இந்தியர்களில் 86% புரதத்திற்கும், 61% பேர் இயற்கை இனிப்பூட்டிகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கின்றனர்:
ஆரோக்கியமான தின்பண்டம் மீது ஃபார்ம்லி-ன் ஆய்வு அறிக்கை 2026
• நுகர்வோர் ஆய்வு முடிவுகளின்படி, 86% இந்தியர்கள் தின்பண்டங்களைத் (ஸ்நாக்ஸ்) தேர்ந்தெடுக்கும்போது புரோட்டீனை (புரதச்சத்து) ஒரு முக்கியமான விஷயமாகக் கருதுவதோடு, இதில் பாதிக்கும் மேற்பட்டோர் அதிக புரதமுள்ள பொருட்களுக்கு கூடுதல் விலை கொடுக்கத் தயாராக உள்ளனர்.
• பத்தில் ஆறு நுகர்வோர் (61%) பேரீச்சம்பழம் மற்றும் வெல்லம் போன்ற இயற்கை உட்பொருட்களால் இனிப்பாக்கப்பட்ட தின்பண்டங்களையே விரும்புகின்றனர். இது ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தை நோக்கி மக்கள் மாறி வருவதைக் காட்டுகிறது.
• கிட்டத்தட்ட 60% பெற்றோர்கள் குழந்தைகளுக்காக ஆரோக்கியமான தின்பண்டங்களை வாங்க கூடுதலாக செலவிட தயாராக இருப்பது குழந்தைகளின் ஊட்டச்சத்து மீது அவர்களின் முன்னுரிமையை காட்டுகிறது.
• பாதிக்கும் மேற்பட்ட பெண்கள் தங்களின் மாதவிடாய் காலத்தில் ஊட்டச்சத்திற்கு ஏற்ற தின்பண்டங்களை வாங்க விரும்புகின்றனர். இது பெண்கள் ஆரோக்கியம் சார்ந்த உணவு சந்தையில் ஒரு குறிப்பிடத்தக்க புதிய வாய்ப்பை உருவாக்கியுள்ளது.
• விரைவு வர்த்தகம், தின்பண்டங்களில் உள்ள பொருட்கள் பற்றிய வெளிப்படைத்தன்மை மற்றும் சிறந்த பேக்கேஜிங் ஆகியவை இந்தியர்கள் தின்பண்ட பிராண்டுகளை கண்டறிந்து, நம்பிக்கை வைத்து, வாங்கும் முறையை மாற்றி வருகின்றன.
INDIAN HEALTHY SNACKING SUMMIT இந்தியா, ஜூலை 03, 2026: ஆரோக்கியமான தின்பண்டங்கள் பிரிவில் இந்தியாவின் முன்னனி பிராண்டான ஃபார்ம்லி, தனது மூன்றாவது 'ஆரோக்கியமான தின்பண்டம் குறித்த ஆய்வு அறிக்கையை' புதுடெல்லியில் நடைபெற்ற 'இந்தியன் ஹெல்தி ஸ்நாக்கிங் சம்மிட் (IHSS) 2026' இல் இன்று வெளியிட்டது. பல்வேறு நகரங்கள், தொழில்கள் மற்றும் தலைமுறைகளைச் சேர்ந்த 6,000-க்கும் மேற்பட்டோரிடம் நடத்தப்பட்ட இந்த ஆய்வின் மூலம், இந்திய நுகர்வோர் தங்களின் ஒவ்வொரு வாய் உணவிலும் ஊட்டச்சத்து, ஆரோக்கியம் மற்றும் சௌகரியம் ஆகிய அம்சங்களை எதிர்பார்க்கின்றனர் என்பது தெரிய வருகிறது.
புரதச்சத்து மற்றும் இயற்கை இனிப்பூட்டிகளுக்கான தேவை
நுகர்வோரின் முன்னுரிமைகளில் ஏற்பட்டுள்ள பெரிய மாற்றத்தை இந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. புரதச்சத்து என்பது உடற்பயிற்சி செய்பவர்களுக்கு மட்டும் என்ற நிலை மாறி, இப்போது அன்றாட ஊட்டச்சத்து தேவையாக மாறியுள்ளது. ஆய்வில் பங்கேற்றவர்களில் 86% பேர் தின்பண்டங்களைத் தேர்ந்தெடுக்கும்போது புரதச்சத்து அதில் முக்கியப் பங்கு வகிப்பதாகக் கூறியுள்ளனர். மேலும், 32% பேர் அதிக புரதச்சத்து கொண்ட தயாரிப்புகளுக்கு கூடுதல் விலை கொடுக்கத் தயாராக உள்ளனர். சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரைக்கு பதிலாக 61% பேர் வெல்லம் அல்லது பேரீச்சம்பழம் கொண்டு தயாரிக்கப்படும் தின்பண்டங்களையே விரும்புகின்றனர்.
