GB+128GB variant and INR 42,999 for the 8GB+128GB variant of the OPPO F35 5G, the OPPO F35 Series will be available for purchase starting 11th October 2026 across mainline retail outlets, OPPO India E-Store, Flipkart and Amazon. The OPPO F35 Pro 5G will be available in three colour options: Sunrise Orange, Wave Blue and Twilight Brown, while the OPPO F35 5G will be available in Wave Blue, Titanium Grey and Mist Pink. Consumers can also avail up to 10% Instant Cashback, No-Cost EMI options, up to 10% Exchange Bonus and Zero Down Payment schemes, along with additional festive offers on select OPPO products and services.


Commenting on the launch, Mr. Goldee Patnaik, Head of Communications, OPPO India, said: “Over the last 10 years, the F Series has evolved alongside the changing ways in which consumers across India capture, connect and share their lives. In a market as diverse as India, every region has its own way of coming together and celebrating and Tamil Nadu, with its rich culture of family, festivities and shared moments, is a great reflection of this spirit. The F35 Series builds on this evolution with the 50MP Ultra-Wide Natural Selfie Camera and 100° field of view, bringing more people and more of the moment into every frame. With the Group Selfie Expert, we are taking the F Series’ decade-long imaging legacy forward in a way that reflects how consumers today come together, celebrate and create memories.”


A Decade of F Series, Built Around Changing Consumer Needs


The F Series' 10-year journey in India reflects the evolution of smartphone photography and the changing aspirations of Indian consumers. From its early focus on selfie experiences to bringing increasingly advanced imaging capabilities, durability and everyday usability to consumers, the F Series has continued to evolve with the times.


The F35 Series marks the next chapter of this journey, bringing together a camera experience designed around how consumers capture moments today, alongside features built for long-term everyday use.

This evolution comes amid continued momentum for OPPO in the Indian smartphone market. According to IDC's Worldwide Quarterly Mobile Phone Tracker (Q1 2026), OPPO recorded 22% year-on-year growth, the highest among the top five brands, while its market share increased to 15.3% from 12.0% a year earlier. More recently, as per IDC India smartphone market data placed OPPO in the third position with a 13.8% market share, driven by growth in the above-₹20,000 segment.


Together, these developments underline OPPO's continued presence in India's rapidly evolving smartphone market.


Strengthening the OPPO Experience in Tamil Nadu


Tamil Nadu remains an important market for OPPO, with the company continuing to strengthen its consumer touchpoints across the state.OPPO currently has 42 exclusive service centres across Tamil Nadu, providing consumers with dedicated after-sales support closer to home. This forms part of OPPO India's wider after-sales network of 620+ service centres across 500+ cities, supporting customers across 19 languages.


As part of its continued focus on customer experience, OPPO is also expanding its next-generation Service Center 3.0 Pro network across India. More than 60 Premium Service Centers are already operational under the 3.0 Pro experience, with 150+ new Service Center 3.0 Pro centres planned across India in 2026.The new service format is designed around greater convenience and transparency, incorporating features such as digital check-in, real-time queue updates, dynamic digital signage, optimised layouts and interactive service elements.


For consumers in Tamil Nadu, this growing service ecosystem complements OPPO's expanding product portfolio by providing access to dedicated support beyond the point of purchase.


Group Selfie Expert: Bringing Everyone into the Frame


At the heart of the new F35 Series is the 50MP Ultra-Wide Natural Selfie Camera with a 100° field of view, designed to bring more people and more of the surrounding moment into a single frame.

The ultra-wide camera is supported by AI Auto Wide-Angle Switch, making it easier to capture larger groups across occasions such as family gatherings, festivals, weddings, travel and everyday outings.


The OPPO F35 Pro 5G further elevates the imaging experience with Natural Tone 2.0 and a 50MP main camera with OIS, along with an 8MP ultra-wide rear camera for wider compositions.

For consumers who create video content, the F35 Pro supports 4K video recording on both the front and rear cameras, along with Ultra-Steady mode for more stable footage. Dual-View Video allows users to simultaneously record through the front and rear cameras, capturing both the moment and their own reactions.


The F35 Pro also introduces Portrait Mode, along with creative tools including AI Popout and AI Remix Collage, enabling users to transform everyday captures into more shareable content. 


