95 வயது நோயாளிக்கு சென்னை புரோமெட் மருத்துவமனையில் வெற்றிகரமாக பாதுகாக்கப்பட்ட ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சை
From left to right: Dr. Spoorthi Arun (Founder & Managing Director), Dr. Arun Kalyanasundaram (Director & Head of Cardiology), the patient, Dr. R. Anantharaman (Senior International Cardiologist), and Dr. Anand Manjunath (Consultant Interventional Cardiologist) at the press conference.
*முதியோர் இதயவியல் துறையில் ஆசிய அளவில் மைல்கல் சாதனை*
சிறப்பம்சங்கள்
95 வயது நோயாளி ஒருவருக்கு, இம்பெல்லா எனப்படும் இதய பம்ப் மற்றும் ரத்த நாளங்களில் படமெடுக்கும் முறையின் மூலம் பாதுகாப்பான, துல்லியமான இதய சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்திய அளவில் அதிக இடர் மிகுந்த முதியோருக்கான இதய அறுவை சிகிச்சையில் புரோமெட் மருத்துவமனை அதிநவீன தொழில்நுட்பத்தை செய்து சாதித்திருக்கிறது.
சென்னை, அக்டோபர் 7, 2025: சென்னையைச் சேர்ந்த புரோமெட் மருத்துவமனை இதயவியல் மற்றும் அவசர சிகிச்சை துறைகளில் அதிநவீன சிகிச்சையளிக்கும் முன்னணி மருத்துவமனை ஆகும். இங்கு 95 வயது நோயாளி ஒருவருக்கு வெற்றிகரமாக பாதுகாக்கப்பட்ட ஆஞ்சியோ பிளாஸ்டி அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. ஆசிய அளவில் இவ்வளவு வயதான நோயாளிக்கு இத்தகைய சிகிச்சை செய்யப்படுவது மிகவும் அரிதானதாகும். அத்தகைய இதய அறுவை சிகிச்சையை இம்மருத்துவமனை சாதித்துக் காட்டியுள்ளது. முதியோர் இதயவில் சிகிச்சையில் தனது சீரிய தலைமையின்கீழ் வயது முதிர்ந்தோருக்கான இதய சிகிச்சையில் முக்கிய் மைல்கல்லை அடைந்திருக்கிறது புரோமெட் மருத்துவமனை.
புரோமெட் மருத்துவமனையில் திரு.எஸ் எனும் நோயாளி, கடுமையான மாரடைப்பை அடுத்து (NSTEMI) அனுமதிக்கப்பட்டார். அவரது இதயத்தின் செயல்பாடு மோசமாக பலவீனமடைந்திருந்தது. அவரது வயது முதிர்ச்சி, உயர் ரத்த அழுத்தம், ரத்த சோகை, 2023ல் பாதித்த பக்கவாதம் என்று பல பிரச்சனைகள் சிகிச்சைக்கு சவாலாக இருந்தன. இருப்பினும் இம்மருத்துவமனையின் இயக்குநரும் இதயவியல் துறையின் தலைவருமான மருத்துவர் அருண் கல்யாண சுந்தரம் தலைமையிலான மருத்துவர் குழு, அந்நோயாளிக்கு சிகிச்சையளிக்க முடிவு செய்தது. சிக்கல் மிகுந்த பி.சி.ஐ எனப்படும் முறையை பயன்படுத்தி (PCI) அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டது.
அதிக இடர்மிகுந்த இந்த நடைமுறையின்போது நோயாளியின் பாதுகாப்பை உறுதிப்படுத்த , மருத்துவர் குழு இம்பெல்லா சிபி எனப்படும் சிறிய அளவிலான இதய பம்ப்-ஐப் பயன்படுத்தியது. அதன்மூலம் இதயத்தின் செயல்பாடு உறுதிப்படுத்தப்பட்டது. இன்ட்ரா வாஸ்குலார் அல்ட்ரா சவுண்ட் (IVUS) எனும் செயல்முறை பயன்படுத்தப்பட்டதால் சிகிச்சை நடக்கும்போதே துல்லியமாக ஸ்டெண்ட் பொருத்தும் பணி படங்கள்மூலம் கண்காணிக்கப்பட்டது.
