புதிய p 950-300 ஏர் கம்ப்ரஸரை அறிமுகப்படுத்துகிறது சிகாகோ நியூமேட்டிக் நிறுவனம்
சென்னை: ஆழ்துளைக் கிணறு தோண்டுதல், சுரங்கத் தொழில் மற்றும் சோலார் பவுண்டேஷன் அமைக்கும் பணிகளில் நாளுக்கு நாள் மாறிவரும் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில், சிகாகோ நியூமேட்டிக் இந்தியா நிறுவனம் தனது புதிய சிபிஎஸ் 950-300 போர்ட்டபிள் ஏர் கம்ப்ரஸரை இன்று அறிமுகப்படுத்தியுள்ளது. தேவையான அளவுக்குச் சீரான காற்றை வழங்குவது, எரிபொருள் செலவைக் குறைப்பது மற்றும் பல வேலைகளுக்கு இதைப் பயன்படுத்தலாம் என்பது இதன் சிறப்பம்சங்களாகும். இதன் மூலம் ஒப்பந்ததாரர்கள் இன்னும் ஆழமாகத் துளையிடவும், திட்டப் பணிகளை வேகமாக முடிக்கவும், வியாபாரத்தில் அதிக லாபம் ஈட்டவும் முடியும்.
தற்போது ட்ரில்லிங் துறையில் பல சவால்கள் உள்ளன. அதிக ஆழத்தில் துளையிட வேண்டியிருத்தல், கடினமான பாறை மற்றும் நில அமைப்பு, குறைந்துவரும் நிலத்தடி நீர் மட்டம், பெருகிவரும் செலவுகள் மற்றும் திட்டத்தை முடிக்க இருக்கும் குறைவான கால அவகாசம் போன்ற சிக்கல்களை ஒப்பந்ததாரர்கள் எதிர்கொள்கின்றனர். அதேசமயம், சோலார் திட்டங்கள் வேகமாக வளர்ந்து வருவதால், அதிக அளவில் பவுண்டேஷன் துளையிடும் பணிகளுக்கான தேவையும் அதிகரித்துள்ளது. இதனால் வேலை துரிதமாகவும், துல்லியமாகவும், நம்பகத்தன்மையுடனும் இருப்பது இப்போது மிகவும் அவசியமாகியுள்ளது.
துளையிடும் திறனை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட வடிவமைப்பு
இந்த சிபிஎஸ் 950-300 கம்ப்ரஸர் 300 பிஎஸ்ஐஜி அழுத்தத்தில் 950 சிஎப்எம் அளவிற்கான அதிக காற்றோட்டத்தை வழங்குகிறது. இது போர்வெல் மற்றும் பவுண்டேஷன் வேலைகளுக்குத் தேவையான காற்றழுத்தத்தை வழங்குகிறது. 10% வரை எரிபொருள் மிச்சமாவதால், தொடர்ந்து ஒரே சீராக வேலை செய்ய முடிவதுடன், துளைக்குள் தேங்கும் குப்பைகளைத் திறம்பட வெளியேற்றித் துளையைச் சுத்தமாகவும் வைத்துக் கொள்ள முடியும்
800 அடி ஆழம் வரை துளையிடும் வகையில் இந்த சிபிஎஸ் 950-300 கம்ப்ரஸர் உருவாக்கப்பட்டுள்ளதால், ஆழமான வேலைகளை எளிதாகச் செய்ய முடிகிறது. மேலும், செலவைக் குறைத்து திட்டப் பணிகளை விரைவாகவும் திறம்படவும் முடிக்க உதவுகிறது.
முக்கிய அம்சங்களும் நன்மைகளும்
• எங்கு வேண்டுமானாலும் எளிதாகப் பொருத்தலாம்: இந்த இயந்திரத்தை டிரக்கிலும் பொருத்தலாம், எஸ்கவேட்டரிலும் பொருத்தலாம். இதனால் கரடுமுரடான வேலை நடக்குமிடங்களுக்கும் இதைச் சுலபமாக எடுத்துச் செல்லலாம். இந்த இயந்திரத்தின் ஒரு பக்கத்திலேயே அனைத்துப் பராமரிப்புப் பாகங்களும் இருப்பதால், எதைச் சரிசெய்வதானாலும் ரொம்ப சுலபமாக அணுக முடியும்; இதனால் பழுது பார்ப்பது எளிதாகி, இயந்திரம் பழுதால் வேலை நிக்கும் நேரமும் மிச்சமாகும்.
