சிங்கபெருமாள் கோயில்: உள்கட்டமைப்பு, தொழில்துறை மற்றும் நகர்ப்புற விரிவாக்கத்தால் சென்னையின் அடுத்தகட்ட ரியல் எஸ்டேட் வளர்ச்சி வழித்தடமாக உருவெடுத்து வருகிறது!
~ சிங்கபெருமாள் கோயிலின் அமைவிடம் சென்னையின் தெற்குப் பகுதியில் புதிய வளர்ச்சி மையமாக உருவெடுப்பதற்கு சாதகமாக அமைந்துள்ளது
சென்னையின் ரியல் எஸ்டேட் வளர்ச்சி வரலாறு எப்போதும் அதன் உள்கட்டமைப்பு மேம்பாடுகள் மற்றும் பொருளாதார வளர்ச்சியுடன் நெருங்கிய தொடர்புடையதாகவே இருந்துள்ளது. கடந்த பல ஆண்டுகளாக, வணிக நிறுவனங்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து இருப்பதாலும், புதிய வேலைவாய்ப்பு மையங்கள் உருவாகியிருப்பதாலும் ஓஎம்ஆர் (OMR), ஈசிஆர் (ECR) மற்றும் ஜிஎஸ்டி சாலை (GST Road) போன்ற வளர்ச்சிக் கண்ட பகுதிகள் அதிவேகமான முன்னேற்றத்தைப் பெற்றுள்ளன. இதனால் குடியிருப்புத் தேவைகளும் இந்த வளர்ச்சி மையங்களில் வெகுவாக அதிகரித்து வருகின்றன. சென்னை மாநகரம் தற்போது தொடர்ந்து தெற்கு நோக்கி விரிவடைந்து வரும் வேளையில், புதிய பகுதிகள் முக்கியத்துவம் பெற்று வருகின்றன. அந்த வகையில், செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 'சிங்கபெருமாள் கோயில் பகுதி, சென்னை மாநகரின் எதிர்கால வளர்ச்சியை வடிவமைக்கும் ஒரு மிக முக்கிய குடியிருப்பு மற்றும் தொழில் வளர்ச்சி வழித்தடமாக உருவெடுத்து வருகிறது.
ஜிஎஸ்டி சாலையில் அமைந்துள்ள சிங்கபெருமாள் கோயில், சென்னையின் தெற்கு நுழைவாயிலாக முக்கியத்துவம் பெற்றுள்ளது. இப்பகுதி தாம்பரம், வண்டலூர், மறைமலை நகர், செங்கல்பட்டு, ஒரகடம் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் போன்ற முக்கிய இடங்களுக்குச் சிறப்பான போக்குவரத்து வசதியைக் கொண்டுள்ளது. இதன் மூலம், குடியிருப்பு பகுதிகளுக்கும் தமிழ்நாட்டின் மிகப்பெரிய தொழில்துறை மண்டலங்களுக்கும் (Industrial clusters) இடையில் முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் அமைந்துள்ளது. சாலை மற்றும் இரயில் போக்குவரத்து வசதிகள் ஒருங்கே அமைந்திருப்பது, வளர்ந்து வரும் புறநகர்ச் சந்தைகளில் வீடு கட்ட விரும்புபவர்களுக்கும், தொழில் வல்லுநர்கள் மற்றும் முதலீட்டாளர்களுக்கும் சிங்கபெருமாள் கோயில் மீதான ஆர்வத்தை மேலும் அதிகரிக்க செய்திருக்கிறது.
உள்கட்டமைப்பு வளர்ச்சி, தொழில்துறை விரிவாக்கம் மற்றும் அதிகரித்து வரும் குடியிருப்புத் தேவை ஆகிய மூன்று அம்சங்களும் ஒருங்கிணைந்து இப்பகுதியின் மாற்றத்தையும், முன்னேற்றத்தையும் துரிதமாக்கி வருகின்றன. சென்னையின் மையப்பகுதிகள் நாளுக்கு நாள் நெரிசலாகி வருவதால், நகரின் விரிவாக்கமானது அதிக பரப்பளவிலான இடவசதி, மேம்பட்ட போக்குவரத்து வசதிகள் மற்றும் நீண்ட கால சொத்து மதிப்பை வழங்கக்கூடிய புறநகர் பகுதிகளை நோக்கி நகரத் தொடங்கியிருக்கிறது. இந்த நகர்ப்புற மாற்றத்தினால் பெரிதும் பயனடையும் சிங்கபெருமாள் கோயில். தற்போது வீட்டுமனைகள் (Plotted developments), வில்லா குடியிருப்புகள் (Villa communities) மற்றும் நவீன குடியிருப்புத் திட்டங்களுக்கு மிகவும் விருப்பமான ஒரு இடமாக மாறிவருகிறது.
