realme 15 சீரிஸ் அறிமுகம் – முதல் முறையாக AI எடிட் ஜீனி அம்சம்; இந்த விலைப்பிரிவில் மிகச் சிறந்த செயல்திறன்!
realme 15 Pro 5G 4 ஸ்டோரேஜ் வேரியண்ட்டுகளில் கிடைக்கிறது (8+128, 8+256, 12+256 & 12+512) மற்றும் ₹3,000 வங்கிச் சலுகைக்குப் பிறகு பேஸ் வேரியண்ட்டின் ஆரம்ப விலை ₹28,999
realme 15 5G 3 ஸ்டோரேஜ் வேரியண்ட்டுகளில் கிடைக்கிறது (8+128, 8+256, 12+256) மற்றும் ₹2,000 வங்கிச் சலுகைக்குப் பிறகு பேஸ் வேரியண்ட்டின் ஆரம்ப விலை ₹23,999
15 சீரிஸ் உடன், புதிய realme Buds T200 அறிமுகப்படுத்தப்பட்டது, ₹300 வங்கிச் சலுகைக்குப் பிறகு, இதன் விலை ₹1,699 மட்டுமே.
சென்னை, ஜூலை 29, 2025: இந்திய இளைஞர்களுக்கு மிகவும் பிடித்த ஸ்மார்ட்போன் பிராண்ட் realme, இன்று புதிய realme 15 Pro 5G மற்றும் realme 15 5G, மாடல்களை வெளியிட்டது. ‘AI பார்ட்டி ஃபோன்’ என அழைக்கப்படும் இந்த மாடல்கள், சிறந்த கேமரா, ஸ்மார்ட் AI அம்சங்கள் மற்றும் சக்திவாய்ந்த செயல்திறனுடன் கிடைக்கின்றன.
.
பலதரப்பட்ட வாழ்க்கை முறை மற்றும் ஸ்டைலிஷ் அனுபவங்களை விரும்பும் இளைஞர்களுக்காகவே உருவாக்கப்பட்ட realme 15 Series, துல்லியமான ட்ரிபிள் 50MP அல்ட்ரா-கிளியர் கேமரா அமைப்புடன் வருகிறது. 4K 60FPS வீடியோ ரெக்கார்டிங்கும் இதில் உள்ளடங்கும். எந்த நேரமும் எந்த கோணத்திலிருந்தும் நேர்த்தியான, தெளிவான ஷாட்களை எடுக்க முடியும். மேலும், உலகில் முதன்முறையாக அறிமுகமாகும் AI எடிட் ஜீனி தொழில்நுட்பம் மற்றும் இளைஞர்களுக்கே ஸ்பெஷலாக உருவாக்கப்பட்ட AI பார்ட்டி மோட் மூலம், இது ஒரு படி மேலான AI இமேஜிங் அனுபவத்தை வழங்குகிறது.
ட்ரிபிள் 50MP கேமராக்கள் – ட்ரிபிள் கில்
realme 15 Pro 5G சக்திவாய்ந்த டிரிபிள் 50MP தெள்ளத் தெளிவான கேமரா அமைப்புடன் வருகிறது. இதில், 24mm சமமான ஃபோகல் லெந்த், 1/1.56" பெரிய சென்சர் மற்றும் OIS வசதியுடன் கூடிய 50MP சோனி IMX896 முக்கிய கேமரா உள்ளது. இதன் மூலம், நுணுக்கமான போர்ட்ரெயிட்ஸ் மற்றும் வண்ணமயமான நைட் ஷாட்கள் வியக்கவைக்கும் தெளிவில், நல்ல வெளிச்சத்துடன், இயல்பான நிறங்களில் பதிவு செய்ய முடிகிறது. மேலும், 16mm ஃபோகல் லெந்த், 1/2.8” சென்சர் கொண்ட 50MP அல்ட்ரா வைடு கேமரா மற்றும் 1/2.8” சென்சர் கொண்ட 50MP ஃப்ரண்ட் கேமரா ஆகியவையும் இதில் இடம் பெற்றுள்ளன. இவை, குரூப் போட்டோக்கள் மற்றும் செல்ஃபிகளை தரம் குறையாமல், சிறப்பாக எடுக்க உதவுகின்றன. இதற்குப் மேலும், இந்த சக்தி வாய்ந்த கேமரா அமைப்பு இந்த விலை வரம்பில் முதல் முறையாக 4K 60FPS வீடியோ ஷூட்டிங் வசதியையும் வழங்குகிறது. இதன் மூலம் இளம் பயனர்கள் தங்களது தினசரி அனுபவங்களை வீடியோவாக பதிவு செய்ய முடிகிறது.
