Thursday, July 3, 2025

கல்வி அமைச்சர் திரு. அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களால் தி இந்தியன் பப்ளிக் ஸ்கூல் (TIPS) குளோப்எஜுகேட் ‘தமிழ்நாட்டின் முன்னோடி’ என்று பாராட்டப்பட்டது

கல்வி அமைச்சர் திரு. அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களால் தி இந்தியன் பப்ளிக் ஸ்கூல் (TIPS) குளோப்எஜுகேட் ‘தமிழ்நாட்டின் முன்னோடி’ என்று பாராட்டப்பட்டது

சென்னை, ஜூலை 02, 2025: தேனாம்பேட்டையில் உள்ள ஹோட்டல் புல்மேன்-இல் மாண்புமிகு பள்ளிக் கல்வி அமைச்சர் திரு. அன்பில் மகேஷ் பொய்யாமொழி சிறப்பு விருந்தினராக பங்கேற்ற ஒரு விழாவில், உலகப் புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களின் வலையமைப்பான Globeducate குழுமத்தின் ஒரு பகுதியான, நாட்டின் முன்னணி பள்ளிகளில் ஒன்றான தி இந்தியன் பப்ளிக் ஸ்கூல் (TIPS)-க்கு "தமிழ்நாட்டின் முன்னோடி" என்ற மதிப்புமிக்க பட்டம் வழங்கப்பட்டது. 

தி டைம்ஸ் ஆஃப் இந்தியா நிறுவனத்தின் "தமிழ்நாட்டின் முன்னோடிகள்" முன்முயற்சி, மாநிலத்தின் பொருளாதார மற்றும் கண்டுபிடிப்பு களத்தை மறுவடிவமைக்கின்ற வளர்ந்து வரும் தொழில்முனைவோர் மற்றும் சாதனையாளர்களின் ஈர்க்கக்கூடிய வரலாறுகளைக் கொண்டாடுகிறது. தங்கள் சொந்த முயற்சிகளின் வெற்றியைத் தூண்டுவதோடு மட்டுமல்லாமல், தமிழ்நாட்டின் பரந்த முன்னேற்றம் மற்றும் மேம்பாட்டிற்கும் ஒரு அர்த்தமுள்ள பங்களிப்பைச் செய்கின்ற உறுதியான முனைப்பு, புத்தி கூர்மை மற்றும் தலைமைத்துவம் கொண்ட தனி நபர்களை இந்த மதிப்புமிக்க தளம், கௌரவிக்கிறது.

மாணவர் நலன் சார்ந்த பல மாற்றத்திற்கான முன்னோடி முயற்சிகளுக்காக பரவலாக அறியப்படும் மாண்புமிகு அமைச்சர் திரு. அன்பில் மகேஷ் பொய்யாமொழி, கல்வி சிறப்புக்காக மட்டுமல்லாமல், அத்தியாவசிய வாழ்க்கை திறன்கள் மற்றும் முழுமையான வளர்ச்சி ஆகியவற்றை ஊக்குவிக்கிற அதன் எதிர்காலத்திற்கு ஏற்ற பாடத்திட்டத்திற்காக சென்னை TIPS Globeducate நிறுவனத்தை பாராட்டினார்.  சாதனையாளர்களின் பெரும் கூட்டத்தில் உரையாற்றிய அவர், உள்ளடக்கிய முன்னேற்றத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகின்ற வகையில், தங்கள் தாக்கத்தை அடித்தள மட்டத்திற்கு விரிவுபடுத்தவும், இளைஞர்களுக்கு தீவிரமாக வழிகாட்டவும் அவர்களை கேட்டுக்கொண்டார்.  




சென்னை TIPS Globeducate   இன் பள்ளி இயக்குநர் திருமதி. ரீட்டா கோபாலகிருஷ்ணன் இந்த விருதை இந்த நிறுவனத்தின் சார்பாக பெற்றுக்கொண்டார். அவர் குறிப்பிட்டதாவது: "ஒரு முன்னோடியாக அங்கீகரிக்கப்படுவது ஒரு மரியாதை மட்டுமல்ல, ஒரு பொறுப்பும் கூட. கல்விசார் விடாமுயற்சி, குணநல மேம்பாட்டுடன் இணையும் நோக்கம் சார்ந்த கல்வியில் நமது அசைக்கமுடியாத நம்பிக்கையை இந்த அங்கீகாரம் பிரதிபலிக்கிறது. நாள்தோறும் இந்த கனவை நிஜமாக்குகின்ற எங்கள் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் குடும்பங்களுக்கு இந்த விருதை அர்ப்பணிக்கிறோம்."

TIPS Globeducate நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி திரு. ஜெய்ராம் பாலகிருஷ்ணன் கூறுகையில், “டைம்ஸ் ஆஃப் இந்தியா வின் இந்த அங்கீகாரம், ஒரு சிறந்த உலகத்தை வடிவமைக்க தகுதியான உலகளாவிய குடிமக்களை வளர்ப்பதற்கான எங்கள் நோக்கத்தை மீண்டும் உறுதிப்படுத்துகிறது. TIPS இல், உலக நிகழ்வுகளில் ஈடுபடவும், அவர்களின் மதிப்புக்களை பிரதிபலிக்கவும் அறியாமை மற்றும் சகிப்பின்மைக்கு எதிராக நிமிர்ந்து நிற்கவும் மாணவர்களை ஊக்குவிப்பதன் மூலம் அவர்களின் குரலைக் கண்டறிய அவர்களுக்கு உதவுவதில் நாங்கள் ஆழ்ந்த அர்ப்பணிப்புடன் இருக்கிறோம். நோக்கம், ஒத்துணர்வு மற்றும் தைரியம் ஆகியவற்றுடன் கல்வி அடுத்த தலைமுறையை எவ்வாறு மேம்படுத்துகிறது என்பதில் எல்லைகளைத் தாண்டிச் செல்ல இந்த கௌரவம் எங்களைத் தூண்டுகிறது.” என்றார். 

IB பாடத்திட்டத்தை வழங்கும் இந்தியாவின் மிகவும் முற்போக்கான K12 நிறுவனங்களில் ஒன்றாக, TIPS, எதிர்காலத்திற்குத் தயாராகவும், சமூகப் பொறுப்புள்ள குடிமக்களாக மாறுவதற்கும், மாணவர்களுக்கு அதிகாரம் அளிக்கின்ற உலகளாவிய பாடத்திட்டத்தை உள்ளூர் சூழலுக்கு ஏற்ப வழங்குவதில் தொடர்ந்து முன்னணியில் உள்ளது.