ஹவ்மோர் உலக ஐஸ்கிரீம் தினத்தை முன்னிட்டு, 'தி ஹேப்பியஸ்ட் சண்டே'' எனும் நாளை ஒரு இனிப்பான சர்ப்ரைசுடன் கொண்டாடுகிறது.
- ஜூலை 19, ஞாயிற்றுக்கிழமை அன்று, ஹவ்ஃபன் பார்லர்களில் (மதியம் 12 மணி முதல் மாலை 5 மணி வரை) ஐஸ்கிரீம் ரூ. 19-க்கும், ஜெப்டோவில் (மதியம் 2 மணி முதல் 3 மணி வரை) வெறும் ரூ. 1-க்கும் கிடைக்கும் என நிறுவனமானது அறிவித்துள்ளது.
சென்னை, ஜூலை 19, 2026: இந்த உலக ஐஸ்கிரீம் தினத்தில், ஹாவ்மோர் நிறுவனம் 'தி ஹேப்பியஸ்ட் சண்டே' என்ற பெயரில், ஐஸ்கிரீமுடன் மகிழ்ச்சியான தருணங்களைப் பகிர்ந்துகொள்வதை மையமாகக் கொண்ட ஒரு கொண்டாட்டத்தின் மூலம் மக்களை ஒன்றிணைக்கிறது. ஒவ்வொரு ஸ்கூப் ஐஸ்கிரீமுக்கும் மகிழ்ச்சியைத் தூண்டி, நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் மறக்க முடியாத அனுபவங்களை உருவாக்கும் சக்தி உண்டு என்ற நிறுவனத்தின் நம்பிக்கையை இந்த பிரச்சாரம் வலுப்படுத்துகிறது.
இந்த நிகழ்வைக் கொண்டாடும் விதமாக, சென்னையில் உள்ள நுகர்வோர், ஜூலை 19, ஞாயிற்றுக்கிழமை மதியம் 12:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை, ஹாவ்ஃபன் – ஹாவ்மோர் பார்லர்களில் பிரத்தியேகமாக, தேர்ந்தெடுக்கப்பட்ட ஹாவ்மோர் ஐஸ்கிரீம்களின் 150 மி.லி. ஸ்கூப்களை வெறும் ரூ. 19-க்கு பெற்று மகிழலாம். இந்தத் தேதியைக் கொண்டாடுவதற்கும், உலக ஐஸ்கிரீம் தினத்துடன் ஒரு மறக்க முடியாத தொடர்பை உருவாக்குவதற்கும், மேலும் பல நுகர்வோரை இந்தக் கொண்டாட்டத்தில் பங்கேற்க அழைப்பதற்காகவும் விலையானது ரூ. 19-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி, சென்னையில் உள்ள நுகர்வோர், மதியம் 2:00 மணி முதல் 3:00 மணி வரை செப்டோ-வில் பிரத்தியேகமாக, தேர்ந்தெடுக்கப்பட்ட ஹாவ்மோர் ஐஸ்கிரீம்களை வெறும் ரூ.1-க்கு பெற்று மகிழலாம்.
ஹவ்மோர் ஐஸ் கிரீம் நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் துணைத் தலைவர் (CMO) திரு. ரிஷப் வர்மா கூறியதாவது: "ஐஸ்கிரீம் எப்போதுமே வாழ்க்கையின் எளிதாகக் கிடைக்கக்கூடிய மற்றும் மகிழ்ச்சியான தருணங்களில் பிரிக்க முடியாத ஒன்றாக இருந்து வருகிறது. 'தி ஹேப்பியஸ்ட் சண்டே' மூலம் அந்த உணர்விற்கு காலண்டரில் ஒரு நிரந்தர இடத்தைக் கொடுக்கவும், மகிழ்ச்சியான தருணங்களைப் பகிர்ந்துகொள்வதன் மூலம் மக்களை ஒன்றிணைக்கும் ஒரு வருடாந்திர கொண்டாட்டத்தை உருவாக்கவும் நாங்கள் விரும்புகிறோம்."
