இந்தியாவில் கடந்த ஆண்டு 57% ஆக இருந்த நிதி மோசடி இழப்புகள் அதிகரித்துள்ளதாக எச்சரிக்கும் வங்கிகள் பயோகேட்ச் சர்வே முடிவுகள்!
பிற உலக நாடுகளை விட வங்கிக் கணக்கு/நிதி மோசடி முயற்சிகள் இந்தியாவில் அதிகரித்துள்ளதாக வங்கித் துறையின் 90% தலைவர்கள் தெரிவித்துள்ளனர்; மேலும் மோசடி நடைபெறும் வேகம் குறித்த கவலை மீதான கருத்தாய்வில் 25 நாடுகளில் இந்தியா முதலிடத்தில் உள்ளது.
சென்னை (ஜூன் 24, 2026) — செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மூலம் நடைபெறும் நிதி மோசடிகளின் தற்போதைய மற்றும் எதிர்கால நிலை குறித்து உலகெங்கிலும் உள்ள நிதி சேவை வழங்கும் நிறுவனங்கள் மிகுந்த கவலை கொண்டுள்ளன. ஐந்து கண்டங்களைச் சேர்ந்த 25 நாடுகளில் உள்ள வங்கிகளின் 1,440 மோசடி-மேலாண்மை, பணமோசடி தடுப்பு (AML) மற்றும் இடர்வாய்ப்பு மற்றும் இணக்கநிலை துறை தலைவர்களிடம் நடத்தப்பட்ட புதிய கருத்தாய்வில் பின்வரும் தகவல்கள் தெரியவந்துள்ளன: அடுத்த ஆண்டில் கருவிகளே இத்துறையின் மிகப்பெரிய பலவீனமாக இருக்கும் என்று 84% பங்கேற்பாளர்கள் கருதுகின்றனர். மோசடிகளின் சிக்கலான தன்மையை செயற்கை நுண்ணறிவு ஏற்கனவே அதிகரித்துள்ளது என்று 88% பேர் கருத்து தெரிவித்துள்ளனர். பாரம்பரிய மோசடி தடுப்பு முறைகளின் செயல்திறனை செயற்கை நுண்ணறிவு உதவியுடன் நடைபெறும் வங்கி செயல்பாடுகள் குறைக்கும் என 60% பேர் எதிர்பார்க்கின்றனர். செயற்கை நுண்ணறிவு கருவிகள் பரிவர்த்தனைகளை பொதுவாக தொடங்கும் எதிர்காலத்தில், ஏஐ உதவியுடன் செய்யப்படும் உண்மையான செயல்பாடுகளுக்கும், தீங்கிழைக்கும் ஏஐ செயல்பாடுகளுக்கும் இடையிலான வித்தியாசத்தைக் கண்டறிவது மிகவும் கடினமாக இருக்கும் என்று 72% பேர் நம்புகின்றனர்.
பயோகேட்ச் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி (CEO) காடி மேசோர் பேசுகையில், “வாடிக்கையாளர்கள் மின்-வர்த்தக தளங்கள் மற்றும் நிதி நிறுவனங்களுடன் எவ்வாறு தொடர்பு கொண்டு பரிவர்த்தனைகளில் ஈடுபடுகிறார்கள் என்பதை செயற்கை நுண்ணறிவு மாற்றத் தொடங்கியுள்ளது. மோசடிகள் மற்றும் பிற நிதிக் குற்றங்களை குற்றவாளிகள் எவ்வாறு செய்கிறார்கள் என்பதையும் ஏஐ மாற்றும். டிஜிட்டல் பயன்பாடு தொடர்ந்து வேகமாகவும், தானியக்க செயல்பாடாகவும் மாறி வருவதால், வழக்கமான அடையாளச் சரிபார்ப்புகளைத் தாண்டி, வாடிக்கையாளர்களின் நடத்தை, நோக்கம் மற்றும் நம்பிக்கையை உடனடியாகவும், ஆழமாகவும் புரிந்துகொள்ளும் முறைக்கு நாம் நகர வேண்டும்” என்று வலியுறுத்தினார்.
மனிதர்களின் நடத்தைகளில் போக்குகளையும், பழக்கவழக்கங்களையும் கண்டறிவதன் மூலம் மோசடி மற்றும் நிதிக் குற்றங்களைத் தடுக்கும் நிறுவனமான 'பயோகேட்ச்' சார்பாக நடத்தப்பட்ட இந்த கருத்தாய்வு, உலகளவில் நிலவும் நிதி மோசடி சவால்களை முன்னிலைப்படுத்துகிறது. இதில் அதிக பாதிப்பு மற்றும் அதிக கவலை கொண்ட நாடுகளில் ஒன்றாக இந்தியா உருவெடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது. இந்திய நிதி நிறுவனங்களைச் சேர்ந்த 100 மோசடி தடுப்பு மற்றும் இடர்வாய்ப்பு-இணக்க நிலை துறை தலைவர்களிடம் இந்தக் கருத்தாய்வு நடத்தப்பட்டது. முந்தைய ஆண்டைவிட கடந்த ஆண்டில் நிதி மோசடி முயற்சிகள் அதிகரித்துள்ளதாக 90% இந்திய வங்கித் துறை தலைவர்கள் தெரிவித்துள்ளனர் (இது உலகளாவிய சராசரியான 81%-ஐ விட அதிகம்). மேலும், 84% பேர் மோசடியினால் இழப்புகள் அதிகரித்துள்ளதாகக் கூறியுள்ளனர் (உலகளவில் இது 76%). முந்தைய ஆண்டில் மோசடி முயற்சிகள் 70% ஆகவும், மோசடியினால் இழப்புகள் 57% ஆகவும் இருந்த நிலையில், இந்த ஆண்டு இவை கணிசமாக அதிகரித்துள்ளன.
