Thursday, July 2, 2026

அனைவருக்கும் காப்பீடு’: காப்பீட்டு குறித்த அறிவை மேம்படுத்துவதற்காக நுகர்வோர் விழிப்புணர்வு காமிக்ஸ் புத்தகத் தொடரை IRDAI-யின் சேர்மன்

‘அனைவருக்கும் காப்பீடு’: காப்பீட்டு குறித்த அறிவை மேம்படுத்துவதற்காக நுகர்வோர் விழிப்புணர்வு காமிக்ஸ் புத்தகத் தொடரை IRDAI-யின் சேர்மன், திரு. அஜய் சேத் வெளியிட்டார்

ஆயுள் காப்பீட்டுத் துறையினர் அனைவருக்கும் காப்பீடு என்ற தொலைநோக்குப் பார்வையை முன்னெடுத்துச் செல்ல ஒன்றிணைகிறார்கள்.

சென்னை, ஜூலை 01, 2026: ‘அனைவருக்கும் காப்பீடு’ என்ற தொலைநோக்கு இலக்கினை நோக்கி செல்வதற்கான ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக, இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் (IRDAI) சேர்மன், திரு. அஜய் சேத் அவர்கள் - ஆயுள் காப்பீடு (லைஃப் இன்ஷூரன்ஸ்) குறித்த விவரங்களை எளிதாக்குவதையும், நுகர்வோரிடையே விழிப்புணர்வை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்ட ஒரு நுகர்வோர் விழிப்புணர்வுக்கான காமிக்ஸ் (கன்ஸ்யூமர் அவேர்னஸ் காமிக்ஸ்) புத்தகத் தொடரை வெளியிட்டார். இந்தியா முழுவதும் உள்ள தனிநபர்கள் மற்றும் குடும்பங்களுக்கு ஆயுள் காப்பீட்டை மிகவும் எளிதாக அணுகக்கூடிய ஒன்றாகவும், புரிந்துகொள்ளக்கூடிய ஒன்றாகவும், பொருத்தமானதாகவும் மாற்றுவதற்காக மேற்கொள்ளப்படும் இந்த முயற்சியில் இன்ஷூரன்ஸ் துறையின் முன்னோடிகள் ஒன்றினைந்துள்ளனர்.

கற்பிக்கும் நோக்கில் உருவாக்கப்படும் இந்த காமிக் புத்தகத் தொடரானது ஆயுள் காப்பீடு (லைஃப் இன்ஷூரன்ஸ்_ பற்றிய புரிதலை எளிதாக்குவதையும், அதனை அனைவருக்குமான ஒன்றாக  ஜனநாயகப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. இவ்வகை காப்பீடு சிக்கலானது எதிர்காலத்தில் காப்பீடு வாங்க நினைப்பவர்களும், அதனைத் தவிர்ப்பவர்களும் பெருமளவில் இருப்பதை புரிந்துகொண்டு இந்த முன்னெடுப்பு மேற்கொள்ளப்படுகிறது. திருமணமான மகளிரின் சொத்துரிமை சட்டம் (MWP), பிரீமியம் தள்ளுபடி (WoP) மற்றும் சிக்கலான உடல்நல பாதிப்பிற்கான ரைடர் திட்டங்கள் உள்ளிட்ட முக்கிய விவரங்களை எடுத்துரைப்பதும் இந்த முன்முயற்சியின் நோக்கமாகும். தனித்துவமான காப்பீட்டு அம்சங்களை தொழில்நுட்ப விளக்கமாகக் எடுத்துக் கூறாமல் மக்கள் தங்களோடு தொடர்புபடுத்தி எளிதாக புரிந்துகொள்ளும் வகையில் கதைகள் மூலம் விளக்கப்படுகின்றன. காமிக்ஸை ஒரு ஊடகமாகப் பயன்படுத்துவதற்கு, அவை அனைத்து வயதுப் பிரிவினர் மற்றும் அனைத்து பகுதிகளுக்கும் எளிதாக சென்றடையும் என்பதே காரணமாகும். சுப்ரியா என்கிற ஒரு இளம் ஆயுள் காப்பீட்டு ஆலோசகரின் பயணத்தை மையமாகக் கொண்ட இந்த காமிக்ஸ் தொடர், நிஜ வாழ்க்கை சூழ்நிலைகளை “கதை வடிவ நினைவுகளாக” கொண்டுவருகிறது; இதன் மூலம் தனிநபர்கள் ஏற்கனவே எடுத்த தீர்மானங்கள் எப்படி எதிர்காலத்தில் நிதி பாதுகாப்பை எவ்வாறு ஏற்படுத்தித் தருகின்றன என்பதைப் புரிந்துகொள்ள உதவுகிறது. இந்த முன்முயற்சியானது, “அனைவருக்கும் காப்பீடு” என்ற பெரிய இலக்கை நோக்கிய ஒரு அர்த்தமுள்ள முன்முயற்சியைக் குறிக்கிறது; அதாவது காப்பீடு சார்ந்த உரையாடலை இன்ஷூரன்ஸ் தயாரிப்புகள் குறித்த விழிப்புணர்விலிருந்து தகவலறிந்த புரிதலாக மாற்றுகின்றன.