பிராண்ட் நம்பிக்கை மற்றும் வெளிப்படைத்தன்மை
இந்த விழிப்புணர்வு, பிராண்டுகள் மீதான நுகர்வோரின் நம்பிக்கையையும் மாற்றியமைத்து வருகிறது. பிரபலங்கள் அல்லது சமூக ஊடகத்தில் செல்வாக்கு செலுத்தும் நபர்களின் பரிந்துரைகளை விட, 62% நுகர்வோர் தின்பண்டங்களில் என்னென்ன பொருட்கள் சேர்க்கப்பட்டுள்ளன என்ற வெளிப்படைத்தன்மையையே மிக முக்கியமான காரணியாகக் கருதுகின்றனர். நுகர்வோர் தங்களுக்குத் தேவையானவற்றை வாங்குவதற்கு முன், அதில் உள்ள பொருட்கள் மற்றும் ஊட்டச்சத்து மதிப்புகள் பற்றி பிராண்டுகள் தெளிவாகக் குறிப்பிட வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்.
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான சிறப்பு ஊட்டச்சத்து
அன்றாட ஆரோக்கியமான தின்பண்டங்களுக்கு அப்பால், குறிப்பிட்ட ஊட்டச்சத்து பிரிவுகளிலும் புதிய வாய்ப்புகள் உருவாகி வருவதை இந்த அறிக்கை காட்டுகிறது. ஆய்வில் பங்கேற்ற பெண்களில் பாதிக்கும் மேற்பட்டோர், தங்களின் மாதவிடாய் சுழற்சியின் வெவ்வேறு கட்டங்களில் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்தை வழங்கும் தின்பண்டங்களில் ஆர்வம் இருப்பதாக குறிப்பிட்டுள்ளனர்.
அதேபோல், பெற்றோர்களும் தங்கள் குழந்தைகளுக்கு ஆரோக்கியமான தின்பண்டங்களை வழங்குவதில் அதிக கவனம் செலுத்துகிறார்கள். கிட்டத்தட்ட 60% பெற்றோர்கள், வழக்கமான ஸ்நாக்ஸ்களுக்கு பதிலாக ஆரோக்கியமான தின்பண்டங்களை வாங்க கூடுதல் விலை கொடுக்கத் தயாராக இருப்பதாகக் கூறியுள்ளனர். இந்திய நுகர்வோர் தங்கள் உணவில் என்னென்ன பொருட்கள் சேர்க்கப்படுகின்றன என்பது குறித்து தற்போது அதிக விழிப்புணர்வுடன் இருக்கின்றனர். சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரைக்கு பதிலாக, பேரீச்சம்பழம் மற்றும் வெல்லம் கொண்டு தயாரிக்கப்படும் தின்பண்டங்களையே தேர்ந்தெடுப்போம் என்று பத்தில் ஆறுக்கும் மேற்பட்டோர் கூறியுள்ளனர். இது கலப்படமில்லாத இயற்கையான பொருட்கள் மற்றும் ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தின் மீது நுகர்வோர்களின் ஆர்வம் அதிகரித்து வருவதையே காட்டுகிறது.
மாறும் வணிக முறைகள்
நுகர்வோரின் வாங்கும் முறைகளும் வேகமாக மாறி வருகின்றன. தின்பண்டங்கள் வாங்க 31% பேர் பிளிங்கிட் (Blinkit) செயலியை விரும்புகின்றனர். இதற்கு அடுத்தபடியாக ஜெப்டோ (Zepto - 16%) மற்றும் இன்ஸ்டாமார்ட் (Instamart - 15%) ஆகியவை உள்ளன. இது தின்பண்டங்கள் வாங்குவதில் விரைவு வர்த்தகத்தின் வளர்ந்து வரும் பங்கைக் காட்டுகிறது. அதே நேரத்தில், கடைகளுக்குச் சென்று நேரடியாக பொருட்களை வாங்கும் முறையும் இன்னும் முக்கியமாகவே உள்ளது; 35% நுகர்வோர் கடைகளின் அலமாரிகளில் பொருட்களை நேரடியாகப் பார்ப்பதே தங்களின் வாங்குதல் முடிவை தீர்மானிப்பதாகக் கூறியுள்ளனர். பேக்கேஜிங் முறையும் வாங்குவதற்கான முடிவில் முக்கிய பங்கு வகிக்கிறது; 30% பேர் மீண்டும் மூடக்கூடிய பாக்கெட்டுகளையும், 25% பேர் சுற்றுச்சூழலுக்கு தோழமையான பேக்கேஜிங்கையும் விரும்புகின்றனர். ஒட்டுமொத்தமாக, நுகர்வோர் ஒரு தயாரிப்பை மட்டும் மதிப்பிடுவதில்லை; மாறாக, அதனை வாங்கும் மற்றும் உட்கொள்ளும் முழு அனுபவத்தையுமே சேர்த்தே கருத்தில் கொள்கிறார்கள் என்பதையே இந்த மாற்றங்கள் அனைத்தும் உணர்த்துகின்றன.