நீண்ட கால ரியல் எஸ்டேட் மதிப்புக்கான சாத்தியக்கூறுகளை உருவாக்கிவரும் உள்கட்டமைப்பு மேம்பாடுகள்
சிங்கபெருமாள் கோயிலின் அசுர வளர்ச்சிக்கு மிக முக்கியக் காரணியாகத் திகழ்வது அதன் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டுவரும் போக்குவரத்து உள்கட்டமைப்பு மேம்பாடுகளாகும். ஜிஎஸ்டி சாலையில் இது அமைந்துள்ளதால், சென்னை மாநகரத்திற்கும், தெற்கு வழித்தடத்தில் உள்ள முக்கியத் தொழில்துறை மற்றும் வணிக மையங்களுக்கும் இடையே நேரடி போக்குவரத்து மற்றும் எளிதில் சென்றடைவதற்கு சாதகமான அமைவிடத்தையும் பெற்றுள்ளது.
தற்போது வரவிருக்கும Chennai Peripheral Ring Road (CPRR) திட்டமானது, சென்னையின் புறநகர்ப் பகுதிகள் முழுவதற்குமான போக்குவரத்து இணைப்பை மேம்படுத்துவதன் மூலம் இப்பிராந்தியத்தின் வளர்ச்சிக்கு ஒரு மிகப்பெரிய உந்துசக்தியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எண்ணூர் துறைமுகத்திலிருந்து மகாபலிபுரம் வரையிலான முக்கிய இடங்களை இணைக்கும் இத்திட்டம், சென்னை மாநகரின் உள்ளே ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் அதே வேளையில், தொழில்துறை மண்டலங்கள், லாஜிஸ்டிக்ஸ் மையங்கள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளுக்கு இடையேயான போக்குவரத்தை எளிதாக்கும்.
இப்பணிகள் நிறைவடையும் போது, சென்னை வெளிவட்டச் சாலை (CPRR) அதனைச் சுற்றியுள்ள பகுதிகளின் வளர்ச்சிக்கான சாத்தியக்கூறுகளை கணிசமாக உயர்த்தும்; இது நிலம் மற்றும் ரியல் எஸ்டேட் திட்டங்களுக்கான தேவையை அதிகரிக்கும். முக்கியப் பொருளாதார வழித்தடங்களுக்கான இந்த மேம்பட்ட போக்குவரத்து வசதி, நிலத்தின் மதிப்பைத் துரிதமாக உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. நீண்ட கால நோக்கில், இந்த வழித்தடத்தில் வளர்ந்து வரும் பகுதிகளில் நிலத்தின் மதிப்பு 2 முதல் 3 மடங்கு வரை உயர்வதற்கான சாத்தியக்கூறுகள் மிக அதிகம் உள்ளன.
சிங்கபெருமாள் கோயிலின் ரியல் எஸ்டேட் சந்தையானது கடந்த ஐந்து ஆண்டுகளில் நிலையான சொத்து மதிப்பு உயர்வைச் சந்தித்து வருகிறது, இது இப்பிராந்தியத்தின் வளர்ந்து வரும் குடியிருப்பு சமூகங்களுக்கான தேவைகள் மற்றும் முதலீடு செய்வதற்கான சாத்தியங்களை வெளிப்படுத்தும் வகையில் அமைந்திருக்கிறது. சொத்து மதிப்புகள் 2021-ம் ஆண்டில் ஒரு சதுர அடி தோராயமாக ₹3,000 ஆக இருந்த நிலையில் இருந்து, 2025-ல் சுமார் ₹4,000 ஆக உயர்ந்துள்ளது, இது ஆண்டுக்கு ஆண்டு ஏற்பட்டு வரும் சீரான வளர்ச்சியைக் காட்டுகிறது.