இச்சிகிச்சையின்போது டிரக் எல்யூட்டிங் ஸ்டெண்ட்கள் (DES) இதயத்தின் வலப்பகுதியில் உள்ள நாளத்தில் (RCA) மற்றும் இடது முக்கிய நாளம் ஆகியவர்றில் (LMA) பொருத்தப்பட்டன. மேலும், போஸ்டிரியர் லெஃப்ட் பிரான்ச் (PLB) மற்றும் இதயத்தின் பக்கக் கிளை நாளம் ஆகியவற்றில் டிரக் எல்யூட்டிங் பலூன்கள் Drug-Eluting Balloons (DEB) பயன்படுத்தப்பட்டு அடைப்புகள் சரிசெய்யப்பட்டன. இதுபோல பல்வேறு முறைகளை இணைத்து முதிய நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பது பொதுவாகவே அரிதான நிகழ்வு ஆகும்.
இந்த சிகிச்சை முறை, எவ்விதமான சிக்கலுமின்றி வெற்றிகரமாக நடத்தப்பட்டுவிட்டது. திரு.எஸ் அவர்கள் முழுமையாக குணமடைந்துவிட்டார். நல்ல உடல் நிலையுடன் அவர் வீடுதிரும்பிவிட்டார். மேலும் தனது அன்றாட நடவடிக்கைகள், எளிதான உடல் இயக்கம் ஆகியவை மறுபடி தொடங்கிவிட்டன. இந்த வயதில் இவ்வாறு மீள்வது உண்மையிலேயே குறிப்பிடவேண்டிய ஒன்றாகும்.
வயது முதிர்ந்த நோயாளிகளுக்கும் அதிநவீன இதய அறுவை சிகிச்சைகளை நிபுணத்துவம், தொழில்நுட்பம், தனிப்பட்ட கவனம் ஆகியவற்றின் மூலம் பாதுகாப்பாகவும் திறம்படவும் செய்ய முடியும் என்பதை இந்நிகழ்வு படம்பிடித்துக் காட்டியிருக்கிறது.
புரோமெட் மருத்துவமனையின் இருதய மருத்துவ துறை இயக்குநர் மற்றும் தலைவரான டாக்டர் அருண் கல்யாணசுந்தரம், “பல உடல்நல சவால்களைக் கொண்ட 95 வயது நோயாளிக்கு பாதுகாக்கப்பட்ட ஆஞ்சியோபிளாஸ்டி செய்வதற்கு தொழில்நுட்பத் திறன் மட்டுமல்ல, மனக்கட்டுப்பாட்டுடன் திட்டமிட்டு செயல்படும் திறனும் தேவைப்பட்டது. இடரை மதிப்பிடுதல் முதல் ஸ்டென்ட் பொருத்துதல்வரை ஒவ்வொரு அடியும் பாதுகாப்பு மற்றும் நீண்டகால வெற்றியை உறுதி செய்வதற்காக உன்னிப்பாக திட்டமிட்டு எடுத்து வைக்கப்பட்டது. இத்தனை வயதான முதியவருக்கு முழுமையான மறுவாழ்வை செயல்படுத்திய துல்லியம் மற்றும் குழுப்பணியே இதனை குறிப்பிடத்தக்கதாக வெற்றியாக மாற்றியது” என்றார்.
புரோமெட் மருத்துவமனையின் நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குநர் டாக்டர் ஸ்பூர்த்தி அருண். “வயது வேறுபாடு ஏதுமில்லாமல், மேம்பட்ட இருதய சிகிச்சை பரிசோதனைகள் அனைவருக்கும் கிடைப்பதை உறுதி செய்வதில் நாங்கள் அர்ப்பணிப்புடன் இருக்கிறோம். இம்பெல்லா இதய பம்பைப் பயன்படுத்தி இந்த வெற்றிகரமான பாதுகாக்கப்பட்ட ஆஞ்சியோபிளாஸ்டி, மிகவும் அதிக இடர் உள்ள சூழ்நிலைகளில் கூட, புரோமெட்டில் தொழில்நுட்பம், குழுப்பணி மற்றும் அக்கறையான சேவை எல்லாம் இணைந்து பாதுகாப்பான சிகிச்சையை வழங்குகின்றன என்பதை எடுத்துக்காட்டுகிறது” என்றார்.