தேசிய இன்ஷூரன்ஸ் விழிப்புணர்வு தினத்தின் ஒரு பகுதியாக மேற்கொள்ளப்படும் இந்த முன்முயற்சியானது - தகவலறிந்து தீர்மானங்களை எடுப்பதை ஊக்குவிப்பதற்கும், ஆயுள் பாதுகாப்பு தீர்வுகள் குறித்த நுகர்வோரின் புரிதலை அதிகரிப்பதற்கும், இந்திய குடும்பங்களிடையே அதிக நிதிசார் தயார்நிலையை ஊக்குவிக்கிறது; இதனை IRDAI மற்றும் ஆயுள் காப்பீட்டுத் துறையின் கூட்டு உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது.

இந்த காமிக்ஸ் புத்தகத் தொடரை வெளியிட்டு பேசிய திரு. IAC ஆணையத்தின் – லைஃப் இன்ஷூரன்ஸ் துறை, சேர்மன், திரு. கமலேஷ் ராவ் அவர்கள் கூறுகையில், “இந்தியாவின் வளர்ச்சிக் கதையானது அதன் மக்களின் இலட்சியங்கள், முன்னேற்றம் மற்றும் மனவுறுதி ஆகியவற்றால் வடிவமைக்கப்படுகிறது. அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் நிலையான பொருளாதாரத்தை நோக்கி நாடு முன்னேறும்போது, குடும்பங்களின் நிதி ரீதியாக அவர்களது தயார்நிலையை வலுப்படுத்துவது அவசியமாகும்; அது ஒரு நீண்ட கால பொருளாதார நெகிழ்த்தன்மையை உருவாக்குவதில் முக்கிய தூணாகவும் இருக்கும். ‘அனைவருக்கும் காப்பீடு’ என்ற தொலைநோக்கு சிந்தனை ஒரு மாற்றத்திற்கான பயணத்தை பிரதிபலிக்கிறது - இது இன்ஷூரன்ஸ் ஆனைவரையும் சென்றைய வேண்டும் என்பதைக் கடந்து, ஒவ்வொரு இந்திய குடும்பத்திற்கும் நிதித் திட்டமிடலின் ஒருங்கிணைந்த பகுதியாக நிதிப் பாதுகாப்பை இணைப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது,” என்று கூறினார்.

மேலும் பேசிய அவர், “குடும்பங்களின் நிதி நம்பிக்கையை வழங்குவதன் மூலமும், இலட்சியங்களை ஆதரிப்பதன் மூலமும் - பாதுகாப்பான குடும்பங்களின் அஸ்திவாரத்தினை வலுப்படுத்தி இந்த பயணத்தை செயல்படுத்துவதில் ஆயுள் காப்பீடு ஒரு குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டுள்ளது. புதுமையான மற்றும் பொருத்தமான அணுகுமுறையின் மூலம் நிதிசார் பாதுகாப்பின் மதிப்பை நுகர்வோருக்கு நெருக்கமாகக் கொண்டு செல்வதன் மூலம் இந்த கன்ஸ்யூமர் விழிப்புணர்வு காமிக்ஸ் புத்தகத் தொடர் அதன் இலக்கை முன்னெடுத்துச் செல்கிறது. காப்பீட்டு சூழல் அமைப்பு முழுவதும் கூட்டு நடவடிக்கையின் மூலமாக தனிநபர்கள் மற்றும் குடும்பங்கள் தங்கள் இலட்சியங்களைப் பாதுகாக்கவும், நாட்டின் வளர்ச்சிக் கதையில் நம்பிக்கையுடன் பங்கேற்கவும் உதவுகிறது; மேலும், நிதி ரீதியாக உறுதியான எதிர்காலத்தை நோக்கிய இந்தியாவின் பயணத்தை ஆதரிப்பதிலும் அவர்களுக்கு நாங்கள் அதிகாரமளிப்பதில் உறுதியாக இருக்கிறோம்,” என்றார்.