ஐஸ்கிரீம் மீதான நுகர்வோரின் எதிர்பார்ப்புகள் மிக வேகமாக மாறி வருகின்றன. இன்று, மக்கள் சிறந்த சுவையையும் தாண்டி, உற்சாகமூட்டும் சுவைகளையும், அர்த்தமுள்ள அனுபவங்களையும், தங்களைத் தொடர்ந்து ஆச்சரியப்படுத்தும் பிராண்டுகளையும் தேடுகிறார்கள். கோவா சில்லி போன்ற தெருவோரப் பிரியர்களுக்கு விருப்பமான வகைகளாக இருந்தாலும் சரி, எங்களின் பெல்ஜியன் சாக்லேட் வகையின் சுவைமிகுந்த தயாரிப்புகளாக இருந்தாலும் சரி, அல்லது லோட்டே 4டி க்ரஞ்ச் மற்றும் சுபக் பார்ஸ் போன்ற புதுமையான தயாரிப்புகளாக இருந்தாலும் சரி அர்த்தமுள்ள புதுமைகளை அறிமுகப்படுத்துவதன் மூலம் ஐஸ்கிரீம் அனுபவத்தை மறுவரையறை செய்வதே எங்களின் முயற்சியாகும்.
ஜெப்டோவுடனான எங்கள் வணிக ஒப்பந்தம் இந்த மகிழ்ச்சியான தருணங்களை சில நிமிடங்களிலேயே நுகர்வோருக்குக் கொண்டு சேர்ப்பதன் மூலம் இந்த நோக்கத்தை முழுமையாக நிறைவு செய்கிறது. நாங்கள் ஒன்றிணைந்து கொண்டாட்டங்களை மேலும் இயல்பானதாகவும், எளிதில் அணுகக்கூடியதாகவும், இன்னும் அதிக மகிழ்ச்சி நிறைந்ததாகவும் மாற்ற விரும்புகிறோம்.
காலத்தால் அழியாத கிளாசிக் வகைகள் முதல் உலகளாவிய சுவைகள், புதுமையான மற்றும் வேடிக்கையான வடிவங்கள் வரை, மாறிவரும் நுகர்வோர் ரசனைகளுக்கு ஏற்ப ஐஸ்கிரீம் அனுபவத்தை ஹாவ்மோர் தொடர்ந்து புதுப்பித்து வருகிறது; ஒவ்வொரு கரண்டியிலும் மகிழ்ச்சியான தருணங்கள் என்ற அதன் ஒரே ஒரு வாக்குறுதி மட்டும் மாறாமல் இருக்கிறது:
ஜெப்டோவின் தலைமை வணிக அதிகாரி தேவேந்திர மீல் மேலும் கூறுகையில், "ஜெப்டோவில், நாங்கள் எப்போதும் எங்கள் பயனர்களின் அன்றாடத் தருணங்களை இன்னும் அதிக மகிழ்ச்சியானதாக மாற்றுவதற்கான வழிகளை தேடிக்கொண்டேயிருக்கிறோம். உலக ஐஸ்கிரீம் தினம் என்பது எளிய மகிழ்ச்சிகளைக் கொண்டாடுவதற்கானது. மேலும், ஹாவ்மோருடனான எங்கள் வணிக ஒப்பந்தமானது அதை ஒரு வேடிக்கையான முறையில் உயிர்ப்பிக்கிறது. பயனர்கள் தங்களுக்குப் பிடித்தமான ஹாவ்மோர் ஐஸ்கிரீம்களை அனுபவித்து மகிழ இது ஒரு சிறந்த வழியாகும். இதைச் சாத்தியமாக்கிய எங்கள் கூட்டாளர்களுக்கு நாங்கள் நன்றி கூறுகிறோம்."
