ஆந்திரப் பிரதேசத்தில் ஒரு சோலார் திட்டத்திற்காக 124 மெகாவாட் மாட்யூல் விநியோகத்திற்கான ஆர்டரை விக்ரம் சோலார் நிறுவனம் பெற்றுள்ளது
கொல்கத்தா, செப்டம்பர் 11 – இந்தியாவின் முன்னணி சோலார் PV மாட்யூல் உற்பத்தி நிறுவனங்களுள் ஒன்றான விக்ரம் சோலார், ஆந்திராவின் அனந்தபூரில் ஒரு சோலார் திட்டத்திற்காக 124 MW (மெகாவாட்) மாட்யூல் ஒன்றிற்கான விநியோக ஆர்டரைப் பெற்றுள்ளது; இது இந்தியாவின் பயன்பாட்டு மற்றும் பெரிய அளவிலான சூரிய மின்சக்தி சூழலமைப்பில் அதிகரித்து வரும் அதன் இருப்பை மேலும் வலுப்படுத்துகிறது.
இந்த ஒப்பந்தத்தின் கீழ், விக்ரம் சோலார் நிறுவனம் அதன் உயர் திறன் கொண்ட G12R TOPCon மாட்யூல்களை வழங்கவுள்ளது; இது 620 Wp முதல் 630 Wp வரையிலான மதிப்பீட்டில் திறன்களைக் கொண்டிருக்கும். இந்தமாட்யூல் விநியோகமானது அக்டோபர் 2026-இல் தொடங்கப்பட திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த ஆர்டரானது விக்ரம் சோலார் நிறுவனத்தின் வளர்ந்து வரும் சந்தைக்கு தொடர்ந்து சேவை செய்வதற்கான அதன் வலுவான நிலையை வெளிக்காட்டுகிறது; அதன் சமீபத்திய விரிவாக்கத்தினைத் தொடர்ந்து அதன் மாட்யூல் உற்பத்தி திறனை 15.5 ஜிகாவாட் வரை உயர்த்தியுள்ளது. விரிவடைந்து வரும் அதன் உற்பத்தி தடம் மற்றும் வளர்ந்து வரும் அதன் தொழில்நுட்ப போர்ட்ஃபோலியோவுடன், இந்நிறுவனம் பயன்பாட்டு அளவிலான திட்டங்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் அதன் திறனை மேலும் வலுப்படுத்தியுள்ளது. அதே நேரத்தில் அதிக உள்நாட்டு உற்பத்தி மற்றும் சுயசார்புடன் கூடிய மின்னாற்றலை நோக்கிய இந்தியாவின் விரிவான மாற்றத்தை ஆதரிக்கிறது.
விக்ரம் சோலார் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அலுவலர், திரு. சமீர் நாக்பால் அவர்கள் கூறுகையில், “நாங்கள் கையெழுத்திடும் ஒவ்வொரு மாட்யூல் விநியோக ஆர்டரும் எங்கள் நம்பிக்கையின் வாக்காகும் - எங்கள் திறனில் மட்டுமல்ல, எங்கள் தொழில்நுட்பம் மற்றும் நிலைத்தன்மையையும் நாங்கள் சேர்த்து வழங்குகிறோம். சூரிய மின்னாற்றல் உற்பத்தியாளர்கள் இன்று சமமான மேம்பட்ட தீர்வுகளுடன் இந்தியாவின் மின்னாற்றல் லட்சியப் பயணங்களின் வேகத்துடன் பொருந்தக்கூடிய பார்ட்னர்களை தேடிவருகிறது. எங்கள் G12R TOPCon பிளாட்ஃபார்ம் இத்துறையில் முன்னிலையில் இருப்பதற்கான எங்கள் உறுதிப்பாட்டைக் குறிக்கிறது; மேலும், இந்த கூட்டணியானது, இந்தியா அதன் பயன்பாட்டு அளவிலான சூரிய உள்கட்டமைப்பை உருவாக்கும் அதேவேளை விக்ரம் சோலார் மீது இத்தொழில்துறையினர் தொடர்ந்து வைத்திருக்கும் நம்பிக்கையை மீண்டும் உறுதிப்படுத்துகிறது. நாட்டின் தூய்மையான மின்னாற்றல் சார் முயற்சிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதால், இந்த கூட்டணிகளை மேலும் வலுப்படுத்துவதில் நாங்கள் தொடர்ந்து கவனம் செலுத்துகிறோம்,” என்றார்.
.jpeg)