மற்றொரு குறிப்பிடத்தக்க உள்கட்டமைப்பு முன்முயற்சி, முன்மொழியப்பட்டுள்ள 'சிங்கபெருமாள் கோயில் - திருச்சி Greenfield விரைவுச்சாலை திட்டமாகும். இது சென்னையின் தெற்குப் புறநகர்ப் பகுதிகளுக்கும் மத்திய தமிழ்நாட்டிற்கும் இடையிலான போக்குவரத்தை பெருமளவு மேம்படுத்தும். இந்த விரைவுச்சாலை தடையற்ற பயணத்திற்கும், சிறந்த லாஜிஸ்டிக்ஸ் செயல்பாடுகளுக்கும் துணையாக அமைவதோடு, வளர்ந்து வரும் புதிய வளர்ச்சி வழித்தடங்களுக்கான போக்குவரத்தையும் எளிதாக்கும்.
இவற்றுடன், சிங்கபெருமாள் கோயில் இரயில்வே மேம்பாலம் (Railway Overpass Bridge), ஜிஎஸ்டி சாலை அகலப்படுத்தும் திட்டங்கள் மற்றும் வண்டலூர், வாலாஜாபாத், ஒரகடம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய பகுதிகளை நோக்கிய சாலைகளின் மேம்பாட்டுப் பணிகள் ஆகியவை இப்பகுதியின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கான சாத்தியங்களை மேலும் பலப்படுத்துகின்றன. போக்குவரத்து வசதிகள் மென்மேலும் மேம்படும் போது, சிங்கபெருமாள் கோயில் பகுதியில் குடியிருப்பு சமூகங்கள் மற்றும் வணிகச் செயல்பாடுகள் கணிசமாக அதிகரிக்கும்; இது எதிர்காலச் சொத்து மதிப்பை அதிகரிப்பத்தில் முக்கியப் பங்கு வகிக்கும்.
குடியிருப்பு சமூகங்களுக்கான தேவையை உருவாக்கும் தொழில்துறை வளர்ச்சி
சிங்கபெருமாள் கோயிலின் ரியல் எஸ்டேட் வளர்ச்சிக்கு பக்கபலமாக இருக்கும் மற்றொரு முக்கிய காரணி, தமிழ்நாட்டின் மிகப்பெரிய வேலைவாய்ப்பு மையங்களுக்கு மிக அருகில் இது அமைந்திருப்பதுதான். மஹிந்திரா வேர்ல்ட் சிட்டி (Mahindra World City), ஒரகடம் தொழில்துறை வழித்தடம் (Oragadam Industrial Corridor), ஸ்ரீபெரும்புதூர் உற்பத்தி மண்டலம் (Sriperumbudur manufacturing belt) மற்றும் முன்னணி ஆட்டோமொபைல், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் ஐடி நிறுவனங்களுக்கு அருகில் இப்பகுதி அமைந்துள்ளதால் முக்கியத்துவம் பெற்றுவருகிறது.
இந்தத் தொழில்துறை மண்டலங்களின் விரிவாக்கமானது தொழில் வல்லுநர்கள், ஊழியர்கள் மற்றும் வணிக நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் இப்பகுதியில் குடியிருப்பதற்கான தேவையை தொடர்ந்து அதிகரிக்க செய்துவருகிறது. இந்நிறுவனங்கள் இப்பகுதிகளில் தங்களின் செயல்பாடுகளைத் தொடர்ந்து விரிவுபடுத்தி வருவதால், பணியிடங்களுக்கு அருகில் குடியிருக்க விரும்புவோருக்கான வீட்டுத் தேவைகள் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், மஹிந்திரா வேர்ல்ட் சிட்டி, ஒரகடம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள தொழில்துறை மண்டலங்களில் பணிபுரியும் ஊழியர்களால் இப்பகுதியில் வாடகை வீடுகளுக்கான தேவையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வேலைவாய்ப்பு சார்ந்த இந்தத் தேவையானது வீட்டுமனைகள், கேடட் கம்யூனிட்டிகள் மற்றும் வில்லா திட்டங்கள் போன்ற பல்வேறு வகைகளிலான குடியிருப்புகளின் வளர்ச்சிக்கு வழிவகுக்கிறது.
