தேனாம்பேட்டையில் உள்ள அப்போலோ ஸ்பெஷாலிட்டி
மருத்துவமனை, அவசர சிகிச்சை பிரிவை அதிநவீன கேத் லேப்
தொழில்நுட்பத்துடன் மேம்படுத்துகிறது!
o இதயம், நரம்பு மற்றும் புற்றுநோய் [Cardiology, Neurology & Oncology] தொடர்பான சிகிச்சைகளில் இதுவரை இல்லாத வகையில் மிகப்பெரும் முன்னேற்றமாக இது நோயாளிகளுக்கு
பலன்களை அளிக்கும்.
சென்னை, ஆகஸ்ட் 13,
2025: தேனாம்பேட்டையில் உள்ள அப்போலோ ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை [Apollo
Speciality Hospitals], சென்னையின் மருத்துவ ள்கட்டமைப்பு வசதிகளில்
புரட்சிகரமான மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில், தொழில்நுட்பத்தில் மிகவும் மேம்பட்ட கேத் லேப் [Cath Lab]-ஐ தொடங்கியுள்ளது. இந்த கேத்
லேப் என்பது சிறப்பு சிகிச்சைகளுக்கான ஒரு பிரத்தியேக அறையாகும். இங்கு மிகவும் சிக்கலான, உயிர்காக்கும் மருத்துவ நடைமுறைகளை, உடலில்
குறிப்பிட்ட பகுதியை கீறி மேற்கொள்ளும் திறந்த அறுவை சிகிச்சையின் தேவையில்லாமல் மேற்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் இதயம், நரம்பு மற்றும் புற்றுநோய் தொடர்பான
சிகிச்சைகளில், மருத்துவர்கள் மிகத் துரிதமாகவும், மிகத் துல்லியமாகவும், நோயாளிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும்
வகையிலும் சிகிச்சைகளை மேற்கொள்ள முடியும்.
அதிநவீன கேத்
லேப் தொழில்நுட்பத்திலான இந்த அவசர சிகிச்சைப் பிரிவை தமிழ்நாடு அரசின் மாண்புமிகு தமிழ் வளர்ச்சி, தகவல்
மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் திரு. எம்.பி. சுவாமிநாதன் [Hon’ble Minister for Tamil Development, Information
& Publicity, Govt of Tamil nadu, Thiru M.P. Swaminathan] திறந்து
வைத்தார். புற்றுநோயியல் மற்றும் சர்வதேச குழுவின் இயக்குநர்
திரு. ஹர்ஷத் ரெட்டி [Mr.
Harshad Reddy, Director, Group Oncology & International], அப்போலோ
மருத்துவமனைகளின் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் மது சசிதர் [Dr. Madhu Sasidhar, President
& CEO, Apollo Hospitals] மற்றும் அப்போலோ சிறப்பு மருத்துவமனைகளின் இண்டர்வென்ஷனல்
கார்டியாலஜி பிரிவின் தலைமை மருத்துவர் மற்றும் துறைத் தலைவர்
டாக்டர் ஏ.எல். நாராயணன் [Dr. A.L. Narayanan, Clinical Lead and HOD,
Interventional Cardiology, Apollo Speciality Hospitals.] ஆகியோர் முன்னிலையில் இந்நிகழ்வு நடைபெற்றது.