realme 15 5G இல் இரண்டு சக்திவாய்ந்த 50MP கேமராக்கள் உள்ளன. பெரிய சென்சருடன் கூடிய 50MP சோனி IMX882 OIS மெயின் கேமரா, மற்றும் சிறந்த தரம் கொண்ட 50M OV50D ஃப்ரண்ட் கேமரா. இந்த கேமரா அமைப்பு, தெளிவான செல்ஃபிகள், குரூப் போட்டோக்கள், மற்றும் குறைந்த ஒளியிலும் சிறந்த ஷாட்கள் எடுக்க உதவுகிறது. எந்த கோணத்திலிருந்தும், எந்த சூழ்நிலையிலும், உங்கள் முக்கிய தருணங்களை சுலபமாக பிடிக்க முடிகிறது. வீடியோ தரத்திலும் இது சிறந்து விளங்குகிறது realme 15 5G இன் ஃப்ரண்ட் மற்றும் ரியர் கேமராக்களில் 4K வீடியோ ரெக்கார்டிங் செய்ய முடியும். இதன் மூலம், நீங்கள் எந்த இடத்திலிருந்தும், எந்த தருணத்திலும் உயர்தர வீடியோக்களை எளிதாக பதிவு செய்ய முடியும்.
realme 15 Pro 5G மற்றும் realme 15 5G ஆகிய இரு மாடல்களிலும், பயனர்கள் 2K லைவ் போட்டோக்களை எடுக்க முடியும். பொதுவாக, பல மாடல்களில் லைவ் போட்டோக்கள் 1080p இல் மட்டுமே கிடைக்கும் மற்றும் அவை ஆல்பத்தில் மட்டும் பார்க்கக் கூடியவை. ஆனால், realme 15 Series லைவ் போட்டோக்களில் தெளிவை இருமடங்காக உயர்த்தி, பயனர்கள் சமூக வலைதளங்களில் நேரடியாக பகிரும் வசதியையும் வழங்குகிறது.
இண்டஸ்ட்ரி-ஃபர்ஸ்ட் AI எடிட் ஜீனி: சொல்லுங்கள், எடிட் ஆகிடும்
realme 15 Series அறிமுகமாகும் AI எடிட் ஜீனி அம்சம் என்பது விருப்பத்தைச் சொன்னால் மட்டும் போதும், போட்டோ தயார் இது AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி போட்டோவை எடிட் செய்யும் ஒரு புரட்சிகரமான டூல், இதில் வாய்ஸ் கமாண்ட் மூலம் போட்டோவை எடிட் செய்ய முடியும். குரலில் ஒரே ஒரு வாக்கியத்தைச் சொன்னாலே போதும், போட்டோவில் ஏதேனும் பொருட்களைச் சேர்க்க, பேக்கிரவுண்டை மாற்ற, பருவ காலத்தை மாற்ற, அழகை அதிகரிக்க, அல்லது தவறான பகுதிகளை நீக்க முடியும், அதுவும் உடனே செய்யலாம்.இப்போது யார் வேண்டுமானாலும் போட்டோஷாப் மாஸ்டராக மாறலாம். டெக்னிக்கல் விவரங்களை AI பார்த்துக்கொள்ளும்; நீங்கள் உங்கள் கற்பனைத்திறனை மட்டுமே கொண்டு இருந்தால் போதும்.