இதில் பங்கேற்ற அனைவரும் மேலாளர் அல்லது அதற்கும் மேல் உயர் பதவியில் இருப்பவர்கள்; 62% பேர் இயக்குனர் அளவிலானவர்கள், 31% பேர் வங்கியின் உயர் அதிகாரிகளாவர். கிட்டத்தட்ட அனைவரும் (98%) 10 மில்லியன் யுஎஸ் டாலருக்கும் அதிகமான நிதியை நிர்வகிக்கும் நிறுவனங்களில் பணிபுரிகின்றனர். 64% பேர் தங்கள் வங்கி $100 மில்லியனுக்கும் அதிகமான சொத்துக்களைக் கொண்டுள்ளது என்றும், 49% பேர் $1 பில்லியனுக்கும் மேல் என்றும், 22% பேர் $10 பில்லியனுக்கும் அதிகமான சொத்துகளை கொண்டிருப்பதாக கூறுகின்றனர்.
செயற்கை நுண்ணறிவு உதவியுடன் நடத்தப்படும் மோசடிகள், தற்போதும் எதிர்காலத்திலும் தீவிர அச்சுறுத்தலாக இருக்கும் என இந்திய வங்கித் தலைவர்கள் உறுதியாக நம்புவதாக இந்த கருத்தாய்வு தெரிவிக்கிறது. 2026-ல் கருத்தாய்வு செய்யப்பட்ட 25 நாடுகளில், மோசடிகளின் வேகம் குறித்து அதிக கவலை கொண்ட நாடாக இந்தியா முதலிடத்தில் உள்ளது.
அதிகரிக்கும் மோசடிகள்:
• 90% பேர் தங்கள் நிறுவனத்தில் மோசடி முயற்சிகள் அதிகரித்துள்ளதாகக் கூறுகின்றனர் (உலகளவில் இது 81%). 2025-ல் இது 70% ஆக மட்டுமே இந்தியாவில் இருந்தது.
• 84% பேர் மோசடி இழப்புகள் தங்கள் நிறுவனத்தில் அதிகரித்துள்ளதாகக் கூறுகின்றனர் (உலகளவில் 76%). கடந்த ஆண்டு இது 57% ஆக மட்டுமே இந்தியாவில் இருந்தது.
• 95% பேர் மோசடி செயல்பாடுகளின் வேகம் அதிகரிப்பது குறித்து மிகவும் கவலைப்படுகின்றனர் (உலகளவில் 76%).
• 48% பேர் தங்கள் நிறுவனம் ஆண்டுதோறும் $10 மில்லியனுக்கும் அதிகமான தொகையை மோசடியால் இழப்பதாகக் கூறுகின்றனர் (32% பேர் $25 மில்லியனுக்கும் மேல்; 16% பேர் $50 மில்லியனுக்கும் மேல்; 6% பேர் $100 மில்லியனுக்கும் மேல்).
• 58% பேர் தங்கள் வாடிக்கையாளர்கள் அங்கீகரிக்கப்பட்ட மோசடிகள் மூலம் ஆண்டுதோறும் $5 மில்லியனுக்கும் அதிகமாக இழப்பதாகக் கூறுகின்றனர் (44% பேர் $10 மில்லியனுக்கும் மேல்; 19% பேர் $25 மில்லியனுக்கும் மேல்; 7% பேர் $50 மில்லியனுக்கும் மேல்; 2% பேர் $100 மில்லியனுக்கும் மேல்).
வங்கிகளுக்கு இடையிலான நுண்ணறிவு தகவல் பகிர்வு:
• 94% பேர், வங்கிகளுக்கு இடையே நுண்ணறிவு தகவல்களைப் பகிர்வது மோசடிகளைத் தடுப்பதில் குறிப்பிடத்தக்க அளவு நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என கருதுகின்றனர் (உலகளவில் 85%).
• 93% பேர், பணத்தைப் பெறும் கணக்கு குறித்த நிகழ்நேரத் தகவல்களைப் பெறுவது மோசடிகளைக் கண்டறிந்து தடுக்கும் திறனை மேம்படுத்தும் என நம்புகின்றனர் (உலகளவில் 86%).