வரலாற்று ரீதியாக, வலுவான வேலைவாய்ப்பு மையங்களைச் சுற்றியுள்ள பகுதிகள் எப்போதும் பெரிய அளவிலான ரியல் எஸ்டேட் மாற்றத்தைச் சந்தித்துள்ளன; அந்த வகையில் சிங்கபெருமாள் கோயிலும் அதே போன்ற அசுர வளர்ச்சிப் பாதையில் பயணிக்கத் தயாராக உள்ளது.
சிறந்த சொத்து மதிப்பு உயர்வை வழங்கும் நிறைவான முதலீட்டு வாய்ப்பு
வளர்ந்து வரும் புதிய வழித்தடங்களின் ரியல் எஸ்டேட் வளர்ச்சியானது பொதுவாக மூன்று முக்கியக் காரணிகளால் தீர்மானிக்கப்படுகிறது: போக்குவரத்து வசதி, நியாயமான விலை மற்றும் எதிர்கால வளர்ச்சிக்கான சாத்தியக்கூறுகள். சிங்கபெருமாள் கோயில் பகுதி இந்த மூன்று அளவுகோல்களிலுமே மிகச் சிறந்த புள்ளிகளைப் பெற்றுள்ளது.
சென்னை நகரின் மையப்பகுதிக்கு அருகில் உள்ள வளர்ச்சியடைந்த குடியிருப்புப் பகுதிகளுடன் ஒப்பிடும்போது, இப்பகுதியில் நிலத்தின் விலைகள் ஒப்பீட்டளவில் மிகவும் சாதகமாகவும் தகுந்த விலையிலும் கிடைக்கின்றன. அதே நேரத்தில், தற்போதைய உள்கட்டமைப்பு மேம்பாடுகள் மற்றும் முக்கிய வேலைவாய்ப்பு மையங்களின் அருகாமையில் அமைந்திருப்பது போன்ற நன்மைகளையும் சிங்கபெருமாள் கோயில் கொண்டுள்ளது. இந்த தனித்துவமான அம்சங்கள் ஒன்றிணைந்திருப்பது, நீண்ட கால சொத்து மதிப்பை எதிர்பார்க்கும் முதலீட்டாளர்கள் மற்றும் வீடு வாங்குபவர்கள் மத்தியில் பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 3 முதல் 5 ஆண்டுகளில், மாறிவரும் மக்களின் விருப்பங்கள் மற்றும் புறநகர்ச் சந்தைகளின் விரிவாக்கம் காரணமாக, இப்பகுதியில் வீட்டுமனைகள் மற்றும் தனி வீடுகளுக்கான (Independent homes) தேவை சீரான வளர்ச்சியைக் கண்டுள்ளது. வீடு வாங்குபவர்கள் தற்காலத்தில் ஏராளமான இடவசதி, தங்களின் விருப்பத்திற்கேற்ப வடிவமைக்கப்பட்ட வீடுகள் மற்றும் குடியிருப்பு சமூகம் சார்ந்த வாழ்வியல் சூழலை அதிகம் விரும்புவதால், வளர்ந்து வரும் இந்த குடியிருப்பு மையத்தில் வீட்டுமனைகள் முதன்மையான தேர்வாக மாறியுள்ளன.
சென்னை தெற்கு நோக்கி விரிவடைந்து வரும் நிலையில், சிங்கபெருமாள் கோயில் போன்ற பகுதிகள் நிலையான சொத்து மதிப்பு உயர்வை வழங்கக்கூடிய எதிர்காலக் குடியிருப்புப் பகுதியாக முக்கியத்துவம் பெற்று வருகின்றன.
சென்னையின் தெற்கு நோக்கிய விரிவாக்கமும் செங்கல்பட்டு வழித்தடத்தின் எழுச்சியும் முக்கியத்துவம் பெற்று வருகின்றன
சென்னை மாநகரம் தனது பாரம்பரிய எல்லைகளைத் தாண்டித் தொடர்ந்து விரிவடைந்து வரும் வேளையில், மாநகரின் எதிர்கால வளர்ச்சி வரலாற்றில் செங்கல்பட்டு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன.