அப்போலோ மருத்துவமனையின்
குரூப் ஆன்காலஜி & இன்டர்நேஷனல் பிரிவின் இயக்குநர் திரு. ஹர்ஷத்
ரெட்டி [Mr. Harshad Reddy, Director, Group
Oncology & International, Apollo Hospitals] கூறுகையில், “மிகவும் மேம்பட்ட கேத் லேப் தொடங்கப்பட்டிருப்பது, அதிநவீன தொழில்நுட்பம் அடிப்படையிலான, மிகத்
துல்லியமான மருத்துவப் பராமரிப்பை முன்னெடுக்கும்
அப்போலோவின் பயணத்தில் மற்றொரு மைல்கல்லைக் குறிக்கிறது. இந்த நவீன
வசதி எங்களுடைய மருத்துவர்களுக்கு மேம்பட்ட
திறன்களை வழங்குகிறது. அவர்கள் சிறப்பான முறையில் நோய்களைக் கண்டறிய முடியும். அவசரநிலைகளில் மிக வேகமாக செயல்பட முடியும். மேலும் இதயவியல், நரம்பியல் மற்றும் புற்றுநோயியல் ஆகிய பிரிவுகளில் நோயாளிகளுக்கு பாதுகாப்புடனும்,
துல்லியத்துடனும் சிகிச்சையளிக்க முடியும். இந்த மேம்பட்ட
கேத் லேப், நோயாளிகள் மிக துரிதமாக குணமடைவதிலும், குறைந்தபட்ச ஊடுருவும் அறுவைச் சிகிச்சைகளைப் பெறுவதிலும், சிகிச்சையின்
பலனாக நேர்மறை பலன்களைப் பெறுவதிலும் பெரும்
பங்கு வகிக்கும்’’ என்றார்.
தேனாம்பேட்டையில் உள்ள அப்போலோ
ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகளின் இண்டர்வென்ஷனல் கார்டியாலஜி பிரிவின் க்ளினிக்கல் ஹெட் மற்றும் ஹெச்.ஒ.டி டாக்டர் ஏ.எல். நாராயணன் [Dr.
A.L. Narayanan, Clinical Lead and HOD, Interventional Cardiology, Apollo
Speciality Hospitals, Teynampet] கூறுகையில், “எங்களது புதிய கேத் லேப், இண்டர்வென்ஷனல் மருத்துவத்தின் எதிர்காலத்தை
பிரதிபலிக்கிறது மிகவும் பாதுகாப்பான, மிகத் துல்லியமான
மற்றும் நோயாளியை மையமாகக் கொண்ட ஒன்றாக முக்கியத்துவம் பெற்றிருக்கிறது.. மனித உடலுக்குள்
உறுப்புகளையும், அவை இருக்கும் இடங்களையும் மிகத் துல்லியமாக காட்டும் ஜிபிஎஸ் [GPS for
the human body] மற்றும்
நிகழ்நேர வழிகாட்டும் வசதி [real-time navigation]
போன்ற உயரிய தொழில்நுட்பத்திலான இமேஜிங் வசதிகள் உள்ளன.
இதனால் மிகவும் சவாலான பிரச்சினைகளுடைய சில இருதய, நரம்பு மற்றும் புற்றுநோயியல் நோயாளிகளுக்கு உரிய சிகிச்சையை
நம்பிக்கையோடு, மிக விரைவாக செய்து முடிக்க நாங்கள் இப்போது தயாராக உள்ளோம். நம் உடலில் இருக்கும் நாளங்கள் மற்றும் உறுப்புகளின் கட்டமைப்புகளை மிகத்
துல்லியமாக, விரிவுப்படுத்தி காட்சிப்படுத்தும் திறனை கேத் லேப் வழங்குவதால்,
சிறிய கீறல்களுடன், குறைந்தளவிலான கதிர்வீச்சுடன் கூடிய சிக்கலான மருத்துவ நடைமுறைகளை
மேற்கொள்ள மூடியும். மேலும் நோயாளிகள் இம்முறையில், மிகத் துரிதமாக, குறைந்த காலக்கட்டத்திலேயே மீண்டு வர உதவுகிறது. அதனால் கேத் லேப், நம்முடைய
சமூகத்திற்கு சரியான நேரத்தில், உயிர்காக்கும் பராமரிப்பை உறுதி செய்வதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றமாக அமைந்திருக்கிறது.”
என்றார்.