மேலும், AI எடிட் ஜீனி-இல், முதல் முறையாக அறிமுகமாகும் “AI இன்ஸ்பிரேஷன்” எனும் ஆன்-டிவைஸ் வசதி உள்ளது. ஒரே டெப்பில் போட்டோக்களை எடிட் செய்ய இது உதவுகிறது, ஏனெனில் AI உங்கள் போட்டோக்களை நுணுக்கமாக ஆராய்ச்சி செய்து, உங்களுக்கான சிறந்த எடிட்டிங் ஃபினிஷை தானாகவே உருவாக்குகிறது. எந்த எடிட்டிங் அனுபவமும் இல்லாமல் கூட, பயனர்கள் புரொ தரத்தில் போட்டோக்களை எளிதாக உருவாக்க முடியும். AI இன்ஸ்பிரேஷன் என்பது, ஒரு புத்திசாலி க்யுரேட்டராக செயல்பட்டு, ஷாட்ஸை தானாகச் செம்மையாக மாற்றுகிறது. இது பிரைட்ட்னஸை சரிசெய்கிறது, சிறு புள்ளிகள், சிறு சிறு திட்டுக்கள் போன்றவற்றைக் குறைக்கிறது, ஒளியை மேம்படுத்துகிறது, ஸ்கின் டோனை இயல்பாக அமைக்கிறது மற்றும் கண்கூசுவதைத் தானாக நீக்குகிறது. இவை அனைத்தும் புரொ ஃபினிஷுடன் செய்து விடுகிறது.மேலும், இதில் உள்ள AI மேஜிக்க்ளோ 2.0, AI லேன்ட்ஸ்கேப், AI கிளார் ரிமூவர் மற்றும் AI ஸ்நாப் மோட் ஆகிய நவீன AI அம்சங்கள், எந்த சூழ்நிலையிலும் வண்ணமயமான மற்றும் உயர் தரமான போட்டோக்களை உருவாக்குவதற்கு realme 15 Series-ஐ சிறப்பாகத் தயாராக்குகின்றன.
தொழில்துறையில் முதல் முறையாக அறிமுகமாகும் AI பார்ட்டி மோட் மூலம், realme 15 Series, குறைந்த ஒளியில் கூட தெளிவான மற்றும் பிரகாசமான போர்ட்ரெயிட் ஷாட்ஸை எடுக்க முடியும். ஒரு கணத்தில் தோன்றும் உணர்வுகளையும் விரைவாகப் பிடிக்க இந்த மோட் உதவுகிறது. இதில் உள்ள கிரியேட்டிவ் வாட்டர்மார்க்ஸ், வண்ணமயமான மற்றும் பலவிதமான ஃபிரேம்கள் காரணமாக, இந்த மோட் ஒரு பார்ட்டி ஃபீலை உருவாக்குகிறது. மேலும், தனிப்பட்ட UI வடிவமைப்பு, ஒவ்வொரு தருணத்தையும் ஒரு சிறப்பான கொண்டாட்டமாக மாற்றி, கூட்டமாக கூடியிருக்கும் நிகழ்வை ஒரு மறக்கமுடியாத இரவாக மாற்றி விடும்.
(realme 15 Series ஆல் பார்ட்டி மோட்)
கேமிங்கில் பவர் ஹிட் அடிக்க இந்த விலை வரம்பில் சிறந்த AI சிப்செட்
realme 15 Pro 5G இல் இந்தியாவிலேயே முதல்முறையாக Snapdragon® 7 Gen 4 சிப்செட் இடம்பெற்றுள்ளது. 4nm தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட இந்த சிப்செட், 15% அதிக செயல்திறன் தருவதோடு, Antutu பஞ்ச்மார்க்-ல் 110W+ ஸ்கோர்-ஐ பதிவு செய்துள்ளது.. மேலும் realme 15 Pro 5G கேமிங்கை புதிய உயரத்திற்கு கொண்டு செல்கிறது. இந்த மாடலில், ஃப்ரீ ஃபையர் போன்ற பிரபலமான கேம்களில் 120FPS, மற்றும் பேட்டில்கிரவுண்ட்ஸ் மொபைல் இந்தியா-இல் 90FPS வரை ஹை-ஃபிரேம்-ரேட் கேமிங் கிடைக்கிறது. இதை ஆதரிக்க, AI தொழில்நுட்பத்தின் மேம்பட்ட கேமிங் அப்டிமைசேஷன் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம், தாமதம் இல்லாமல், மென்மையான மற்றும் சிறந்த கேமிங் அனுபவம் உறுதி செய்யப்படுகிறது.