இப்பகுதியின் உள்கட்டமைப்பு மற்றும் நகர்ப்புற வளர்ச்சியை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள 'செங்கல்பட்டு புதிய நகரத்திற்கு திட்டமிடப்பட்ட பகுதி'யின் (Chengalpattu New Town Planning Area) முன்முயற்சிகளின் ஆதரவோடு, சிங்கபெருமாள் கோவிலும் பரவலான வளர்ச்சியை பெற்றுவரும் பகுதியாகத் திகழ்கிறது. இந்த மேம்பாடுகள் சுற்றியுள்ள கட்டமைப்பை மேலும் வலுப்படுத்துவதோடு, குடியிருப்பு, வணிகம் மற்றும் சமூக உள்கட்டமைப்பு வளர்ச்சிக்கான புதிய வாய்ப்புகளை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னைக்கும் வளர்ந்து வரும் தொழில்துறை மண்டலங்களுக்கும் இடையில் அமைந்துள்ளதால், நகரின் தெற்கு நோக்கிய விரிவாக்கத்தில் இப்பகுதி ஒரு முக்கிய இணைப்புப் பாலமாக விளங்குகிறது.
பாரம்பரியமும் நவீன நகர்ப்புற வளர்ச்சியும் இணையும் பகுதி
சிங்கபெருமாள் கோயில் ஒரு நவீன வளர்ச்சி வழித்தடமாக உருவெடுத்து வரும் அதே வேளையில், இப்பகுதி ஆழமான கலாச்சார மற்றும் வரலாற்றுச் சிறப்பையும் தன்னுள் கொண்டுள்ளது. இங்கு அமைந்துள்ள புகழ்பெற்ற 1500 ஆண்டுகள் பழமையான குடைவரைக் கோயிலான 'பாடலாத்ரி நரசிம்மர் கோயில் ', இப்பிராந்தியத்திற்கு ஒரு தனித்துவமான அடையாளத்தையும் ஆன்மீக அமைதியையும் சேர்க்கிறது.
பாரம்பரியமும் நவீன நகர்ப்புற வளர்ச்சியும் ஒன்றாக இணையும் இந்த சிறப்பம்சம், சிங்கபெருமாள் கோவிலை மற்ற வளர்ந்து வரும் புறநகர்ப் பகுதிகளிலிருந்து முற்றிலும் வேறுபடுத்திக் காட்டுகிறது.
மிக வேகமாக மேம்பட்டு வரும் சமூக உள்கட்டமைப்பும் வாழ்வியல் தரமும்
எந்தவொரு குடியிருப்புப் பகுதியின் வளர்ச்சியும் அதன் போக்குவரத்து வசதி மற்றும் வேலைவாய்ப்பை மட்டும் சார்ந்தது அல்ல; மாறாக அங்குள்ள சமூக உள்கட்டமைப்பையும் பொறுத்தது. சிங்கபெருமாள் கோயில் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கல்வி, மருத்துவம், சில்லறை வர்த்தகம் மற்றும் அன்றாட அத்தியாவசிய வசதிகள் படிப்படியாக மேம்பட்டு வருவது, இப்பகுதியின் குடியிருப்பு ஈர்ப்பை மேலும் பலப்படுத்துகிறது.
இங்கு அமைந்துள்ள சிங்கபெருமாள் கோயில் இரயில் நிலையம் (SP Koil Railway Station) மற்றும் வில்லியம்பாக்கம் இரயில் நிலையம் ஆகியவை இப்பகுதியில் குடியிருப்பவர்கள் மற்றும் பணிபுரிபவர்களின் அன்றாடப் பயணங்களை எளிதாக்குகின்றன. வரவிருக்கும் செங்கல்பட்டு உயர்மட்ட மேம்பாலச் சாலை மற்றும் முன்மொழியப்பட்டுள்ள 'கிளாம்பாக்கம் - செங்கல்பட்டு மெட்ரோ இரயில் நீட்டிப்புத் திட்டம்' ஆகியவை இப்பிராந்தியத்தின் போக்குவரத்தை அடுத்தகட்டத்திற்கு எடுத்துச் செல்லவுள்ளன. சென்னை மெட்ரோவின் இரண்டாம் கட்ட விரிவாக்கத் திட்டங்களின் ஒரு பகுதியாக, விமான நிலையத்திலிருந்து கிளாம்பாக்கம் வரையிலும், அங்கிருந்து மேலும் தெற்கே செங்கல்பட்டு வரையிலும் மெட்ரோ இணைப்பை விரிவுபடுத்துவதற்கான சாத்தியக்கூறு ஆய்வுகள் மற்றும் விரிவான திட்ட அறிக்கைகள் (DPRs) தயாரிக்கப்பட்டு வருகின்றன. இதில் சிங்கபெருமாள் கோயில் பகுதிக்கான பிரத்தியேக மெட்ரோ இரயில் நிலையமும் அமைய வாய்ப்புள்ளது.