The OPPO F35 5G also features a 50MP Ultra-Wide front camera with 100° FOV and a 50MP main rear camera, bringing the Group Selfie Expert experience to a wider range of consumers. OPPO F35 Series Launch Release


Built for Long Days and Long-Term Use


Beyond imaging, the F35 Series brings together features designed to support demanding everyday usage.Both the OPPO F35 Pro and F35 feature a 6-Year Durable 8000mAh Large Battery and 80W SUPERVOOC™ Flash Charge, giving consumers the endurance to move between photography, content creation, entertainment and communication throughout the day.


The battery is designed to retain over 80% of its original capacity after up to 1,800 charge cycles, supporting long-term everyday use. The series also features IP69K, IP69, IP68 and IP66 water and dust resistance, along with Rainstorm Touch and Military-Grade Shock Resistance. These features are designed to provide added confidence during everyday use, including unexpected rain, splashes and accidental drops. OPPO F35 Series Launch Release

The F35 Series runs on ColorOS 16, bringing AI-powered tools for productivity, creativity and everyday convenience. Features include AI Recording, AI Ultra-Clear Documents, AI Call Guard and One-Tap Security Guard.


The All-New Trinity Engine further optimises system resources to support a faster and smoother experience, while Extended Use Care 2.0 and six-year smoothness protection are designed to help maintain performance over extended use. 


Performance That Keeps Up


The OPPO F35 Pro 5G is powered by the MediaTek Dimensity 7360 MAX, supported by a 5000mm² SuperCool VC System for improved heat dissipation during demanding usage.The F35 Pro also features a 17.22cm 1.5K 144Hz AMOLED Ultra-Bright Display, while the F35 comes with a 16.69cm FHD+ 120Hz AMOLED Ultra-Bright Display, offering smooth visuals for entertainment, content consumption and everyday use. 

Monday, October 5, 2026

Qlik மற்றும் ஐசிடி அகாடமி கூட்டாண்மை விரிவாக்கம்: இந்தியா முழுவதும் மேலும் 10 லட்சம் மாணவர்களுக்கு தரவு மற்றும் AI திறன்களை வழங்கத் திட்டம்

Qlik மற்றும் ஐசிடி அகாடமி கூட்டாண்மை விரிவாக்கம்: இந்தியா முழுவதும் மேலும் 10 லட்சம் மாணவர்களுக்கு தரவு மற்றும் AI திறன்களை வழங்கத் திட்டம் 

பணியாளர்களின் ஆயத்த நிலையை வலுப்படுத்த நேரடிப் பயிற்சி, ஆசிரியர் மேம்பாடு, 'லேர்னத்தான்கள்' மற்றும் பல்கலைக்கழகங்களில் 'சிறப்பு மையங்களை' (Centers of Excellence) இந்தத் தொடர் கூட்டணி விரிவுபடுத்தும் 

முக்கியத் தகவல்கள்: 

● மேலும் 10 லட்சம் மாணவர்கள்: புதுப்பிக்கப்பட்ட இந்த கூட்டாண்மை, இந்தியா முழுவதிலும் உள்ள மேலும் 10 லட்சம் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு நடைமுறைத் தரவு அறிவு (data literacy), பகுப்பாய்வு (analytics) மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) கல்வியை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

● பரவலான நடைமுறைப் பயிற்சி: கார்ப்பரேட் அளவிலான தரவு மற்றும் பகுப்பாய்வுத் தொழில்நுட்பத்தின் மூலம் ஆசிரியர்களுக்கான பயிற்சி, 'லேர்னத்தான்கள்' (Learnathons), சிறப்பு மையங்கள் (Centers of Excellence) மற்றும் பல்கலைக்கழகத் திட்டங்களை இந்தத் கூட்டணி விரிவுபடுத்தும்.

● பரந்த தேசிய அளவிலான சென்றடைவு: இந்த அடுத்தகட்ட நடவடிக்கையானது, இந்தியா முழுவதும் 1,100-க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் மற்றும் நிறுவனங்களுடன் 'Qlik கல்வித் திட்டம்' (Qlik Academic Program) கொண்டுள்ள தொடர்பின் அடிப்படையில் மேலும் விரிவடைகிறது.

சென்னை 24 செப்டம்பர் 2026: Qlik® நிறுவனமானது இந்தியா முழுவதிலும் உள்ள மேலும் 10 லட்சம் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்குத் தரவு அறிவு (data literacy), பகுப்பாய்வு (analytics) மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) ஆகியவற்றில் நடைமுறை சார்ந்த, தொழில்முறைக்கு ஏற்ற கல்வியை வழங்கும் நோக்கில், ஐசிடி அகாடமியுடன் (ICT Academy) ஒரு புதிய புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் தனது கூட்டாண்மையை விரிவுபடுத்துவதாக அறிவித்துள்ளது.