‘சப்சே பெஹ்லே லைஃப் இன்சூரன்ஸ்’ (அனைத்திற்கும் முன்பு ஆயுள் காப்பீடு) என்கிற பிரச்சாரத்தின் இரண்டாம் கட்ட வளர்ச்சி உட்பட கடந்த ஆண்டில் IAC-லைஃப் மேற்கொண்டுள்ள முன்முயற்சிகள் பற்றிய விவரங்களையும் திரு. ராவ் வழங்கினார்; அதே நேரத்தில் எதிர் வரும் ஆண்டுகளில் காப்பீட்டு விழிப்புணர்வு மற்றும் நுகர்வோர் ஈடுபாட்டை மேலும் வலுப்படுத்துவதற்காக IAC குழு முன்னுரிமை அளிக்கும் நடவடிக்கையும் அவர் எடுத்துக்கூறினார்.

லைஃப் இன்ஷூரன்ஸ் கவுன்சிலின் பொதுச் செயலாளர் திரு. ஆதித்யா குப்தா அவர்கள் கூறுகையில், “ஆயுள் காப்பீடு என்பது - தனிநபர்கள் மற்றும் குடும்பங்கள் தம் வாழ்வின் நிச்சயமற்ற சூழலுக்கு தயாராக இருக்கவும், நம்பிக்கையுடன் தங்கள் இலட்சியங்களை நோக்கித் தொடரவும் உதவும் ஒரு வாக்குறுதியாகும். காப்பீட்டுத் துறை அதன் வரம்பை கணிசமாக விரிவுபடுத்தியுள்ள நிலையில், வளர்ச்சியின் அடுத்த கட்டமானது – இன்ஷூரன்ஸ் தொடர்பான உரையாடல்களை எளிமையானதாகவும், நுகர்வோர் தங்களுடன் பொருந்தும் வகையில் தொடர்புடையதாகவும், நாடு முழுவதும் உள்ள நுகர்வோருக்கு அணுகக்கூடியதாகவும் மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த நுகர்வோர் விழிப்புணர்வுக்கான ‘கன்ஸ்யூமர் அவேர்னஸ் காமிக்ஸ்’ புத்தகத் தொடரானது கதைசொல்வதன் மூலம் மக்களை காப்பீட்டுடன் ஈடுபடுத்துவதற்கும், ஆயுள் காப்பீட்டின் மதிப்பை நன்கு புரிந்துகொள்ள உதவுவதற்கும் ஒரு புதுமையான முயற்சியாக மேற்கொள்ளப்படுகிறது. லைஃப் இன்ஷூரன்ஸ் கவுன்சில், IRDAI மற்றும் இன்ஷூரன்ஸ் துறையின் முன்னோடிகளுடன் இணைந்து - நுகர்வோர் விழிப்புணர்வை வலுப்படுத்துவதற்கும், நிதிசார் திட்டமிடலின் முக்கியப் பகுதியாக ஆயுள் காப்பீடு உள்ளது குறித்த நம்பிக்கையை பெரிதாக வளர்ப்பதற்கும் உறுதிபூண்டுள்ளன,” என்று கூறினார்.