மேலும், ZOHO, Infosys மற்றும் மஹிந்திரா வேர்ல்ட் சிட்டி போன்ற முக்கிய வேலைவாய்ப்பு மையங்களுடன் எளிதாக இணைக்கும் போக்குவரத்து வசதி, இப்பகுதியைத் தொழில் வல்லுநர்களின் முதன்மைத் தேர்வாக மாற்றுகிறது. இவற்றுடன், செங்கல்பட்டு பைபாஸ் சாலைக்கு இங்கிருந்து எளிதில் சென்றடைய முடியும் என்பது முக்கிய வளர்ச்சி வழித்தடங்களுக்கு இடையேயான போக்குவரத்தை மேலும் சீராக்குகிறது.
சி.எஸ்.ஐ. ஈவார்ட் மகளிர் கிறிஸ்தவக் கல்லூரி (C.S.I Ewart Women’s Christian College) போன்ற சிறந்த கல்வி நிறுவனங்களும், ஸ்ரீ பாலாஜி மருத்துவமனை (Sri Balaji Hospital) போன்ற மருத்துவ வசதிகளும் இங்கு அதிகரித்து வரும் குடியிருப்பு சமூகங்களுக்குப் பெரும் பக்கபலமாக உள்ளன. இப்பகுதியில் குடியிருப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், வரும் காலங்களில் வணிக வளாகங்கள், பொழுதுபோக்கு மையங்கள், மருத்துவச் சேவைகள் மற்றும் சமூக உள்கட்டமைப்புகள் இங்கு மேலும் விரிவடைந்து, ஒட்டுமொத்த வாழ்வியல் தரத்தையும் வசதியையும் சிறப்ப்பான நிலைக்கு உயர்த்தும் என்பதில் சந்தேகமில்லை.
சென்னையின் அடுத்தகட்ட வளர்ச்சியின் முகவரி: சிங்கபெருமாள் கோயில்
தனது அமைவிட அடிப்படையில் கொண்டிருக்கும் சாதகங்கள், தொழில்துறை விரிவாக்கம், அதிவேக உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் பெருகி வரும் குடியிருப்புத் தேவை ஆகியவற்றினால், சிங்கபெருமாள் கோயில் சென்னையின் மிகவும் நம்பிக்கைக்குரிய ஒரு ரியல் எஸ்டேட் மைக்ரோ-மார்க்கெட்டாக (Micro-market) உருவெடுத்து வருகிறது.
இப்பகுதி சென்னையின் புறநகர் வளர்ச்சியின் அடுத்தகட்டப் பரிணாமத்தைப் பிரதிபலிக்கிறது — அதாவது, ஒரு சாதாரண செயற்கைக்கோள் நகரமாக (Satellite destination) மட்டும் இல்லாமல், தன்னைத்தானே தற்காத்துக் கொள்ளும் ஒரு சுயசார்புடைய குடியிருப்புப் பகுதியாகவும், பொருளாதார மையமாகவும் இது மாறிவருகிறது. முக்கிய உள்கட்டமைப்புத் திட்டங்கள் போக்குவரத்தை எளிதாக்கி வர, வேலைவாய்ப்புகள் பெருகி வர, நியாயமான விலை மற்றும் அதே நேரம் சிறந்த வசதிகள் கொண்ட குடியிருப்பு பகுதிகளுக்கான தேவை அதிகரித்து வருவதால், சென்னையின் எதிர்கால ரியல் எஸ்டேட் வரைபடத்தில் சிங்கபெருமாள் கோயில் ஒரு மிக முக்கியப் பங்கை வகிக்கத் தயாராக உள்ளது.