முதலாளிகள் எதிர்பார்க்கும் நடைமுறைத் திறன்களை வகுப்பறைப் பயிற்சியுடன் இணைப்பதை நோக்கமாகக் கொண்டு, நீண்டகாலமாகச் செயல்பட்டு வரும் இந்தக் கூட்டணி, இந்த ஒப்பந்தத்தின் மூலம் அடுத்தகட்டத்தை எட்டியுள்ளது. 'Qlik கல்வித் திட்டத்தின்' (Qlik Academic Program) மூலம், இதில் பங்கேற்கும் நிறுவனங்கள், தங்களது மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கார்ப்பரேட் அளவிலான தரவு மற்றும் பகுப்பாய்வுத் தொழில்நுட்பப் பயிற்சிகள், கட்டமைப்புடன் கூடிய பாடத்திட்டங்கள், தயாரிப்புத் தகுதிகள் (product qualifications) மற்றும் சான்றிதழ் வழிகளை இலவசமாக வழங்கி, நேரடிப் பயிற்சியைப் பெற உதவ முடியும்.

புதுப்பிக்கப்பட்ட இந்தக் கூட்டாண்மையின் கீழ், Qlik மற்றும் ஐசிடி அகாடமி இணைந்து பின்வரும் பணிகளை மேற்கொள்ளும்: 

● பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் 'சிறப்பு மையங்களை' (Centers of Excellence) நிறுவுதல் மற்றும் விரிவுபடுத்துதல்;

● ஆசிரியர்கள் தங்களது பாடத்திட்டங்களில் தரவு அறிவு (data literacy), பகுப்பாய்வு (analytics), தரவு ஒருங்கிணைப்பு (data integration) மற்றும் AI கோட்பாடுகளை இணைக்க உதவுதல்;

● மாணவர்களுக்கான கற்றல் திட்டங்கள், 'லேர்னத்தான்கள்' (Learnathons) மற்றும் நடைமுறைச் சிக்கல்களுக்குத் தீர்வு காணும் சவால்களை நடத்துதல்;

● இந்தியா முழுவதும் உள்ள உயர்கல்வி நிறுவனங்களுடனான தொடர்பை மேலும் வலுப்படுத்துதல்; மற்றும்

● மாணவர்கள் வேலைவாய்ப்பிற்குத் தேவையானத் திறன்களை வெளிப்படுத்த உதவும் தகுதிகள் மற்றும் சான்றிதழ்களைப் பெற ஆதரவளித்தல்.

இதுவரை, இந்தக் கூட்டாண்மையானது 2,00,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களைச் சென்றடைந்துள்ளது. ஐசிடி அகாடமியின் கல்வி நிறுவன வலையமைப்பு மற்றும் ஆசிரியர் மேம்பாட்டு அனுபவத்தையும், Qlik நிறுவனத்தின் தொழில்நுட்பம், பாடத்திட்டங்கள் மற்றும் சான்றிதழ் ஆதாரங்களையும் ஒன்றிணைத்து, இந்த மாதிரித் திட்டத்தை நாடு முழுவதும் விரிவுபடுத்துவதே இதன் அடுத்த கட்ட நோக்கமாகும். 

"செயற்கை நுண்ணறிவுக்கேற்ற (AI) ஆயத்த நிலை என்பது தரவு அறிவில் (data literacy) இருந்தே தொடங்குகிறது," என்று Qlik நிறுவனத்தின் இந்தியா மற்றும் சார்க் (SAARC) பிராந்தியத்திற்கான நிர்வாக இயக்குனர் வருண் பாபர் கூறினார். "இந்தியாவுக்கு AI கருவிகளைப் பயன்படுத்துவதுடன் நிறுத்திவிடாமல், அக்கருவிகளின் பின்னணியில் உள்ள தரவுகளைப் புரிந்துகொள்ளவும், அவற்றின் முடிவுகளை விமர்சன ரீதியாக மதிப்பீடு செய்யவும், நடைமுறைச் சிக்கல்களுக்குப் பகுப்பாய்வுகளைப் பயன்படுத்தவும் தெரிந்த பட்டதாரிகள் தேவை. ஐசிடி அகாடமியுடனான எங்கள் கூட்டாண்மை, கல்வி நிறுவனங்களுக்கு அத்தகைய திறன்களை வளர்ப்பதற்கான ஒரு பரவலான வழியை வழங்குகிறது. இந்த அடுத்தகட்ட நடவடிக்கை, மேலும் 10 லட்சம் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்கள் வகுப்பறைக் கற்றலை நடைமுறையில் வெளிப்படுத்தக்கூடிய திறன்களாக மாற்ற உதவும்."