இந்த ஆய்வு முடிவுகள் குறித்து ஃபார்ம்லி நிறுவனத்தின் இணை நிறுவனர் ஆகாஷ் சர்மா கூறுகையில்: "இந்தியாவில் தின்பண்டங்களின் எதிர்காலம் நுகர்வோரின் விழிப்புணர்வுமிக்க தேர்வுகளால் வடிவமைக்கப்பட்டு வருகிறது. அவர்கள் ஆரோக்கியம், வெளிப்படைத்தன்மை மற்றும் சௌகரியம் ஆகிய அம்சங்களை கொண்டிருக்கும் தின்பண்டங்களை எதிர்பார்க்கிறார்கள். இந்த மாற்றம் நுகர்வோருக்கு சுவை மற்றும் ஊட்டச்சத்து ஆகிய இரண்டையும் சமரசமின்றி வழங்குவதற்கான ஒரு சிறந்த வாய்ப்பு என்று ஃபார்ம்லி நிறுவனத்தில் நாங்கள் நம்புகிறோம்” என்றார்.
இந்தியாவின் தின்பண்ட சந்தை ஒரு புதிய பரிணாம வளர்ச்சியை நோக்கிச் செல்வதை இந்த ஆய்வின் கண்டறிதல் முடிவுகள் உறுதிப்படுத்துகின்றன. இனிவரும் காலங்களில், சிறந்த சுவையுடன் ஊட்டச்சத்து, தரமான உட்பொருட்கள் மற்றும் நுகர்வோரின் தேவைகளுக்கு ஏற்ற புதிய வடிவங்களில் ஸ்நாக்ஸ்களை வழங்கும் பிராண்டுகளே இந்த சந்தையில் பெரிய வளர்ச்சியைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஃபார்ம்லி நிறுவனம் குறித்து:
உலர் பழங்களின் நன்மைகளை அடிப்படையாகக் கொண்டு, ஸ்நாக்ஸ் சாப்பிடுவதை மிகவும் ஆரோக்கியமானதாகவும், அதேசமயம் சுவையானதாகவும் மாற்றுவதே ஃபார்ம்லியின் முக்கிய நோக்கமாகும். இன்றைய காலகட்டத்தில், ஆரோக்கியமான, ஆனால் சுவையற்ற தின்பண்டங்களைச் சாப்பிடுவதா? அல்லது சுவையான, ஆனால் ஆரோக்கியமற்ற, தின்பண்டங்களைச் சாப்பிடுவதா? என்ற குழப்பம் வாடிக்கையாளர்கள் மத்தியில் நிலவுகிறது. இந்த நிலையை மாற்றி, மக்கள் எந்தவித குற்றவுணர்ச்சியும் இன்றி ஆரோக்கியமான மற்றும் சுவையான ஸ்நாக்ஸ் வகைகளை ரசித்துச் சாப்பிட வேண்டும் என்பதே எங்களின் இலக்கு. உலர் பழங்கள் மற்றும் நட்ஸ்களைப் புதிய சுவைகளிலும், புதுமையான வடிவங்களிலும் ஃபார்ம்லி வழங்கி வருகிறது. நாங்கள் வழங்கும் வறுத்த பெரி பெரி மக்கானா, தாய் சில்லி முந்திரி மற்றும் சுவையான டேட் பைட்ஸ் ஆகியவை நாடு முழுவதும் உள்ள மக்களை கவர்ந்து அவர்களின் மனதில் ஆழமான இடம்பிடித்திருக்கின்றன. நேரடியான சிறந்த கொள்முதல் முறைகள், சொந்த உற்பத்தி ஆலைகள் மற்றும் புதுமையான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பிரிவு (R&D) ஆகியவற்றின் மூலமாக, ஒவ்வொரு முறை சாப்பிடும்போதும் ஆரோக்கியமும், சுவையும் நிறைந்த தனித்துவமான தயாரிப்புகளை வாடிக்கையாளர்களுக்காக எங்களால் உருவாக்க முடிகிறது. இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட்டின் ஆதரவைப் பெற்றுள்ள ஃபார்ம்லி நிறுவனம், தற்போது புதிய தலைமுறையினரால் அதிகம் விரும்பப்படும் ஆரோக்கியமான ஸ்நாக்ஸ் பிராண்டாக உருவெடுத்து வருகிறது.