செயற்கை நுண்ணறிவின் (ஏஐ) தாக்கம்:
• மோசடி திட்டங்ககள் மற்றும் ஏமாற்று முயற்சிகளின் நவீன வடிவிலான தந்திரத்தை ஏஐ அதிகரித்துள்ளது என 93% பேர் நம்புகின்றனர் (உலகளவில் 88%).
• அடுத்த ஆண்டில் ஏஐ கருவிகள் மோசடிக்காரர்களால் ஏமாற்றுவதற்கு பயன்படுத்தப்படும் மிகப்பெரிய அம்சமாக இருக்கும் என 83% பேர் நம்புகின்றனர் (உலகளவில் 84%).
• செயற்கை நுண்ணறிவு உதவியுடன் நடைபெறும் செயல்பாடுகளுக்கும், தீங்கிழைக்கும் அல்லது செயல்பாடுகளுக்கும் அல்லது மோசடியாக மாற்றப்பட்ட பரிவர்த்தனைகளுக்கும் இடையிலான வித்தியாசத்தைக் கண்டறிவது மிகவும் சவாலாக இருக்கும் என 90% நபர்கள் நம்புகின்றனர் (உலகளவில் 72%).
பிற முக்கிய தகவல்கள்:
• 66% இந்திய வங்கித் தலைவர்கள் உடனடி பணம் செலுத்தல் தளங்கள் வழியாக நடைபெறும் மோசடி முயற்சிகளே நாட்டில் நிதி மோசடியில் முக்கிய பங்கு வகிப்பதாகக் கூறுகின்றனர் (உலகளாவிய சராசரி 59%). இந்தியாவின் வேகமான UPI பயன்பாடு மோசடிக்காரர்களுக்கு ஏமாற்றுவதற்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கக்கூடும்.
• மோசடியால் வாடிக்கையாளர்கள் வங்கியிலிருந்து விலகுவதாக 60% இந்திய வங்கிகள் தீவிரமாக அளவிடுகின்றன மற்றும் தகவலளிக்கின்றன (உலகளவில் இது 47%). இது மோசடியால் தனது வாடிக்கையாளர் அடித்தளத்திற்கு ஏற்படும் வணிக ரீதியிலான பாதிப்பை புரிந்துகொள்ளும் ஒரு முதிர்ச்சியான அணுகுமுறையைக் காட்டுகிறது.
• 64% பேர் கடந்த ஆண்டில் மக்களை ஏமாற்றுவதற்காக மோசடிக்காரர்கள் டீப்ஃபேக் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியது அறியப்பட்டுள்ளதாக கூறுகின்றனர் (உலகளவில் இது 50%).
முழுமையான ஊடாடும் அறிக்கையைப் பார்க்க அல்லது கருத்தாய்வின் முடிவுகளைக் காண .pdf கோப்பை பதிவிறக்கவும்.
பயோகேட்ச் பற்றி:
டிஜிட்டல் வங்கி தளங்களில் பயனர்கள் செயல்படும்போது 3,000-க்கும் மேற்பட்ட அநாமதேய தரவு புள்ளிகளை (கீஸ்ட்ரோக், மவுஸ் செயல்பாடு, தொடுதிரை பயன்பாடு, ஏஐ ஏஜென்ட்/கருவிகளின் பயன்பாடு போன்றவை) தொடர்ச்சியாக சேகரித்து, மனித நடத்தைகளை உணர்ந்து மோசடிகளையும மற்றும் நிதிக் குற்றங்களையும் பயோகேட்ச் நிறுவனம் தடுக்கிறது. இந்தத் தரவுகளின் மூலம், பயோகேட்ச் நிறுவனத்தின் ஏஐ (செயற்கை நுண்ணறிவு) மாடல்கள் பயனரின் நோக்கம் மற்றும் அவர்களை யாரேனும் வற்புறுத்துகிறார்களா என்பதை ஒவ்வொரு மில்லிசெகண்டிலும் மதிப்பீடு செய்து, மோசடிக்காரர்களையும் உண்மையான பயனர்களையும் நிகழ்நேரத்தில் வேறுபடுத்த வங்கிகளுக்கு உதவுகிறது. 2026 ஆம் ஆண்டின் முதல் காலாண்டின் முடிவில், உலகின் மிகப்பெரிய 100 வங்கிகளில் 30-க்கும் மேற்பட்ட வங்கிகள் உட்பட மொத்தம் 357 நிதி நிறுவனங்கள் பயோகேட்ச் தீர்வுகளைப் பயன்படுத்துகின்றன. இவை மாதத்திற்கு 18 பில்லியன் பயனர் செயல்பாடுகளை ஆய்வு செய்து, உலகளவில் 1.7 பில்லியனுக்கும் அதிகமான சாதனங்களில் இருந்து அணுகப்படும் 680 மில்லியனுக்கும் அதிகமான கணக்குகளை நிதி/பண மோசடிகளிலிருந்து பாதுகாக்கின்றன.