realme 15 5G மாடல், இதன் விலை வரம்பில் சக்திவாய்ந்த டைமெண்சிட்டி 7300+ 5G சிப்செட்டுடன் வருகிறது. இந்த செக்மெண்டில் தலைசிறந்த 4nm தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டிருப்பதால், மல்டிடாஸ்க்கிங் மிகவும் மென்மையாக நடைபெறும்; கேமிங்கில் சிறந்த படைப்பாக செயல்படும். இது உங்கள் தினசரி பணியின்போது நல்ல நண்பராகவும், இரவில் கேமிங் விளையாட்டுக்கு நல்ல துணையாகவும் இருக்கும். இதற்கான Antutu ஸ்கோர் 740K, மற்றும் இது ஃப்ரீ ஃபையர் மற்றும் கால் ஆஃப் டியூட்டி மொபைல் போன்ற பிரபலமான கேம்களில் 90FPS ஹை-ஃபிரேம்-ரேட் அனுபவத்தை வழங்குகிறது. கேமிங் மற்றும் மல்டிடாஸ்க்கிங் இரண்டிலும், இதன் செயல்திறன் போட்டியாளர்களை விட முன்னிலை வகிக்கிறது.
இரு மாடல்களும் சக்திவாய்ந்த 7000mAh டைட்டன் பேட்டரியுடன் வருகின்றன. பேட்டரி 50% மட்டுமே இருந்தாலும்கூட நாள் முழுவதும் தொடர்ந்து பயன்படுத்த முடியும். மேலும், 80W சூப்பர் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி இருப்பதால், பேட்டரி பற்றிய கவலைக்கே இடமில்லை. அதிக நேரம் வேலை செய்யும் அல்லது கேமிங் அனுபவத்திற்கு இது சிறந்த துணை. இதற்கு மேல், மொபைலில் 7000mm² VC கூலிங் சிஸ்டம் உள்ளது. இந்த விலை வரம்பில் இந்த போனில்தான் மிகப்பெரிய VC பகுதி உள்ளது. இதனால், நீண்ட நேரம் கேமிங் அல்லது பல வேலைகளை ஒரே நேரத்தில் செய்தாலும், மொபைல் வெப்பம் எளிதில் வெளியேறி செயல்திறன் மேம்படுகிறது.
realme 15 Pro 5G மற்றும் realme 15 5G இரண்டு மாடல்களிலும், realme இன் ஃபிளாக்ஷிப் தரமான “GT பூஸ்ட்” AI கேமிங் ஆப்டிமைசேஷன் அம்சம் உள்ளது. இது, கேமர்களுக்கான ரியல்-டைம் சூப்பர் ஸ்மூத் அனுபவத்தை அளிக்கிறது. AI மோஷன் கண்ட்ரோல் மூலம், உங்களது கைசைகைகளை மொபைல் இன்னும் நுட்பமாகப் புரிந்து கொண்டு, உடனடியாக ரியாக்ட் செய்யும். அதேபோல், AI அல்ட்ரா டச் கண்ட்ரோல் அதிகமான ஸ்பீட் மற்றும் சென்ஸிடிவிட்டியுடன் செயல்பட்டு, டச் லேக் இருக்காத அளவுக்கு குறைத்துவிடுகிறது. இதனால், உங்களுக்கு ஸ்மூத் கேமிங் அனுபவம் கிடைக்கிறது.
லக்ஸுரி மெட்டீரியல் டிசைன்-நவீன தொழில்நுட்பமும் அழகும் கொண்டது
இந்த துறையில் 7,000mAh பேட்டரியுடன் வரும் மிக மெல்லிய ஸ்மார்ட்போனாக realme 15 Pro 5G ஏற்கனவே சாதனைப் படைத்துள்ளது. ஆனால், realme 15 5G அந்த அளவுக்கும் குறைவாக உள்ளது. இந்தியன் சில்வர் வேரியண்ட் 7.79mm, கிரீன் வேரியண்ட் 7.84mm என்றாலும், வெறும் 7.69mm மெல்லியதாக வந்துள்ள realme 15 5G, ஸ்லிம் டிசைனுக்கான பிரிவில் புதிய அளவுகோலை நிறுவுகிறது.