"தொழில்நுட்பத் துறையில் பணிபுரிய விரும்பும் மாணவர்களுக்கு மட்டுமல்லாமல், அனைத்துத் துறை மாணவர்களுக்கும் தரவு மற்றும் AI திறன்கள் இன்றியமையாத ஒன்றாக மாறிவருகின்றன," என்று ஐசிடி அகாடமியின் தலைமை நிர்வாக அதிகாரி வி. ஸ்ரீகாந்த் கூறினார். "ஐசிடி அகாடமியின் கல்வி நிறுவனத் தொடர்புகள் மற்றும் ஆசிரியர் மேம்பாட்டு அனுபவத்தை, Qlik நிறுவனத்தின் தொழில்நுட்பம் மற்றும் கற்றல் ஆதாரங்களுடன் ஒன்றிணைப்பதன் மூலம், பல்கலைக்கழகங்கள் தங்களது மாணவர்களின் கற்றல் அனுபவத்தில் வேலைவாய்ப்பிற்கு உகந்த நடைமுறைப் பயிற்சிகளை ஆழமாக இணைக்கவும், அவற்றுக்கான வேலைவாய்ப்பு வழிகளை வலுப்படுத்தவும் எங்களால் உதவ முடியும்."

தமிழ்நாட்டின் செயற்கை நுண்ணறிவு, தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர் குமார் ஆர்., தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் முனைவர் அதுல் ஆனந்த், ஐ.ஏ.எஸ்., மற்றும் இதர அரசு, கல்வி மற்றும் துறை சார்ந்த தலைவர்கள் முன்னிலையில், சென்னையில் Qlik மற்றும் ஐசிடி அகாடமி இடையே இந்த முதற்கட்ட கூட்டாண்மை ஒப்பந்தம் கையெழுத்தானது.

ஆசியா பசிபிக் பிராந்தியத்தில் 'Qlik கல்வித் திட்டத்தின்' (Qlik Academic Program) மிகப்பெரிய பங்களிப்பைக் கொண்ட நாடாக இந்தியா விளங்குவதுடன், நாடு முழுவதும் 1,100-க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் மற்றும் நிறுவனங்கள் இதில் இணைந்துள்ளன. இதில் முன்னணி ஐஐடிகள் (IITs), ஐஐஎம்கள் (IIMs) மற்றும் 'தெலுங்கானா அகாடமி ஃபார் ஸ்கில் அண்ட் நாலேட்ஜ்' (TASK) உள்ளிட்ட பொதுத்துறை திறன் பயிற்சி கூட்டாளர்களும் அடங்குவர்.

பெங்களூரு, ஹைதராபாத் மற்றும் சென்னையில் உள்ள ஐந்து 'சிறப்பு மையங்களுடன்' (Centers of Excellence) Qlik நிறுவனம் இணைந்து செயல்படுகிறது. இங்கு மாணவர்கள் கட்டமைப்புடன் கூடிய பயிற்சிகளில் பங்கேற்கவும், தகுதிகள் மற்றும் சான்றிதழ்களைப் பெறவும், டேட்டாத்தான்கள் (datathons) மற்றும் பிற நடைமுறைச் சவால்கள் மூலம் தங்களது கற்றலைச் செயல்படுத்திப் பார்க்கவும் முடியும்.

2012-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட 'Qlik கல்வித் திட்டம்', பல்கலைக்கழக மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களை தரவு மற்றும் AI சார்ந்த பணியிடங்களுக்குத் தயார்படுத்த உதவுகிறது. இதில் தகுதிபெறும் பங்கேற்பாளர்களுக்கு Qlik கிளவுட் அனலிடிக்ஸ்® (Qlik Cloud Analytics®) மற்றும் Qlik டேலண்ட் கிளவுட்® (Qlik Talend Cloud®) ஆகியவற்றுக்கான இலவச அணுகல், தரவு பகுப்பாய்வு மற்றும் தரவு அறிவை உள்ளடக்கிய பயிற்சி பாடத்திட்டங்கள், தயாரிப்புத் தகுதிகள், சான்றிதழ் வழிகள் மற்றும் வகுப்பறை பயன்பாட்டிற்கான ஆசிரியர் ஆதாரங்கள் வழங்கப்படுகின்றன.