சென்னை மாநகரின் மையத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய கேத் லேப்,, உயர் தெளிவுத்திறன் கொண்ட 3D இமேஜிங் [high-resolution
3D imaging], மேம்பட்ட
ஸ்டென்ட் மோஷன் காட்சிப்படுத்தல் [advanced stent motion visualisation], விரிவான பாதுகாப்பு அம்சங்களுடனான நரம்பு பாதுகாப்பு [comprehensive neurovascular support] மற்றும் குறைந்த அளவிலான
கதிர்வீச்சு தொழில்நுட்பத்தைப் [low-dose
radiation technology]
பயன்படுத்தி விரைவான, பாதுகாப்பான மற்றும் நிர்ணயிக்கப்பட்ட சிகிச்சைகளுக்கான பராமரிப்பை வழங்குகிறது. மாரடைப்பு, பக்கவாதம், சிக்கலான ரத்த நாள பிரச்சினைகள் மற்றும் குறிப்பிட்ட
புற்றுநோய்களால் பாதிக்கப்பட்ட நோயாளிகள், இப்போது சிறிய
கீறல்கள் அல்லது வடிகுழாய் செலுத்துதல் [catheter insertions.] மட்டுமே தேவைப்படும் குறைந்தபட்ச ஊடுருவும் நடைமுறைகள் மூலம்
முக்கியமான சிகிச்சையைப் பெறலாம். மேம்பட்ட துல்லியம் மற்றும் திறந்த அறுவை
சிகிச்சைக்கான தேவைகளைக் குறைக்கும் அம்சம் போன்றவை நோயாளிகளில் விரைவாக மீண்டு
வரவும்,, மேம்பட்ட பலன்களைப் பெறவும் உதவுகின்றன. மேலும் அவசரகாலங்களில் தகுந்த சிகிச்சைகளை அளிப்பதில் விரைவாகச்
செயல்பட உதவுவதன் மூலம் உயிர்களைக் காப்பாற்றும் திறனையும்
அதிகரிக்க செய்கிறது.
அப்போலோ
மருத்துவமனை பற்றி:
1983
-ல் டாக்டர் பிரதாப் சி ரெட்டி சென்னையில்
முதல் அப்போலோ மருத்துவமனையைத் [Apollo Hospitals Enterprise Ltd. (Apollo)]
தொடங்கியதன் மூலம், இந்திய
மருத்துவ உலகில் அப்போலோ ஒரு மிகப் பெரிய மருத்துவப் புரட்சியை ஏற்படுத்தியது.
இன்று இந்தியாவின் மிகவும் நம்பகமான ஒருங்கிணைந்த மருத்துவ நல
குழுமமாக திகழும் அப்போலோ மருத்துவமனைகள், 10,400-க்கும்
அதிகமான படுக்கை வசதிகளுடன், 74 மருத்துவமனைகள்,
6,600-க்கும் அதிகமான மருந்தகங்கள்,
264--க்கும் அதிகமான கிளினிக்குகள் மற்றும் 2,182-க்கும் அதிகமான டயக்னோஸ்டிக்
மையங்கள், 800-க்கும்
அதிகமான டெலி மெடிசின் மையங்கள், என
இந்தியாவின் மிகப் பெரிய ஒருங்கிணைந்த மருத்துவ சேவை வழங்கும் நிறுவனமாக அப்போலோ
முன்னணியில் உள்ளது. 3,00,000-க்கும்
அதிகமான அஞ்சியோப்ளாஸ்ட்களும், 2,00,000—க்கும்
அதிகமான இதய அறுவைச் சிகிச்சைகளையும் செய்திருப்பதன் மூலம் உலகின் முன்னணி இதய
நோய் சிகிச்சை மையமாக முக்கியத்துவம் பெற்றிருப்பதோடு,
புற்று
நோய் சிகிச்சையில் உலகின் மிகப்பெரிய தனியார் மருத்துவமனையாகவும் திகழ்கிறது. நவீன
கால தொழில்நுட்பங்கள், மருத்துவ
கருவிகள், சிகிச்சை
நடைமுறைகளின் மூலம் உலகத்திலேயே சிறந்த ஆரோக்கிய சேவையை நோயாளிகள் பெறும்வண்ணம்
அப்போலோ ஆராய்ச்சிகளில் தொடர்ந்து பெரும் முதலீடு செய்து வருகிறது. அப்போலோ
மருத்துவமனைகள் குழுமத்தின் 1,20,000
உறுப்பினர்கள் நோயாளிகளுக்கு சிறந்த சிகிச்சைகளைத் தந்து வருகின்றனர்.