பல ஆண்டுகளாக காப்பீட்டை அணுகுவது மற்றும் விழிப்புணர்வை விரிவுபடுத்துவதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் இருந்தபோதிலும், பல இந்திய குடும்பங்கள் எதிர்பாராத வாழ்க்கை நிகழ்வுகளால் நிதி ரீதியாக பாதிக்கப்படக்கூடிய நிலையிலேயே உள்ளன. நீண்ட கால நிதிசார் ஸ்திரத்தன்மையை உருவாக்குவதும், காப்பீட்டினை அதிகளவில் தேர்ந்தெடுப்பதன் மூலம் இந்த பாதுகாப்பு இடைவெளியைக் குறைப்பதும் முக்கியமானது என்று இத்துறை சார்ந்த தலைவர்கள் குறிப்பிட்டனர். 

இந்த துவக்க நிகழ்வில் ‘இந்தியா கேட்கிறது: ஆயுள் காப்பீட்டிற்கு ஏன் முன்னுரிமை அளிக்க வேண்டும்?’ என்ற சிந்தனையைத் தூண்டும் தலைப்பில் ஒரு குழு விவாதமும் நடைபெற்றது. அதில் – திரு. கமலேஷ் ராவ், IAC சேர்மன்; திரு. துரைசாமி, நிர்வாக இயக்குனர், LIC; திரு. சமீர் பன்சால், நிர்வாக இயக்குநர் & தலைமை செயல் அலுவலர், பஞ்சாப் நேஷனல் வங்கி மெட்லைஃப்; திரு. ருஷப் காந்தி, நிர்வாக இயக்குனர் & தலைமை செயல் அலுவலர், இந்தியாஃபர்ஸ்ட் லைஃப் இன்சூரன்ஸ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இந்த அமர்வை சுயாதீனமான நிதித்துறை பத்திரிகையாளர் திருமதி. சோனியா ஷெனாய் நெறியாளராக வழிநடத்தினார். நிதிசார் எதிர்காலத்தைப் பாதுகாப்பதிலும், விழிப்புணர்வை வலுப்படுத்துவதிலும், இந்தியா முழுவதும் பாதுகாப்பு காப்பீட்டுத் தீர்வுகளை அதிக அளவில் ஏற்க செய்வதிலும் லைஃப் இன்ஷூரன்ஸ் வகிக்கும் முக்கிய பங்கை இந்த உரையாடல் ஆராய்ந்தது.

IAC-லைஃப் அமைப்பானது ஒழுங்குமுறை ஆணையத்துடன் இணைந்து இந்த காப்பீட்டுப் பாதுகாப்பின் இலக்குகளை ஆதரிக்கிறது

இந்தியாவின் ஆயுள் காப்பீட்டுத் துறை தொடர்ந்து முன்னேற்றம் அடைந்து வரும் சூழலில், தேசிய இன்ஷூரன்ஸ் விழிப்புணர்வு தினமும் வந்துள்ளது. நிதியாண்டு FY26-இன் போது, காப்பீட்டுத் துறை நியூ பிஸ்னஸ் பிரீமியத்தில் (NBP) ஆண்டுக்கு ஆண்டு 15.7% அதிகரிப்பைப் பதிவு செய்தது; அதே நேரத்தில் 2.83 கோடிக்கும் அதிகமான பாலிசிகளை வழங்கியது; இது லைஃப் இன்ஷூரன்ஸ் தீர்வுகளுடன் சேர்ந்து வளர்ந்து வரும் நுகர்வோர் ஈடுபாட்டை பிரதிபலிக்கிறது. வளர்ச்சி வலுவாக இருக்கும் அதேவேளையில், துறைசார் வளர்ச்சி மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்கு ஈடாக நுகர்வோரை காப்பீடு சென்றடைவதில் வேகம் இல்லை என்பதையும் காப்பீட்டுத் துறையின் முன்னோடிகள் ஒப்புக்கொள்கிறார்கள். காப்பீட்டு பாதுகாப்பு ஒவ்வொரு இந்திய குடும்பத்தையும் சென்றடைவதை உறுதி செய்வதற்கு விழிப்புணர்வு, நம்பிக்கையை உருவாக்குதல் மற்றும் நிதிசார் கல்வியறிவு ஆகியவை அவசியமாகும்; மேலும் அவற்றை நோக்கிய நிலையான முன்முயற்சிகளை அதிகளவில் மேற்கொள்வதும் முக்கியம் என்ற பொதுவான கருத்தும் பகிரப்பட்டது.