realme 15 Pro 5G ஸ்மார்ட்போன்களிலேயே முதல் முறையாக 4D கர்வ்+ டிஸ்ப்ளேயை அறிமுகப்படுத்தி புதிய சாதனைப் படைத்துள்ளது., இது இந்த விலை வரம்பில் கிடைக்ககூடிய மிகவும் பிரகாசமான மற்றும் மென்மையான டிஸ்ப்ளேவாகும். 2025-ல் முதல்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த புதுமையான ஸ்கிரீன் டிசைன், 1.5K ரெசல்யூஷன், 144Hz ரெஃப்ரெஷ் ரேட், மற்றும் 6500nits பீக் பிரைட்னஸ் உடன், ஸ்மார்ட்போன்களிலேயே அதிகபட்ச பிரகாசத்தைக் கொண்ட டிஸ்ப்ளே ஆகும். மேலும், 1.48mm அல்ட்ரா நேரோ பெஸல் உங்கள் பார்வையை முழுவதுமாக ஸ்கிரீனில் ஈர்க்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது
.
மேலும், realme 15 Pro 5G சாதனத்தின் IP69+ கார்னிங்® கிளாஸ் பாதுகாப்பு ஸ்மார்ட்போன் துறையில் மிக உயர்ந்த நீர்ப்புகாதல் மற்றும் தூசியைத் தடுக்கக்கூடிய தரநிலையாகும். முழுமையாக நீர்ப்புகாதபடி பாதுகாப்புடன் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், கார்னிங் கொரில்லா கிளாஸ் ஸ்கிரீன் பாதுகாப்பு இணைக்கப்பட்டுள்ளதால், இது அதிக உறுதியாகவும், தேய்மானம், கீறல் ஏற்படாமலும் பாதுகாக்கிறது. இதனாலே, இது நீண்ட காலம் பயன்படுத்த தக்கதாகவும், அதன் விலை வரம்பில் அதிக காலத்துக்கு நீடித்துழைக்கும் ஸ்மார்ட்போனாகவும் திகழ்கிறது
மிகச் சிறப்பான அம்சமாக, realme 15 Series’ பேக் கவரின் டிசைன், பார்ட்டி மற்றும் டின்னர் ஆடைகளின் ஃபேஷன் அழகையும், பாரிஸ் ஹாட் கூச்சுர் துணிகளின் நுட்பத்தையும் தழுவி உருவாக்கப்பட்டுள்ளது. ஃபேஷன் கலைத்திறனும், நவீன தொழில்நுட்ப வடிவமைப்பும் மென்மையாக இணைத்து அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பேக் கவரும், ஒரு டிசைனர் ஃபேப்ரிக் துணியைப் போலவே தோன்றுகிறது. இதில், பட்டு துணியின் ஒளிரும் மென்மை, லெதரின் ஆழமான தோற்றம், மற்றும் ஒளிக்கேற்ப வண்ணம் மாறும் அழகான நிறங்கள் ஆகியவை சேர்ந்து, ஒரு நவீன ஃபேஷன் கலையை உருவாக்குகின்றன. இவை தொழில்நுட்பத்தால் உயிர்ப்பிக்கப்படுகின்றன. இதனால் உருவாகும் ஒவ்வொரு பேக் கவரும், நவீன டிசைனும், ஒளிரும் வண்ணங்களும், இலகுவான உணர்வும், ஆடம்பர தோற்றமுமாக காட்சியளிக்கிறது.