95 வயதான நோயாளியான திரு. எஸ், பகிர்ந்து கொண்டது” “மாரடைப்புக்குப் பிறகு, என் இதயம் மிகவும் பலவீனமாக இருப்பதாகவும், பல அடைப்புகள் இருப்பதாகவும் என்னிடம் சொன்னார்கள். இங்கிருக்கும் மருத்துவர்கள் அதற்கு சிகிச்சையளிக்க முடியும் என்று சொன்னபோது, எனக்கு பயம் இருந்தாலும் நம்பிக்கையும் இருந்தது. இன்று, நான் தெம்பாகவும் நன்றியுணர்வுடனும் இருக்கிறேன் - நான் என் குடும்பத்தினருடன் பேசி மகிழ்ந்து, குறுகிய நடைப்பயணங்கள் செல்லவும், என் குடும்பத்தினருடன் முன்பு இருந்ததுபோல நேரத்தை கழிக்கவும் முடிகிறது. அவர்கள் என் இதயத்துக்கு சிகிச்சை அளித்ததோடு மட்டுமல்லாமல், என் உயிரையே எனக்குத் திருப்பித் தந்திருக்கிறார்கள்.”
ஆசியாவின் மிக வயதான நோயாளிக்கு மேற்கொள்ளப்பட்ட இந்த பாதுகாப்பான அஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை , முதியோர் இதய சிகிச்சைப் பிரிவின் பரிணாம வளர்ச்சியில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாகும். இது அதிக ஆபத்து உள்ள இதய சிகிச்சைகளை உலகத் தரத்திலான துல்லியத்துடனும் பாதுகாப்புடனும் மேற்கொள்ளுவதில் இந்தியாவின் வளர்ந்து வரும் திறனை வெளிப்படுத்துகிறது.
புரோமெட் மருத்துவமனை தொழில்நுட்பம் சார்ந்த, நோயாளி மையமாக கொண்ட கண்டுபிடிப்புகளில் எப்போதும் முன்னணியில் உள்ளது. இது கருணையையும் மருத்துவ மேம்பாட்டையும் ஒன்று சேர்த்து , இதய மற்றும் தீவிர சிகிச்சை துறையில் புதிய வாய்ப்புகளை உருவாக்குகிறது.
புரோமெட் மருத்துவமனை பற்றி…
புரோமெட் மருத்துவமனை என்பது நெறிமுறை சார்ந்த, நோயாளிகளை மையமாகக் கொண்ட சுகாதாரப் பராமரிப்பை வழங்குவதற்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு பல்துறை மருத்துவமனை மற்றும் நோயறிதல் மையமாகும்.நிபுணத்துவம் வாய்ந்த மருத்துவர்கள், மரியாதையான ஊழியர்கள் மற்றும் அதிநவீன உள்கட்டமைப்புடன், புரோமெட் தடுப்பு சுகாதாரப் பராமரிப்பு மற்றும் மேம்பட்ட மருத்துவ பரிசோதனைகளில் முன்னணி அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
தனிநபர் தேவைக்கேற்ப தடுப்பு சுகாதார பரிசோதனைகள், இதய மறுவாழ்வு, உடற்பயிற்சி மற்றும் உடற்பயிற்சி திட்டங்கள் மற்றும் மருத்துவ விழிப்புணர்வு முயற்சிகள் ஆகியவை இதன் சேவைகளில் அடங்கும், இது ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்கான முழுமையான அணுகுமுறையை ஊக்குவிக்கிறது.
https://promedhospital.com/