எளிமை, உள்ளடக்கம் மற்றும் புதுமை ஆகியவற்றால் உந்தப்பட்டு, BHIM செயலி, ஜனவரி முதல் செப்டம்பர் 2025 வரையிலான மாதாந்திர பரிவர்த்தனைகளில் 3 மடங்குக்கும் மேல் அதிகரிப்பை பதிவு செய்கிறது.
பாரதம் முழுவதும் நிதி அதிகாரமளிப்பை ஊக்குவிக்கின்ற வகையில் டிஜிட்டல் பணப் பரிமாற்றங்களை அனைவருக்கும் கிடைக்கச் செய்கிறது
சென்னை, அக்டோபர் 14, 2025: NPCI BHIM சர்வீசஸ் லிமிடெட் (NBSL) நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட BHIM பேமென்ட்ஸ் செயலி, இந்தியா முழுவதும் தொடர்ச்சியான பயனர் மேற்கொள்ளல் மற்றும் நம்பிக்கையை வெளிப்படுத்துகின்ற வகையில் நடப்பு ஆண்டு 2025 இல் ஜனவரி முதல் செப்டம்பர் மாதம் வரை ஒரு வலுவான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. நடப்பு ஆண்டு 2025 இல், ஒன்பது மாதங்களுக்குள் மூன்று மடங்கு அதிகரிப்பையும், மாதந்தோறும் சராசரியாக 12% வளர்ச்சியையும் பிரதிபலிக்கின்ற BHIM இன் மாதாந்திர பரிவர்த்தனைகள், ஜனவரியில் 38.97 மில்லியனிலிருந்து செப்டம்பரில் 119.85 மில்லியனாக உயர்ந்தன, செப்டம்பர் 2025இல் இந்த செயலி ₹16,803 கோடி மதிப்புள்ள பரிவர்த்தனைகளைச் செயல்படுத்தியது, இது கடந்த ஆண்டு இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது அளவில் 312% அதிகரிப்பையும் மதிப்பில் 94% வளர்ச்சியையும் குறிக்கிறது.
மார்ச் 2025 இல் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த புதிய BHIM பேமெண்ட்ஸ் செயலி, தமிழ் உட்பட 15 க்கும் மேற்பட்ட இந்திய மொழிகளை ஆதரிக்கிறது, ஒரு விளம்பரங்கள் இல்லாத, குழப்பம் இல்லாத இடைமுகத்தை வழங்குகிறது, மேலும் நகர்ப்புற, கிராமப்புற மற்றும் அரை நகர்ப்புற பகுதிகளில் உள்ள பயனர்களுக்கு அணுகலை உறுதி செய்கின்ற வகையில் குறைந்த இணைப்பு பகுதிகளுக்கு உகந்ததாக ஆக்கப்பட்டுள்ளது.
NBSL நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி திருமதி லலிதா நடராஜ் கூறுகையில், " டிஜிட்டல் பணப் பரிமாற்றங்கள் விரைவாக வளர்ச்சியடைந்து வரும் இந்த உலகில், தற்போதைய பயனர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக BHIM
பேமென்ட்ஸ் செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது. பாரதத்திற்காக உருவாக்கப்பட்ட இந்த செயலி, பாதுகாப்பு, வசதி மற்றும் அனைவருக்குமான அணுகல் ஆகியவற்றிற்கு முன்னுரிமை அளிக்கிறது. குறைந்த இணைப்பு வசதி உள்ள பகுதிகளிலும் கூட, சிறிய தொகை பரிவர்த்தனைகளைத் தடையில்லாமல் செய்வதன் மூலம் ரொக்கத்தில் சார்ந்திருப்பதைக் குறைக்கிறது. பயனர்களின் அன்றாட தேவைகளுக்காக வடிவமைக்கப்பட்ட ஒரு தயாரிப்பில் அவர்கள் வைத்துள்ள நம்பிக்கையை இதன் வலுவான வளர்ச்சி பிரதிபலிக்கிறது. தினசரி சிறிய தொகை பரிவர்த்தனைகளுக்காக இருந்தாலும் சரி, அல்லது UPI Circle போன்ற மேம்பட்ட திறன்களுக்காக இருந்தாலும் சரி, BHIM டிஜிட்டல் பரிவர்த்தனைகளை எளிதாகவும் நம்பகமானதாகவும் தொடர்ந்து செய்து வருகிறது.” என்றார்.
பயனர்களுக்கான மேம்படுத்தப்பட்ட அம்சங்கள்
செலவுகளைப் பிரித்தல் - பயனர்கள் இப்போது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் பில்களை தடையின்றிப் பிரிக்கலாம். வெளியே சாப்பிடுவது, வாடகை செலுத்துதல்கள் அல்லது குழு கொள்முதல் என எதுவாக இருந்தாலும், தொந்தரவு இல்லாத தீர்வுகளை உறுதி செய்கின்ற இந்த செயலி, பயனர்கள் செலவுகளைப் பிரித்து நேரடியாக பணம் செலுத்த அனுமதிக்கிறது.