• குறைந்த எரிபொருள் செலவு: 300 பிஎஸ்ஐஜி அழுத்தத்தில் 950 சிஎப்எம் காற்றைக் கொடுப்பதுடன், 10% வரை எரிபொருளையும் மிச்சப்படுத்துகிறது. கடினமான துளையிடும் பணிகளின் போது ஒப்பந்ததாரர்களுக்கு எரிபொருள் நுகர்வையும் இயக்கச் செலவுகளையும் குறைக்க இது உதவுகிறது
• குறைந்த பராமரிப்புச் செலவு: துளையைச் சுத்தமாக வைத்திருப்பது, சீராக வேலை செய்வது மற்றும் 800 அடி வரை துளையிடும் திறன் ஆகியவை ஒட்டுமொத்தச் செலவைக் கட்டுக்குள் வைத்து வேலையை விரைவாக முடிக்க ஒப்பந்ததாரர்களுக்கு உதவுகிறது.
• பலவிதமான வேலைகளுக்குப் பயன்படுத்தலாம்: ஆழ்துளைக் கிணறு தோண்டுதல், நிலக்கரி மற்றும் இரும்புத் தாது சுரங்கப் பணிகள், சோலார் பவுண்டேஷன் வேலைகள் எனப் பலவற்றிற்கும் இதைப் பயன்படுத்தலாம். இதன் மூலம் ஒப்பந்ததாரர்கள் தங்கள் சேவைகளை விரிவுபடுத்தி கூடுதல் வருமானம் ஈட்டலாம்
இந்த அறிமுகம் குறித்து அட்லஸ் கோப்கோ (இந்தியா) பிரைவேட் லிமிடெட்டின் பவர் டெக்னிக் கஸ்டமர் சென்டர் பொது மேலாளர் திரு. பிரசன்னா குல்கர்னி கூறுகையில், "துளையிடும் பணிகளைப் பொறுத்தவரை, வேலையை சீக்கிரமாக முடிப்பது, செயல்படும் திறன் மற்றும் லாபம் ஆகியவற்றுக்கே முன்னுரிமை அளிக்கப்படுகிறது. இந்த உண்மையை மையமாகக் கொண்டுதான் சிபிஎஸ் 950-300 உருவாக்கப்பட்டுள்ளது. கடினமான துளையிடும் பணிகளின்போதிலும் கூட, ஒப்பந்ததாரர்களுக்கு எரிபொருள் செலவையும் இயக்கச் செலவையும் இது வெகுவாகக் குறைக்கிறது. மேலும், ஆழ்துளைக் கிணறு, சுரங்கம் மற்றும் சோலார் பவுண்டேஷன் எனப் பல பணிகளுக்கும் இதை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதால், வாடிக்கையாளர்கள் இந்த இயந்திரத்தை முழுமையாகப் பயன்படுத்தி புதிய வணிக வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்ளலாம்" என்றார்.
ஒரு இயந்திரம், பல பயன்கள்
இந்த சிபிஎஸ் 950-300 கம்ப்ரஸர் மூலம் ஒப்பந்ததாரர்கள் பல வகையான துளையிடும் வேலைகளை ஒரே இயந்திரத்தைக் கொண்டு சமாளிக்கலாம். அதாவது, ஆழமான போர்வெல் போடுவது, கடினமான சுரங்க வேலைகள் மற்றும் பெரிய சோலார் திட்டங்கள் என அனைத்திற்கும் இதுவே சரியான தேர்வு. ஆழமாகத் துளையிடவும், திட்டப் பணிகளை விரைவாக முடிக்கவும், எரிபொருளை மிச்சப்படுத்தவும், இயந்திரத்தை முழுமையாகப் பயன்படுத்தவும் இது உதவுவதுடன், நம்மிடம் உள்ள எல்லா இயந்திரங்களையும் முழுத் திறனுடன் இயக்கி கூடுதல் வருமானம் பெறவும் வழிவகுக்கிறது. எப்பேர்ப்பட்ட கடினமான சவால்களையும் நம்பிக்கையுடன் எதிர்கொண்டு, தொழிலில் அதிக லாபம் ஈட்ட இந்த இயந்திரம் பெரிதும் துணைபுரியும்."