Sunday, October 4, 2026

Tourism Malaysia and Holiday Star Launch “Grill & Win” Campaign to Drive Consumer Interest in Malaysia under Visit Malaysia 2026–2027

Tourism Malaysia and Holiday Star Launch “Grill & Win” Campaign to Drive Consumer Interest in Malaysia under Visit Malaysia 2026–2027

CHENNAI, 1 October 2026: Tourism Malaysia Chennai, in collaboration with Holiday Star Tours & Travel and Smoke Hub Barbecue, today launched the “Grill & Win” Joint Promotion Campaign, a consumer-focused initiative aimed at generating greater awareness and travel interest in Malaysia as part of the promotional activities for Visit Malaysia 2026–2027 (VMY 2026–2027).


The campaign brings Malaysia closer to Indian consumers by combining destination promotion, attractive travel offers, dining experiences and lucky draws, creating an engaging platform to encourage families and travellers to consider Malaysia for their next holiday.


As part of the promotion, customers dining at participating Smoke Hub Barbecue outlets can enjoy 10% off on Holiday Star bookings and participate in lucky draws featuring a range of Malaysia-related prizes.


The highlight of the campaign is the Grand Lucky Draw, where one couple from each participating outlet will have the chance to win a 3D2N trip to Malaysia. Additional prizes include hotel stays and attraction entry tickets, further enhancing the consumer appeal of the campaign.


Following the launch at Smoke Hub Barbecue, Pallavaram, the campaign will be extended to participating outlets in T. Nagar, Chennai, and Madurai, enabling the partners to reach a wider consumer base across Tamil Nadu.


The initiative supports the objectives of Visit Malaysia 2026–2027, which seeks to strengthen Malaysia’s destination visibility, enhance consumer engagement and encourage greater visitation from the Indian market.


Mr. Hishamuddin Mustafa, Director, Tourism Malaysia Chennai, said the campaign provides an effective platform to connect Malaysian tourism offerings directly with consumers.


“Visit Malaysia 2026–2027 is an important platform for us to strengthen Malaysia’s presence in the Indian market. This collaboration with Holiday Star combines travel promotion with a popular consumer dining experience, allowing us to engage directly with families and potential travellers. We appreciate Holiday Star and Smoke Hub Barbecue for creating this platform and look forward to reaching more consumers across Chennai and Madurai.”


Mrs. Najmunnisa, Managing Director, Holiday Star Tours & Travel, said the campaign was designed to create an exciting connection between dining and travel.


“We are delighted to launch the ‘Grill & Win’ campaign together with Tourism Malaysia. Our aim is to give customers an added reason to explore Malaysia by combining attractive travel offers with the excitement of the lucky draw. With the campaign being extended to T. Nagar and Madurai, we hope to engage a wider audience and inspire more customers to consider Malaysia for their next holiday.”


Mr. Rajasankar, Managing Director, Smoke Hub Barbecue, said the restaurant’s diverse customer base provides an effective platform for consumer engagement.


“We are pleased to be part of this unique campaign with Tourism Malaysia and Holiday Star. Smoke Hub Barbecue welcomes a diverse mix of families and corporate customers, and the ‘Grill & Win’ concept gives our customers an opportunity to enjoy their dining experience while discovering an exciting travel opportunity. We are happy to support this initiative and bring the Malaysia holiday experience closer to our customers.”


The “Grill & Win” campaign further strengthens Tourism Malaysia’s consumer-facing promotional activities in Tamil Nadu under Visit Malaysia 2026–2027, while providing an innovative platform to showcase Malaysia as an attractive holiday destination through travel incentives, dining experiences and influencer engagement.


The launch event was attended by Mr. Hishamuddin Mustafa, Director, Tourism Malaysia Chennai, as Chief Guest; Mrs. Najmunnisa, Managing Director, Holiday Star Tours & Travel; Mr. Rajasankar, Managing Director, Smoke Hub Barbecue; and Mr. Bavin Bavithran, Actor/Influencer.


Prepared by:

Holiday Star Tours & Travel