ஃபேமிலி மோட் – பயனர்கள் இப்போது தங்கள் குடும்ப உறுப்பினர்களை சேர்க்கலாம், பகிரப்பட்ட செலவுகளை கண்காணிக்கலாம், மற்றும் குறிப்பிட்ட செலுத்துதல்களுக்கு ஒதுக்கலாம். குடும்பங்களின் செலவுகளை ஒரு ஒருங்கிணைந்த பார்வையில் வழங்குவதன் மூலம், இந்த அம்சம் சிறந்த நிதித் திட்டமிடலை சாத்தியமாக்குகிறது.
செலவுகள் பகுப்பாய்வு – BHIM பேமென்ட்ஸ் செயலியில் செய்யப்பட்ட செலவினங்களுக்கான, ஒரு பயனரின் மாதாந்திர செலவு முறைகளின் எளிதில் புரிந்துகொள்ளக்கூடிய பார்வையை இந்த புதிய டாஷ்போர்டு வழங்குகிறது. சிக்கலான ஸ்பிரெட் சீட்கள் தேவையின்றி பயனர்கள் தங்கள் பட்ஜெட்டை பகுப்பாய்வு செய்யவும் நிர்வகிக்கவும் அவர்களுக்கு உதவுகின்ற இது செலவுகளை தானாகவே வகைப்படுத்துகிறது.
தேவைப்படும் நடவடிக்கை - BHIM பேமெண்ட்ஸ் செயலியுடன் இணைக்கப்பட்ட நிலுவையில் உள்ள பில்களை பயனர்களுக்கு நினைவூட்டும் ஒரு உள்ளமைக்கப்பட்ட பணி உதவியாளர் அம்சம், UPI Lite ஐ இயக்கும்படி அவர்களைத் தூண்டுகிறது மற்றும் அவர்களின் Lite இருப்பு குறைவாக இருக்கும்போது அவர்களை நினைவூட்டுகிறது. இது பயனர்கள் தங்கள் நிதி நடவடிக்கைகளை சிறப்பாகச் செய்வதை உறுதி செய்கிறது.
UPI Circle (UPI பரிவர்த்தனைகளுக்கான பகுதி அதிகாரம்) - நம்பகமான நபர்களுக்கு வரையறுக்கப்பட்ட செலுத்துதல் அதிகாரங்களை விரிவாக்க பயனர்களை அனுமதிக்கிறது. ஒரு முதன்மை கணக்கு வைத்திருப்பவர், ஐந்து இரண்டாம் நிலை பயனர்கள் கணக்கில் இருந்து பணம் செலுத்தும் பரிவர்த்தனைகளை தொடங்க அவர்களை அங்கீகரிக்க முடியும். ஒரு இரண்டாம் நிலை பயனரால் தொடங்கப்படும் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும், BHIM பேமெண்ட்ஸ் செயலியில் முதன்மை பயனரின் UPI PIN மூலம் வெளிப்படையான ஒப்புதல் தேவை. முதன்மை பயனருக்கு முழுமையான வெளிப்படைத்தன்மை, கட்டுப்பாடு மற்றும் மேற்பார்வையை உறுதி செய்கின்ற இந்த செயலி, இத்தகைய அனைத்து பரிவர்த்தனைகளின் நிகழ்நேர கண்காணிப்பையும் வழங்குகிறது.
NPCI BHIM Services Limited பற்றி
NPCI BHIM Services Limited என்பது 2024 ஆம் ஆண்டில் நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (NPCI) நிறுவனத்தின் முழுச் சொந்தமான துணைநிறுவனமாக நிறுவப்பட்டது. பாரத் இண்டர்ஃபேஸ் ஃபார் மணி (BHIM) தளத்தின் மூலம் டிஜிட்டல் கொடுப்பனவுகளின் மேற்கொள்ளலை மேம்படுத்துவதை NBSL நோக்கமாகக் கொண்டுள்ளது மேலும் இந்தியா முழுவதும் உள்ள தனிநபர்கள் மற்றும் வணிகங்களுக்கு ஒரு இடையூறற்ற, பாதுகாப்பான மற்றும் பயனர்-நட்பு செலுத்துதல் அனுபவத்தை வழங்குவதற்கு இந்நிறுவனம் உறுதிபூண்டுள்ளது.
NBSL நிறுவனம், அனைவருக்கும் எளிதில் அணுகக்கூடிய மற்றும் நம்பகமான கொடுப்பனவு தீர்வுகளை வழங்குகின்ற வகையில் விரைவான மற்றும் திறமையான டிஜிட்டல் பரிவர்த்தனைகளை
எளிதாக்குகிறது. நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, NBSL நிதிச் சேர்க்கையை ஊக்குவிப்பதுடன், ஒரு முழுமையான டிஜிட்டல் பொருளாதாரமாக மாறுவதற்கான இந்தியாவின் பயணத்தை ஆதரிக்கிறது.
மேலும் தகவலுக்கு, https://www.bhimupi.org.in/ இணையதளத்திற்கு செல்லவும்.