realme பட்ஸ் T200
. realme 15 series-இன் அறிமுகத்துடன் சேர்த்து, realme புதிதாக realme Buds T200 ஐயும் அறிமுகப்படுத்தியுள்ளது. இது அடுத்த தலைமுறை TWS இயர்பட்ஸ் ஆகும், இதில் இனிமையான சவுண்ட், ஸ்மார்ட் நாய்ஸ் கண்ட்ரோல், நீண்ட பேட்டரி ஆயுள் மற்றும் ஸ்டைலான, எடை குறைந்த டிசைன் அனைத்தும் இணைக்கப்பட்டுள்ளன. Buds T200 12.4mm டைனமிக் பேஸ் டிரைவர்களுடன் வருகிறது, 20Hz – 40KHz வரையிலான பரந்த ஃப்ரிக்வென்சி ரேஞ்சில் பவர்ஃபுலான சவுண்ட் தருகின்றன. இது மியூசிக் விரும்புபவர்கள், திரைப்படம் பார்ப்பவர்கள், கேஷூவல் கேமர்களுக்கு ஏற்றது. ஹை-ரெஸ் ஆடியோ சான்றிதழும், LDAC கோடெக் சப்போர்ட்டும் கொண்ட இவை, கம்பியில்லா ஆடியோவிலும் தெள்ளத் தெளிவான குவாலிட்டியை வழங்குகின்றன. மேலும் இதில் 32dB வரை சக்திவாய்ந்த ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷ, டூயல் மைக் நாய்ஸ் ரிடக்ஷன் தொழில்நுட்பம், விரைவான கேமிங் அனுபவத்திற்கான 45ms அல்ட்ரா-லோ லேடன்ஸி கேம் மோட், மற்றும் மிகவும் நிலையான ப்ளூடூத் 5.4 கனெக்ஷன் உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.
realme Buds T200 நார்மல் மோடில் 50 மணி நேரம் வரை பாடல்கள், வீடியோக்கள், அல்லது போன் கால் பேசக்கூடிய சக்தி கொண்டவை. ANC இயக்கப்பட்டாலும் 35 மணி நேரம் வரை வேலை செய்யும், அதுவும், வெறும் 10 நிமிட சார்ஜில் 5 மணி நேரம் வரை இசையை அனுபவிக்கலாம், எந்த அவசர நேரத்திலும் துணையாய் நிற்கும் சக்தி வாய்ந்தது. IP55 தரத்தில் தண்ணீர் மற்றும் தூசி எதிர்ப்பு, செயலியில் பயனருக்கேற்ப அமைக்கக்கூடிய வசதிகள், இன்ட்யூஸ்வ் டச் கண்ட்ரோல்ஸ், மற்றும் realme ஸ்மார்ட்போன்களுடன் விரைவாக இணையும் பாப்-அப் பேரிங் ஆகியவை இதனை அதிக சௌகரியமும், சிறந்த செயல்திறனும் கொண்டதாக்குகின்றன.
விலை மற்றும் கிடைக்கின்ற விவரங்கள்
Realme 15 series கண்கள் கவரும் சில புதிய வண்ணங்களில் அறிமுகமாகிறது: realme 15 Pro 5G ஃப்ளோயிங் சில்வர், வெல்வெட் கிரீன் சில்க் பர்ப்பில் நிறங்களிலும், realme 15 5G ஃப்ளோயிங் சில்வர், வெல்வெட் கிரீன் சில்க் பிங்க் நிறங்களிலும் வருகிறது.
realme Buds T200 ₹1999-க்கு விற்பனைக்கு கிடைக்கிறது மிஸ்டிக் கிரே, ஸ்னோயி ஒயிட், ட்ரீமி பர்பில், மற்றும் நியோன் கிரீன் என நான்கு கவர்ச்சிகரமான வண்ணங்களில் கிடைக்கிறது.மேலும், ₹300 வங்கி தள்ளுபடி பெற்றால், வாடிக்கையாளர்கள் இதனை சிறப்பு அறிமுகச் சலுகையாக ₹1699-விலைக்கே வாங்கலாம்.
realme 15 Series and Buds T200 ஸ்மார்ட்போன்களை ப்ளிப்கார்ட், realme.com ஆஃப்லைன் ஸ்டோர்களில் வாங்கலாம்.
realme 15 Series முதல் விற்பனை
ஜூலை 30, 2025 மதியம் 12 மணிக்கு துவங்குகிறது, Buds T200 ஆகஸ்ட் 1, 2025 முதல் துவங்குகிறது
realme 15 series ஸ்மார்ட்போன்களுக்கு ஆறு மாதத்துக்கு இலவச ஸ்கிரீன் டேமேஜ் இன்ஷூரன்ஸ்!
*realme 15 Series மற்றும் realme Buds T200 பற்றிய ரிவியூ வழிகாட்டிகள் மற்றும் புராடக்ட் படங்களுக்கு, தயவுசெய்து இங்கே பார்வையிடுங்கள்: இணைப்பு